search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம மக்கள் மனு"

    • கிருஷ்ணகிரி அருகே கார்வேபுரத்தில் கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என்பதால் அடிப்படை வசதிகள் கேட்டு, கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
    • எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. வீட்டு மனை கேட்டு கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை அதிகாரிகள் எடுக்காததால், கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே கார்வேபுரத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் ஊராட்சி கார்வேபுரம் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் 150-க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்ப் பழங்குடி குறவன் சங்கம் சார்பில், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி தாலுகா தேவசமுத்திரம் ஊராட்சி ஏரிக்கோடியை ஒட்டியுள்ள கார்வேபுரம் பகுதியில் கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. வீட்டு மனை கேட்டு கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    மேலும் ஏரிப்புறம் போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகக்கூறி, குடியிருக்கும் வீட்டை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லி அறிவிப்புகளையும் வழங்கி வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் நிம்மதி இன்றி தவித்து வருகின்றனர்.

    மழைக் காலங்களில் உபரி நீர் வெளியேறி விஷ பூச்சிகளும், மழை நீருடன் கழிவுநீரும் வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் குடிநீரும், இதர பயன்பாட்டிற்கான தண்ணீரும் இரண்டுமே ஒன்றாகவும், சுகாதாரமற்ற நிலையிலும் உள்ளன. எந்த வீட்டிலும் முறையான கழிப்பறைகள் இல்லை. இதனால் பெண்களும், வயதான வர்களும் மிகவும் சிரமத்திற் குள்ளாகி வருகின்றனர்.

    சுகாதார சீர்கேடு, அபாயகரமான வாழ்க்கை சூழல் காரணமாக இளம் வயது மரணங்கள் அதிகமாக நிகழ்கின்றன. பள்ளி, கல்லூரியில் படிக்கும் வயதில் உள்ள பாதிக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளியை விட்டு நின்று விட்டனர். இதனால் குழந்தைகள் வீட்டில் இருப் பதால், வேலைக்கு செல்லும் சூழலுக்கு தள்ளப் பட்டு குழந்தை தொழிலாளர்களாக உருவாகி உள்ளனர்.

    10 ஆண்டுகளாக ஒவ்வொரு வீட்டிலும் 10-க்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்த்து வந்துள்ளனர். இந்த பன்றி வளர்ப்பதை விட்டு விட்டால், ஒரு நல்ல நிரந்தரமானஇடம் வழங்கப்படும் என்று அப்போதைய அரசு அலுவலர்கள் சிலர் சொன்னதை நம்பி ஒட்டு மொத்தமாக பன்றி மேய்க்கும் தொழிலை விட்டு விட்டனர். ஆனாலும் இதுவரை மாற்று இடம் வழங்கப்படவில்லை. எனவே இங்கு வசிப்ப வர்களுக்கு அரசு நல்ல இடம் ஒதுக்கி வீடு கட்டி, குடிநீர், சாக்கடை கால்வாய் வசதி போன்றவற்றை செய்துதர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆர்.டி.ஒ, தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் 50-க்கும் மேற்பட்ட முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு மனைப்பட்டா வழங்கவேண்டும்.

     தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் அத்திமரத்துப்பள்ளம், சக்கிலிநத்தம், ஈச்சம்பள்ளம் கிராமத்தை சேர்ந்த 100 -க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் தருமபுரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    3 தலைமுறைகளாக, சுமார் 90 ஆண்டுகளுக்கும் மேலாக அத்திமரத்துப்பள்ளம், சக்கிலிநத்தம், ஈச்சம்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் தனது சொந்த செலவில் வீடுகட்டி வசித்து வருகிறோம் நாங்கள்

    குடியிருக்கும் வீட்டிற்கு பஞ்சாயத்து வீட்டு வரி, மின்இனைப்பு கட்டண ரசீது,குடிநீர் இணைப்புக்கான ரசீது ஆகியை முறையாக செலுத்தி வருகின்றோம். விவசாய பணிகளுக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறோம் கூலிவேலை செய்யும் நாங்கள் வேறு வீட்டுமனை வாங்க வசதி இல்லை. நீண்ட ஆண்டுகாலமாக வசிக்கும் எங்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு தொடர்ந்து மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஒ, தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் 50-க்கும் மேற்பட்ட முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

    எனவே நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு மனைப்பட்டா வழங்கவேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். 

    • ஜோதிபுரத்தில் உள்ள சாலை, குடிநீர் பொது கழிப்பிடம் புனரமைக்க வேண்டும் .
    • அப்பகுதியில் குடிநீர், சாலை, மற்றும் பொது கழிப்பிடத்தை, புனரமைத்து தரப்படும் என உறுதி அளித்தார்

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் பேரூராட்சி ஜோதிபுரத்தில் உள்ள சாலை, குடிநீர் பொது கழிப்பிடம் புனரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமாரிடம் மனு அளித்தனர்.

    இதையடுத்து உடனடியாக அப்பகுதியில் குடிநீர், சாலை, மற்றும் பொது கழிப்பிடத்தை, புனரமைத்து தரப்படும் என உறுதி அளித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில் குமார், பேரூராட்சி உறுப்பினர் அமுதா பழனி மற்றும் ஜோதிபுரம் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

    • குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் அளித்தனர்
    • நடவடிக்கை எடுக்கப்பதாக அதிகாரி உறுதி

    குடியாத்தம்:

    குடியாத்தம் வட்டம் ராமாலை ஊராட்சியை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் 100 பேருக்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ராமாலையை அடுத்த கணகர் குட்டை பகுதியிலும், பிள்ளை யார் கோவில் அருகிலும் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

    ஆனால் இதுவரை பட்டா வழங்கிய இடத்தை அளந்து உட் பிரிவு செய்து கொடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

    மேலும் கணகர்குட்டையில் வழங்கப்பட்ட மனைகளில் வீடு கட்டாததால், அந்த இடத்தை வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் இங்கு வீட்டுமனை பட்டா பெற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து குடியாத்தம் நகர மன்ற உறுப்பினர் பி.மேகநாதன், ராமாலை ஒன்றியக் குழு உறுப்பினர் குட்டி வெங்கடேசன் உள்ளிட்ட ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் வீட்டு மனை பெற்ற கிராம மக்கள் நேற்று தாலுகா அலுவல கத்தில் துணை தாசில்தார் ரமேஷிடம், பட்டா வழங்கிய இடத்தை உடனடியாக அளந்து தருமாறு மனு அளித்தனர்.

    மனுக்களை பெற்றுக் கொண்ட அவர் இது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி அளித்தார்.

    • நாகையகோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் மனு அளிக்க வந்தனர்.
    • இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்தி பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் வழிபாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள நாகையகோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் மனு அளிக்க வந்தனர்.

    அவர்கள் தெரிவிக்கையில், எங்கள் கிராமத்தில் பழமையான மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் உள்ளது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பொதுமக்களிடம் வரி வசூல் செய்து சிறியதாக கோவில் கட்டி வழிபட்டு வந்தோம்.அதனைத் தொடர்ந்து கோவில் உண்டியல் மற்றும் நன்கொடை வசூல் செய்யப்பட்டது.

    இதனை தங்கராஜ் என்பவர் நிர்வகித்து வந்தார். ஆனால் அவரது வரவு, செலவு கணக்கில் பொதுமக்களுக்கு திருப்தி இல்லை. இது குறித்து கேள்வி எழுப்பும் பொதுமக்களை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி பேசுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது.

    ஊர் திருவிழா நடைபெறும் போது வரி வசூல் செய்வது தொடர்பாக ஒவ்வொரு வருடமும் பிரச்சினை செய்து வருகிறார். மேலும் எரியோடு போலீஸ் நிலையத்தில் அவர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு தெரிந்த சிலரது செல்வாக்கை பயன்படுத்தி பொதுகமக்களை மிரட்டி வருகிறார். எனவே இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்தி பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் வழிபாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • கல்குவாரியில் வெடி வைக்கும் பொழுது பள்ளியின் கட்டிடங்கள் குலுங்குவதால் இடிந்து விழும் அபாய நிலை ஏற்படக்கூடும் என்கின்றனர்.
    • பாறைகளைத் தகர்க்க தொடர்ந்து வெடி வெடிப்பதால் கிராமம் முழுவதும் கரும்புகைகள் சூழ்வதாகவும் கூறுகின்றனர்.

    தென்காசி:

    ஆலங்குளம் தாலுகாவில் உள்ள ஆண்டிப்பட்டி மற்றும் பூலாங்குளம் கிராமத்தில் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் அதிகளவில் விவசாயத்தை நம்பியே தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பூலாங்குளம் கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருவதாகவும் குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த கல்குவாரியில் வெடி வைக்கும் பொழுது அப்பகுதியில் உள்ள பள்ளியின் கட்டிடங்கள் அதிகளவில் குலுங்குவதால் பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலை ஏற்படக்கூடும் என்கின்றனர்.

    பாறைகளைத் தகர்க்க தொடர்ந்து வெடி வெடிப்பதால் ஆண்டிபட்டி கிராமம் முழுவதும் கரும்புகைகள் சூழ்வதாகவும் இதனால் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் கூறுகின்றனர்.

    எனவே இதில் அரசு அதிகாரிகள் தலையிட்டு ஆண்டிபட்டி அருகே செயல்பட்டுவரும் கல்குவாரி நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட கலெக்டரிடம் ஆண்டிபட்டி மற்றும் பூலாங்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் மனு அளித்தனர்.

    ×