search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகுதி தேர்வு"

    • குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
    • ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) வழியே ஆதிதிராவிடர் ,பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவர்கள் அயல்நாடு சென்று புகழ் பெற்ற பல்கலைகழகங்களில் உயர் கல்வி பயில அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட TOEFL,IELTS,GRE,GMAT போன்ற தகுதித் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    பொறியியல் மற்றும் மேலாண்மை, தூய அறிவியல் மற்றும் பண்பாட்டு அறிவியல் ,வேளாண்அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் , சர்வதேச வர்த்தகம், பொருளாதார, கணக்கியல் நிதி, , மனிதநேயம், சமூக அறிவியல். நுண்கலை சட்டம், கலை மற்றும் அறிவியல், போன்ற படிப்புகளை அயல் நாடுகளில் பயில விரும்புவராக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான செலவினம் தாட்கோவால் வழங்கப்படும்.

    இப்பயிற்சி முடித்து தேர்ச்சி பெறுவதன் மூலம் மாணவர்கள் தாம் விரும்பும் அயல் நாடுகளிலும் கல்வி நிறுவனத்தில் மேல் படிப்பினை தொடர்வதற்கு வாய்ப்பு பெறலாம் இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.comஎன்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்:501,503, 5 வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர்-641 604 என்ற முகவரியிலும், அலைபேசி எண்: 94450 29552, தொலைபேசி எண்: 0421-2971112 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • மாணவர் சேர்க்கைக்கு, தகுதித்தேர்வு வருகிற ஜூன் மாதம் 3ம் தேதியன்று சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற உள்ளது.
    • தகுதியும், விருப்பமும் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    கிருஷ்ணகிரி,

    இந்திய ராணுவ கல்லூரியில் 8-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கான தகுதித்தேர்வு வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி நடைபெறும் என கிருஷ்ணகிரி கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்தியன் ராணுவ கல்லூரியில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் 8-ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு, தகுதித்தேர்வு வருகிற ஜூன் மாதம் 3ம் தேதியன்று சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற உள்ளது.

    இந்த தேர்விற்கான விண்ணப்ப படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய அமர்விற்கான வினாத்தாள் தொகுப்பை ராஷ்டிரிய இந்தியன் ராணுவ கல்லூரியின் இணையதளம் மூலமாக பொதுப்பிரிவினர்கள் ரூ.600-ம், எஸ்சி., எஸ்டி பிரிவினர் ரூ.555-ம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் 1.1.2024-ம் தேதியன்று 2.1.2011-க்கு முன்னதாகவும், 1.7.2012-க்கு பிறகும் பிறந்திருக்க கூடாது.

    ராணுவ கல்லூரியில் அனுமதிக்கும் போது, அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7-ம் வகுப்பு படிப்பவராகவும், அல்லது 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேர்வு கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தோவாணையச் சாலை, பூங்கா நகர், சென்னை-600 003. என்ற முகவரிக்கு வரும் 15-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் சென்று சேர வேண்டும்.

    தகுதியும், விருப்பமும் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், விவரங்கள் அறிந்திட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04343-236134 வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இணையவழி மூலமாகவும் விண்ணப்பம் செய்யலாம்.
    • விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    டேராடூன் இந்திய ராணுவ கல்லூரியில் சிறுவர், சிறுமிகள் சேர்க்கைக்கான தகுதி தேர்வு நடைபெற ள்ளதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2023-ம் ஆண்டு பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தகுதித்தேர்வு வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

    இந்த தேர்வு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வு, ஆங்கிலம், கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தாள்களை கொண்டதாகும்.

    நேர்முகத் தேர்வு அறிவுக் கூர்மை மற்றும் தனித்தன்மையை ஆராய்வதாக இருக்கும். எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு மட்டும் நேர்முக தேர்வு நடத்தப்படும்.

    விண்ணப்படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி, டேராடூன், உத்தரகண்ட் 248003 என்ற முகவரிக்கு விண்ணப்பித்து, கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடூன், டெல் பவன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் (வங்கி குறியீடு எண். 01576) செலுத்தத்தக்க வகையில் பொது பிரிவினருக்கு ரூ.600 மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ரூ.555 கேட்புக் காசோலை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். இணையவழி மூலமாகவும் விண்ணப்பம் செய்யலாம்.

    விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு ஆகியன சென்னையிலுள்ள இத்தேர்வாணைய அலுவலகத்திலிருந்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது. விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

    மேலும், 1.1.2011-ம் தேதிக்கு முன்னதாகவும், 1.7.2012-ம் தேதிக்கு பின்னதாகவும் பிறந்திருக்க கூடாது. சேர்க்கையின் போது 1.1.2024-ம் தேதியன்று அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7-ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7-ம் வகுபபு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும். பூர்த்திய செய்யப்பட்ட விண்ணப்பங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர், சென்னை - 600003 என்ற முகவரிக்கு வருகிற 15-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு இணையத்தளத்தை பார்த்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • பெண் டாக்டர் ஒருவர் நோயாளிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்.
    • கடந்த 2 மாதமாக மங்கலத்தில் உள்ள கிளீனிக்கில் சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.

    திருப்பூர் :

    திருப்பூரை அடுத்த மங்கலம் நால்ரோடு பகுதியில் உரிய அனுமதியின்றி கிளீனிக் செயல்படுவதாக கலெக்டருக்கு புகார் வந்தது. அவர் இது குறித்து விசாரிக்க மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இணை இயக்குனர் கனகராணி தலைமையிலான குழுவினர் மங்கலம் நால் ரோடு பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட கிளீனிக்குக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அங்கு பெண் டாக்டர் ஒருவர் நோயாளிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் விழுப்புரத்தை சேர்ந்த பிரியங்கா (வயது 30) என்பதும், கடந்த 2 மாதமாக மங்கலத்தில் உள்ள கிளீனிக்கில் சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. அவரது சான்றிதழ்களை பெற்று விசாரணையை தொடங்கினர். இதில் அவர் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு முடித்து, அதன்பிறகு இந்திய மருத்துவ கழகத்தின் தகுதி தேர்வு எழுதாமல் சிகிச்சை அளித்தது கண்டறியப்பட்டது. மேலும் கிளீனிக் நடத்தவும் உரிய அனுமதி பெறவில்லை. இதைத்தொடர்ந்து அந்த கிளீனிக்கை பூட்டி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

    இது குறித்து மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் கனகராணி கூறும்போது, மங்கலத்தில் ஏற்கனவே வேறு ஒரு டாக்டர் இந்த கிளீனிக்கை நடத்தி வந்துள்ளார். அதன் பிறகு அவர் சென்று விட்டார். கடந்த 2 மாதமாக பிரியங்கா இங்கு வந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். இந்திய மருத்துவ கழக தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பிறகு தான் இந்தியாவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். பிரியங்கா தேர்வு எழுதியும் அவர் தேர்ச்சி பெறவில்லை. மீண்டும் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளார். ஆனால் குடும்ப வறுமை காரணமாக இங்கு வந்து சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவித்தார். அவ்வாறு சிகிச்சை அளிக்கக்கூடாது என்று எச்சரித்து கிளீனிக் மூடப்பட்டுள்ளது. இன்று பிரியங்காவிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

    • ராமநாதபுரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளிகளில் சேர தகுதி தேர்வு நடந்தது.
    • இதில் 240 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் அரசு மாதிரி பள்ளி ஏற்படுத்த ஆணையிடப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 9-வது வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளில் கணக்கு மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 240 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான தகுதி தேர்வு ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினியரிங் கல்லூரியில் நடந்தது.

    இது குறித்து மாவட்ட அரசு மாதிரி பள்ளியின் முதல்வர் ரவி கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தற்போது 9-வது வகுப்பு படிக்கும் மாணவர்கள் 240 பேர் தேர்வு செய்யப்பட்டு தகுதி தேர்வில் கலந்து கொள்கின்றனர்.

    இவர்களில் தமிழ் மற்றும் ஆங்கில பிரிவில் தலா 40 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் அனைவரும் 2023-24 கல்வியாண்டில் அரசு மாதிரி பள்ளியில் 10-வது வகுப்பில் சேர்க்கப்பட உள்ளனர். தேர்வை கண்காணிப்பதற்காக 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் மின் கம்பியாளர் உதவியாளர் (ஒயர்மேன் ஹெல்பர்) தகுதிக்கான தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 24 மற்றும் 25-ந் தேதி நடக்க உள்ளது.
    • விண்ணப்பத்தை, https://skilltraining.tn.gov.in/DET என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

    ஈரோடு:

    தமிழகத்தில் மின் கம்பியாளர் உதவியாளர் (ஒயர்மேன் ஹெல்பர்) தகுதிக்கான தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 24 மற்றும் 25-ந் தேதி நடக்க உள்ளது. இப்பணிக்கு தகுதியான 21 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பதாரர்கள் மின் ஒயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில் மின் கம்பியாளர் பிரிவில் பயிற்சி பெற்று தேறியவர்கள், தேசிய புனரமைப்பு திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட மின்சார பணியாளர் மற்றும் கம்பியாளர் தொழில் பிரிவில் பயிற்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பத்தை, https://skilltraining.tn.gov.in/DET என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அடுத்த மாதம் 26-ந் தேதி மாலை 5:30 மணிக்குள், 'முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஈரோடு –638009' என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஈரோடு அரசு ஐ.டி.ஐ.யை, 0424 2275244 என்ற எண்ணிலும், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் அலுவலகத்தை, 0424 2270044 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு கூடுதல் விபரம் அறியலாம்.

    • 25-ந் தேதி சப்-இன்ஸ்பெக்டர் தேர்விற்கு குறிப்பிட்ட நேரத்தில் வராவிட்டால் தேர்வு மையத்தில் அனுமதி இல்லை என போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தியுள்ளார்.
    • தகுதி தேர்வில் வெற்றி பெற்றால் தான் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்கு பெற முடியும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வுகள் வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுதுவதற்கு தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 22 ஆயிரத்து 213 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 4,160 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த தேர்வு எழுதுவதற்காக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 5 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பில் இருப்பார். மேலும் 20 பேருக்கு ஒரு போலீஸ்காரர் கண்காணிப்பாளராக இருப்பார்.தேர்வு மையத்திற்கு வரும் தேர்வர்கள் கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா மட்டும் கொண்டு வரவேண்டும். தேர்வு நடைபெறும் இடத்திற்கு 8.30 மணிக்கு வர வேண்டும். 9.50 மணிக்கு மேல் யாருக்கும் தேர்வு மையத்திற்குள் அனுமதி கிடையாது. மேலும் தேர்வு எழுதுபவர்கள் ஹால் டிக்கெட்டை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம். ஹால் டிக்கெட்டில் தவறுகள் ஏதும் இருந்தால் பதட்டப்படாமல் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்தபோது கொடுத்த புகைப்படத்துடன் ஏதாவது ஒரு அடையாள அட்டையை கொண்டு வந்தால் போதும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் வழக்கமாக சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு பொது அறிவு தேர்வுக்கு 70 மதிப்பெண்ணும், உடல் தகுதி தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும், சான்றிதழ்களுக்கு 5 மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.

    இந்த முறை புதிதாக இந்த மதிப்பெண் தவிர தமிழ் தகுதித் தேர்வு தனியாக நடத்தப்படும்.இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே சப்- இன்ஸ்பெக்டர் தேர்வில் கலந்துகொள்ள தகுதி உடையோர் ஆவார்கள். இதன்படி 25-ந்் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை பொதுஅறிவுத் தேர்வும், மதியம் 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ் தகுதி தேர்வும் நடைபெறும்.

    சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தமிழ் தகுதி தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அதில் வெற்றி பெற்றால் தான் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்கு பெற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×