search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலைவனம்"

    • கடுமையான மணல் புழுதி மற்றும் வெப்பம் காரணமாக அவதி அடைந்தனர்.
    • காரில் இருந்த எரிபொருளும் தீர்ந்து போனது.

    தெலுங்கானா மாநிலம், கரீம் நகரை சேர்ந்தவர் ஷாபாஸ்கான். இவர் சவுதி அரேபியாவில் உள்ள கான் அல் ஹாசா பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனராக கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஷாபாஸ்கான் சக ஊழியருடன் வழக்கமான வேலைக்காக காரில் புறப்பட்டார். சவுதி அரேபியாவில் பரந்து விரிந்த மோசமான ரூபா அல் காலி பாலைவனத்திற்கு சென்றனர்.

    பாலைவனத்தின் மையப்பகுதிக்கு சென்ற போது அவர்களது காரில் பொருத்தப்பட்டு இருந்த ஜிபிஎஸ் கருவி செயல் இழந்தது.

    மேலும் அவர்களிடம் இருந்த செல்போன்களில் சிக்னல் கிடைக்காமல் எந்த வழியாக செல்வது என தெரியாமல் சிக்கித் தவித்தனர். கடுமையான மணல் புழுதி மற்றும் வெப்பம் காரணமாக அவதி அடைந்தனர். அவர்களிடம் இருந்த உணவு மற்றும் குடிநீர் காலியானது. காரில் இருந்த எரிபொருளும் தீர்ந்து போனது.

    நீர் இழப்பு மற்றும் சோர்வு காரணமாக பாலைவனத்தில் மயங்கி விழுந்த இருவரும் அங்கேயே உயிரிழந்தனர். வெளியே சென்ற ஊழியர்கள் 5 நாட்களாக மீண்டும் பணிக்கு வராததால் காணாமல் போனதாக நிறுவனம் சார்பில் போலீசில் புகார் செய்தனர்.

    இதையடுத்து போலீசார் நீண்ட தேடுதலுக்கு பிறகு ஷாபாஸ்கான் மற்றும் அவருடன் சென்ற ஊழியரை போலீசார் பிணமாக மீட்டனர்.

    • தொலைத்தொடர்பு நிறுவனத்தில் டவர் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்து வந்தார்.
    • சவுதி அதிகாரிகள் இருவரையும் சடலங்களாக மீட்டனர்.

    சவுதி அரேபியாவில் டவர் டெக்னீஷியனாக பணிபுரியும் தெலுங்கானாவைச் சேர்ந்த 27 வயதான ஷாபாஸ் கான், கடந்த மூன்று ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் உள்ள கான் அல் ஹாசா பகுதியில் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் டவர் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்து வந்தார்.

    இவர் 5 நாட்களுக்கு முன்பு சக ஊழியருடன் வழக்கமான வேலைக்காக புறப்பட்டார். பணிதொடர்பாக, ஷாபாஸ் மற்றும் சக ஊழியர் ஜிபிஎஸ் உதவியுடன் காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.

    அப்போது, ஜிபிஎஸ்-ல் ஏற்பட்ட கோளாறால் இருவரும் ரூபா அல்-காலி பாலைவனத்தின் நடுவே சிக்கிக் கொண்டனர். அவர்கள் சென்ற காரில் எரிபொரும் தீர்ந்துவிட்டது.

    அவர்கள் வைத்திருந்த செல்போனில் சிக்னலும் இல்லை. இதனால், வெளியே யாரையும் தொடர்புக் கொள்ள முடியவில்லை.

    உண்ண உணவு, குடிக்க தண்ணீர் இன்றி வெயிலில் 5நாட்களாக தவித்த ஷாபாசும், சக ஊழியரும் உலகின் மிக ஆபத்தான பாலைவனங்களில் ஒன்றான ரூபா அல்-காலி பாலைவனத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

    பாலைவனத்தில், ஒட்டகங்கள் உள்பட மனித வாழ்விடம் மற்றும் வனவிலங்குகள் இல்லாததால், தொலைந்து போன இருவருக்கும் உதவி தேடவோ அல்லது நிலப்பரப்பில் செல்லவோ முடியாத சூழல்.

    இருவர் காணாமல் போனதாக அவர்களது நிறுவனம் புகார் தெரிவித்த பிறகு, சவுதி அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இறுதியில், சவுதி அதிகாரிகள் இருவரையும் சடலங்களாக மீட்டனர்.

    • செப்டெம்பர் மாதத்தில் ஷார்ஜாவின் அல் தாகித் பாலைவனத்தில் அசீமி அரிசி நாற்றுகள் நடப்பட்டன.
    • அறிவியலால் அதையும் மாற்ற முடியும் என்பதும் நிருபணம் ஆகியுள்ளது.

    அரிசி, கோதுமை எல்லாம் எங்கே விளையும்?

    தஞ்சாவூர் மாதிரி நஞ்சை நிலத்தில் நு சொல்ல வேண்டாம்.. ஏன் என்றால் பாலைவனத்திலேயே அரிசி விளைகிறது

    எந்த பாலைவனத்தில்?

    ஷார்ஜா பாலைவனத்தில் தான்..

    ஷார்ஜாவிலா? அரிசியான்னு அதிர்ச்சி அடையவேண்டாம்.

    தென்கொரியா நாட்டுடன் இணைந்து பாலைவனத்தில் அரிசி விளைவிக்க முடியுமா என ஆராய்ச்சி செய்தார்கள்.

    அசீமி எனும் வகை அரிசி தான் இருப்பதிலேயே வெயிலை தாங்கும் தன்மை கொண்டதாக கண்டறியபட்டது.

    வெயில் தணிந்த செப்டெம்பர் மாதத்தில் ஷார்ஜாவின் அல் தாகித் பாலைவனத்தில் அசீமி அரிசி நாற்றுகள் நடப்பட்டன.

    கடல்நீர் குடிநீராக்காப்பட்டு சொட்டுநீர் பாசனம் உதவியுடன் நீர்ப்பாசனம் நடைபெற்றது.

    எந்த பூச்சிக்கொல்லியும், உரமும் அவசியம் இன்றி மே மாதம் அறுவடை நடைபெற்று கால் ஏக்கர் நிலபப்ரப்பில் 763 கிலோ அரிசி வெற்றிகரகமாக அறுவடை செய்யப்பட்டது.

    இனி சில ஆண்டுகளில் கோதுமை, காப்பி எல்லாம் விளைவிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

    ஆக அறிவியலால் அதையும் மாற்ற முடியும் என்பதும் நிருபணம் ஆகியுள்ளது.

    - நியாண்டர் செல்வன்

    • பாலைவனம் மேலும் பரவாமல் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுப்பது குறித்து மாணவர்களுக்கு போட்டிகள் மூலமாகவும் கருத்தரங்கம் மூலமாக எடுத்துரைக்கப்பட்டது.
    • மாணவர்கள் மரம் நடுதல் குறித்தும் பூமி வெப்பமாதல் குறித்தும் ஈர நிலங்களை காப்பது குறித்தும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அறிந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் பாலைவன தடுப்பு தினம் மற்றும் வறட்சி தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. 1994 முதல் ஐநா சபையின் அறிவுறுத்தலின்படி இந்த நாள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அனுசரிக்கப்படுகிறது.

    பாலைவனம் மேலும் பரவாமல் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுப்பது குறித்து மாணவர்களுக்கு போட்டிகள் மூலமாகவும் கருத்தரங்கம் மூலமாக எடுத்துரைக்கப்பட்டது. மாணவர்கள் மரம் நடுதல் குறித்தும் பூமி வெப்பமாதல் குறித்தும் ஈர நிலங்களை காப்பது குறித்தும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அறிந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர். நாகூர் அரசு உயர்நிலைப்பள்ளி, நாகலூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி, விழுந்தமாவடி அரசு மேல்நிலைப்பள்ளி, ஸ்பிளேண்டிட் நர்சரி பள்ளி, கொளப்பாடு அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் தேசிய பசுமைப்படை சார்பாக இந்த நாள் கொண்டாடப்பட்டது. ஏற்பாடுகளை நாகப்பட்டினம் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் செய்திருந்தார்.

    ×