search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அரசு விருது"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறந்த சுற்றுலா கிராம போட்டியை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி தொடங்கி வைத்தார்.
    • விருதை பெறுவதற்காக உல்லாடா கிராம தலைவர் மாதன் தலைமையிலான குழுவினர் டெல்லிக்கு சென்று உள்ளனர்.

    ஊட்டி:

    தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமங்களை தேடும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி சிறந்த சுற்றுலா கிராம போட்டியை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி தொடங்கி வைத்தார்.

    உள்ளூரின் கலை, கலாசாரம் மற்றும் மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தி, பாதுகாக்கும் கிராமங்களை கவுரவிப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். இதற்காக தனி இணையதளமும் தொடங்கப்பட்டது. இதில் கலந்துகொள்ள அனைத்து தரப்பினரையும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி இருந்தார்.

    இதையடுத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 795 விண்ணப்பங்கள் மத்திய சுற்றுலா அமைச்சகத்திற்கு வந்தது. அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் கேத்தி பள்ளத்தாக்கில் உள்ள உல்லாடா கிராமம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கான விருதை பெறுவதற்காக உல்லாடா கிராம தலைவர் மாதன் தலைமையிலான குழுவினர் டெல்லிக்கு சென்று உள்ளனர். இவர்களுக்கான பயண செலவு, உணவு செலவு, தங்குமிடம் ஆகியவற்றை மாநில சுற்றுலாத்துறை ஏற்றுள்ளது. வருகிற 27-ந் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.

    • ரூ.450 கோடி ரூபாய் செலவில் 1.30 லட்சம் ஏக்கரில் நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
    • எங்கள் ஊராட்சி 369 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர் என்றார்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே அமைந்துள்ள சாமாண்டஅள்ளி ஊராட்சிக்கு பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் "துளி நீரில் அதிக பயிர்" என்ற திட்டத்திற்காக விருது வழங்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் பிரதமர் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் "துளிநீரில் அதிக பயிர்" என்ற திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.745 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அந்த நிதியில் ரூ.2.19 லட்சம் ஏக்கர் நிலங்கள் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்படும் ஊராட்சிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து ரூ.450 கோடி ரூபாய் செலவில் 1.30 லட்சம் ஏக்கரில் நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    இத்திட்டத்தின் கீழ் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், திருவண்ணா மலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயலாக்கம் நடந்து வருகின்றது.

    இதில் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் தோட்டக்கலைத்துறையின் கீழ் சாமாண்டஅள்ளி ஊராட்சியும் ஒன்றாகும். இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நுண்ணுயிர் பாசன கட்டமைப்பு அமைக்கப்பட்டு சுமார் 832 எக்டர்களில் மரவள்ளி, முலாம்பழம், வெண்டைக்காய், தக்காளி, தர்பூசணி போன்றவை பயிரிடப்பட்டுள்ளது.

    சொட்டுநீர் பாசன வசதியும், அதன் மீது நிலப் போர்வை அமைக்கப்பட்டுள்ளதால் குறைந்த நீரில் நல்ல தரமான பழங்கள் விளைச்சல் எடுத்துள்ளனர்.

    இப்பகுதி விவசாயிகள் குறைந்த நீரில் அதிக பயிர் திட்டத்தில் உள்ள விவசாயிகளை ஊக்கு விக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் இந்த ஆண்டுக்கான விருது சாமண்டஅள்ளி ஊரா ட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் விருது பெற்ற ஒரே ஊராட்சி இதுதான் என்று குறிப்பிட்டது.

    கடந்த வாரம் புது டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்த விருதை ஊராட்சி தலைவரும், பட்டிமன்றப் பேச்சா ளருமான மாசிலாமணி பெற்றுக் கொண்டார்.

    இது குறித்து அவர் கூறும் போது, எங்களது ஊராட்சியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி ஊராட்சி நிர்வாகத்துடன் வட்டார தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் எடுத்த முயற்சியால் 832 ஏக்கர் நிலத்தடி நீர் பாசன பரப்புகளுக்கு முழுமையாக நுண்ணுயிர் பாசன கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் எங்கள் ஊராட்சி 369 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர் என்றார்.

    இது குறித்து மொரப்பூர் வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் கலைவாணி கூறுகையில், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை பயன்படுத்தி வறண்ட பகுதியான சாமண்ட அள்ளியில் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் சிறப்பாக செயலாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் குறைந்த நீரில் அதிக விளைச்சலையும், நல்ல வருவாயும் பெற்றுள்ளனர் என்றார்

    • மனிதாபிமானம் மிக்க பணிகளை செய்து மனித உயிர்களை காப்பாற்றிய நபர்கள் தகுதியானவர்கள்
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    மத்திய அரசின் உள்துறை சார்பில் தைரியமான மற்றும் மனிதாபிமானம் மிக்க பணிகளை செய்து உயிர் காக்கும் முயற்சியில் ஈடுபட்டு மனித உயிர்களைக் காத்த நபர்களுக்கு சர்வோதம் ஜீவன் ரக்ஷா பதக், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக் மற்றும் ஜீவன் ரக்ஷா பதக் ஆகிய தொடர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

    தைரியம் மிகுந்த மற்றும் மனிதாபிமானம் மிக்க பணிகளை தாமதம் இன்றி உடனடியாக செய்து தனது அசாத்திய திறமைகளால் நீரில் மூழ்கியவர்கள், நிலச்சரிவு, விபத்து மற்றும் நெருப்பில் சிக்கி காயம் அடைந்தவர்கள், மின்சார சாதனங்களால் தாக்கப்பட்டு பாதிப்பு ஏற்பட்டவர்கள், விலங்கினால் தாக்கப்படுபவர்கள் மற்றும் சுரங்கத்தில் வேலை செய்யும் போது ஏற்படும் விபத்துகளில் சிக்கியவர்களை உயிர் காக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

    இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் விதிமுறைகள் 1.10.2020 முதல் தற்போது வரையிலான காலத்திற்குள் ஆற்றிய வீர சேவையை தெளிவுபடுத்தி உள்ளடக்கிய கருத்துக்கள், நாளிதழ்களில் வெளிவந்த செய்தி குறிப்புகள் போன்ற சான்றுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும். 1.10.20-க்கு முந்தைய வீர தீர சாதனைகள் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது.

    விபத்துக்கள், ஆபத்து காலங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்ற தருணங்களில் மனித உயிர்க்காத்த ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து வகையான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.ஆயுத ப்படை பிரிவு, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி சேவை துறையினர் ஆகியோர் தம்முடைய பணி நேரத்தின்போது அல்லாமல் இத்தகைய சேவை புரிந்திருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    மத்திய அரசின் உள்துறை சார்பில் தரப்படும் இவ்விருது பெற தகுதியானவர்களைபாரதப் பிரதமர் மற்றும் பாரத தேசத்தின் ஜனாதிபதி ஆகியோருக்கு உயர் விருதுக்கு குழு பரிந்துரைக்கும்.விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் 10.8.22.இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    • சர்வோத்தம் ஜீவன் ரக்‌ஷா பதக், உத்தம் ஜீவன் ரக்‌ஷா பதக், ஜீவன் ரக்‌ஷா பதக் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது.
    • தகுதிவாய்ந்த நபர்கள் உரிய ஆவணங்களுடன் வருகிற 22-ந் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    மத்திய அரசின் உள்துறை சார்பில், தைரியமான மற்றும் மனிதாபிமான பணிகளை செய்து உயிர் காக்கும் முயற்சியில் ஈடுபட்டு உயிர்களை காத்தவர்களுக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்‌ஷா பதக், உத்தம் ஜீவன் ரக்‌ஷா பதக், ஜீவன் ரக்‌ஷா பதக் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது.

    இந்த விருதுக்கு ஒரு நபரின் உயிரை காப்பாற்றும் மனிதத்தன்மை மிகுந்த தீரச்செயலான நீரில் மூழ்குதல், விபத்துகள், தீ விபத்துகள், மின்கசிவு, நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல், சுரங்களில் மீட்பு நடவடிக்கை போன்றவற்றில் இருந்து உயிரை காப்பாற்றிய நபர்களுக்கு 2022-ம் ஆண்டுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக் வழங்கப்படுகிறது.

    தகுதிவாய்ந்த நபர்கள் உரிய ஆவணங்களுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அறை எண்.35, 36-ல் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். வருகிற 22-ந் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • திருப்பூர் மாவட்டமும் விருது மற்றும் பாராட்டு சான்று பெற தேர்வானது.
    • உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விருது மற்றும் சான்றை கொடுத்து வாழ்த்து பெற்றார்கள்.

    திருப்பூர்:

    உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி, டெல்லியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையகத்தின் சார்பில் உணவு பாதுகாப்பு துறையில் ஆய்வு, மாதிரிகள் சேகரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக 'ஈட் ரைட் சேலஞ்ச்' விருதுக்கு தேசிய அளவில் 75 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டமும் விருது மற்றும் பாராட்டு சான்று பெற தேர்வானது.

    இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் விருது மற்றும் பாராட்டு சான்றை திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகையிடம் வழங்கி பாராட்டினார். பின்னர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம், உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விருது மற்றும் சான்றை கொடுத்து வாழ்த்து பெற்றார்கள்.

    ×