search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகளில் பாலைவன தடுப்பு தினம் அனுசரிப்பு
    X

    கொளப்பாடு உயர்நிலைப் பள்ளியில் ஓவியப்போட்டி நடந்தது.

    பள்ளிகளில் பாலைவன தடுப்பு தினம் அனுசரிப்பு

    • பாலைவனம் மேலும் பரவாமல் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுப்பது குறித்து மாணவர்களுக்கு போட்டிகள் மூலமாகவும் கருத்தரங்கம் மூலமாக எடுத்துரைக்கப்பட்டது.
    • மாணவர்கள் மரம் நடுதல் குறித்தும் பூமி வெப்பமாதல் குறித்தும் ஈர நிலங்களை காப்பது குறித்தும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அறிந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் பாலைவன தடுப்பு தினம் மற்றும் வறட்சி தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. 1994 முதல் ஐநா சபையின் அறிவுறுத்தலின்படி இந்த நாள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அனுசரிக்கப்படுகிறது.

    பாலைவனம் மேலும் பரவாமல் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுப்பது குறித்து மாணவர்களுக்கு போட்டிகள் மூலமாகவும் கருத்தரங்கம் மூலமாக எடுத்துரைக்கப்பட்டது. மாணவர்கள் மரம் நடுதல் குறித்தும் பூமி வெப்பமாதல் குறித்தும் ஈர நிலங்களை காப்பது குறித்தும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அறிந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர். நாகூர் அரசு உயர்நிலைப்பள்ளி, நாகலூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி, விழுந்தமாவடி அரசு மேல்நிலைப்பள்ளி, ஸ்பிளேண்டிட் நர்சரி பள்ளி, கொளப்பாடு அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் தேசிய பசுமைப்படை சார்பாக இந்த நாள் கொண்டாடப்பட்டது. ஏற்பாடுகளை நாகப்பட்டினம் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் செய்திருந்தார்.

    Next Story
    ×