என் மலர்
நீங்கள் தேடியது "slug 233383"
- சட்டம் ஒழுங்கு தொடர்பாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆலோசனை
- தலைமை அலுவலகத்திற்குள் இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்களிடம் பேசினார்கள்.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் இன்னும் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் இருந்தனர்.
மோதல் சம்பவத்தையடுத்து கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சட்டம் ஒழுங்கு தொடர்பாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆலோசனை நடத்தினர். அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்க முடிவு செய்தனர்.
அதன்பின்னர் ஆர்டிஓ சாய் வர்தினி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியே வந்தனர். வெளியே வந்த ஓபிஎஸ் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர் புறப்பட்டுச் சென்றார். அதன்பின்னர் கட்சி அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
- அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
- ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்குவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
சென்னை:
அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கையை ஏற்க மறுத்த ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் என்றும் தீர்மனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்குவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் நீக்கப்படுவதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன்னை கட்சியில் இருநது நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும், எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதாகவும் கூறினார். பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறினார்.
- ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தார்.
- பொதுக்குழுவில் பேசிய தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக தாக்கினர்.
சென்னை:
அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கையை ஏற்க மறுத்த ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுவுக்கு தடை கோரி தொடர்ந்து நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. கட்சியின் பெரும்பான்மை நிர்வாகிகளின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. பொதுக்குழு நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது. தனது கடைசி முயற்சியும் தோல்வியில் முடிந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தார். இதன் காரணமாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் வெடித்தது. இதில் பலர் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க, அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க ஏற்கனவே அறிவித்தபடி, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் என்றும் தீர்மனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுக்குழுவில் பேசிய தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக தாக்கினர். பொதுக்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
அப்போது குறுக்கிட்டு பேசிய கே.பி.முனுசாமி, "பொதுக்குழு உறுப்பினர்களின் உணர்வுகளை நிறைவேற்றும் வகையில் பன்னீர்செல்வம் விரைவில் கட்சியில் இருந்து நீக்கப்படுவார். பொதுக்குழு உறுப்பினர்களின் உணர்வுகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். உங்களின் கோரிக்கையை இடைக்கால பொது செயலாளர் தீர்மானமாக கொண்டு வருவார். பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை பழனிசாமி கொண்டு வருவார்'' என்றார். அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் கலவரத்தை ஏற்படுத்தி உள்ளார் என்றும் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டினார்.
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதில், ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளுக்கு பொதுக்குழு கண்டனம் தெரிவிப்பதுடன், கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் நீக்கப்படுவதாக அந்த தீர்மானத்தில் தெரிவிக்கபப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இவர்களுடன் அதிமுகவினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் சிறப்பு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
- அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களின் நகல் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
- பொதுக்குழுவை நடத்த அனுமதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒற்றை தலைமை பற்றிய தீர்மானம் கொண்டுவந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதால் இதை தடுக்கும் நடவடிக்கைகளை ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை.
நாட்கள் செல்ல செல்ல எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாளர்கள் எண்ணிக்கை குறைந்தது. இது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் என பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களின் நகல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாக ஓபிஎஸ் தரப்பு தெரிவித்தது. கட்சி விதிகளுக்கு முரணாக செயல்பட மாட்டோம் என ஓபிஎஸ் தரப்பு பதில் அளித்தது.
பொதுக்குழுவை நடத்த அனுமதிக்கக் கோரி ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். பொதுக்குழுவிற்கான நோட்டீஸ் ஜூன் 2ஆம் தேதியே கொடுக்கப்பட்டுள்ளது, இதுவரை பொதுக்குழு, செயற்குழு அஜெண்டாக்கள் வெளியிடப்பட்டது இல்லை, பொதுக்குழுவுக்கு விதிகளை திருத்தம் செய்ய அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதா? இல்லையா? என்பது குறித்து இன்று மாலைக்குள் தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதாக ஓபிஎஸ் கூறியிருக்கிறார். பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கு விசாரணை முடிந்ததும் அவர் தனது முடிவை அறிவிக்க உள்ளார்.
- ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாளர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
- அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் என பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை காலை நடக்கிறது. இதில் ஒற்றை தலைமை பற்றிய தீர்மானம் கொண்டுவந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதால் இதை தடுக்கும் நடவடிக்கைகளை ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை.
நாட்கள் செல்ல செல்ல எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாளர்கள் எண்ணிக்கை குறைந்தது. இது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முக்கிய நிர்வாகிகளாக வெல்லமண்டி நடராஜன், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்பட குறிப்பிட்ட சிலரே ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக உள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் என பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதா? இல்லையா? என்பது குறித்து இன்று மாலைக்குள் தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதாக ஓபிஎஸ் கூறியிருக்கிறார். பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கு விசாரணை முடிந்ததும் அவர் தனது முடிவை அறிவிக்க உள்ளார். அவரது அறிவிப்பை எதிர்பார்த்து ஆதரவாளர்கள் காத்திருக்கிறார்கள்.
- அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
- சென்னையில் நடைபெறும் பொதுக்குழுவிற்கு நெல்லை நிர்வாகிகள் புறப்பட்டு சென்றனர்.
நெல்லை:
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம் தலைமையில் நெல்லை மாவட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் இன்று 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்னையில் நடைபெறும் பொதுக்குழுவிற்கு புறப்பட்டு சென்றனர். அப்போது சுதாபரமசிவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.விற்கு ஒற்றை தலைமை நிச்சயம் தேவை. அது இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைய வேண்டும். 1.5 கோடி தொண்டர்களின் விருப்பமும் அதுதான். பொது–மக்களும் அதைத்தான் விரும்புகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் 52 பொதுக்குழு உறுப்பினர்களும், 9 செயற்குழு உறுப்பினர்கள் உள்ளனர். மொத்தம் உள்ள 61 உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிக்கின்றனர். 4 வருடம் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்தினார். எனவே அவர் தலைமையில் ஒற்றை தலைமை அமைந்தால் தான்அ.தி.மு.க. வலுவானதாக அமையும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஒரே எதிரியாக தி.மு.க.வை நினைத்தார்கள். அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க.வை எதிரியாக நினைக்கிறார்.எனவே அவருக்கு நாங்கள் வலு சேர்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயண பெருமாள், பாளை ஒன்றிய செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன், கவுன்சிலர் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு அ.தி.மு.க.வின் அனைத்து அணிகளின் தலைவர்கள் சாரை சாரையாக வந்தனர்.
- தலைமை பதவியை எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர் செல்வம் விட்டுக் கொடுக்க வேண்டும் என்கிறார் சிவபதி
சென்னை:
தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு அ.தி.மு.க.வின் வேகம் குறைந்துவிட்டது என்று பல்வேறு தரப்பினராலும் கூறப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வில் உள்ள இரட்டை தலைமை முறை தான் இதற்கு காரணம் என்பது மக்கள் மனதில் பொதுவான எண்ணமாக உள்ளது. முக்கிய பிரச்சினைகளில் முடிவுகள் எடுக்க தாமதம் ஏற்படுவதால் இரட்டை தலைமையை மாற்றிவிட்டு ஒரே தலைமை யின் கீழ் அ.தி.மு.க.வை கொண்டுவர வேண்டும் என்பது பெரும்பாலான தொண்டர்களின் விருப்பமாக உள்ளது.
தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஒற்றை தலைமையை வருகிற 23-ந்தேதி நடக்கும் பொதுக்குழுவில் தீர்மானமாக கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் தீவிரமாக உள்ளனர். ஆனால் ஒற்றை தலைமை வேண்டாம் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி வருகிறார்.
கடந்த 5 நாட்களாக நடந்து வரும் சர்ச்சை இன்று 6-வது நாளாக நீடித்தது. எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே இன்று மதியம் வரை சமரசம் ஏற்படவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 6-வது நாளாக இன்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சென்னையில் உள்ள தங்களது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு அ.தி.மு.க.வின் அனைத்து அணிகளின் தலைவர்கள் சாரை சாரையாக வந்தனர். தேனி மாவட்ட பொறுப்பாளர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் செல்வாக்கை உறுதிபடுத்தும் வகையில் இன்று அவரது ஆதரவாளர்கள் திரண்டனர்.
இதுஒருபுறமிருக்க ஓ.பன்னீர்செல்வத்தை எப்படியாவது சமரசம் செய்துவிட வேண்டும் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இதற்காக இன்று காலை செங்கோட்டையன், தம்பிதுரையை தொடர்ந்து மேலும் சிலர் ஓ.பி.எஸ். வீட்டுக்கு சென்றனர். ஆனால் சுமூக முடிவு எட்டப்பட வில்லை. ஓ.பன்னீர்செல்வம் தனது முடிவில் மிகவும் உறுதியாக இருக்கிறார்.
ஓ.பன்னீர் செல்வம் சமரசம் ஆகவில்லை என்பதை மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். அதை கேட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி உடனடியாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தொடங்கினார்.
அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஒற்றை தலைமை விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி நீண்டநேரம் மூத்த தலைவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஒற்றை தலைமை முடிவை எதிர்த்து சட்ட ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதை எதிர் கொள்வது என்பது பற்றியும் ஆலோசனை செய்தனர். ஓ.பன்னீர்செல்வம் சட்ட ரீதியாக பிரச்சினை செய்தால் அது செல்லுபடி ஆகுமா என்றும் விவாதித்தனர்.
ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடக்கத்தில் இருந்தே முட்டுக்கட்டை போடுவதை அதிரடியாக தகர்க்கவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஒற்றை தலைமை பற்றி தீர்மானம்கூட கொண்டுவரக்கூடாது என்று ஓ.பி.எஸ். சொல்வதற்கு பெரும்பாலான தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் இன்று எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் மூத்த தலைவர்கள் பெரும்பாலானவர்கள் அதிரடி திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். எனவே எடப்பாடி பழனிசாமி அணியினர் தொடர்ந்து ஒற்றை தலைமை முடிவில் தீவிரம் காட்டத்தொடங்கி உள்ளனர்.
எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான என்.ஆர். சிவபதி சென்னையில் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி 4ஆண்டுகளாக திறமையாக ஆட்சி நடத்தினார். எனவே அவரிடம் கட்சி தலைமையை ஒப்படைப்பது தான் சாலச்சிறந்தது.
எடப்பாடி பழனிசாமிக்கு தலைமை பதவியை ஓ,பன்னீர் செல்வம் விட்டுக் கொடுக்க வேண்டும். ஒற்றை தலைமைக்கு ஓ.பன்னீர் செல்வம் ஒப்புதல் தெரிவிப்பது நல்லது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமை அமைய வேண்டும் என்பது தான் அனைவரது விருப்பமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் சுனில் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தும் ஆதரவு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தான் எனது ஆதரவு. எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை உள்ளதால் நானும் அந்த பக்கம் தான் உள்ளேன், என்றார்.
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அடுத்தடுத்து ஆலோசனையை தீவிரப்படுத்துவதால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அவர்களது ஆதரவாளர்கள் சென்னைக்கு வரத் தொடங்கி உள்ளனர்.
- ஆட்சியில் இருந்தபோதே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்தை ஏன் ஏற்கவில்லை?
- 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அவசர அவசரமாக நிறைவேற்றியதே தென் மாவட்டங்களில அதிமுக தோல்விக்கு காரணம்.
சென்னை:
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். 6வது நாளாக இன்றும் ஆலோசனை நீடிக்கிறது.
ஒற்றை தலைமை தேவை என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அவருக்கு பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் ஒற்றை தலைமை தேவையில்லை என ஓ.பன்னீர்செல்வம் தனது கருத்தை கூறி உள்ளார். எனவே இரு தரப்பினருக்கும் இடையே சுமுகமான உடன்பாடு ஏற்படுவதில் இழுபறி நீடிக்கிறது.
கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு குறைந்துள்ள நிலையில், அவரது அதரவாளர்கள் தரப்பில் இன்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆலோசனைகளை பின்பற்றாமல் அவரது ஆதரவாளர்களை ஓரங்கட்டியதே அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
'அதிமுகவின் விசுவாசமிக்க தொண்டர்கள்' என்ற பெயரில் வெளியான அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
அதிமுகவில் தாங்கள் அதிகாரம்மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று கருதிய சிலர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை ஓரங்கட்டியதுடன், ஆட்சியில் இருந்தபோதே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்தை ஏன் ஏற்கவில்லை?
கட்சியில் இருந்து விலகிச் சென்ற ஒரு குழுவினரை மீண்டும் சேர்த்து ஒரே இயக்கமாக அதிமுகவை முன்னெடுத்து செல்லாததால் அதிமுகவின் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது. 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை முறைப்படி கமிட்டி அமைத்து நிறைவேற்றாமல், அவசர அவசரமாக நிறைவேற்றியதே தென் மாவட்டங்களில அதிமுக தோல்விக்கு காரணம்.
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தை ஏன் சுதந்திரமாக செயல்படுவதற்கு விடவிலலை?
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆலோசனைகளை பின்பற்றாததுடன், அவர் கூறும் திறமையானவர்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை?
இவ்வாறு அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த பல நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
- ஒற்றை தலைமை முடிவை ஓபிஎஸ் ஏற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் சிவபதி கூறினார்.
சென்னை:
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக 6வது நாளாக ஆலோசனை நீடிக்கிறது.
ஒற்றை தலைமை தேவை என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஒற்றை தலைமை தேவையில்லை என ஓ.பன்னீர்செல்வம் தனது கருத்தை கூறி உள்ளார். ஆனால், எடப்பாடி பழனிசாமி இதுபற்றி வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் அவரது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பல நிர்வாகிகள் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, எம்,சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், எம்.எல்.ஏ., ஜக்கையன் மற்றும் பல்வேறு நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிய சந்தித்தனர்.
இந்த சந்திப்புக்குப் பின் முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன் செய்தியாளர்களிடம் பேசும்போது, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்குதான் என்றார். ஒற்றை தலைமை வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:-
கட்சிக்கு தலைமை தாங்குவது யார் என்ற கேள்வி எழுந்ததும், தலைமை கழகம், மாவட்ட செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள் ஏற்கனவே இதுபற்றி ஆலோசனை நடத்தி உள்ளனர். 23ம் தேதி அதற்கு உரிய தீர்வு ஏற்படும் வகையில் பொதுக்குழு கூட்டம் நடடக்கவிருக்கிறது.
அந்த வகையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அவர் கட்சியை தலைமைதாங்கி வழிநடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். ஒற்றை தலைமை வேண்டும் என்பதை சொல்லியிருக்கிறோம். ஓபிஎஸ் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள், எடப்பாடியாரை ஏன் ஆதரிக்கிறோம் என்று கேட்கிறீர்கள். உள்கட்சி பிரச்சனைக்குள் செல்ல விரும்பவில்லை.
ஆனால் தற்போது தமிழ்நாடு முழுவதும் எடப்பாடியாருக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. மெஜாரிட்டி இருந்தால் அவருக்கு அந்த வாய்ப்பை வழங்குவது ஜனநாயக கடமை ஆகும். தலைமை பதவியை அவருக்கு கொடுத்தால் மிக நன்றாக இருக்கும். மூத்த தலைவர்கள் கூடி சமரச முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். ஒற்றை தலைமையாக எடப்பாடியாருக்கு வழங்குவதுடன், மற்றவர்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்கும் முயற்சியும் நடக்கிறது. ஒற்றை தலைமை என்று வந்தால் எடப்பாடி பழனிசாமி தேர்வாக வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
இவ்வாறு முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன் தெரிவித்தார்.
ஒற்றை தலைமை முடிவை ஓபிஎஸ் ஏற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்றும், இளைஞரணி சார்பில் ஈபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் சிவபதி கூறினார்.
- எடப்பாடி பழனிசாமியின் சில முடிவுகளை ஓ.பன்னீர்செல்வத்திடம் தம்பிதுரை விளக்கமாக கூறினார்.
- ஆனால் எந்த விளக்கத்தையும் ஓ.பன்னீர் செல்வம் ஏற்கவில்லை. இதனால் தம்பிதுரை மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.
சென்னை:
ஒற்றை தலைமை வேண்டும் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.
இல்லை இரட்டை தலைமை நீடிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆவேசத்துடன் உள்ளனர்.
ஒற்றைத்தலைமையா? அல்லது இரட்டை தலைமையா? என்பது அ.தி.மு.க.வின் தொண்டர்கள் ஒவ்வொருவரிடமும் எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் பிடிவாதமாக உள்ளனர்.
இருவரும் சமரசம் ஆகி விடுவார்கள் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் இரு தரப்பிலும் தங்களது முடிவில் தீவிரமாக உள்ளனர். இது அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் பொதுவான மூத்த தலைவர்கள் சமரச முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமியை தம்பிதுரை சந்தித்து பேசினார். பிறகு அவர் நேற்று சென்னை வந்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் சில முடிவுகளை ஓ.பன்னீர்செல்வத்திடம் தம்பிதுரை விளக்கமாக கூறினார். ஆனால் எந்த விளக்கத்தையும் ஓ.பன்னீர் செல்வம் ஏற்கவில்லை. இதனால் தம்பிதுரை மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தம்பிதுரையை தொடர்ந்து செல்லூர் ராஜூ இரு தரப்பினரையும் சமரசம் செய்யும் தூதராக மாறி உள்ளார். நேற்று அவர் ஓ.பன்னீர் செல்வத்துடன் கலந்து பேசினார். இன்று காலை அவர் ஓ.பன்னீர் செல்வத்தின் சார்பாக எடப்பாடி பழனிசாமியை சந்திக்க சென்றார்.
எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமியிடம், செல்லூர் ராஜூ சமரச முயற்சி மேற்கொண்டார். ஒ.பன்னீர்செல்வத்தின் மன நிலையை தெள்ளத்தெளிவாக எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துக்கூறினார்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி சில விளக்கங்கள் அளித்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து விடைபெற்ற செல்லூர் ராஜூ இன்று பகல் ராயப்பேட்டை தலைமை கழகத்திற்கு வந்தார். அங்கு ஓ.பன்னீர் செல்வத்துடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.
எடப்பாடி பழனிசாமியின் மனநிலையை அவர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெளிவுபடுத்தினார். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் விளக்கம் மீண்டும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு திருப்தி கொடுக்கவில்லை. அவர் சில கருத்துக்களை வெளியிட்டார்.
அந்த கருத்துக்களை எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிப்பதற்காக செல்லூர் ராஜூ தலைமை கழகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். செல்லூர் ராஜூ செய்யும் சமரச முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா? என்பது இன்று பிற்பகல் தெரியும்.
- எடப்பாடி பழனிசாமிக்கு தலைமையை ஓ.பி.எஸ் விட்டு கொடுக்க வேண்டும் என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ கூறினார்.
- ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிகார பூர்வமான கூட்டம் இல்லை.
மதுரை
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்ற விவாதம் எழுந்து உள்ளது அதனால் அதற்கு முடிவு ஏற்பட பொதுக் குழுவில் வாய்ப்புள்ளது. சட்டத்தில் மாறுதல் செய்வது தவறில்லை, சட்ட திருத்தம் செய்வது புதிதல்ல.
மாவட்டச் செயலாளர் 90 சதவீதம் பேர் ஒற்றை தலைமையை எதிர்பார்க்கின்றனர். நல்ல தலைமையை உருவாக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கிளைக் செயலாளர்கள், தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றப் போகிறோம், அவர்களது நல்ல கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.
2019-ம் ஆண்டே ஒற்றைத் தலைமையின் கீழ் வர வேண்டும் என தான் கூறினேன். 3 ஆண்டுகளாக இருவரின் தலைமையை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட்டேன்.
தற்போது பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு எடுப்பதை ஏற்று ஒற்றுமையாக அனைவரும் செயல்பட வேண்டும். அது ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் சரி. நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை.
ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிகார பூர்வமான கூட்டம் இல்லை.எம்.ஜி.ஆர்.மறைவுக்கு பிறகு ஜானகி அம்மாள் பெருந்தன்மையாக கட்சியை ஜெயலலிதாவுக்கு விட்டு கொடுத்தது போல் திறமையானவர்களுக்கு விட்டு கொடுக்க வேண்டும். கட்சியை கட்டிக் காப்பாற்றும் ஒருவருக்காக மற்றோருவர் தலைமையை விட்டுக் கொடுக்க வேண்டும்.
எம்.ஜி.ஆருக்கு பின் ஜெயலலிதா தனிக்கட்சி ஆரம்பித்தபோது சேவல் சின்னத்தில் போட்டியிட்டவர் எடப்பாடி பழனிச்சாமி அவர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி 4 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியை சிறப்பாக நடத்தியவருக்கு மற்றவர் தலைமையை விட்டுக்கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து தீர்மானக் குழுவினர் ஆலோசனை.
- ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், தீர்மானக் குழு கூட்டத்திற்கு ஓபிஎஸ் வருகை
சென்னை:
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒற்றை தலைமை தேவையில்லை என ஓபிஎஸ் தனது கருத்தை சமீபத்தில் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி இதுவரை தனது கருத்தை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ் தனியாக ஆலோசனை நடத்தினார். இதனால் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
இது ஒருபுறமிருக்க அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து தீர்மானக் குழுவினர் ஆலோசனை நடத்திவருகின்றனர். தீர்மான குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், தீர்மானக் குழு கூட்டத்திற்கு வந்த அவர், கூட்டத்தில் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான பெரம்பூர் மாரிமுத்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் பகுதி செயலாளரான மாரிமுத்துவுக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. ரத்தக்கறையுடன் அவர் உடனடியாக தலைமை அலுவலகத்தை விட்டு வெளியேறினார். தாக்குதல் நடத்தியது வெளிநபர் என அவர் கூறியிருக்கிறார். தலைமை அலுவலக வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக ஜெயக்குமார் ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பினர்.