என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாரைப்பாம்பு"
- இரவு பொருட்களின் இடையில் பாம்பு இருப்பதைக்கண்டு மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
- வீட்டின் படிக்கட்டில் பழைய பொருட்கள் வைக்கும் போது கவனத்துடன் கையாள வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு கனிராவுத்தர் குளம் பெட்ரோல் பங்க் அருகே மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தின் படிக்கட்டின் கீழ் மின்வாரிய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இரவு இந்த பொருட்களின் இடையில் பாம்பு இருப்பதைக்கண்டு மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அதிகாரிகள் பாம்பு பிடி வீரர் யுவராஜிக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த யுவராஜ் பாம்பை தேடினார். சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மின்வாரிய அலுவலகப் பொருட்கள் அடியில் பதுங்கி இருந்த பாம்பை வெளியே கொண்டு வந்தார். அது சாரைப்பாம்பு. 8 அடி நீளம் இருந்தது. அந்த பாம்பை லாபகமாக பிடித்த யுவராஜ் வனத்துறையிடம் ஒப்படைத்தார்.
இதேப்போல் ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் உள்ள ஒரு வீட்டின் படிக்கட்டில் இருந்த 5 அடி நீள நல்ல பாம்பை பாம்பு பிடி வீரர் யுவராஜ் பிடித்தார். ஈரோடு மாவட்டம் கஸ்பா பேட்டையில் உள்ள ஒரு வீட்டின் சமையலறையில் பதுங்கி இருந்த 5 அடி நீளம் உள்ள நாகப்பாம்பையும் அவர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
இது குறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜ் கூறும்போது,
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வெப்பத்தை தாங்க முடியாமல் பாம்புகள் குடியிருப்புகளை நோக்கி வர தொடங்கியுள்ளன. எனவே பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
வீட்டின் படிக்கட்டில் பழைய பொருட்கள் வைக்கும் போது கவனத்துடன் கையாள வேண்டும். அதை போன்று பிரிட்ஜ், வாஷிங் மெஷின் அடிப்பகுதியில் பாம்புகள் வர வாய்ப்புள்ளது. பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றார்.
- வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக சாரைப்பாம்பு புகுந்து போக்கு காட்டி வந்தது.
- வீட்டின் குடிநீர் குழாயில் இருந்து ஐந்து அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பினை பிடித்து சென்றனர்.
ஏரியூர்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி முல்லை நகர் பகுதியை சேர்ந்த மணிமேகலை பெருமாள் என்பவரின் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக சாரைப்பாம்பு புகுந்து போக்கு காட்டி வந்தது.
இது குறித்து பென்னாகரம் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அங்கு வந்த நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவினர் வீட்டின் குடிநீர் குழாயில் இருந்து ஐந்து அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பினை பிடித்து சென்றனர்.
கோடை மழை தொடங்கி உள்ளதால் சீதோசன நிலை காரணமாக பாம்புகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் நுழையும் நிலை உள்ளதால் அவ்வாறு நுழையும் போது தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். விஷப் பாம்புகளை பிடிக்க முயற்சி செய்யக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- எங்கிருந்தோ வந்த சுமார் 10 அடி நீள சாரைப்பாம்பு திடீரென கழிவறைக்குள் புகுந்தது.
- பாம்புபிடி நிபுணரான பண்டிக்காவனூர் பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த இருளிப்பட்டை சேர்ந்தவர் யுவராஜ். இவரது வீட்டின் வெளியே கழிவறை உள்ளது.
இந்த நிலையில் எங்கிருந்தோ வந்த சுமார் 10 அடி நீள சாரைப்பாம்பு திடீரென கழிவறைக்குள் புகுந்தது. இதனை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.
இதுகுறித்து பாம்புபிடி நிபுணரான பண்டிக்காவனூர் பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து பாம்பை பிடிக்க முயன்றார். ஆனால் சாரைப்பாம்பு அங்கிருந்த சிறிய துளைக்குள் புகுந்தது.
இதையடுத்து அந்த துளையின் அருகே இருந்த இரண்டு படிக்கட்டுகளை உடைத்தனர். மேலும் 3 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி சுமார் ஒரு மணி நேரம் போராடி அந்த பாம்பை முத்துப்பாண்டியன் லாவகமாக பிடித்தார். அப்போது அந்த பாம்பு சீறியது. பார்ப்பவர்களை அச்சம் அடைய வைத்தது.
பின்னர் பிடிபட்ட பாம்பை அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.
- விளாத்திகுளம் சத்யாநகர் பகுதியை சேர்ந்த மாரிச்சாமியின் வீட்டிற்குள் 5 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது.
- ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடித்தனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் சத்யாநகர் பகுதியை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது வீட்டிற்குள் திடீரென 5 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்ட வீட்டில் உள்ளவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த ராதாகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடிக்க முயன்றபோது பாம்பு வீட்டுக்குள் இருந்த பீரோவுக்கு அடியில் சென்று மறைந்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடித்தனர். பிடிபட்ட சாரைப்பாம்பை கொண்டு சென்று அடர்ந்த காட்டுப் பகுதியில் விட்டனர்.
- கவுந்தப்பாடி அருகே வீட்டில் புகுந்த 7 அடி நீள சாரைப்பாம்பு பிடிப்பட்டது.
- தீயணைப்பு வீரர்கள் சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து பையில் எடுத்து சென்றனர்.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி அருகே ஓடத்துறை பாலாஜி நகரை சேர்ந்தவர் செல்வி (40). இவர் மகள் மகாஸ்ரீ, மருமகன் விக்னேஷ் ஆகியோருடன் அதே பகுதியில் குடியிருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று காலை விக்னேஷ், செல்வி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டானர். மகா ஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்பொழுது கட்டிலுக்கு அடியில் சத்தம் கேட்டுள்ளது. அப்போது மகா ஸ்ரீ கட்டிலுக்கு கீழ் பார்க்கும்போது நீளமான பாம்பு இருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து மகாஸ்ரீ அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து கோபி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலை அலுவலர் முருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் திருமலைசாமி, கோபாலகிருஷ்ணன், பிரேம்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர் வீட்டின் கதவை திறந்து பார்க்கும்போது கட்டிலின் அடியில் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து பையில் எடுத்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்