search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைதான"

    • கண்ணன், மகேந்திரன் ஆகிய இருவரையும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    • ன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கன்னியாகுமரி:

    தென்தாமரைகுளம் அருகே உள்ள சித்தன்குடியிருப்பை சேர்ந்தவர் மணிகண்டன்.

    இவர் கடந்த 11-ந்தேதி மதியம் தனது மோட்டார் சைக்கிளை சாமிதோப்பு பகுதியில் ஒரு ஓட்டல் அருகே சாவியுடன் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் திருடியவர்களை தேடிவந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை கீழமணக்குடி சந்திப்பில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சந்தேகத்துக்கிடமாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி விசாரித்த போது அதில் வந்தவர்கள் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த கண்ணன் (வயது 26), மாடம்பிள்ளை தர்மத்தை சேர்ந்த மகேந்திரன் (20) என்பதும், இவர்கள் சாமி தோப்பில் நடந்த மோட்டார் சைக்கிள் திருட்டில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கண்ணன், மகேந்திரன் ஆகிய இருவரையும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதில் சிறையில் அடைக் கப்பட்ட கண்ணன் மீது தென் தாமரைகுளம், அஞ்சு கிராமம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஊட்டியில் நிலம் வாங்கிய அம்பலம்
    • அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில், மே.26-

    நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவில் முதலிமார் தெரு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் கார்த்திக் (வயது 34). நகை மதிப்பீட்டாளர். இவரது மனைவி பார்வதி (23). இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்கள் முதலிமார் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த மாதம் 12-ந்தேதி மகேஷ் கார்த்திக் வேலை விஷயமாக சென்னை சென்றார். இதையடுத்து மனைவியை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது மகேஷ் கார்த்திக் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

    வீட்டில் இருந்த 17 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அவர் வடசேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளையன் வீட்டின் மாடி வழியாக புகுந்து பூட்டை உடைப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றினார்கள். சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த கொள்ளையன் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் வாத்தியார்விளையை சேர்ந்த ஆனந்த் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். போலீசார் தேடுவது அறிந்த ஆனந்த் தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆனந்தை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ஆனந்திடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனந்த் கொள்ளையடித்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். மேலும் அந்த பணத்தை பெண்களுக்கு ஜாலியாக செலவு செய்துள்ளார். ஊட்டி பகுதியில் அவர் நிலம் வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவிலில் இருந்த 6 சி. சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
    • இதையடுத்து வைரவேல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் அவர் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்ப ட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பா–ளையத்தில் உள்ள மாரியம்மன், பாலமுருகன் கோவிலுக்குள் கடந்த 23-ந் தேதி நள்ளிரவு புகுந்க மர்ம நபர் 2 கோவில் உண்டியல்களை உடைத்து ரூ.25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றார்.

    இது குறித்து கோவில் நிர்வாகிகள் ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் கோவிலில் இருந்த 6 சி. சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் உண்டியல் உடைப்பில் ஈடுபட்டது ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்த வைரவேல் (20) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வைர வேலை கைது செய்தனர்.

    வைரவேல் மீது ஏற்கனவே இரண்டு கஞ்சா வழக்குகள், கத்தியை காட்டி பணம் பறித்தது, திருட்டு வழக்குகள் உட்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.இதையடுத்து வைரவேல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் அவர் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்ப ட்டார்.

    அந்தியூரில் சிறுமியை திருமணம் செய்து கர்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    பவானி:

    அந்தியூர் காளியப்பா வீதியை சேர்ந்தவர் சிவசக்தி (24). கூலி தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திரு மணம் செய்து கொண்டார்.

    கடந்த 2 மாதத்துக்கு முன்பு சிவசக்தி தன்னுடைய மனைவியை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அப்போது அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. மேலும் அவர் 17 வயது சிறுமி என தெரிய வந்தது.

    இதை அடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளுக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர், தகவலின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் விசாரணை நடத்தி பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின்பேரில் சிவசக்தி மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சென்ற போது சிவசக்தி தலைமறைவாகி விட்டார்.

    இதை தொடர்ந்து தலை மறைவான சிவசக்தியை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.

    இநத நிலையில் சிவசக்தி அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று சிவசக்தியை போக்சோ சட்ட த்தின் கீழ் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரை ஈரோடு மகிளா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ஆத்தூர் அருகே மாணவி கொடூரக் கொலை: கைதான கல்லூரி மாணவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லியை அடுத்த கூடமலையை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ரோஜா(வயது19). இவர் ஆத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஆத்தூரை அடுத்த தாண்டவராய புரத்தைச் சேர்ந்தவர் ராமர். இவரது மகன் சாமிதுரை. இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சாமிதுரை கூடமலையில் உள்ள பெரியப்பா சின்னதுரை வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ரோஜாவை காதலித்து வந்தார். ஆனால் ரோஜா விலகிச் சென்றதாக கூறப்படுகிறது .இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது .இதில் ஆத்திரமடைந்த சாமிதுரை ரோஜாவின் வீட்டிற்கு சென்று அவரது தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். 3 நாட்களுக்கு பிறகு மலையிலிருந்து இறங்கிய சாமிதுரையை அந்த பகுதி பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் .

    இதை தொடர்ந்து போலீசார் சாமிதுரையை கைது செய்தனர். கைதான சாமிதுரை போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளாக ரோஜாவும் நானும் காதலித்து வந்தோம். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக ரோஜா என்னுடன் பேசுவதை குறைத்துக் கொண்டார். என்னை பார்ப்பதையும் தவிர்த்தார். 10 நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு செல்ல வீட்டின் முன்பு நின்றிருந்த ரோஜாவுடன் பேசினேன் .ஆனால் ரோஜா என்னிடம் பேசாமல் தவிர்த்தார்.

    இதனால் மனமுடைந்த நான் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினேன், அதன்படி கடந்த 6 -ந்தேதி சென்னையில் இருந்து ஆத்தூருக்கு வந்த நான் டீசல் வாங்கி கொண்டு ரோஜா வீட்டிற்கு சென்றேன், அங்கு அவளை தீ வைத்து எரித்து விட்டு நானும் தீக்குளித்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன்.

    ஆனால் மண் எண்ணையை அவரது உடலில் ஊற்றிய நிலையில் அவர் சகதியில் உருண்டு புரண்டதால் அவர் மீது தீ பிடிக்க வில்லை . மேலும் அவரது சகோதரி நந்தினியும் அவரை தீ வைத்து எரிக்க விடாமல் தடுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரது தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தேன்.

    பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய நான் தொடர்ந்து 3 நாட்களாக மலைப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தேன். அப்போது சோளக்கதிர், மாங்காய், குச்சிக்கிழங்கு ஆகியவற்றை சாப்பிட்டு வந்தேன். தண்ணீர் குடிக்க வந்த போது பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார் . தொடர்ந்து அவரை போலீசார்ஆத்தூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×