search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவர்"

    • மைனர் பெண்களின் ஒப்புதலுடனே மைனர் சிறுவர்கள் டேட்டிங் செல்லும் நிலையில் ஏன் சிறுவர்களை மட்டும் கைது செய்ய வேண்டும்
    • ஒரே சிறையில் இதுபோன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 20 சிறுவர்களை பார்த்தேன்

    சிறுமிகளுடன் டேட்டிங் செய்வதாக மைனர் சிறுவர்கள் கைது செய்யப்படுவது அதிகரிக்கத் தொடங்கியள்ளது. ஆனால் மைனர் பெண்களின் ஒப்புதலுடனே மைனர் சிறுவர்கள் டேட்டிங் செல்லும் நிலையில் ஏன் சிறுவர்களை மட்டும் கைது செய்ய வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் பந்தாரி என்ற சமூக ஆர்வலரால் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்ட்டது.

     

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் வெறுமனே சிறுவர்களை கைது செய்வதற்கு பதிலாக நடைமுறை தீர்வுகள் குறித்து ஆராய வேண்டும். பெற்றோரின் புகார் மட்டுமே சிறுவர்களை கைது செய்வதற்கு போதுமானது அல்ல. கைது செய்வதற்கு பதிலாக சிறுவர்களுக்கு அதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறை வழங்கலாம். மாநில அரசு இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து காவல்துறையினருக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். மேலும் மத்திய மாநில அரசுகள் இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

     

    பொதுநல வழக்கு தாக்கல் செய்த பந்தாரி, ஒரே சிறையில் இதுபோன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 20 சிறுவர்களை பார்த்தேன் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • பழைய கால நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.
    • சிறுவர், சிறுமிகளுக்கான கயிறு இழுத்தல் போட்டியும் நடந்தது.

    பட்டுக்கோட்டை:

    நமது பழமையான பள்ளிப்பருவ விளையாட்டுக்களை தற்போதுள்ள சிறுவர், சிறுமியர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விதமாகவும், புதுப்பிக்கும் ஒரு முயற்சியாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஆர்.வி. நகர் பகுதியில் கல்வியாளர்கள் ஒருங்கிணைப்புடன் சிறுவர், சிறுமியர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர்.

    இதில் பரமபதம், தாயம், பல்லாங்குழி, கிச்சுகிச்சு தாம்பலம், நொண்டி, நொங்கு வண்டி ஓட்டுதல், டயர் வண்டி ஓட்டுதல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளையும் சிறுவர், சிறுமியர்கள் ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமிகளுக்கான கயிறு இழுத்தல் போட்டியும் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து சிறுவர், சிறுமிகளின் பெற்றோர்களும் தன்னார்வமாக நொங்கு வண்டி ஓட்டியும், டயர் வண்டி ஓட்டியும் பம்பரம் விளையாடியும் அவர்களது பழைய கால நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.

    அதனைத் தொடர்ந்து சிறுவர், சிறுமியர்களின் பெற்றோர்களுக்கு கயிறு இழுத்தல் போட்டியும் நடந்தது. இது குறித்து சிறுமியர்கள் கூறுகையில், நாங்கள் விளையாட்டு என்றால் செல்போனிலும், டி.வியிவிலும் கேம் விளையாடிக் கொண்டிருப்போம். நாங்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. இன்றைய தினம் பாரம்பரிய விளையாட்டுக்களை நாங்கள் மற்ற சிறுவர், சிறுமிகளுடன் இணைந்து விளையாடியது எங்களுக்கு ஜாலியாக இருக்கிறது. நாங்கள் மிகவும் சந்தோசமாக உள்ளோம்.

    அம்மா அடிக்கடி வெளியில் சென்று ஓடியாடி விளையாட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அதற்கு வாய்பே இல்லாமல் இருந்தது. தற்போது நாங்கள் மற்ற சிறுவர், சிறுமிகளுடன் இணைந்து ஓடியாடி விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • சிறுவர்கள் ஓட்டி வந்த வாகனங்களுக்கு தலா ரூ.7000 அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல்
    • 12 வாகனங்களுக்கு ரூ.84 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில், குளச்சல் டி.எஸ்.பி.தங்கராமன் மேற்பார்வையில் குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போக்குவரத்து போலீசார் நேற்று குளச்சல் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது 10-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஓட்டி வந்த வாகனங்களுக்கு தலா ரூ.7000 அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு விதிக்கப்பட்ட அபராதங்களை இணைய தளம் வாயிலாக செலுத்தினர். பின்னர் சிறுவர்களிடம் வாகனங்களை கொடுக்க மாட்டோம் என பெற்றோர்கள் உறுதிமொழி எடுத்துகொண்டனர். பின்னர் வாகனங்கள் விடுவிக்கப்பட்டன. மொத்தம் 12 வாகனங்களுக்கு ரூ.84 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • சிறுவர் பூங்காவினை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் திறந்து வைத்தார்.
    • நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் ஸ்வஸ்திக் நகரில் அம்ருத் 0.2 திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சம் செலவில் கட்டப்பட்ட சிறுவர் பூங்கா திறப்பு விழா நடைபெற்றது . விழாவிற்கு நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார்.

    நகராட்சிஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுவர் பூங்காவினை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் மங்களநாயகி, கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், ஆத்மா குழு தலைவர் சதாசிவம்,

    வழக்கறிஞர்கள் அன்பரசு, வெங்கடேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பிளஸ்-1 படிக்கும் 16 வயதுடைய பள்ளி மாணவன் சிறுமியின் வீட்டிற்கு சென்றார்.
    • விசாரணை நடத்திய போலீசார் பள்ளி மாணவன் மீது போக்சோ வழக்குப்பதிவு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    இவர்களது தாயார் நாகர்கோவிலில் உள்ள பலசரக்கு கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று காலை வழக்கம்போல சிறுமியின் தாயார் வேலைக்கு சென்றார். வீட்டில் சிறுமி மட்டுமே இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 16 வயதுடைய பள்ளி மாணவன் சிறுமியின் வீட்டிற்கு சென்றார்.

    அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பள்ளி மாணவன் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறி அழுது உள்ளார்.

    இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் சம்பவம் குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பள்ளி மாணவன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட பள்ளி மாணவனுக்கு 16 வயது என்பதால் அவரை நெல்லை மாவட்டத்தில் உள்ள சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    • ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கீழ ஆசாரிபள்ளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராபின் இவரது மகன் ஆல்வின் ராஜ் (வயது 10).

    ஆசாரிபள்ளம் நடு தெருவை சேர்ந்தவர் ஹர்ஜோன் (10). இவர்கள் இருவரும் நாகர்கோவிலில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று விடுமுறை என்பதால் ஆல்வின்ராஜ், ஹர்ஜோன் இருவரும் அவருடைய நண்பர் இம்மானுவேல் (10) என்பவருடன் அந்த பகுதியில் சுற்றி திரிந்தனர். மதியம் அந்தோணியார் ஆலயம் பகுதியில் உள்ள குளத்தில் மீன் பிடிக்க சென்றனர்.

    ஆல்வின் ராஜ், ஹர்ஜோன் இருவரும் குளத்தில் இறங்கி மீன் பிடித்தபோது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி னார்கள். இதையடுத்து பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆல்வின் ராஜ் ஹர்ஜோ னை பரிசோ தித்த டாக்டர்கள் இருவ ரும் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இது குறித்து ஆசாரிப்பள் ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆல்வின் ராஜ் ஹர்ஜோன் பலியானது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசார ணையில் திடுக்கிடும் தகவல் கள் வெளியாகி உள்ளது. தண்ணீரில் மூழ்கி பலி யான ஆல்வின் ராஜ், ஹர்ஜோன் இருவரும் குளத்தின் கரையில் நின்று மீன் பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் மீன்கள் சிக்க வில்லை.

    இதையடுத்து குளத்திற் குள் இறங்கி அவர்கள் மீன் பிடித்தனர். அதன்பிறகும் மீன் சிக்காததால் தண்ணீ ருக்குள் இறங்கி சென்றனர். அப்போது கரையில் இருந்த இம்மானுவேல் ஆழமான பகுதிக்கு செல்லாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.அதற்குள் ஆல்வின் ராஜ், ஹர்ஜோன் இருவரும் தண்ணீ ரில் மூழ்கி உள்ள னர். இதை பார்த்த இம்மானு வேல் கூச்சலிட்டு உள்ளார்.

    அப்போது அந்த பகுதி மக்கள் அங்கு ஓடி வந்து அவர்களை மீட்டு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றது தெரிய வந்துள்ளது. பலி யான ஆல்வின் ராஜ், ஹர் ஜோன் உடல் பிரேத பரிசோ தனை இன்று ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு உள்ளனர்.

    • கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள வெள்ளாளர் காலனியில் தொடங்கப்பட்டது.
    • இலவசமாக மருத்துவ சிகிச்சை செயல்படும்

    நாகர்கோவில்:

    போதை பொருட்களால் பாதிக்கப்பட்ட சிறுவர் களுக்கான போதை தடுப்பு ஆலோசனை மற்றும் பரிந்துரை மையம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள வெள்ளாளர் காலனியில் தொடங்கப்பட்டது. விழா முன்னாள் மாவட்ட நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோஷம் தலைமையில் ஏ.எம்.கே. போதை தடுப்பு மைய இயக்குனர் அருள்ஜோதி முன்னிலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியை மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, மாவட்ட நன்னடத்தை அலுவலர் சேவியர், குழந்தைகள் நலக்குழு தலைவர் ரெக்சலின் ஜென்சி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் கிளமென்ட் வின்சிலி, மாணிக்பிரபு ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன், குழந்தைகள் அவசர காலத்தில் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்களை வெளியிட்டு பேசினார்.

    ஏ.எம்.கே. போதை தடுப்பு மைய இயக்குனர் அருள்ஜோதி பேசும்போது, நாகர்கோவிலில் போதை தடுப்பு ஆலோசனை மற்றும் பரிந்துரை மையத்தில் சிறுவர்கள் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால் ஆலோசனை வழங்குவதுடன் மருத்துவ சிகிச்சை மற்றும் மறுவாழ்வு தேவைப்படும் சிறுவர்களுக்கு 15 படுக்கை வசதி கொண்ட நெல்லை ஏ.எம்.கே. சிறுவர்களுக்கான போதை தடுப்பு மையத்தில் பரிந்துரை செய்து இலவசமாக மருத்துவ சிகிச்சை செயல்படும் என தெரிவித்தார்.

    முன்னதாக மறுவாழ்வு மைய ஆலோசகர் சுசீலா வரவேற்று பேசினார். மறுவாழ்வு மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் புஷ்பவதி நன்றி கூறினார்.

    • சிவகாசி பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா நடந்தது.
    • குழந்தைவேலன் காவடியுடன் சிறுவர், சிறுமிகள் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா நடந்தது.

    இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவ-மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் குழந்தை வேலன் காவடி எடுத்து சிறுவர்-சிறுமியர்கள் வழிபாடு செய்தனர்.மேலும் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நகரில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் நடைபயணமாக சென்று வழிபாடு நடத்தினர்.

    முன்னதாக சிவகாசி முத்தாலம்மன் கோவிலில் இருந்து பால் குடத்துடன், காவடி எடுத்து அரோகரா கோஷத்துடன் நடைபயணம் சென்ற பக்தர்கள் முருகன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், நாராயணசாமி கோவில், திருத்தங்கல் முருகன்கோவில் வரை சென்று சுவாமிக்கும், அம்பாளுக்கும் பாலாபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு நடத்தினர்.

    நிகழ்ச்சியினை வழிநடத்திய ஆறுமுக சுவாமிக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.

    ×