search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்புழு"

    • இடுபொருட்கள் தயாரிக்கும் மையம் நிறுவ ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.
    • கலன்கள், மண்புழு உரம் தயாரிக்கும் படுக்கை, பேக்கேஜிங், லேபிலிங் மற்றும் மூல பொருட்கள் வாங்க பயன்படுத்தலாம்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியி ட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் அங்கக வேளாண்மையை உழவர்களிடையே பிரபலபடுத்தி ஊக்குவிக்கவும், அங்கக இடுபொருட்களை உழவர் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யவும், 2023-24-ம் ஆண்டு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இயற்கை விவசாயம் செய்திடும் அல்லது செய்திட ஆர்வமுள்ள விவசாயிகள் குழுவாக இணைந்து இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் மையம் நிறுவ ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.

    இதன்மூலம் இயற்கை இடுபொருட்கள் உற்பத்திக்கான கலன்கள், மண்புழு உரம் தயாரிக்கும் படுக்கை, பேக்கேஜிங், லேபிலிங் மற்றும் மூல பொருட்கள் வாங்க பயன்படுத்தலாம்.

    இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் குழுக்களுக்கு தங்கள் பொருட்களை உழவர் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உழவன் செயலியின் கீழ் பதிவு செய்ய வேண்டும். மேலும் தகவ லுக்கு தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குறைந்த விலையில் செழிப்பு உரம் விற்பனை செய்யப்படுகிறது.
    • மாணவர்கள் மண்புழு உர படுக்கை முறையை அமைத்துள்ளனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் விவேகானந்தா கல்லூரியுடன் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி விலங்கியல் துறை மாணவர்கள் மண்புழு உர படுக்கை முறையை அமைத்துள்ளனர்.

    இதன் மூலம் மக்கும் கழிவுகளை நன்கு மக்க வைத்து அதனுடன் தினசரி கடைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மக்கிய டீ தூள், காய்ந்த சாணம் ஆகியவற்றை அடுக்கடுக்காக கலந்து தொட்டிகளில் நிரப்பி வெல்லம் கரைசல் தெளித்து மண்புழுக்களை வளர்ப்பதற்கான மண்புழு உரத் தொட்டியில் நன்கு ஈரப்பதம் ஏற்படுத்தி தற்போது உரம் தயாரிக்கப் பட்டு வருகிறது.

    இவ்வாறு தயாரிக்கப் படும் உரத்திற்கு செழிப்பு என அரசால் பெயரிடப்பட்டு மதுரை மாவட்டத்தில் முதல் முறையாக செழிப்பு உரம் விற்பனை செய்வதற்கான வேளாண்மை துறை உரிமம் சோழவந்தான் பேரூராட்சி பெற்றுள்ளது.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயி களுக்கும் மண்புழு உரம் கிலோ ரூ.5-க்கு மிக குறைந்த விலையில் பேரூராட்சி தலைவர் ஜெய ராமன், செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த உரத்தின் தரம் குறித்து மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பகுப்பாய்வு செய்து மிகச்சிறந்த உரம் என தர சான்றிதழும் பெறப்பட் டுள்ளது.

    எனவே மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் அரசு தயாரிக்கும் இந்த உரத்தினை குறைந்த விலைக்கு வாங்கி விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெறலாம் என பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பவானி வட்டாரம், மயிலம்பாடி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப, மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.
    • இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பவானி உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் நந்தினி, செல்வி, லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

    பவானி:

    பவானி வட்டாரம், மயிலம்பாடி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப, மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.

    இப்பயிற்சி பவானி வேளாண்மை உதவி இயக்குனர் வனிதா தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் அருண்குமார் மண்புழு படுக்கை அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல் குறித்து மிக தெளிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    ஜே.கே.கே.எம். கோபி வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் ஹாதில்மோன் மண்புழு உரத்தின் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து தெரிவித்தார்.

    பவானி உதவி வேளாண்மை அலுவலர் சித்தையன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மானிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தார்.

    மேலும் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பவானி உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் நந்தினி, செல்வி, லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

    ×