என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யப்பன்"

    • கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது
    • கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதங்களும் இனி எங்கு பார்த்தாலும் அய்யப்ப சரணகோஷம் ஒலிப்பதைதான் கேட்க முடியும்

    கன்னியாகுமரி:

    கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங் களில் இருந்தும் வெளிநாடு களில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிச னத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி அன்று மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டு கட்டி தலை யில் சுமந்து சென்று அய்யப்பனை தரிச னம் செய்வது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரி மலை அய்யப்பன் கோவில் நடை நாளை (புதன்கிழமை) திறக்கப்பட உள்ளது.

    இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதியான நாளைமறுநாள் கோவில்களுக்கு சென்று மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

    அதன்படி குமரி மாவட் டத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்தி ரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பூதப் பாண்டி பூதலிங்க சுவாமி கோவில், குமார கோவில் வேளிமலை சுப்ரமணியசாமி கோவில், பார்வதிபுரம் அய்யப்பன் கோவில், உள்பட பல்வேறு கோவில்களில் நாளை மறுநாள் அதிகாலையில் இருந்தே சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

    அதிலும் குறிப்பாக கன்னியாகுமரியில் முக்கட லும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் அய்யப்ப பக்தர் கள் நாளை மறுநாள் அதிகாலையில் புனித நீராடிவிட்டு கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சரண கோஷம் முழங்க துளசி மாலை அணிந்து விரதம் தொடங்கு கிறார்கள்.

    இதில் மண்டல பூஜை தரிசனத்துக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் 41 நாட்களும் மகரவிளக்கு தரிசனத்திற்கு செல்லும் அய்யப்ப பக்தர் கள் 60 நாட்களும் விரதம் கடைப்பிடிப்பது வழக்க மாகும். சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள்மாலை அணிவதற்காக நேற்று முதலே கடைகளில் துளசி மாலைகளை வாங்குவதற் காக படையெடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர். இதனால் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் விரதம் தொடங்கும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.

    இந்த கடைகளில் துளசி மாலை மற்றும் முத்து மணி மாலைகள் விற்பனை படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த கார்த்திகை மாதம் 30 நாட்களும் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை மாத சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதங்களும் இனி எங்கு பார்த்தாலும் அய்யப்ப சரணகோஷம் ஒலிப்பதைதான் கேட்க முடியும் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

    • "மெட்டல் டிடெக்டர்" சோதனைக்கு பிறகே தரிசனத்துக்கு அனுமதி
    • கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவி லில் பக்தர்களின் தரிச னத்துக்காக தினமும் அதிகாலை 4.30மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் நேற்று முதல் தொடங்கி உள்ளது. இதையடுத்து கோவில் நடை திறப்பு நேரம் கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி பகல் 1 மணிக்கும், இரவு 9 மணிக்கும் நடை அடைக்கப்படுகிறது.

    நேற்று முதலே பகவதி அம்மன் கோவிலில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. சீசன் தொடங்கிய 2-வது நாளான இன்றும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.இதனால் பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் சுமார் 1 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள்"சூட்கேஸ்", கைப்பை மற்றும் பெட்டிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மேலும் திருப்பதி வெங்கடேஸ்வரபெருமாள், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி, நாகர்கோவில் நாகராஜா, மண்டைக்காடு பகவதி அம்மன் போன்ற கோவில்களிலும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில்சென்று பார்ப்பதற்காக படகு துறையில் அய்யப்ப பக்தர் களின் கூட்டம் அலைமோதுகிறது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • இரவு 8-30 மணிக்கு பாலக்காடு கடுக்கன் குன்னம் கிருஷ்ணன் குழுவினரின் பூஜை மற்றும் தாயம் வகை செண்டை மேளம் நடைபெறுகிறது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை ஸ்ரீ தர்மசாஸ்தா சபரி யாத்திரை குழுவினர் செய்து வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை தில்லைநகரில் உள்ள ரத்னாம்பிகை உடனமர் ரத்தின லிங்கேஸ்வரர் ேகாவிலில் கேரள பாரம்பரிய முறைப்படி ஸ்ரீ அய்யப்பன் விளக்கு பூஜை நடைபெறுகிறது.வருகிற 10 ந்தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7:30 மணிக்கு வாழைமரம் கொண்டு உருவாக்கும் அம்பலத்தில் அய்யப்ப சாமி பிரதிஷ்டை, 12 மணிக்கு உச்சிகால பூஜை, அய்யப்பன் விளக்கு சப்பரம், விளக்கு சங்கல்பம் ,மாலை 5 மணிக்கு உடுமலை ருத்ரப்பா நகர் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் இருந்து தாளப்பொலியுடன் பாலை கொம்பு எழுந்தருளல், மாலை 7 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

    இரவு 8-30 மணிக்கு பாலக்காடு கடுக்கன் குன்னம் கிருஷ்ணன் குழுவினரின் பூஜை மற்றும் தாயம் வகை செண்டை மேளம் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு ஸ்ரீ அய்யப்பன் சரித்திரம் உடுக்கை பாட்டு, பால் கிண்டி எழுந்தருளல், திரிஉழிச்சல், அய்யப்பனும் வாபரும், வெட்டும் -தடவும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை ஸ்ரீ தர்மசாஸ்தா சபரி யாத்திரை குழுவினர் செய்து வருகின்றனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அய்யப்பன் அவதார நட்சத்திர தின விழா நடந்தது.
    • அய்யப்பன் பாடல்களை இசை வாத்தியங்களுடன் பக்தர்கள் பாடி மகிழ்ந்தனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அகில பாரத அய்யப்பா சேவா சங்கத்தின் சார்பில் கலியுக வரதன் சபரிமலை அய்யப்பன் அவதார நட்சத்திர தினத்தை முன்னிட்டு விசேஷ பூஜை நடந்தது. சங்கத் தலைவர் முத்து இருளாண்டி தலைமை தாங்கினார்.

    செயலாளர் முத்துராஜ், பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அய்யப்பன் படத்திற்கு சிறப்பு பூஜை-தீபாராதனை நடந்தது. அய்யப்பன் பாடல்களை இசை வாத்தியங்களுடன் பக்தர்கள் பாடி மகிழ்ந்தனர். அன்னதானம் நடந்தது.

    • அன்னதானம் வழங்கப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கூடலூர்,

    கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி அண்ணா நகர் செந்தூர் முருகன் கோவிலில் இருந்து அய்யப்ப பக்தர்கள் சார்பில், திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அய்யப்பன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, பஜனை வழிபாடு மூலம் திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக சூண்டி திருக்கல்யாண மலையை அடைந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பெரிய சூண்டி சித்தி விநாயகர் கோவிலை இரவு 11 மணிக்கு அடைந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • மயிலாப்பூரை `கோவில்களின் சங்கமம்' என்று சொல்லலாம்.
    • நாகதேவதைக்கு தனி சன்னதி உள்ளது.

    நாயன்மார்களில் வாயிலார், ஆழ்வார்களில் பேயாழ்வார் தோன்றிய மயிலாப்பூரை `கோவில்களின் சங்கமம்' என்று சொல்லலாம். மயிலையில் நீங்கள் எந்ததெருவுக்குள் சென்றாலும் நிச்சயம் ஏதாவது ஒரு ஆலயத்தை காண்பீர்கள்.

    இந்த சிறப்பின் ஒரு அம்சமாக மயிலையில் அருள்மிகு முண்டகக்கண்ணி அம்மன் கோவில் உள்ளது. மயிலாப்பூர் லஸ் பகுதியில் இருந்து மிக, மிக எளிதாக இந்த ஆலயத்தை சென்று அடையலாம்.

    லஸ்சில் இருந்து சாந்தோம் செல்லும் அந்த சாலையில் சென்றால் இடதுபுறம் பெரிய ஆர்ச் நம்மை வரவேற்கும். அந்த வழியில் சென்றால் அது கோவில் அருகில் நம்மை கொண்டு போய் சேர்த்துவிடும்.

    முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் மிக, மிக சிறிய கோவில். கிழக்குதிசை நோக்கிய இத்தலத்தில் பெரிய பெரிய பிரகாரங்களோ, பிரமாண்ட கோபுரங்களோ, விமானங்களோ இல்லை. சாலையோரத்தில் உள்ள இத்தலத்தின் ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. அந்த கோபுரத்தில் மகிஷாசுரமர்த்தினி, ராஜராஜேஸ்வரியின் சுதை வடிவங்கள் எழில்மிகு சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

    கோபுர தரிசனம் செய்து விட்டு உள்ளே நுழைந்தால் இடது பக்கம் 2 பெரிய அரச மரங்கள் நிற்பதை காணலாம். அதன் கீழ் விநாயகரும், நாகர் சிலைகளும் உள்ளன.

    விநாயகரை வணங்கி முண்டகக்கண்ணியம்மனை வழிபட செல்லலாம். அம்மன் ஓலைக்குடிசையில் இருக்கிறாள். அவளை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வசதிக்காக மகா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த மகாமண்டபத்தில் வரிசையில் நின்று முண்டகக்கண்ணி தாயை பொறுமையாக, கண்குளிர கண்டு நன்றாக தரிசனம் செய்யலாம். காலையில் சென்றால் அபிஷேகத்தையும் மாலையில் சென்றால் அலங்காரத்தையும் பார்க்கலாம்.

    வேப்பிலை பாவாடை உடுத்தி, வெள்ளி கைபொருத்தி, சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மனை தரிசிக்கும் போது மனதுக்கு நிறைவாக இருக்கும். அவள் தரும் பிரசாதமே அம்மை நோய், விஷக்கடி, பில்லி, சூனியம், கடும் காய்ச்சல் போன்றவற்றுக்கு மருந்தாக உள்ளது.

    முண்டகக்கண்ணி அம்மனை வழிபட்ட பிறகு பிரகாரத்தை சுற்றி வரலாம். ஒரே ஒரு பிரகாரம் தான். பிரகாரத்தை சுற்றத் தொடங்கியதும் அருகில் தனி அறை போல உள்ள அமைப்பினுள் சில சன்னதிகள் இருப்பதை காணலாம்.

    ஞானஜோதி நர்த்தன விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், அன்னபூரணி, அய்யப்பன், வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி, ஆஞ்சநேயர், வள்ளலார் தனி தனி சன்னதிகளில் உள்ளனர். அந்த அறையின் ஒரு பகுதி சுவரில் சித்த புருஷர்களும், மகான்களும் படங்களில் உள்ளனர்.

    இதையடுத்து வெளியில் வந்து மீண்டும் பிரகாரத்தை தொடர்ந்தால், முண்டகக்கண்ணி அம்மன் கருவறையின் பின்பகுதி வரும். அங்கு தான் ஆதியில் அம்மன் தோன்றிய அரச மரம் உள்ளது. அதனுள் தான் நாகம் குடிகொண்டுள்ள புற்று உள்ளது.

    இந்த புற்று பகுதிக்கு பெண்கள் அதிக அளவில் முட்டைகளை சமர்ப்பித்து பால் அபிஷேகம் செய்கிறார்கள்.

    அருகிலேயே நாகதேவதைக்கு தனி சன்னதி உள்ளது. அங்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறார்கள். இந்த பகுதியில் பொங்கல் வைத்து வழிபட்டால் அம்மனின் அருள்பார்வை கிட்டும் என்று பெண்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. எனவே இந்த இடத்தில் பொங்கல் வைக்க பெண்கள் போட்டி போடுவது உண்டு. இந்த பகுதியை பொங்கல் மண்டபம் என்று அழைக்கிறார்கள்.

    இதையடுத்து அம்மனின் இடதுபுற பக்கவாட்டில் தனி சன்னதியில் உற்சவர் அம்மன் இருப்பதை காணலாம். சிம்ம வாகனத்தில் உற்சவர் அம்மன் உள்ளாள்.

    ஆலய கிணறு, மடப்பள்ளியை கடந்து சென்றால் தான் உற்சவரை கண்டு வழிபட முடியும். உற்சவர் சன்னதி இடதுபுறம் சப்த கன்னியர்கள் உள்ளனர். அந்த சன்னதி அமைப்பின் இருபுறமும் ஜமத்கனி முனிவரும் அவரது மகன் பரசுராமரும் உள்ளனர்.

    இவர்களை வழிபட்டால் அத்துடன் வழிபாடு முடிந்தது. அந்த அளவுக்கு இந்த ஆலயம் மிக சிறிய ஆலயமாக உள்ளது. முண்டகக்கண்ணி அம்மன், நாகர் இருவரையும் தான் மக்கள் அதிகமாக வழிபடுகிறார்கள்.

    வழிபாடுகள் முடிந்ததும் ஆலயத்தின் ஒரு பகுதியில் சிறிது நேரம் அமரலாம். பிறகு மற்றொரு வாயில் வழியாக வெளியேறலாம். மயிலை பக்கம் போகும் போது அவசியம் முண்டகக்கண்ணி அம்மனை வழிபட்டு அருள் பெறுங்கள்.

    • மகரஜோதியை முன்னிட்டு யானை வாத்தியத்துடன் காட்சி சீவேலி, முத்தாயம்பகையம் நடக்கிறது
    • கோவை ஸ்ரீ அய்யப்பசேவா சங்க செயலாளர் கே.விஜயகுமார் அறிவிப்பு

    கோவை,

    கோவை சித்தாபுதூர் அய்யப்ப சாமி பொற்கோவிலில் மண்டல பூஜை விழா வருகிற 17 -ந் தேதி (வெள்ளிக்கிழமை)தொடங்குகிறது. அன்றைய தினம் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிய வருவது வழக்கம்.

    அய்யப்பசாமி மண்டல பூஜை விழாவை முன்னிட்டு டிசம்பர் 1-ந்தேதி வெள்ளிக்கிழமை முதல் 12-ந்தேதி செவ்வாய்க்கிழமை வரை ஆலய தந்திரி பிரம்மஸ்ரீ சிவபிரசாத் நம்பூதிரி தலைமையில் புகழ்பெற்ற தாந்திரீக ஆச்சாரியார்கள் முன்னிலையில் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

    இதில் பல்வேறு காரிய சித்திக்கான சிறப்பு அர்ச்சனைகள், சனிதோஷ சாந்திஜெபம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. டிசம்பர் 13-ந்தேதி அய்யப்பசாமிக்கு களபாபிஷேகம் நடைபெறும்.

    மண்டல பூஜை விழாவை முன்னிட்டு 16 -ந்தேதி சனிக்கிழமை அகண்டநாம பஜனையும், 17 -ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானமும் நடைபெற உள்ளது.27-ந்தேதி புதன்கிழமை மகாகணபதி ஹோமம், மண்டல விளக்கு பூஜை நடக்கிறது. அன்றையதினம் மண்டல மகரவிளக்கு காலத்தில் பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.

    மேலும் இருமுடி கட்டி சபரிமலை பயணம் செல்ல வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அய்யப்ப சேவாசங்கம் செய்து வருகிறது.ஜனவரி 15-ந்தேதி திங்கட்கிழமை மகரஜோதியை முன்னிட்டு யானை வாத்தியத்துடன் காட்சி சீவேலியும், மாலையில் மகா தீபாராதனை, முத்தாயம்பகையும் நடைபெறும்.

    இந்த தகவலை கோவை ஸ்ரீ அய்யப்பசேவா சங்க செயலாளர் கே.விஜயகுமார் தெரிவித்து உள்ளார்.

    • பழங்காலத்தில் மகர ஜோதி தரிசனம் மட்டுமே சபரி யாத்திரையாக கருதப்பட்டு வந்தது.
    • அப்போதெல்லாம், டிசம்பர் மாத இறுதியில் பக்தர்கள் யாத்திரையை துவங்குவர்.

    பழங்காலத்தில் மகர ஜோதி தரிசனம் மட்டுமே சபரி யாத்திரையாக கருதப்பட்டு வந்தது.

    அப்போதெல்லாம், டிசம்பர் மாத இறுதியில் பக்தர்கள் யாத்திரையை துவங்குவர்.

    இதன்படி ஒருவர் சபரிமலைக்குச் செல்ல வேண்டுமானால், அவருடைய விரத நாட்களை அதற்குள் முடித்து

    பின்னர் இருமுடி எடுத்து செல்ல வேண்டும்.

    இதன்படி செய்ய அவர் கார்த்திகை மாதம் முதல் நாள் மாலையிட்டால் தான்

    மகர ஜோதி தரிசனத்துக்கு யாத்திரை மேற்கொள்ள முடியும்.

    இதனால்தான் விரதம் ஏற்க கார்த்திகை மாதத்தை தேர்ந்தெடுத்தனர்.

    • அய்யன் அய்யப்பன் வலக்கரத்தால் சின்முத்திரை காட்டியபடி அருள்கிறார்.
    • அவர் அந்த முத்திரையை தன் மார்புக்கு மிக அருகில் வைத்துள்ளார்.

    அய்யன் அய்யப்பன் வலக்கரத்தால் சின்முத்திரை காட்டியபடி அருள்கிறார்.

    நம்மில் பலரும் சுவாமி சின்முத்திரையை தமது கால் மூட்டின் மீது வைத்திருப்பதாக நினைக்கிறார்கள்.

    அப்படியல்ல, அவர் அந்த முத்திரையை தன் மார்புக்கு மிக அருகில் வைத்துள்ளார்.

    இது நம்மை இந்த அண்ட சராசரத்துடன் தொடர்புகொள்ள வழி நடத்தும்.

    சுண்டு விரல், மோதிர விரல், நடுவிரல் என மூன்று நிமிர்ந்த விரல்களும் அகங்காரம், மாயை மற்றும் கர்மாவை குறிக்கும்.

    ஆள்காட்டி விரல் ஆத்மாவை குறிக்கிறது.

    (நாம்&ஜீவாத்மா) கட்டைவிரல் பரமாத்மாவை குறிக்கும் இந்த இரண்டு விரல்களின் இணைப்பு அகங்காரம், மாயை மற்றும் கர்மாவை அகற்றி ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணையவேண்டும் என்பதைக் குறிக்கும்.

    இந்த சின்முத்திரைக்கு இன்னும் நிறைய விளக்கங்கள் உள்ளன. நான் ஒன்றை மட்டும்தான் விளக்கியிருக்கிறேன்.

    • தீபத்தை சிறப்பிக்கும் மாதம்தான் திருக்கார்த்திகை.
    • கார்த்திகை மாதத்தில், நமது வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டுமாம்.

    தீபத்தை சிறப்பிக்கும் மாதம்தான் திருக்கார்த்திகை.

    இந்த மாதத்தில் திரு விளக்கேற்றி வழிபடுவது அவ்வளவு விசேஷம்.

    கார்த்திகை மாதத்தில், நமது வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டுமாம்.

    அவை எந்தெந்த இடங்கள், அந்த இடங்களில் தீபம் ஏற்றுவதால் என்னென்ன பலன்கள் என்பது குறித்து விரிவாக அறிவோம்.

    கோலமிடப்பட்ட வாசலில்: ஐந்து விளக்குகள்

    திண்ணைகளில்: நான்கு விளக்குகள்

    மாடக்குழிகளில்: இரண்டு விளக்குகள்

    நிலைப்படியில்: இரண்டு விளக்குகள்

    நடைகளில்: இரண்டு விளக்குகள்

    முற்றத்தில்: நான்கு விளக்குகள்

    இந்த இடங்களில் எல்லாம் தீபங்கள் ஏற்றிவைப்பதால் நமது இல்லம் லட்சுமி கடாட்சத்தை வரவேற்கத் தயாராகி விடும்.

    தீய சக்திகள் விலகியோடும்.

    பூஜைஅறையில்: இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றிவைக்கவேண்டும். இதனால் சர்வமங்கலங்களும் உண்டாகும்.

    சமையல் அறையில்: ஒரு விளக்கு அன்ன தோஷம் ஏற்படாது.

    தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில்: யம தீபம் ஏற்றவேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.

    பின்கட்டு பகுதியில்: நான்கு விளக்குகளை ஏற்றிவைக்க விஷ ஜந்துக்கள் அணுகாது.

    ஆனால், அபார்ட்மென்ட் மற்றும் மாடி வீடுகள் அதிகம் உள்ள தற்காலத்தில் மேற்சொன்ன முறைப்படி விளக்கு ஏற்ற முடியாது.

    ஆகையால் வசதிக்கு ஏற்ப வீட்டுக்குள்ளேயும் வெளியிலுமாக 27 விளக்குகளை ஏற்றிவைத்து பலன் பெறலாம்.

    தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால் தீபம் ஏற்றியதும் தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம்.

    • ஓம் அரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் அய்யப்ப சுவாமியே சரணம் அய்யப்பா!
    • ரட்ச ரட்ச மகாபாகோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம

    அறிந்தும், அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்துக் காத்து இரட்சித்து அருள வேண்டும்.

    ஓம் சத்தியமான பதினெட்டாம்படி மேல்

    வாழும் ஓம் அரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன்

    அய்யப்ப சுவாமியே சரணம் அய்யப்பா!

    காசி, இராமேஸ்வரம், பாண்டி, மலையாளம்

    அடக்கியாளும், ஓம் அரிஹரசுதன் ஆனந்த சித்தன்

    ஐயன் அய்யப்ப சுவாமியே சரணம் அய்யப்பா!

    பூதநாத சதானந்த சர்வ பூத தயாபரா

    ரட்ச ரட்ச மகாபாகோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம:

    சுவாமியே சரணம் அய்யப்பா!

    • ஒவ்வொரு குருசாமியும், கன்னிசாமிகளுக்கு தெரியப்படுத்த வேண்டிய தகவல் இது.
    • அதன்படியே அவர் எய்த அம்பு விழுந்த இடம் தான் அந்த அரச மரம்.

    ஒவ்வொரு குருசாமியும், கன்னிசாமிகளுக்கு தெரியப்படுத்த வேண்டிய தகவல் இது.

    சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க 18 படிகள் ஏறுவதற்கு முன்பு அங்கே ஒரு அக்னி குண்டம் இருக்கும்.

    அங்குதான் தேங்காய்களை போடுவார்கள். அதன் அருகில் ஓர் அரச மரம் இருக்கிறது. அது விசேஷமானது.

    அய்யப்பன் மகிஷியை வதம் செய்த பின்னர்தான் அவருடைய அவதார காரணம் பூர்த்தியானது.

    அதன் பின்னர் சபரிமலையில் தவம் இருப்பதற்காக அங்கிருந்து ஓர் அம்பை எய்ததாகவும், அது எந்த இடத்தில் விழுகிறதோ

    அங்கு தனக்கு கோவில் கட்டும்படியும் பந்தள மன்னருக்கு அருள்பாலித்தார் அய்யப்பன்.

    அதன்படியே அவர் எய்த அம்பு விழுந்த இடம்தான் அந்த அரச மரம்.

    எனவே அந்த மரத்தின் முன்னால் நின்று நாம் வைக்கும் கோரிக்கைகள் உடனடியாக அய்யப்பன் அருளால் நிறைவேறும்.

    ×