என் மலர்
நீங்கள் தேடியது "யோகாசனம்"
- ஒரு நாளைக்கு 5 முறை செய்ய வேண்டும்.
- முடிந்த வரை 45 டிகிரி கோணத்தில் உடலைக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள்.
தொப்பையை வேகமாக கரைக்க உதவும் சில எளிய யோகாசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் தவறாமல் பின்பற்றினால், தொப்பையை வேகமாக குறைக்க முடியும்.
* புஜங்காசனம்
இந்த ஆசனத்தை செய்யும் போது, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலிமையடைவதோடு, வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புகளும் கரையும். மேலும் இந்த ஆசனத்தினால் முதுகு, அடி வயிறு மற்றும் உடலின் மேல் பகுதியும் வலிமையடையும். இந்த ஆசனம் தண்டுவடத்தையும் வலிமையாக்கும்.
முதலில் குப்புறப்படுத்து, இரு உள்ளங்கைகளையும் மார்பு பகுதிக்கு பக்கவாட்டில் தரையில் ஊன்றி, மூச்சை உள்ளிழுத்தவாறு முகத்தையும், உடலையும் உயர்த்த வேண்டும். இந்நிலையில் 15-30 நொடிகள் இருக்க வேண்டும். பின் மூச்சை வெளியிட்டவாறு பழைய நிலைக்கு திரும்பவும். இப்படி ஒரு நாளைக்கு 5 முறை செய்ய வேண்டும்.

* தனுராசனம்
தனுர் என்றால் வில். வில்லைப் போல் உடலை வளைத்து செய்வதால், இந்த ஆசனத்தின் பெயர் தனுராசனம் என்று வந்தது. இந்த ஆசனத்தின் மூலம் அடிவயிற்று தசைகள் நல்ல நிலையைப் பெறும். மேலும் இந்த ஆசனத்தினால் வயிற்றுக் கொழுப்புகளும், தொடையில் உள்ள கொழுப்புகளும் கரையும் மற்றும் செரிமான மண்டலம் நன்கு செயல்பட்டு, மலச்சிக்கல் பிரச்சினை அகலும். இந்த ஆசனத்திற்கு குப்புறப்படுத்து, இரண்டு கைகளாலும் கணுக்காலைப் பிடித்து, உடலை வில் போன்று வளைக்க வேண்டும். இப்படி 5 முறை செய்ய வேண்டும்.

* நாகாசனம்
இந்த யோகாசனம் தட்டையான வயிற்றைப் பெற உதவும் மற்றும் இடுப்பு பகுதியைச் சுற்றியுள்ள கொழுப்புகளைக் கரைக்கும். மேலும் இந்த ஆசனத்தினால் முதுகு மற்றும் கால் தசைகள் வலிமைப் பெறும்.
இந்த ஆசனத்திற்கு முதலில் தரையில் குப்புற படுத்து, பின் மூச்சை உள்ளிழுத்தவாறு மேல் உடலையும், இடுப்பு பகுதிகளையும் மேலே உயர்த்த வேண்டும். முடிந்த வரை 45 டிகிரி கோணத்தில் உடலைக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். இந்நிலையில் 15 நொடிகள் இருந்து, பின் மூச்சை வெளியே விட்டவாறு பழைய நிலைக்கு திரும்புங்கள்.
* பவனமுக்தாசனம்
இந்த யோகாசனத்தினால் குடலுக்கு மசாஜ் செய்தது போன்று இருப்பதோடு, வயிற்று அமிலத்தை ஒழுங்குபடுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும், முதுகு வலியைக் குறைக்கவும், அடிவயிறு, தொடை, இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து அழகாக வைத்துக் கொள்ளவும் உதவும்.
பவனமுக்தாசனம் செய்வதற்கு தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு, முழங்கால்களை மடித்து, மார்பை தொடும் வண்ணம் தூக்கி, பின் இரு கைகளால் முழங்கால்களைப் பிடித்துக் கொண்டு, தலையால் முழங்காலைத் தொட முயற்சிக்க வேண்டும்.
- மழையில் நனைந்து கொண்டே ஒற்றை காலில் நின்று நடனம் ஆடினார்.
- மழையில் நனைந்தபடியே மதில் சுவரில் அமர்ந்து சுமார் ஒரு மணி நேரம் தியானம் செய்தார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. இந்தமழையினால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா தளங்களை சுற்றி பார்க்க முடியாமல் தாங்கள் தங்கி இருக்கும் லாட்ஜ்களில் உள்ள அறைகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.
ஆனால் இந்த கொட்டுகிற மழையிலும் 10 வயது சிறுவன் ஒருவன் நேற்று மாலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் கடற்கரையில் உள்ள மதில் சுவரில் ஏறி நின்று யோகாசனம் செய்தார். அப்போது அந்த சிறுவன் கொட்டுகிற மழையையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடியே மதில் சுவரில் அமர்ந்து சுமார் ஒரு மணி நேரம் தியானம் செய்தார்.
அதன் பிறகு மழையில் நனைந்து கொண்டே ஒற்றை காலில் நின்று நடனம் ஆடினார். இந்த காட்சி பார்ப்பவர்கள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் பலர் அந்த சிறுவனின் சாகச காட்சிகளை தங்களது செல்போன்களில் படம் பிடித்துக் கொண்டே இருந்தனர். அந்த சிறுவனும் மழை நிற்கின்றவரை அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது யோகாசனசாகசங்களை செய்து கொண்டே இருந்தார்.
- யோகா தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக யோகா மற்றும் இயற்கை மருத்துவர் ஆர்.கலைமகள் கலந்து கொண்டு யோகா செய்வதன் அவசியத்தையும் அதன் பயன்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
- அலுவலகத்தில் பணிபுரிகின்ற ஊழியர்கள் அனைவருக்கும் எளிய முறையில் செய்யும் விதமாக பல்வேறு யோகாசனங்களை பயிற்றுவித்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் 8-வது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தஞ்சை தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சலக தலைவர் எஸ்.அருள்தாஸ் தலைமை தாங்கி நடத்தினார். சிறப்பு விருந்தினராக யோகா மற்றும் இயற்கை மருத்துவர் ஆர்.கலைமகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி அளித்தார். மேலும் யோகா செய்வதன் அவசியத்தையும், அதன் பயன்களை பற்றியும் எடுத்துரைத்தார்.
அலுவலகத்தில் பல்வேறு வயது வரம்பில் பணிபுரிகின்ற அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் எளிய முறையில் செய்யும் விதமாக பல்வேறு யோகா சனங்களை பயிற்றுவித்தார். முன்னதாக, தஞ்சாவூர் தலைமை அஞ்சலக துணை அஞ்சலக தலைவர் குழந்தைராஜ் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியின் நிறைவாக சித்ரா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தின் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
- இந்திய வரைபடத்தின் நடுவில் படுத்து தனது கை, கால், தலையில் அகல்விளக்கில் தீபம் ஏற்றி யோகாசனம் செய்தார்.
- கொரோனா மீண்டும் வராமல் தடுப்பதற்கு மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை முகம்மது ஹபீபு வழியுறுத்தினார்.
கடையநல்லூர்
கடையநல்லூரில் உலக யோகாசன தினத்தை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், உலக அமைதிக்காகவும் கொரோனா மீண்டும் வராமல் தடுப்பதற்கு மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தியும் இந்திய வரைபடத்தின் நடுவில் தீபம் மூலம் யோகாசனம் நடந்தது.
உலகம் முழுவதும் இன்று உலக யோகாசன தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கடையநல்லூரில் இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளரும், ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் முன்னாள் தலைவருமான முதியவர் முகம்மது ஹபீபு நேற்று இந்திய வரைபடத்தின் நடுவில் படுத்து தனது கை, கால், தலையில் அகல்விளக்கில் தீபம் ஏற்றி கொரோனா மீண்டும் வராமல் தடுப்பதற்கு மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தியும், உலக நன்மைக்காக சிறப்பு யோகாசனங்களை செய்து காண்பித்தார்.
- மாணவி ஷாஜிதா ஸைனப் மதநல்லிணக்கம் வேண்டி ஆணி பலகையில் யோகாசனத்தில் அமர்ந்து அசத்தினார்.
- ரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன், துணைத்தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடையம்:
கடையம் அருகே ரவணசமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த தொழிலாளி முகம்மது நஸீருதீன்-ஜலிலா அலி முன்னிஸா தம்பதியரின் இளையமகள் மாணவி ஷாஜிதா ஸைனப் என்பவர் 8 -வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதநல்லிணக்கம் மற்றும் வேளாண்மை செழிக்க வேண்டி ஆணி பலகையில் யோகாசனத்தில் அமர்ந்து தேசிய கொடியுடன் உடலில் தீபம் ஏந்தி அசத்தினார்.
நிகழ்ச்சியில் ரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன், துணைத்தலைவர் ராமலட்சுமி சங்கிலி, சமுதாயத் தலைவர் பரமசிவன், வார்டு உறுப்பினர்கள் முகமது யஹ்யா, மொன்னா முகமது, ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சமூக ஆர்வலர் சேக் முகமது அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை யோகா ஆசிரியர் குருகண்ணன் செய்திருந்தார்.