search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேட்டு"

    • ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ஹரிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • மஞ்சாலுமூடு கைதகம் தெற்றிவிளை பகுதியில் மழை காரணமாக சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

    அருமனை:

    மஞ்சாலுமூடு கைதகம் தெற்றிவிளை பகுதியில் மழை காரணமாக சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க கோரி பா.ஜ.க. சார்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. மேல்புறம் வடக்கு ஒன்றிய தலைவர் சதீஷ் சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுடர் சிங், பொதுச் செயலாளர் சுரேஷ், மாவட்டச் செயலாளர் நந்தினி, ஒன்றிய பொதுச் செயலாளர் வின்சென்ட், மற்றும் ஆனந்த், முழுக்கோடு கட்சித் தலைவர் அனில் குமார் மஞ்சாலுமூடு தலைவர் வினு, அருமனை கவுன்சிலர் விஜயகுமார், ராமச்சந்திரன் மற்றும் சுஜி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ஹரிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தாரமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி கிராமம் பைப்பூர் பகுதியில் பெண்ணிடம் பணம் கேட்டு தகராறு செய்த 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • பாலாஜி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்தி, பிரதிப், லோகேஷ் ஆகியோருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி கிராமம் பைப்பூர் பகுதியை சேர்ந்த வர் மாது என்கிற மகேஸ்வரி (வயது 40). இவருடைய மகன் பாலாஜி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்தி, பிரதிப், லோகேஷ் ஆகியோருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நேற்று முன்தினம் பாலாஜி வீட்டிற்கு சென்ற கார்த்தி மற்றும் நண்பர்கள் மகேஸ்வரியிடம் உன் மகன் எங்கு உள்ளார் என்று கேட்டு தகராறு செய்து மகேஸ்வரி,அவருடைய உறவினர்கள் சின்னத்தாய், மெய்யம்மாள் ஆகியோரை தாக்கி காயப்படுத்தியதாக தெரிகிறது.

    இதுபற்றி மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கார்த்தி,பிரதிப், லோகேஷ்,பர மானந்தம், உதயகுமார்,மணி, வெற்றி,விஜயா, பூங்கோடி ஆகியோர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சேலம் தாதகாப்பட்டி பில்லுக்கடை பஸ் ஸ்டாப் பகுதியில் டீக்கடை உள்ளது. இங்கு டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.
    • மேலும் அங்கிருந்த சிகரெட் பாக்கெட்டுகளை எடுத்து பற்ற வைத்து சிகரெட் புகையை அவர் மீது ஊதிவிட்டு அவரிடம் மாமூல் கேட்டு தகராறு செய்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி பில்லுக்கடை பஸ் ஸ்டாப் பகுதியில் டீக்கடை உள்ளது. இங்கு டீ மாஸ்டராக அப்துல் சுகூர் ( வயது 54) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு டீக்கடைக்கு வந்த சில நபர்கள் அவரிடம் சிகரெட் கேட்டனர்.

    மேலும் அங்கிருந்த சிகரெட் பாக்கெட்டுகளை எடுத்து பற்ற வைத்து சிகரெட் புகையை அவர் மீது ஊதிவிட்டு அவரிடம் மாமூல் கேட்டு தகராறு செய்தனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த கும்பல் அப்துல் சுகூரை சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து அங்கிருந்த பிஸ்கட், பலகாரங்கள் வைத்திருந்த ஜாடிகளை அவர்கள் எடுத்து உடைத்து கடையை சூறையாடினர். இது குறித்து அப்துல் சுகூர் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் ( வயது 22), சதீஷ்குமார் (21), ரஞ்சித் குமார் (25) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர். இதில் ரஞ்சித் குமார் பிரபல ரவுடி ஆவார்.

    இவர் கிச்சிப்பாளையம் பிரபல ரவுடி செல்லத்துரை கொலை வழக்கில் ஏற்கனவே கைதானவர் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. கைதான 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • சென்னிமலை-ஊத்துக்குளி மெயின் ரோட்டில் காலிகுடங்களுடன் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், புஞ்சை பாலதொழுவு ஊராட்சிக்குட்பட்ட வெங்கமேடு, மேற்கு பள்ளபாளையம், கிழக்கு பள்ளபாளையம், ஒலப்பாளையம், ராசம்பாளையம், திப்பம்பாளையம், வசந்தம் நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

    இந்த பகுதி நொய்யல் ஆற்றின் ஒரத்துப்பாளையம் அணையொட்டிய பகுதிகளில் வருவதால் சாயகழிவு நீர் தேங்கிய காரணத்தால் இந்த பகுதி முழுவதும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. இதனால் இந்த பகுதி மக்களுக்கு கொடுமுடி, முத்தூர், காங்கேயம் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை குடிநீர் கேட்டு புஞ்சை பாலதொழுவு கிராம மக்கள் சென்னிமலை -ஊத்துக்குளி மெயின் ரோட்டில் ஆலமரம் 4 ரோடு சந்திப்பில் அரசு டவுன் பஸ்சினை சிறைப்பிடித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தீர்வு ஆக வில்லை. இதனால் காலையில் திருப்பூர் பனியன் நிறுவனத்திக்கு வேலைக்கு செல்ல வேண்டிய பணியாளர்கள் செல்லும் வேன்கள் அதிகளவில் வந்ததால் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    உடனடியாக பெருந்துறை தாசில்தார் குமரேசன், மாவட்ட கவுன்சிலரும், சென்னிமலை மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளருமான எஸ்.ஆர்.எஸ்.செல்வம், புஞ்சை பாலதொழுவு ஊராட்சி தலைவர் தங்கமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உடனடியாக லாரி தண்ணீர் வழங்கவும், தொடர்ந்து நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட 9 பேர் கொண்ட கமிட்டி அமைத்து விரைவில் சென்னிமலை யூனியன் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. தலைமையில் கூட்டம் நடத்தி அதற்கு நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் குமரேசன் உறுதிமொழி கொடுத்ததை தொடர்ந்து ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியல் கைவிடப்பட்டது.

    இந்த சாலை மறியலால் சென்னிமலை- ஊத்துக்குளி ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ரூ.1½ லட்சம் கடனுக்கு ரூ.3 லட்சம் கந்து வட்டி கேட்டு தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    • அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் கொங்கு நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு( 40). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஈரோடு சம்பத் நகர் நேரு வீதியை சேர்ந்த கறி கடை நடத்தி வரும் முகமது ஷெரீப் (35) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருநாவுக்கரசிடம் வட்டிக்கு ரூ.1.50 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடன் தொகைக்கான தவணையை முறையாக செலுத்த முடியவில்லை. இதையடுத்து திருநாவுக்கரசு முகமது ஷெரீப்பிடம் வாங்கிய ரூ.1.50 லட்சத்திற்கு வட்டிக்கு வட்டி போட்டு ரூ.3 லட்சமாக கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். பணத்தை தர மறுத்தால் கொலை செய்வதாக திருநாவுக்கரசு மிரட்டியும் உள்ளார்.

    இதுகுறித்து முகமது ஷெரீப் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி திருநாவுக்கரசு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    தமிழக காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கந்து வட்டி தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மறுநாளே ஈரோட்டில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்த பைனான்ஸ் அதிபரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    ×