என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "யானைகள் நடமாட்டம்"
- மணலாறு பகுதியில் ஹைவேவிஸ் அணை, தேயிலை தோட்டத்தில் காட்டுயானைகள் உலாவந்து செல்கிறது.
- இதனால் கூலித்தொழிலாளர்கள் அச்சமடைந்து வீடுகளில் முடங்கி உள்ளனர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, மணலாறு, மேல்மணலாறு, வெண்ணியாறு, இரவங்லாறு, மகாராஜாமெட்டு, ஹைவேவிஸ் ஆகிய 7 மலைகிராமங்கள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமங்களில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, புலி போன்ற பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக இவை அடிக்கடி தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியே வருவது வாடிக்கையாக உள்ளது.
தற்போது மணலாறு பகுதியில் ஹைவேவிஸ் அணை, தேயிலை தோட்டத்தில் காட்டுயானைகள் உலாவந்து செல்கிறது. இதனால் கூலித்தொழிலாளர்கள் அச்சமடைந்து வீடுகளில் முடங்கி உள்ளனர். சின்னமனூர் வனச்சரகத்திற்குட்பட்ட வனத்துறையினர் இந்த யானைகளை வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபகுதியில் அரிசிகொம்பன் யானை நடமாடி பொதுமக்களை பீதியடைய வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- அருவியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
- யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும், அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் புனித தலமாகவும் விளங்கி வருகிறது. தமிழக-கேரள எல்லையில் இந்த அருவி அமைந்திருப்பதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் அருவியில் நீராடி செல்வது வழக்கம்.
இது தவிர ஆண்டு முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவார்கள். தற்போது அருவியில் தண்ணீர் அதிக அளவு ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் யானைகள் நடமாட்டம் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு வனச்சரகர் பிச்சை மணி தெரிவிக்கையில், அருவியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் மறு உத்தரவு வரும் வரை சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்றார். நாளை ஆடி 18-ம் பெருக்கு என்பதால் அருவியில் ஏராளமானோர் நீராட வருகை தருவார்கள். இந்நிலையில் வனத்துறையினரின் இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைபகுதி மேகமலை புலிகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- அணையைச் சுற்றி விவசாய பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் எச்சரிக்கையுடன் வாகனங்களில் பயணிக்க வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, புலி, கரடி, மான், மிளா, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைபகுதி மேகமலை புலிகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கோவிலாறு அணை உள்ளது. வன விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் இங்கு வர பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இப்பகுதியின் அழகை காண தடையை மீறி வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தற்போது கோவிலாறு அணைக்கு செல்லும் பிரதான சாலை பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அணைப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணையைச் சுற்றி விவசாய பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் எச்சரிக்கையுடன் வாகனங்களில் பயணிக்க வேண்டும் எனவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- காட்டு யானை ஒன்று குட்டிகளுடன் இந்த பகுதிகளில் முகாமிட்டுள்ளது
- தொழிலாளர்கள் பாதுகாப்புடனும் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல் தொரை, மசக்கல் பகுதியை சுற்றிலும் பல குக்கிராமங்கள் அமைந்துள்ளது.
இப்பகுதியில் அதிகப்படியான மலைகாய்கறி விவசாயம் நடைபெற்று வருகிறது.
இங்கு அதிகாலை நேரங்களில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் அவரை போன்ற மலைகாய்கறிகள் பறிக்கவும், நீர் பாய்ச்சவும் விவசாயிகள் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் தற்போது சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானை ஒன்று குட்டிகளுடன் இந்த பகுதிகளில் முகாமிட்டுள்ளது. இந்த யானை கூட்டம் பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு, சாலைகளில் உலா வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
மேலும் தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், பொதுமக்களை தாக்கும் அபாயமும் உள்ளது. எனவே, தேயிலை, தோட்ட விவசாய பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் சென்று வர வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
- குடிநீர் மற்றும் உணவு தேடி வரும்போது தடம்மாறி பேரிஜம் ஏரிக்குள் வந்துவிடுகின்றன.
- பேரிஜம் ஏரியில் யானைகள் கூட்டம் புகுந்துள்ளது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலமாக பேரிஜம் ஏரி உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் இயற்கை அழகை கண்டு ரசித்தபடியே பயணம் செய்யலாம் என்பதால் சுற்றுலா பயணிகள் இங்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக வனத்துறை சோதனைச்சாவடியில் முன்அனுமதி டிக்கெட் பெற வேண்டும்.
இதனையொட்டி உள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை குடிநீர் மற்றும் உணவு தேடி வரும்போது தடம்மாறி பேரிஜம் ஏரிக்குள் வந்துவிடுகின்றன. எனவே வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் சுற்றுலா பயணிகள் செல்வதை தடுத்து வருகின்றனர். காட்டு யானை, காட்டுஎருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் இடம்பெயர்வதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் செல்ல அறிவுறுத்தப்பட்டது.
இந்தநிலையில் பேரிஜம் ஏரியில் யானைகள் கூட்டம் புகுந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஏரிக்குள் செல்ல தடைவிதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு உள்ளது. அவ்வப்போது சாரல்மழை பெய்தாலும் வறண்ட நிலையே நிலவுகிறது. இதனால் அடிக்கடி காட்டுத்தீ பற்றி வருகிறது.
இதனை அணைக்கும் முயற்சியிலும் தீ தடுப்பு முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம். வனவிலங்குகள் இடம்பெயரும்போது குடியிருப்பு பகுதிக்குள் வந்துவிடுகின்றன. எனவே வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். தற்போது பேரிஜம் ஏரியில் யானைகள் கூட்டம் புகுந்துள்ளது. எனவே அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுவரை சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
- தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வந்து முகாமிட்டு இருந்தன.
- பாதுகாப்பாக இருக்கு மாறு வனத்துறை யினர் எச்சரிக்கை விடுத்து ள்ளனர்.
தேன்கனிகோட்டை ,
கர்நாடக மாநிலம் பன்னா ர்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வந்து முகாமிட்டு இருந்தன.
அதில் 40 யானைகள் ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு சென்றன. மீதமுள்ள யானைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்று அட்ட காசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 30 யானைகள் திம்மசந்திரம், மேகலகவுண்டனூர், லிங்கதீ ரணப்பள்ளி கிராமங்களில் புகுந்தன. அந்த யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து ராகி போர், வெள்ளரி செடிகள், பீன்ஸ் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின.
இதனிடையே நேற்று காலை விவசாயிகள் தோட்டங்களுக்கு சென்ற போது பயிர்கள் சேதமடை ந்துள்ளதை கண்டுஅதிர்ச்சி அடைந்தனர்.
சானமாவு காடு இதனிடையே நேற்று முன்தினம் 40 யானைகள் ஊடேதுர்க்கம் வழியாக ஓசூர் அருகே உள்ள சானமாவு காட்டுக்குள் முகாமிட்டு உள்ளன.
இந்த யானைகளால் சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து சென்றனர்.
அப்போது யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சானமாவு காட்டில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், வனப்பகுதியை யொட்டி உள்ள சானமாவு, சினிகிரி பள்ளி, பீர்ஜேப்ப ள்ளி, போடூர், ராமாபுரம், ஆலியாளம் மற்றும் சுற்றுவ ட்டார கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கு மாறு வனத்துறை யினர் எச்சரிக்கை விடுத்து ள்ளனர்.
மேலும் இரவு நேரங்களில் வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டாம் என அவர்கள் அறிவுறுத்தினர்.
- வடகிழக்கு பருவமழைக்கு பின்பு வனப்பகுதி பசுமைக்கு மாறி உள்ளது.
- அடிவாரப்பகுதியில் வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் தேவை பூர்த்தி அடைவதால் வனப்பகுதிக்குள் திரும்பி செல்வதற்கு நாட்டம் காட்டுவதில்லை.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டெருமை, மலைப்பாம்பு, கருமந்தி, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் இருப்பிடத்தை மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதிகள் பூர்த்தி செய்து தருகிறது.
இந்த சூழலில் வடகிழக்கு பருவமழைக்கு பின்பு வனப்பகுதி பசுமைக்கு மாறி உள்ளது. இதனால் அங்கு கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து உள்ளது. அதன் தாக்குதலில் இருந்து தப்பித்து கொள்வதற்காக யானை, மான், காட்டெருமை, கருமந்தி, சிங்கவால் குரங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அமராவதி அணையை நோக்கி வந்த வண்ணம் உள்ளன.
அடிவாரப்பகுதியில் வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் தேவை பூர்த்தி அடைவதால் வனப்பகுதிக்குள் திரும்பி செல்வதற்கு நாட்டம் காட்டுவதில்லை. மேலும் உடுமலை-மூணாறு சாலையில் உலா வருகின்றன.
அப்போது அந்த வழியாக வருகின்ற வாகனங்களை யானைகள் வழிமறித்தும் வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தும் வருகின்றனர். எனவே உடுமலை-மூணாறு சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையைக் கடக்கும் வரையில் பொறுமை காத்து செல்ல வேண்டும். வனவிலங்குகளை துன்புறுத்துவதோ அவை மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ உள்ளிட்ட செயல்களில் வாகன ஓட்டிகள் ஈடுபடக்கூடாதென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மஞ்சூர்-கோவை சாலையில் யானைகள் நடமாட்டம் இல்லாததால் வாகனங்கள் எந்தவித இடையூறும் இன்றி சென்று வந்தன.
- மழையால் வனப்பகுதி பசுமையாக மாறியுள்ளதால் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கெத்தை பகுதிகளில் கடந்த சில தினங்களாக 2 குட்டிகளுடன் 5 காட்டு யானைகள் சுற்றி திரிந்து வருகின்றன.
நேற்றுமுன்தினம் கோவையில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மஞ்சூருக்கு அரசு பஸ் சென்றது. இரவு 8 மணியளவில் கெத்தை அருகே பஸ் வந்தபோது, குட்டிகளுடன் வந்த காட்டு யானைகள் கூட்டம் திடீரென பஸ்சை வழிமறித்து நின்றது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரத்தில் நிறுத்தினார். பஸ்சில் இருந்த பயணிகளும் அச்சம் அடைந்தனர். பஸ் சாலையோரம் நிற்பதை பார்த்ததும் தனியார் வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தது.
45 நிமிடங்களுக்கும் மேலாக சாலையில் சுற்றி திரிந்த காட்டு யானை கூட்டம் சாலையோரம் இருந்த மரக்கிளைகள், நெடுஞ்சாலை சார்பில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையை அடித்து நொறுக்கிவிட்டு வனத்திற்குள் சென்றது. அதன் பின்னரே வாகனங்கள் அங்கிருந்து சென்றன.
நேற்று காலை மஞ்சூர் பகுதியில் கோவைக்கு சென்ற தனியார் வாகனத்தையும் மந்து என்ற இடத்தில் காட்டு யானைகள் வழிமறித்தன. நீண்ட நேரத்திற்கு பின் யானைகள் அங்கிருந்து சென்றதை தொடர்ந்து தனியார் வாகனம் புறப்பட்டு சென்றது.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மஞ்சூர்-கோவை சாலையில் யானைகள் நடமாட்டம் இல்லாததால் வாகனங்கள் எந்தவித இடையூறும் இன்றி சென்று வந்தன. ஆனால் தற்போது மீண்டும் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினா் கூறுகையில், அவ்வப்போது பெய்து வரும் மழையால் வனப்பகுதி பசுமையாக மாறியுள்ளதால் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். யானையுடன் புகைப்படம் எடுக்க முயற்சிக்கக்கூடாது என்றனா்.
மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ், வாகனங்களை வழிமறித்து ஒய்யாரமாக நடந்து செல்லும் யானை கூட்டம்.
- அடர்ந்த வனப்பகுதியையொட்டி உள்ள சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
- சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக சாலையில் சுற்றிய காட்டு யானைகள் அதன்பின்னர் சாலையில் இருந்து இறங்கி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை, முள்ளி வழியாக கோவை மாவட்டம் காரமடைக்கு சாலை செல்கிறது.
சமீப நாட்களாக அடர்ந்த வனப்பகுதியையொட்டி உள்ள சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
இந்தநிலையில் நேற்று மாலை கோவையில் இருந்து மஞ்சூருக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர். கெத்தை அருகே அரசு பஸ் சென்றபோது, தனது குட்டியுடன் சென்ற யானைக்கு பக்கபலமாக சென்ற 4 காட்டு யானைகள் பஸ்சை திடீரென வழிமறித்து சாலையின் குறுக்கே நின்றது. இதனால் டிரைவர் சிறிது தொலைவுக்கு முன்பே பஸ்சை நிறுத்தினார்.
யானைகள் வழிமறித்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக சாலையில் சுற்றிய காட்டு யானைகள் அதன்பின்னர் சாலையில் இருந்து இறங்கி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.
அதன் பின்னர் அரசு பஸ் அங்கிருந்து மஞ்சூருக்கு சென்றது. இந்த பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால், வாகனங்களை மிகவும் எச்சரிக்கையுடன் கவனமாக இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கோவை-மஞ்சூர் சாலையில் சுற்றி திரியும் காட்டு யானைகள் கூட்டத்தை காணலாம்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்