என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிடுகிடு உயர்வு"
- தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை திடீரென அதிகரித்தது.
- சம்பங்கி ரூ.40, பட்டு பூ ரூ.50, செவ்வந்தி ரூ.30 முதல் ரூ.40, அரளி ரூ.150 முதல் ரூ.200, ரோஜா பூ ரூ.120 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன.
திருப்பூர்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் நேற்று பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை திடீரென அதிகரித்தது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.320 -க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ.1000-ம் ஆக அதிகரித்தது. இதேபோல் ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லைப் பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஜாதி மல்லி ரூ.600-க் கு விற்பனை செய்யப்பட்டது. இதைத் தவிர பிற பூக்களின் விலை வழக்கம்போல் காணப்பட்டது.
சம்பங்கி ரூ.40, பட்டு பூ ரூ.50, செவ்வந்தி ரூ.30 முதல் ரூ.40, அரளி ரூ.150 முதல் ரூ.200, ரோஜா பூ ரூ.120 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன.இவ்வாறு மல்லி முல்லை உள்ளிட்ட பூக்களின் விலை அதிகரித்த போதிலும் பண்டிகையை கருதி பொதுமக்களும் வியாபாரிகளும் பூக்களை அதிக அளவில் வாங்கி சென்றனர்.இதனால் பூ மார்க்கெட்டில் பூக்களின் விற்பனை மும்முரமாக நடந்தது. மழை காரணமாக பூக்களின் வரத்து குறைந்ததும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- குமரி மாவட்டத்தில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ரப்பர் மற்றும் வாழை அதிக அளவு பயிர் செய்யப்படுகிறது.
- வெளியூர்களுக்கும், கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது
நாகர்கோவில் :குமரி மாவட்டத்தில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ரப்பர் மற்றும் வாழை அதிக அளவு பயிர் செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தில் குறிப்பாக மட்டி, செவ்வாழை, ரசக்கதலி, ரோபஸ்டா உள்பட பல்வேறுவிதமான வாழைப்பழங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.இங்கு உற்பத்தியாகும் வாழைத் தார்கள் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி வெளியூர்களுக்கும், கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் பருவமழையை நம்பியும் பாசன குளங்களை நம்பியும் சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை குமரி மாவட்டத்தில் பொய்த்து போய்விட்டது. இதனால் பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லை. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர் செய்யப்பட்ட வாழைகளுக்கு தண்ணீர் இல்லாமல் கருகிப்போய் உள்ளது. சில விவசாயிகள் மோட்டார் மூலமாக தண்ணீரை வைத்து வாழை பயிரிட்டுள்ளனர். ஆனால் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதனுடைய உற்பத்தி குறைவாகவே உள்ளது. நாகர்கோவில் மார்க்கெட்டுகளுக்கு வரக்கூடிய வழைத்தார்களின் வரத்து குறைந்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் வாழைத்தார்கள் வரத்து குறைந்துள்ளதால் வாழைத்தார்கள் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. குறிப்பாக நாகர்கோவில் மார்க்கெட்டில் ஒரு கிலோ மட்டி பழம் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ரூ.130 ஆக உயர்ந்துள்ளது. மட்டி வாழைத்தார் ரூ.1000-க்கு மேல் விற்பனை ஆகிய வருகிறது. இதேபோல் ரசக்கதலி வாழைப்பழத்தின் விலையும் 4 மடங்கு உயர்ந்துள்ளது.
ஏற்கனவே ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது ரூ.95 ஆக உயர்ந்துள்ளது. ரசக்கதலி வாழைத்தார் ஏற்கனவே ரூ. ௨௫௦ முதல் ரூ.300 வரை விற்பனை ஆகி வந்த நிலையில் தற்போது ரூ.800 முதல் ரூ.௮௫௦ வரை விற்பனையாகி வருகிறது. பாளையங்கோட்டை பழமும் கிலோ ரூ.15-ல் இருந்து ரூ.40 ஆக உயர்ந்துள்ளது. செவ்வாழை பழத்தை பொறுத்த மட்டில் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ செவ்வாழை ரூ.65-க்கு விற்பனை யானது. ஒரு வாழைத்தார் ரூ.1200 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்பட்டது. ஏத்தன் பழத்தின் விலையும் அதிகமாகியுள்ளது. ரூ.40-க்கு விற்கப்பட்ட ஏத்தன்பழம் தற்போது ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. ரோபஸ்டா, நாட்டுபழம், சக்கை பேயன் விலை உயர்ந்துள்ளது. வாழைத்தார்கள் விலை 2 மடங்கு முதல் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளது.இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-குமரி மாவட்டத்தில் ஏற்கனவே வாழைத்தார்கள் அதிகளவு விற்பனைக்காக வரும்.ஆனால் தற்போது பருவமழை பொய்த்து விட்டதால் வழைத்தார்கள் வரத்துகுறைவாகி உள்ளது. மேலும் ஆவணி மாதம் திருமண சீசன் அதிகம் இருக்கும்.இதனால் மக்களுக்கு பழத்தின் தேவை அதிகமாக தேவைப்படும். வரத்து குறைவாகஉள்ள காரணத்தினால் விலை உயர்ந்துள்ளது. இது மட்டும் இன்றி ஓணம் பண்டிகையின்போது கேரளாவில் இருந்து வியாபாரிகள் குமரி மாவட்டத்திற்கு வந்துபழங்களை வாங்கி செல்வார் கள். தற்போது ஓணம் பண்டிகை 29-ந்தேதிகொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் வியா பாரிகள் கேரளாவில் இருந்துபழங்களை வாங்குவதற்கு வருகி றார்கள். ஆனால் போதிய அளவு வாழைத்தார்கள்இல்லாததால் விலை அதிகரித்து உள்ளது என்றார்.
- வரத்து குறைந்துள்ளதால் பீன்ஸ் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
- இதுபோல் இஞ்சி விலையும் அதிகரித்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. இங்கு சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களாக பீன்ஸ் வரத்து குறைந்துள்ளதால் பீன்ஸ் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.60-க்கு விற்ற பீன்ஸ் இன்று ஒரு கிலோ ரூ.120 ஆக அதிகரித்து விற்பனை ஆகிறது.
இதுபோல் வரத்து குறைவு காரணமாக இஞ்சி விலையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ரூ.80-க்கு விற்ற ஒரு கிலோ இஞ்சி இன்று ஒரு கிலோ ரூ. 140-க்கு விற்பனை ஆகிறது.
இஞ்சி பொறுத்தவரை பெ ங்களூரு, ஒட்டன்சத்திரம், மேட்டுப்பாளையம், தாளவாடி, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு அதிக அளவில் வரத்தாகி வந்தது.
தற்போது கடந்த சில நாட்களாகவே வரத்து குறைந்ததால் இதன் எதிரொலியாக விலையும் கிடுகிடு வென உயர்ந்து உள்ளது. ஆனால் அதே நேரம் மற்ற காய்கறிகளின் வரத்து அதிகரிப்பால் விலையும் ஓரளவு குறைந்துள்ளது.
இன்று வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:
கருப்பு அவரை-90, பட்ட அவரை-60, பச்சை மிளகாய்-80, பெரிய வெங்காயம்-15-20, சின்ன வெங்காயம்-40-50, முட்டைகோஸ்-20, காலிபிளவர்-30, பீட்ரூட்-50, கேரட்-60, முள்ள ங்கி-30, முருங்கைக்காய்-40, பீர்க்கங்காய்-70, பாவைக்காய்-55, புடலங்காய்-40, வெண்டை க்காய்-60, கத்திரிக்கா-60.
- பனி தாக்கம் காரணமாக முருங்கைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு முருங்கைக்காய் வரத்து குறைய தொடங்கியுள்ளது
- இதனால் இன்று காய்கறி வாங்க வந்த பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்
ஈரோடு
ஈரோடு வ. உ.சி. காய்கறி பெரிய மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு திண்டுக்கல், கிணத்துக்கடவு, மதுரை, தேனி, ஒட்டன்சத்திரம், தாளவாடி, சத்தியமங்கலம். கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வ.உ.சி காய்கறி மார்க்கெட்டிற்கு தினமும் 3 டன் முருங்கை க்காய் லோடு வருவது வழக்கம்.
இந்நிலையை கடந்த சில நாட்களாக பனி தாக்கம் காரணமாக முருங்கைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு முருங்கைக்காய் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் முருங்கைக்காய் விலையும் கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
இன்று மார்க்கெட்டிற்கு வெறும் அரை டன் முருங்கைக்காய் மட்டுமே வரத்தாகி இருந்தன. இதனால் கடந்த மாதம் கிலோ ரூ.60-க்கு விற்ற முருங்கைக்காய் இன்று ரூ.160 முதல் ரூ.180 வரை உயர்ந்து விற்கப்பட்டு வருகிறது.
இதனால் இன்று காய்கறி வாங்க வந்த பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல் மற்ற காய்கறிகளின் விலை சற்று அதிகரித்துள்ளது.
வ.உ.சி. மார்க்கெட்டில் மற்ற காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-
பீன்ஸ்-30, வெண்டைக்காய்-30, கேரட்-60, பீட்ரூட்-60, கத்தரிக்காய்-70, புடல ங்காய்-40, பீர்க்கங்காய்-40, பாவைக்காய்-40, சுரைக்காய்-20, மிளகா-50, தக்காளி-ரூ.10 முதல் ரூ.15, சின்னவெங்காயம்-80, பெரியவெங்காயம்-40, முட்டைகோஸ்-20, காலிபிளவர்-40, உருளைக்கிழங்கு-40.
- தற்போது கடும் பனி நிலவிவரூவதால் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பயிரிட்டுள்ள மல்லிகை செடிகளில் பூக்கள் குறைந்த அளவிலேயே வரூகிறது.
- பூக்களின் தேவை அதிகரித்து, வரத்து குறைந்து உள்ளதால் ஈரோடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடு வென உயர்ந்து வரூகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் மற்றும் ஈரோடு பூ மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரூந்தும் ஈரோடு பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு பூக்கள் கொண்டு வரப்படுகிறது.
தற்போது கடும் பனி நிலவிவரூவதால் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பயிரிட்டுள்ள மல்லிகை செடிகளில் பூக்கள் குறைந்த அளவிலேயே வரூகிறது.
மேலும் தற்போது கார்த்திகை மாதம் சுபமுகூர்த்த நாள், கார்த்திகை தீபம் மற்றும் அய்யப்ப பக்தர்கள் விரதம் இரூந்து கோவிலுக்கு செல்வதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
பூக்களின் தேவை அதிகரித்து, வரத்து குறைந்து உள்ளதால் ஈரோடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடு வென உயர்ந்து வரூகிறது.
அதிக பட்சமாக ஒரூ கிலோ மல்லிகை பூ ரூ. 3ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல் முல்லைப்பூ கிலோ ரூ. 2ஆயிரத்துக்கும், காக்கட்டான் பூ கிலோ ரூ. 800 க்கும், செவ்வந்தி பூ கிலோ ரூ. 120-க்கும், அரளி பூ கிலோ ரூ. 300-க்கும், சம்பங்கி பூ கிலோ ரூ. 50-க்கும் விற்பனை செய்யப்படு–கிறது.
இதே போல் துளசி, மரிக்ெகாழுந்து, ரோஜா ஆகியவற்றின் விலையும் உயர்ந்து உள்ளது.
- முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருவதால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
- அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர்:
முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 2 நாட்களில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து ள்ளது. நேற்று முன்தினம் 129.05 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 129.50 அடியாக உயர்ந்தது. இன்று காலை 130.85 அடியாக அதிகரி த்துள்ளது.
நேற்று 2738 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 5258 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1722 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4896 மி.கனஅடியாக உள்ளது.
அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 56.20 அடியாக உள்ளது. வரத்து 1579 கனஅடி, திறப்பு 969 கனஅடி, இருப்பு 2915 மி.கனஅடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20அடியாகவும், சோத்துப்பாறை நீர்மட்டம் 73.30 அடியாக உள்ளது.
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியான குரங்கனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதனால் போடியின் முக்கிய நீர்ஆதா ரமான கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே போடி அருகில் உள்ள அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பாதுகாப்பு கருதி பொதுமக்கள் இங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணி த்துறையி னர் சார்பில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை இங்கு செல்ல அனுமதிக்க கூடாது என்று அறிவுறுத்த ப்பட்டுள்ளது. வெள்ள ப்பெருக்கால் ராஜவா ய்க்கால் மூலம் போடியில் உள்ள குளங்களுக்கு செல்லும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. பல நாட்களுக்கு பிறகு தற்போது பெய்து வரும் மழையினால் போடி பகுதியில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பும் என விவசாயிகள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.
பெரியாறு 67, தேக்கடி 31, கூடலூர் 5.7, உத்தமபாளையம் 4.4, வீரபாண்டி 2.4, போடி 5.4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- மதுரையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்ந்துள்ளது.
- 200-க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் மொத்த விற்பனை மலர் வியாபாரிகள் உள்ளனர்.
மதுரை
மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் மொத்த விற்பனை மலர் வியாபாரிகள் உள்ளனர்.
இங்கு மதுரை மட்டுமன்றி விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. எனவே மாட்டுத்தாவணி மலர் சந்தையில் நாள்தோறும் சராசரியாக 50முதல் 60 டன்னுக்கும் மேலாக பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மாட்டுத்தாவணி மலர் சந்தையில் கடந்த சில நாட்களாக ரூ500 முதல் ரூ700 வரை மல்லிகைப்பூ விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் இன்று அதன் விலை கிலோ ரூ.1600ஆக உயர்ந்தது. அதேபோல பிச்சி கிலோ ரூ.400, முல்லைரூ.300, செண்டு மல்லி ரூ.70, பட்டன் ரோஸ் ரூ.80 விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன.
மதுரை மாட்டுத்தாவணி சில்லரை மலர் வணிகர் சங்கத் தலைவர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது, "மதுரையில் அடுத்த சில நாட்கள் முகூர்த்த காலம் என்பதால், மல்லிகைப்பூவின் விலையில் மாற்றம் இருக்காது" என்று தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்