என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பணிகளை"
- கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தல்
- 108 பணிகளுக்கு அனுமதி பெற்று 106 பணிகள் முடிவுற்றுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவல கத்தில் நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று பேசியபோது கூறியதாவது:- பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு, நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் அனைத்து நகராட்சிகள், நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள குளங்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வளர்ச்சி பணிகளின் செயலாக்கத்தின்போது ஏற்படும் தடைகளுக்கு உடனடி தீர்வுகாண வேண்டும். பணிகளில் ஏதாவது தடைகள் மற்றும் இடர்பாடுகள் ஏற்பட்டால் அது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2022-2023 ஆண்டில் 122 கிலோ மீட்டர் சாலைப்பணிகளுக்கு ஒப்புதல் கோரப்பட்டது. அதில் 108 பணிகளுக்கு அனுமதி பெற்று 106 பணிகள் முடிவுற்றுள்ளது. 2023-2024 நிதியாண்டில் 180 பணிகளுக்கு திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு 93 பணிகள் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள 93 சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் வருவாய் அலுவலர் பாலசுப்பிர மணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன், பத்மநாப புரம் சப்-கலெக்டர் கவுசிக், உதவி இயக்குனர் (பேரூ ராட்சிகள்) விஜயலெட்சுமி, மாநகராட்சி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம், முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, மாவட்ட வழங்கல் அதிகாரி விமலா பாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஒர்கிங் சென்டர் கட்டிட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
- உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், பேச்சிப்பாறை ஊராட்சி மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியம், மாங்கோடு மற்றும் புலியூர் சாலை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணி களை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் குடியிருப்பில் ரூ.10.40 லட்சம் மதிப்பில் மறு சீரமைக்கப்பட்டு வரும் கட்டிட பணிகளை பார்வை யிட்டேன். பணிகளை விரைந்து முடித்து குடியி ருப்பு பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மணியங்குழியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.11.97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட பணியும் ஆய்வு செய்யப்பட் டது.அதனைத்தொடர்ந்து மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுய உதவி குழு கட்டிட பணி களை ஆய்வு மேற்கொண்ட தோடு பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஒர்கிங் சென்டர் கட்டிட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
கட்டுமான பணிகளின் தரத்தினை உறுதி செய்திட வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மேல்புறம் ஊராட்சி ஒன்றி யத்துக்குட்பட்ட மாங்கோடு ஊராட்சி பகுதியில் பிர தான் மந்திரி கிராம சாலை இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.69 கோடி மதிப்பில் வெள்ளாடிச்சிப்பாறை-ஓடவள்ளி முதல் நெட்டா வரை 2,400 மீட்டர் நீளத்தில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள தார் சாலையை பார்வை யிட்டேன். சாலை யின் தரம் ஆய்வு செய்யப் பட்டது. மேலும், புலி யூர்ச்சாலை ஊராட்சி யில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப் பட்டு வரும் ஊராட்சி அலுவலக கட்டி டத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள், உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலு வலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுரை
- ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம், மேல்புரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்து மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில், மேல்புறம் ஊராட்சி ஒன்றி யம் முழுக்கோடு ஊராட்சிக்கு ட்பட்ட பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பில் புண்ணியம் மாத்தூர்கோணம் சாலை பணிகளும், வெள்ளாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் சிதறால் பட்டன்விளை ஆட்டுக்கடவு சாலை பணிகளும், ரூ.35 லட்சம் மதிப்பில் பனிச்சமூடு கிருஷ்ணன்கோவில் சாலை பணிகளும், ரூ.38 லட்சம் மதிப்பில் வெள்ளாங்கோடு, செட்டிவிளை (பள்ளி கோணம் ஆர்.சி.சர்ச் சாலை) சாலை பணிகளும், மாஞ்சாலுமூடு பகுதியில் ரூ.46 லட்சம் மதிப்பில் கைதகம் படப்பச்சை சாலை பணிகளும், மலையடி ஊராட்சிக்குட்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பில் காங்கோடு சாணி சாலை பணிகளும், ரூ.24 லட்சம் மதிப்பில் உத்திரங்கோடு சண்டிப் பாறை சாலை பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வன்னியூர் ஊராட்சிக் குட்பட்ட செழுவன்சேரி-மஞ்சவிளை சாலை, துப்பிறமலை சாலை பணிகளும், மருதங்கோடு ஊராட்சிக்குட்பட்ட காணாகும் கொடி யூர்க்கோணம் சாலை பணிகளும், விளவங்கோடு ஊராட்சிக்குட்பட்ட மடிச்சல் சாட்டுமுக்கு சாலைப்ப ணிகளும், முழுக்கோடு, வெள்ளாங்கோடு ஆகிய ஊராட்சிகளில் முதல்-அமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.6 கோடி மதிப்பிலான சாலை பணிகளும் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.
இப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சிகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் வகையில் தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கடற்கரை பகுதியில் சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மனோ தங்கராஜ் முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட, பூத்துறை காருண்யபுரம் கடற்கரை பகுதியில் 'வனமே நம் வளமே" என்ற தலைப் பில் குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் சுமார் 12 கி.மீ. அளவில் பனைமர விதைகள் மற்றும் புன்னை, தென்னை, பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடும் முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முகாமில் மாவட்டம் முழு வதும் ஊராட்சி பகுதியில் மொத்தம் 5100 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.
மேலும் நம்ம ஊரு சூப்பரு பிரசாரம் மூலம், கிராமப்பு றங்களை சுற்றுச்சூழல் தூய்மையான சுற்றுச்சூழல் கொண்ட கிராமங்களாக மாற்றவும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளை தடை செய்வது குறித்து மக்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நெகிழி பொருட் களுக்குரிய மாற்றுப் பொருட்களை பயன்படுத்து வதை ஊக்குவித்தல், பாதுகாப்பான குடிநீர், திரவக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் நீர் பாது காப்பு மற்றும் தண்ணீரை மறுபயன்பாடு செய்வது தொடர்பான பணிகளை மேற்கொள்வது இத்திட்டத் தின் குறிக்கோள் ஆகும். முகாம்களில் கலந்து கொண்ட அனைத்து பொது மக்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்று வதற்கான முன்னெடுப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகாம்களில் மாவட்ட வன அலுவலர் இளை யராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) ரேவதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு நர் பாபு, உதவி இயக்கு நர் (ஊராட்சிகள்) சாந்தி, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், தக்கலை கல்வி மாவட்ட ஒருங்ணைப்பாளர் ஷோபா, கிள்ளியூர் தாசில்தார் அனிதா குமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டேவிட் ஜெயசிங், கிறிஸ்டோபர் ராஜேஷ், ரெமோன் மனோ தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சென்னை நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார்.
- இந்த ஆய்வின் போது மாவட்டத்தில் நடைபெறும் நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
சேலம்:
சேலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்கா–ணிப்புப் பொறியாளர் அலுவலகத்தில் சென்னை நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்டத்தில் நடைபெறும் நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து சேலம் இரும்பாலை சாலையில் புதுரோடு சந்திப்பை அகலப்படுத்தி ரவுண்டானா அமைக்கப்படவுள்ள பணிக்காக சுமார் 30-க்கும் மேற்பட்ட மரங்களை அகற்ற வேண்டியுள்ளது.
இதேபோல் சேலம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்திலுள்ள சாலைகளை அகலப்படுத்தும் பணிகளுக்காக அவ்வப்பொழுது மரங்கள் அகற்றப்படுகிறது. அவ்வாறுஅகற்றப்படும் மரங்களுக்கு பதிலாக 10 மடங்கு மரக்கன்றுகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைகளின் ஓரங்களில் நடப்பட்டு வருகிறது.
இதற்காக, சேலம் இரும்பாலை சாலையில் சோளம்பள்ளம் பகுதி–யில் நாற்றங்கால் அமைக்கப்பட்டு சுமார் 2000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நாற்றங்காலை சென்னை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர் சந்திரசேகர் ஆய்வு செய்தார். மேலும், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் நடப்பட்ட மரக்கன்றுகளை பார்வையிட்டார். இதையடுத்து அந்த பகுதியில் அவரும் மரக்கன்றுகளை நட்டார்.
ஆய்வின்போது கண்கா–ணிப்புப் பொறியாளர் பன்னீர்செல்வம், கோட்டப் பொறியாளர் துரை, உதவிக்கோட்டப் பொறியா–ளர்கள் சந்தோஷ்குமார், பிரபாகரன் பற்றும் உதவிப் பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
- கீழ்பவானி அணை நீர்ப்பாசன சபையின் கூட்டம் ரங்கம்பாளைத்தில் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.
ஈரோடு:
கீழ்பவானி அணை நீர்ப்பாசன சபையின் கூட்டம் ரங்கம்பாளைத்தில் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சபையின் 2021 -2022-ம் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவுகள் நிதிஅறிக்கை ஏற்றுக்கொள்ள பட்டுள்ளது.
கீழ்பவானி சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது ஆனால் தொடர்ந்து நடைபெற வில்லை. இதனால் கீழ்பவானி ஊஞ்சலூர் பகிர்மான கால்வாயில் பாசனம் பெறும் எம் 8 ஏ பாசன சபையிலுள்ள ஆயக்கட்டு நிலங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.
எனவே சீரமைப்பு வேலைகளை தொடர்ந்து செய்ய வேண்டும். கீழ்பவானி ஆயக்கட்டு விவசாயிகளின் பாசன உரிமையையே பாதுகாக்கும் வகையில் வருகிற ஜூலை மாதம் 10-ந் தேதி சிவகிரியில் கீழ்பவானி ஆயக்கட்டு உரிமை பாதுகாப்பு நடைபெறும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்