search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "100 சதவீதம்"

    • உலக நாடுகளில் சீதோசன நிலை பரவலாக மாறி வருகிறது.
    • நாளொன்றுக்கு திருப்பூரில் 13 கோடி லிட்டா் கழிவுநீா் சுத்திகரிக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏஇபிசி) பிராண்ட்ஸ்- சோா்சிங் லீடா்ஸ் (பிஎஸ்எல்) நிறுவனம் சாா்பில் சுற்றுச்சூழல் மாசடையாமல் ஆடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியை பெருக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருமுருகன்பூண்டியில் நடைபெற்றது.

    இதில், ஏஇபிசியின் தென்னிந்திய பொறுப்பாளரும், பியோ தலைவருமான ஏ.சக்திவேல் பேசியதாவது:-

    உலக நாடுகளில் சீதோசன நிலை பரவலாக மாறி வருகிறது. சுற்றுச்சூழல் அடுத்த கட்டத்தை நோக்கி நகா்கின்றது. உலகிலேயே 100 சதவீதம் சுற்றுச்சூழல் மாசடையாமல் கழிவுநீா் ஜீரோ டிகிரி முறையில் சுத்திகரிப்பு திருப்பூரில் மட்டுமே 10 ஆண்டுகளாக நடக்கிறது. நாளொன்றுக்கு திருப்பூரில் 13 கோடி லிட்டா் கழிவுநீா் சுத்திகரிக்கப்படுகிறது.

    அதில் 96 சதவீதம் மறு பயன்பாடு, 4 சதவிகிதம் ஆவியாக்கப்படுகிறது. பசுமையை மேம்படுத்தும் வகையில் திருப்பூா் மாவட்டத்தில் 25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்றாா்.

    இதைத்தொடா்ந்து ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் பேசியதாவது:-

    ஏ.இ.பி.சி., மற்றும் பி.எஸ்.எல்., இணைந்து டெல்லி, பெங்களூரு, திருப்பூர், மும்பை, குர்ஹாம் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் மே 5 முதல் 27-ந் தேதி வரை சுற்றுச்சூழல் மாசடையாமல் ஆடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியை பெருக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    புவி மாசுபடாத ஆடைகள் தயாரிப்பில் திருப்பூர் நகரை முதலிடத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நோக்கமே 2025-26ம் ஆண்டுக்குள் திருப்பூரில் உற்பத்தியாகும் ஆடைகள் அனைத்தும் பசுமை ஆடைகளாக தயாரிப்பதற்கான வழிமுறைகளில் ஈடுபட்டுள்ளோம்.

    திருப்பூர் மாநகரில் மொத்தமாக சூரிய ஒளி மின் சக்தி மற்றும் காற்றாலை மின்சக்தி மூலம் 1,650 மெகாவாட் மின் உற்பத்தியை தயார்படுத்தி கொண்டுள்ளோம். இதில், மாவட்ட அளவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு 250 மெகாவாட் மின் சக்தியே போதுமானது. மீதமுள்ள 650 மெகாவாட்டை நகர பயன்பாட்டிற்காக அளித்து வருகிறோம்.

    உலக அளவில் உள்ள வர்த்தகர்களுக்கு திருப்பூரின் பசுமை திட்டம் குறித்து முழுமையாக தெரிவதில்லை. அதனை முன்னிறுத்தி பல்வேறு நாடுகளுக்கு திருப்பூரின் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியின் தனித்துவ தன்மையை காட்டுவதற்கே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    இவ்வாறு சுப்ரமணியன் கூறினார்.

    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை துவங்க இந்திய தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • ஆதார் அட்டை எண்ணை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்து முன்னோடி மாவட்டமாக ஈரோடு மாவட்டம் திகழ்வதற்கு அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கிருஷ்ண–னுண்ணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசியதாவது:-

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை துவங்க இந்திய தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியானது 1.8.2022 முதல் தொடங்கி 31.3.2023-க்குள் முடித்திட திட்டமிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலினை 100 சதவிகித தூய்மை–யாக்குவத ற்காகவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது ஒரு வாக்காளரின் விவரங்கள் இரு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிர்க்கும் விதமாக ஆதார் இணைக்கும் பணியானது உறுதுணையாக அமைகிறது.

    வாக்காளரிடமிருந்து ஆதார் எண்ணை பெறும் வழிமுறைகள். வாக்கா–ளர்கள் தங்களது வாக்குச்சா–வடிக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் விருப்பத்தின் அடிப்ப–டையில் படிவம் 6பி-ன் மூலமாக ஆதார் எண்களின் விவரங்களை தெரிவிக்க–லாம். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து தன் விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண் விவரங்களை படிவம் 6பி-ன் மூலமாக பெற்று சம்மந்தப்பட்ட வாக்குப்ப–திவு அலுவலர்கள் மூலமாக வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கும் பணியினை மேற்கொள்வர். வாக்காளர்கள் நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள எண்ணுடன் NVSP Portal மற்றும் Voter Helpline App மூலமாக இணைக்கலாம்.

    வாக்காளர்கள் இசேவை மையம் மற்றும் மக்கள் சேவை மையம் ஆகியவை மூலமாகவும் படிவம் 6பி-ன் மூலம் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம்கள் சென்னை தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் முதன்மை அரசு செயலாளர் அறிவுறுத்த–லின்படி முதல் சிறப்பு முகாம் எதிர்வரும் 04.09.2022 அன்று நடைபெற இருக்கிறது. வாக்காளரிடம் ஆதார் அட்டை இல்லை என்ற நேர்வில், இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள பின்வரும் 11 வகை சான்றில் ஏதாவது ஒரு சான்றின் நகலை வாக்காளர்கள் சமர்ப்பிக்க–லாம்.

    அதன்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை, வங்கி. அஞ்சலகம் மூலம் வழங்க–ப்பட்ட புகைப்படத்துடள் கூடிய கணக்கு புத்தகம், தொழிலாளர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி இந்தியப் பதிவாளர் ஜெனரலால் வழங்கப்பட்ட அட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் வழங்க ப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, நாடாளுமன்ற, சட்டமன்ற சட்ட மேலவை உறுப்பி–னர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நலம் மற்றும் திறன் மேம்பாடு துறையால் வழங்கப்பட்ட தனி அடையாள அட்டை உள்ளி–ட்டவை மூலமாக வாக்கா–ளர்கள் சமர்ப்பிக்கலாம்.

    எனவே வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரால் பாதுகாக்கப்படும்.

    எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தானாக முன்வந்து ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்து ஈரோடு மாவட்டத்தின் எட்டு சட்டமன்ற தொகுதி–களின் வாக்காளர் பட்டிய–லின் 100 சதவிகித பணிக்கு ஒத்துழைப்பு நல்குமாறும், எதிர்வரும் 1.4.2023-க்குள் அனைத்து வாக்காளர்களும் ஆதார் அட்டை எண்ணை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்து முன்னோடி மாவட்டமாக ஈரோடு மாவட்டம் திகழ்வதற்கு அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) குமரன், வட்டாட்சியர் (தேர்தல்) சிவகாமி அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோப்புப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.
    • தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகதினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை கல்வி மாவட்டத்தில் உள்ள தோப்புப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்று 2021-22-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 31 மாணவ-மாணவிகள் எழுதினர்.

    இதில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தனர். இதனால் தோப்புப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.

    இதனையடுத்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளையும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய, ஆசிரியைகளை தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினர்.

    இதோபோல் கவுந்தப்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் பொதுத்தேர்வை 221 மாணவிகள் எழுதினர். இதில் 219 மாணவிகள் தேர்ச்சி பெற்று 99 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    பள்ளியில் 600-க்கு 584 மதிப்பெண் ஒரு மாணவி பெற்றுள்ளார். 500-க்கும் மேல் 44 மாணவிகள் பெற்று ள்ளனர். வணிகவியல் பாடத்தில் 2 பேரும், கணினி தொழில் நுட்பத்தில் ஒருவரும், கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் 2 பேரும், கணக்குபதிவியல் 2 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    இதேபோல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 200 மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 192 பேர் தேர்ச்சி பெற்று 96 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 196 மாணவர்கள் எழுதினர். இதில் 189 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 160 மாணவர்கள் எழுதினர். இதில் 128 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகதினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 

    • பிளஸ்-2 தேர்வில் மாணவி மதிஷா 581 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தை பெற்றார்.
    • 10-ம்வகுப்பு தேர்வில் மாணவன் ஹரிஷ் சண்முகம் 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம்.

    நெல்லை:

    பாளை.உத்தம பாண்டியன்குளம் லெட்சுமி ராமன் நகரில் உள்ள லெட்சுமி ராமன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடந்து முடிந்த பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.

    பிளஸ்-2 தேர்வில் மாணவி மதிஷா 581 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், சுவேதா 576 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தையும், மாணவி ரம்யா 572 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

    சுவேதா கணக்குப் பதிவியல், வணிகவியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றார்.

    10-ம்வகுப்பு தேர்வில் மாணவன் ஹரிஷ் சண்முகம் 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், வைகுண்டபெருமாள் 490 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தையும், பாலமுருகன் 484 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    கணிதம், அறிவியல் பாடங்களில் ஹரிஷ் சண்முகம் 100-க்கு 100 மதிப்பெண்களும் , வைகுண்டபெருமாள் கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

    முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களை தாளாளர் எஸ்.ஆர்.அனந்தராமன் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

    நிர்வாக இயக்குனர் எஸ்.ஏ.ராஜ்குமார், மேலாண்மை இயக்குனர் எஸ்.ஏ.சுரேஷ்குமார், லெட்சுமிராமன் அறக்கட்டளை நிர்வாகிகள் தீபா ராஜ்குமார், ராஜேஸ்வரி சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி முதல்வர் இந்துமதி, துணை முதல்வர் சாந்தி மற்றும் ஆசிரிய- ஆசியர்கள் மாணவர்களை பாராட்டினர்.

    • 600-க்கு 592 மதிப்பெண்கள் பெற்று மாணவிகள் ஜனனி, தனா அருந்ததிராய் ஆகியோர் முதலிடம் பெற்றுள்ளனர்.
    • கணிதம், அறிவியலில் 33 பேர் 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    சிங்கை:

    வி.கே.புரம் அருகே அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளி அளவில் 600-க்கு 592 மதிப்பெண்கள் பெற்று மாணவிகள் ஜனனி, தனா அருந்ததிராய் ஆகியோர் முதலிடம் பெற்றுள்ளனர்.

    591 மதிப்பெண்கள் பெற்று சினேகா 2-ம் இடத்தையும், 587 மதிப்பெண்கள் பெற்று அனந்தவர்சினி 3-ம் இடத்தையும் பெற்றுள்ளனர். கணினி அறிவியலில் 3 பேரும் , உயிரியலில் 2 பேரும் , கணக்குப்பதிவியலில் 2 பேரும், கணிதம், வேதியியல், பொருளியல், வணிகவியல், வணிக கணிதம் ஆகிய பாடங்களில் தலா 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    தேர்வு எழுதிய 182 பேரில் 35 பேர் 550-க்கு மேல் மதிப்பெண்களும், 86 பேர் 500-க்கு மேல் மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வில் 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று மாணவி ஸ்ரீஹரிணி முதலிடத்தையும், ஹர்சினி 488 மதிப்பெண்களுடன் 2-ம் இடத்தையும், அப்ரின் சபானா 487 மதிப்பெண்கள் பெற்று3-ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

    தேர்வு எழுதிய 163 பேரில் 26 பேர் 450-க்கு மேல் மதிப்பெண்களும், 64 பேர் 400-க்கு மேல் மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். கணிதம், அறிவியலில் 33 பேர் 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள், பள்ளி முதல்வர் பொன்மதி, துணை முதல்வர் லெட்சுமி ஆகியோரை தாளாளர் ராபர்ட் மற்றும் பள்ளி முதன்மை முதல்வர் ஆனி மெட்டில்டா ஆகியோர் பாராட்டினர்.

    ×