search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்பணைகள்"

    • எடப்பாடியை அடுத்த பக்கநாடு கிராமம்‌, அதுவாபட்டி அருகில்‌ கருமத்தான்கிணறு ஓடையின்‌ குறுக்கே தடுப்பணை கட்டும்‌ பணி ரூ.47.32 லட்சம் செலவில் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
    • இத்தடுப்பணை மூலம்‌ 10 ஏக்கர்‌ விவசாய நிலங்கள்‌ பாசனவசதி பெறுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-

    சேலம்‌ மாவட்டத்தில்‌ நீர்வள ஆதாரத்‌ துறையின்‌ மூலம்‌ எடப்பாடியை அடுத்த பக்கநாடு கிராமம்‌, அதுவாபட்டி அருகில்‌ கருமத்தான்கிணறு ஓடையின்‌ குறுக்கே தடுப்பணை கட்டும்‌ பணி ரூ.47.32 லட்சம் செலவில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இத்தடுப்பணை மூலம்‌ 10 ஏக்கர்‌ விவசாய நிலங்கள்‌ பாசனவசதி பெறுகிறது.

    அதேபோன்று ஓமலூர்‌ சரபங்கா ஆற்றின்‌ குறுக்கே ஓமலூர்‌ மற்றும்‌ பச்சனம்பட்டி கிராமங்களில்‌ உள்ள 227 ஏக்கர்‌ விவசாய நிலங்கள்‌ பாசனவசதி பெறும்‌ வகை யில்‌ தடுப்பணை கட்டும்‌ பணி ரூ.2.32 கோடி மதிப்பீட்டில்‌ தொடங்கப்பட்டு 88 சதவீதப்பணிகளும்‌ தற்போது நிறைவடைந்து மீதமுள்ள பணிகள்‌ நடைபெற்று வருகின்றது.

    சேலம்‌ மாவட்டம்‌, கெங்கவல்லி வட்டம்‌, 74 கிருஷ்ணாபுரம்‌ கிராமத்தில் ‌ சுவேதாதியின்‌ குறுக்கே தடுப்பணை அமைக்கும்‌ பணிக்கு ரூ.3.69 கோடி மதிப்பீட்டில்‌ நிர்வாக ஒப்புதல்‌ வழங்கப்பட்டு, தொழில்நுட்ப ஒப்புதலுக்காக நீர்வளத்‌ துறையின்‌ தலைமைப்‌ பொறியாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    சேலம்‌ மாவட்டம்‌, கெங்கவல்லி அருகே கணவாய்காடு அருகே சுவேதா நதியின்‌ குறுக்கே தடுப்பணை அமைக்கும்‌ பணிக்கு ரூ.3.80 கோடி மதிப்பீட்டில்‌ நிர்வாக ஒப்புதல்‌ வழங்கப்பட்டு, தொழில்நுட்ப ஒப்புத லுக்காக மதிப்பீடு அனுப்பப்படவுள்ளது. ஒப்புதல்‌ கிடைக்கப்பெற்ற தும்‌. பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்‌.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்‌ சார்பில்‌ சேலம்‌ மாவட்டத்தில்‌ நீர்‌ நிலைகளை மேம்படுத்தும்‌ வகையில்‌ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்‌ கீழ்‌ 301 கசிவு நீர்‌ குட்டைகள்‌ ரூ.16.86 கோடி மதிப்பீட்டில்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளன. புதிய அமிர்தகுளங்கள்‌ உருவாக்குதல்‌ மற்றும்‌ புதுப்பித்தல்‌ திட்டத்தில்‌ 52 அமிர்தகுளங்கள்‌ உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உரு வாக்கப்பட்டுள்ள குளங்களின்‌ கரைகளில்‌ மரக்கன்றுகளை நடுதல்‌, பனை விதைகளை நடுதல்‌ மற்றும்‌ குளத்தின்‌ அருகிலேயே பூங்காக்களை உருவாக்கிட நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்‌.

    • திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செல்லும் செய்யாற்றில் தொடர் மழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • அனுமன் தண்டலம் பகுதியில் அமைந்துள்ள பழமையான தடுப்பணையில் நீர் வழிந்து ஓடுகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாகும். பாலாறு, செய்யாறு, வேதவதி ஆறுகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செல்கிறது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செல்லும் செய்யாற்றில் தொடர் மழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதன் காரணமாக அனுமன் தண்டலம் பகுதியில் அமைந்துள்ள பழமையான தடுப்பணையில் நீர் வழிந்து ஓடுகிறது. இதே போன்று வேங்கசேரி தடுப்பணையும் முழு கொள்ளளவை எட்டி 2 ஷட்டர்கள் வழியாக திறக்கப்பட்டு ஆர்ப்பரித்து நீர் செல்கிறது.

    பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே இந்த இரு தடுப்பணைகளும் நிரம்பி அதிக நீர் செல்வதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தடுப்பணையை சுத்தப்படுத்தவும், குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.
    • மடத்துக்குளம் பகுதியில் உள்ள நீர் வழித்தடங்கள் மற்றும் அதன் அருகில் குப்பைகள் மற்றும் கழிவுகளை பலர் கொட்டுகின்றனர்.

    மடத்துக்குளம்:

    திருப்பூர் போடிப்பட்டி ,மடத்துக்குளம் பகுதியில் தடுப்பணைகளில் தேங்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சமுக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    ஒரு பகுதியின் விவசாய மேம்பாட்டுக்கு மழை வளம் மட்டுமல்லாமல் நிலத்தடி நீர் ஆதாரமும் முக்கிய பங்கு வகிக்கிறது.பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் வீடுகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் உருவாக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு, ஓடை உள்ளிட்ட நீர் வழித்தடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டு மழைநீர் சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் மேம்படுவதுடன் காற்றின் ஈரப்பதம் அதிகரித்து பயிர்களின் வளர்ச்சிக்கு கைகொடுக்கிறது.

    அதுமட்டுமல்லாமல் விலங்குகள், பறவைகளின் குடிநீர் ஆதாரமாக விளங்கி பல்லுயிர் பெருக்கத்துக்கும் துணை புரிகிறது.இவ்வாறு பலவகைகளில் வாழ்வியலுக்கு உறுதுணையாக விளங்கும் தடுப்பணைகள் ஒருசிலரின் அலட்சியத்தால் பாழாகி வருகிறது. மடத்துக்குளம் பகுதியில் உள்ள நீர் வழித்தடங்கள் மற்றும் அதன் அருகில் குப்பைகள் மற்றும் கழிவுகளை பலர் கொட்டுகின்றனர்.இந்த கழிவுகள் மழைநீரில் அடித்து வரப்பட்டு தடுப்பணைகளில் சென்று தேங்குகிறது. இதனால் தண்ணீர் மாசு படுவதுடன் பல்வேறு நோய்த்தொற்றுகள் உருவாவதற்கும் காரணமாகி விடுகிறது. அந்தவகையில் மடத்துக்குளத்தையடுத்த சோழமாதேவி பகுதியில் உள்ள தடுப்பணையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், துணிகள், குப்பைகள் உள்ளிட்ட கழிவுகள் தேங்கியுள்ளது.மேலும் தண்ணீர் பாசம் பிடித்து துர்நாற்றம் வீசுகிறது.இதனால் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு வேலை செய்ய வரும் தொழிலாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் இந்த தண்ணீரால் பலவிதமான நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே தடுப்பணையை சுத்தப்படுத்தவும், குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.

    • தாளவாடி அடுத்த திம்பம், தலமலை வனப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக திம்பம் மலைப்பாதையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.
    • பலத்த மழையால் மலைப்பாதையில் உள்ள அருவிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம், தலமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதே நேரம் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்தநிலையில் திம்பம், தலமலை மற்றும் சுற்று வட்டார வனப் பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. திடீரென மதியம் 3 மணி அளவில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து சாரல் மழை பெய்தது.

    பின்னர் நேரம் செல்ல செல்ல பலத்த மழை கொட்டியது. மேலும் திம்பம், காளி திம்பம், தலமலை, பெஜலட்டி, மாவநத்தம் ஆகிய பகுதியில் தொடர்ந்து இரவு 7 மணி வரை சுமார் 3 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    பலத்த மழையின் காரணமாக திம்பம் மலைப்பாதையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.

    இதனால் திம்பம் வனப்பகுதிகளில் புதிய அருவிகள் தோன்றியது. அருவிகளில் இருந்து தண்ணீர் கொட்டி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் வெளியேறி குய்யனூர் தடுப்பணைக்கு சென்றது. இதனால் தடுப்பணை நிரம்பி வழிந்து சென்றது. தொடர்ந்து அருகே உள்ள ஓடை, குளம், குட்டைகளுக்கும் தண்ணீர் சென்று நிரம்பி வருகிறது.

    அதேப்போல பலத்த மழையால் மலைப்பாதையில் உள்ள அருவிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

    ×