என் மலர்
நீங்கள் தேடியது "நூடுல்ஸ்"
- சௌமீன் எனப்படும் நூடில்ஸை குஞ்சனுக்காக சந்தீப் வாங்கி வந்துள்ளார்.
- மனைவி, சந்தீப்பை கன்னத்தில் அரைத்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் கண்டோலியில் உள்ள நந்தலால்பூர் பகுதியில் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வந்தவர் சந்தீப். இவரது மனைவி குஞ்சன்.
கடந்த பல ஆண்டுகளாக சந்தீப்புக்கும் அவரது மனைவி குஞ்சனுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. வேறு ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளதாக இருவரும் ஒருவரையொருவர் சந்தேகித்தனர். குஞ்சனிடம் இருந்து சந்தீப் விவாகரத்து பெற விரும்பினார். அவர் ஒரு வழக்கறிஞரைக் கூட அணுகியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மதியம், சௌமீன் எனப்படும் நூடில்ஸை குஞ்சனுக்காக சந்தீப் வாங்கி வந்துள்ளார். ஆனால் குஞ்சன் அதை சாப்பிட மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. வாக்குவாதத்தில் சந்தீப் மனைவியை தாக்கத்தொடங்கினார்.
மனைவியும் சந்தீப்பை கன்னத்தில் அரைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தீப் மனைவியின் கழுத்தை நெரித்தில் அவர் மயங்கி விழுந்தார்.
பின் தனது மகன்களை கூப்பிட்டு மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சொன்னார். அவர்கள் சென்றதும் சந்தீப் மனைவியை கொன்றதாக கூறி போலீசில் சரணடைந்தார். குஞ்சன் இறந்துவிட்டதாக மருத்துவர்களும் அறிவித்தனர். சந்தீப்பை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
- அனைவருக்கும் பனீர் பக்கோரா மிகவும் பிடிக்கும்.
- பனீரில் புரோட்டின்ஸ் அதிகம் உள்ளது.
நூடுல்ஸ் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் பனீர் சேர்த்து என்றால் விட்டு வைக்கவே மாட்டார்கள். பனீரில் புரோட்டின்ஸ் அதிகம் உள்ளது. பனீரையும், நூடுஸ்சையும் வைத்து பன்னீர் பக்கோரா செய்தால் அவ்வளவுதான் செய்த உடனேயே காலியாகிவிடும். அந்த அளவிற்கு அனைவருக்கும் இந்த டிஷ் மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
பனீர்- ஒரு கப் துருவியது
நூடுல்ஸ் - 2 பாக்கெட்டுகள்
கான்பிளார் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - கால் கப்
குடைமிளகாய் - 1
முட்டைக்கோஸ் - 1 கப்
பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பச்சை கொத்தமல்லி - 2 தேக்கரண்டி
சீஸ் - அரை கப்
உப்பு - தேயான அளவு
செய்முறை
முதலில், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, நூடுல்ஸ் மசாலாப் பொருள்களைச் சேர்த்து நன்கு கலந்துவிட வேண்டும். பின்னர் நூடுல்ஸ் வெந்ததும் எடுத்து தனியே வைக்க வேண்டும்.
நூடுல்ஸ் ஆறிய பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ், குடைமிளகாய், பச்சை கொத்தமல்லி, மிளகாய் தூள், ரவை, பூண்டு விழுது, சீஸ் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த கலவையை உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் உருண்டைகளுக்கு நடுவே விருப்பப்பட்டால் சீஸ் துண்டுகளையும் வைத்து மூடி வைக்கலாம்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை விட்டு பொறித்து எடுக்கலாம். இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி, கொத்தமல்லி சாஸுடன் பரிமாறவும்.
மிச்சம் வைக்காமல் அனைத்தும் உடனேயே காலியாகிவிடும்.

- நூடுல்ஸ் பதப்படுத்தப்பட்ட ஒரு உணவாகும்.
- நூடுல்சை அடிக்கடி சாப்பிட்டால் அது மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
நூடுல்ஸ் என்பது குழந்தைகள் அதிகமாக விரும்பி உண்ணும் உணவாகும்.
நூடுல்ஸ் பதப்படுத்தப்பட்ட ஒரு உணவாகும். இதில் நார்ச்சத்துக்களும் புரோட்டீன்களும் குறைவாக இருப்பதால் இது உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
நூடுல்ஸ் அடிக்கடி சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம், தலைவலி மற்றும் குமட்டல் போன்றவற்றை உருவாக்கும். மேலும் இதய நோய்க்கு வழிவகுக்கும்.
நூடுல்சை அடிக்கடி சாப்பிட்டால் அது மலச்சிக்கலை ஏற்படுத்தும். மேலும் மலக்குடல் புற்றுநோய் வர வழிவகுக்கும். நூடுல்ஸில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு உள்ளது, இது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
நூடுல்ஸில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், அவை விரைவாக செரிமானமாகி பசியை அதிகரிக்கும். நூடுல்ஸில் உள்ள அதிக கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நீரிழிவு நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும்.
- நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்.
- ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை.
நூடுல்ஸ் சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமான உணவுத் தேர்வாக மாறியுள்ளது. ஏனெனில் அவை மலிவானவை, தயாரிப்பதற்கு எளிதானவை மற்றும் வசதியானவை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நூடுல்ஸ் என்றாலே பிடிக்கும்.
இருப்பினும், நூடுல்ஸை தொடர்ந்து உட்கொள்வதால் சில எதிர்மறையான உடல்நல பாதிப்புகள் உள்ளன. நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி பார்க்கலாம்.
நூடுல்சில் பெரும்பாலும் சோடியம் அதிகமாக உள்ளது. இது பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். சோடியம் ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்து. ஆனால் அதை அதிகமாக உட்கொள்வதினால் உயர் ரத்த அழுத்தம், நீர் தக்கவைத்தல் மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
நூடுல்ஸ் சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை. அவை போதுமான ஊட்டச்சத்தை வழங்குவதில்லை. மேலும் அவற்றை தொடர்ந்து உட்கொள்வது குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.
உடல் பருமன்
நூடுல்சில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. இது தொடர்ந்து உட்கொண்டால் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனை ஏற்படுத்தும். தென் கொரியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் நூடுல்ஸ் சாப்பிடுபவர்களுக்கு மெட்டபாலிக் சிண்ட்ரோம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று அறிவித்துள்ளது. இது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
புற்றுநோய்
நூடுல்சில் பிஸ்பெனால் ஏ போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன. இது பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்படுகிறது. நூடுல்சை தொடர்ந்து உட்கொள்வது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும், குறிப்பாக வயிற்று புற்றுநோய். வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் நூடுல்ஸ் சாப்பிடும் பெண்களுக்கு வயிற்றில் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து 68 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
செரிமான பிரச்னைகள்
நூடுல்சில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும். இதில் உள்ள அதிக சோடியம் காரணமாக வீக்கம், வாயு மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். உதாரணமாக, ஒரே நாளில் பல நூடுல்சை உட்கொள்வது வயிற்றில் அசௌகரியம் மற்றும் ஒழுங்கற்ற குடல் அசைவுகளை ஏற்படுத்தும்.
நூடுல்ஸ் மனநலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் அவற்றில் சோடியம் அதிகமாக உள்ளது. இது மூளையில் உள்ள இரசாயனங்களின் சமநிலையை சீர்குலைக்கும். வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் நூடுல்சை உட்கொள்வது மனச்சோர்வு, பதட்டம் மற்றும் பிற மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.
நூடுல்ஸ் ஒரு வசதியான மற்றும் மலிவான உணவு. விருப்பமாக இருந்தாலும், அவை பலவிதமான உடல்நல அபாயங்களுடன் வருகின்றன. அவற்றை மிதமாக உட்கொள்வது மற்றும் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது முக்கியம். அவ்வாறு செய்வதன் மூலம், நூடுல்சை வழக்கமாக உட்கொள்வதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்கலாம்.
- காரம் மற்றும் சுவை காரணமாக நூடுல்சுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பரவி கிடக்கிறார்கள்.
- பொதுமக்கள் தங்களிடம் உள்ள இந்த நூடுல்ஸ் பாக்கெட்டுகளை உடனடியாக கடைகளில் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளது.
கோபன்ஹேகன்:
தென் கொரியாவை சேர்ந்த பிரபல நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஒன்று உலகின் அதிக காரம் சுவை கொண்ட நூடுல்சை தயாரித்து விற்று வருகிறது. உலகம் முழுவதும் இந்த நூடுல்ஸ் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காரம் மற்றும் சுவை காரணமாக இந்த நூடுல்சுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பரவி கிடக்கிறார்கள்.
இந்தநிலையில் ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் அதிக கார சுவை கொண்ட இந்த நூடுல்சுக்கு தடை விதித்துள்ளது. டென்மார்க்கின் உணவு கட்டுப்பாடு அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி அந்த நூடுல்சில் அளவுக்கதிகமான காப்சைசின் என்னும் வேதிப்பொருள் உள்ளதாக கூறியுள்ளது. காப்சைசின் என்பது மிளகாய், மிளகு உள்ளிட்டவற்றில் காரத்தன்மைக்கு வித்திடும் இயற்கையான கூட்டு வேதியியல் கலவையாகும். இதனால் பொதுமக்கள் தங்களிடம் உள்ள இந்த நூடுல்ஸ் பாக்கெட்டுகளை உடனடியாக கடைகளில் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் இதனை திரும்ப பெறுமாறும் கேட்டு கொண்டுள்ளது.
- ஜோவானா 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.
- தொண்டையில் உணவு சிக்கிக்கொண்டதில் அவளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
அடிமாலி:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியை சேர்ந்தவர் சோஜன். அவருடைய மனைவி ஜினா. இவர்களது மகள் ஜோவானா (வயது 8). இவள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.
நேற்று முன்தினம் இரவு ஜோவானா, தனது வீட்டில் 'நூடுல்ஸ்' உணவு சாப்பிட்டு கொண்டிருந்தாள். அப்போது தொண்டையில் உணவு சிக்கிக்கொண்டதில் அவளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில் மயங்கி விழுந்த அவளை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக அடிமாலியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக இடுக்கி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜோவானா பரிதாபமாக இறந்தாள்.
- எந்தவித பயமும் இல்லாமல் ஜாலியாக ‘நூடுல்ஸ்’ சாப்பிட்டு கொண்டே ஸ்கை டைவிங் சாகசம் செய்கிறார்.
- ஒரு பயனர், வாழ்க்கையை எவ்வாறு ரசித்து வாழ வேண்டும் என்பதை இவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம் என பதிவிட்டார்.
வான்சாகசம், கடல் சாகசம் போன்ற சாகச விளையாட்டுகளை விரும்பும் வாலிபர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான வான் சாகசத்தை விரும்பிய ஒருவர் 'ஸ்கை டைவிங்' சாகசம் செய்யும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வழக்கமாக 'ஸ்கை டைவிங்' செய்யும் பெரும்பாலானோர் கண்களை மூடி கொள்வது, தனது பாதுகாவலரை இறுக்கி பிடித்து கொள்வது போன்ற செயல்களை செய்வார்கள். ஆனால் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில் 'ஸ்கை டைவிங்' செய்யும் வாலிபர் உயரத்தில் இருந்து குதிப்பது குறித்து எந்தவித பயமும் இல்லாமல் ஜாலியாக 'நூடுல்ஸ்' சாப்பிட்டு கொண்டே ஸ்கை டைவிங் சாகசம் செய்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும், 'ஸ்கை டைவிங்' செய்வதே சுவாரஸ்யமான ஒரு விஷயம். இந்த வாலிபர் அதை மேலும் சுவாரஸ்யமாக்கி விட்டார் என பதிவிட்டனர். ஒரு பயனர், வாழ்க்கையை எவ்வாறு ரசித்து வாழ வேண்டும் என்பதை இவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம் என பதிவிட்டார்.
- மீந்து போன சப்பாத்தியை மறுநாள் காலையில் மீண்டும் தோசைக்கல்லில் போட்டு சூடேற்றி சாப்பிடுவார்கள்.
- சப்பாத்தியை மெல்லிசாக நூடுல்ஸ் போல வெட்டி வைத்துக்கொள்ளவும்.
பெரும்பாலானோர் வீட்டில் தினமும் சப்பாத்தி செய்து சாப்பிடுவது வழக்கமாக இருக்கும். அப்படி சப்பாத்தி செய்யும் போது பல நேரங்களில் சப்பாத்தி மீந்து போயிடும். அப்படி மீந்து போன சப்பாத்தியை நிறைய பேர் பாதுகாப்பாக எடுத்து வைத்து, மறுநாள் காலையில் மீண்டும் தோசைக்கல்லில் போட்டு சூடேற்றி சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி சாப்பிட பலருக்கு பிடிக்காது. அப்படி போன சப்பாத்தியை வைத்து நூடுல்ஸ் செய்யலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி
முட்டை-4
பெரிய வெங்காயம்-3
தக்காளி-3
இஞ்சி- சிறிது
பூண்டு- சிறிது
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் முட்டையை பொரித்து எடுத்துவைக்கவும். பிறகு சப்பாத்தியை மெல்லிசாக நூடுல்ஸ் போல வெட்டி வைத்துக்கொள்ளவும்.
கடாயை சூடுசெய்து எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி போட்டு வதக்கவும். நன்கு வதக்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து குறைவான தணலில் மூடிவைக்கவும். பச்சை வாடை போனவுடன், வெட்டி வைத்த சப்பாத்தி, முட்டைப் பொரியல் போட்டு, மிளகுத் தூள், உப்பு இட்டு, கிளறி எடுத்து சுடச்சுட பரிமாறவும்.
- தாளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சேகர்-மகாலட்சுமி தம்பதி.
- தாய் மகாலட்சுமி நூடுல்ஸ் சாப்பிட்டதால் குழந்தை இறந்து விட்டதாக போலீசாரிடம் கூறினார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் நெம்பர் 1 டோல்கேட் அருகேயுள்ள தாளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சேகர்-மகாலட்சுமி தம்பதி. இருவரும் கூலி வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களது மகன் சாய் தருண் (வயது 2).
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மகாலட்சுமி குழந்தைக்கு நூடுல்ஸ் உணவு தயாரித்து கொடுத்துள்ளார். மீதமிருந்த நூடுல்சை குளிர்சாதன பெட்டியில் வைத்த அவர் மறுநாள் காலையும் அதனை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட கொடுத்ததாக தெரிகிறது.
இதற்கிடையே குழந்தைக்கு உடலில் அலர்ஜி காரணமாக சிறுசிறு புண்கள் ஏற்பட்டு இருந்தன. அதற்கு மகாலட்சுமி உரிய சிகிச்சை அளித்து வந்த நிலையில் இரண்டாவது நாளாக நூடுல்ஸ் சாப்பிட்ட குழந்தை மிகவும் உடல் சோர்வாக காணப்பட்டது.
மேலும் அன்று மாலை வாந்தி எடுத்த சாய் தருண் சிறிது நேரத்தில் திடீரென்று மயங்கி விழுந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மகாலட்சுமி, குழந்தையை தூக்கிக் கொண்டு நெம்பர் 1 டோல் கேட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அப்போது பரிசோதித்த டாக்டர் குழந்தை இறந்து நீண்ட நேரம் ஆகிவிட்டதாக கூறினார். இதனால் குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். இதற்கிடையே குழந்தை இறந்தது குறித்த தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் சாய் தருணினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தாய் மகாலட்சுமி நூடுல்ஸ் சாப்பிட்டதால் குழந்தை இறந்து விட்டதாக போலீசாரிடம் கூறினார்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை இன்று காலை நடைபெற்று முடிந்தது. இதில் குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விலா எலும்பிலும் முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கூலி வேலைக்கு சென்ற மகாலட்சுமி, குழந்தையையும் தூக்கி சென்றார். அப்போது ரத்த அழுத்தம் காரணமாக மகாலட்சுமி திடீரென்று குழந்தையுடன் மயங்கி விழுந்துள்ளார். இதில் குழந்தைக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல் குழந்தை சாய் தருண் தனது வீட்டின் அருகே மூன்று சக்கர சைக்கிள் ஓட்டியபோதும் கீழே விழுந்துவிட்டதாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதில் குழந்தைக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும், சர்ச்சையும் உருவாகி இருக்கிறது.
இது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.தொடர்ந்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வயது குழந்தையின் சாவுக்கு என்ன காரணம் என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.