search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் சேவை பாதிப்பு"

    • மும்பையில் 24-ம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
    • ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு முறை ஓடுபாதை செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம்.

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மராட்டியம், கேரளம், கர்நாடகம், கோவாவில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் 24-ம் தேதி வரை கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், மும்பையில் தொடர்ந்து பெய்த கனமழையால் சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இடைவிடாமல் பெய்த கனமழையால், விமான நிலையத்தில், ஆபரேட்டர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு முறை ஓடுபாதை செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    இதில், விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 12 விமானங்கள் உள்பட இண்டிகோவின் 24 விமானங்களும், ஏர் இந்தியாவின் எட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இதேபோல், மும்பை விமான நிலையத்தில் விஸ்தாரா தனது நான்கு விமானங்களையும் ரத்து செய்துள்ளது.

    ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஆகாசா உட்பட குறைந்தது 15 விமானங்கள் அருகிலுள்ள குறிப்பாக அகமதாபாத் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு மாலை 4 மணி வரை திருப்பி விடப்பட்டன.

    மும்பையில் 82 மிமீ மழை பெய்துள்ளது

    பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் தகவலின்படி, மும்பையில் மாலை 4 மணி வரை நகரில் 82 மிமீ மழையும், கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் 96 மிமீ மழையும், மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 90 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

    கனமழை காரணமாக மும்பை முழுவதும் விமான சேவைகள் மட்டுமின்றி சாலை மற்றும் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன.

    பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், மத்திய ரயில்வேயின் துறைமுகப் பாதையில் சில இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

    அடுத்த 18-24 மணி நேரத்தில் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • பெஸ்ட் கோர்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.
    • ஈரோட்டில் இருந்து கிளம்பிய கூட்ஸ் ஒன்றும் நிறுத்தப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஆனங்கூர் ரெயில் நிலையம் அருகே உயர் மின்னழுத்த கம்பி இன்று காலை திடீரென அறுந்து விழுந்தது.

    இதனால் இந்த வழியாக வந்த சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் பாதை வழியில் நிறுத்தப்பட்டது. இதேபோல் பெஸ்ட் கோர்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. மேலும் ஈரோட்டில் இருந்து கிளம்பிய கூட்ஸ் ஒன்றும் நிறுத்தப்பட்டது.

    இதனால் இந்த ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து ஈரோடு ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அறுந்து விழுந்த கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பணி சிறிது நேரத்தில் முடிவடைந்து வழக்கம் போல் ரெயில் சேவை தொடர்ந்து நடைபெறும் என ரெயில்வே நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • கடந்த 1 மணி நேரத்திற்கும் மேலாக ரெயிலை நிறுத்தி வைத்திருப்பதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
    • எண்ணூர் ரெயில் நிலையத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை-கும்மிடிப்பூண்டி புறநகர் ரெயில் பழுது காரணமாக எண்ணூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எண்ணூர் ரெயில் நிலையத்தில் உயர்மின் அழுத்த கோளாறு காரணமாக புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 1 மணி நேரத்திற்கும் மேலாக ரெயிலை நிறுத்தி வைத்திருப்பதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    ரெயில் சேவை பாதிப்பால் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அலுவலகம் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் பொன்னேரி ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    எண்ணூர் ரெயில் நிலையத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

    கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரெயில் சேவை பாதிப்பால் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 50 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் இங்கிலாந்து முழுவதும் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரெயில் சேவை முடங்கி போய் இருக்கிறது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் ரெயில்வே ஊழியர்கள், சம்பளத்தை உயர்த்தக்கோரி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    நாட்டில் விலைவாசி உயர்வுக்கு ஈடாக தங்களது சம்பளம் போதவில்லை என்றும் 11 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும் ஊழியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    50 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் இங்கிலாந்து முழுவதும் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரெயில் சேவை முடங்கி போய் இருக்கிறது.

    ரெயில்கள் இயக்கப்படாததால் ஆயிரக்கணக்கானோர் பஸ்கள், கார்களில் அலுவலகங்கள், மற்ற இடங்களுக்கு செல்கிறார்கள்.

    இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும் வாடகைகார்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பஸ் நிறுத்தங்களில் ஏராளமான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இதற்கிடையே போராட்டத்தை கைவிட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறும்போது, இங்கிலாந்து மக்கள் மற்றும் ரெயில் பணியாளர்களின் நலனுக்காக ஒரு விவேகமான சமரசத்துக்கு வர வேண்டிய நேரம் இது என்றார்.

    ×