என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மீன் விலை"
- விலையை பற்றி கவலைப்படாமல் மீன்பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கிச்சென்றனர்.
- கோழி இறைச்சி விலையும் ரூ.20 அதிகரித்து உள்ளது.
ராயபுரம்:
தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்கும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்வதில்லை. குறைந்த தூரத்தில் மட்டும் பைபர் படகில் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் என்பதால் காசிமேடு மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைவாகவே உள்ளது. பெரிய வகை மீன்கள் வருவதில்லை. இதனால் மீன்விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. வார இறுதி நாளான நேற்று காசிமேட்டில் மீன்விலை வழக்கத்தை விட 2 மடங்கு அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம் கிலோ ரூ.1400 வரையும், வவ்வால் மீன் ரூ. 750 வரையும் விற்கப்பட்டன. இதேபோல் சிறியவகை மீன்களின் விலையும் அதிகமாக காணப்பட்டது. பெரியவகை மீன்கள் அதிக அளவு விற்பனைக்கு வரவில்லை. எனினும் விலையை பற்றி கவலைப்படாமல் மீன்பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கிச்சென்றனர்.
கோழி இறைச்சி விலையும் ரூ.20 அதிகரித்து உள்ளது. ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த வாரத்தில் ரூ.260 விற்கப்பட்ட நிலையில் தற்போது விலை உயர்ந்து இருக்கிறது.
காசிமேடு மார்க்கெட்டில் மீன்விலை விபரம் வருமாறு:-
வஞ்சரம் - ரூ.1400
சங்கரா - ரூ.400
வவ்வால் - ரூ.750
கொடுவா - ரூ.600
நண்டு - ரூ.350
காணங்கத்தை - ரூ.200
ஷீலா - ரூ.500
இறால் - ரூ.400.
மீன்விலை உயர்வு குறித்து மீனவர்கள் கூறும்போது, மீன்பிடி தடைகாலம் அடுத்தமாதம் 14-ந்தேதி வரை அமலில் உள்ளது. இதனால் காசிமேட்டில் மீன்கள் வரத்து குறைந்து உள்ளது. இந்த காலகட்டத்தில் கேரளாவில் இருந்து அதிக அளவில் மீன்கள் வரும். தற்போது மழை எச்சரிக்கையால் அங்கும் மீன்பிடிப்பது பாதிக்கப்பட்டு உள்ளதால் மீன்கள் வரத்து பாதியாக குறைந்து விட்டது. இதனால் மீன்விலை உயர்ந்து உள்ளது. மீன்பிடி தடைகாலம் முடியும் வரை விலை உயர்வு இருக்கும் என்றார்.
- பொதுமக்கள் அசைவத்தை தவிர்த்து விரதம் இருந்து வந்தனர்.
- புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்
கடலூர்:
புரட்டாசி மாதம் பெரு மாளுக்கு உகந்த மாதம் என்பதால் பொதுமக்கள் அசைவத்தை தவிர்த்து விரதம் இருந்து வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை புரட்டாசி மாதம் முடி வடைந்து தற்போது ஐப்பசி மாதம் நடைபெற்று வரு கிறது. பலர் புரட்டாசி மாதம் முழுவதும் அசை வத்தை தவிர்த்து விரதம் இருந்து வந்த நிலையில் புரட்டாசி மாதம் தற்போது முடிவடைந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை முதல் மக்கள் குவிந்தனர்.
ஒரு மாதத்திற்கு அசைவம் சாப்பிடாமல் இருந்த நிலை யில் தற்மபோது புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். பொதுமக்கள் அதிகள வில் குவிந்தாலும் மீன்களின் விலை எப்போதும் போல் வழக்கமான விலைக்கு விற்றது. வஞ்சரம் 700 ரூபாய், சங்கரா 300 ரூபாய், கொடுவா 350 ரூபாய், இறால் 250 ரூபாய், நண்டு 400 ரூபாய் என்ற விலையில் இன்று மீன்கள் விற்பனை யானது.
- பெருமாள் கோவில்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் அலைமோதி பயபக்தியுடன் சாமி கும்பிட்டு வந்தனர்.
- தேவையான மீன் வகைகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர்.
கடலூர்:
புரட்டாசி மாதம் பெரு மாளுக்கு உகந்த மாதம் என்பதால் கடந்த 3 வாரமாக பொதுமக்கள் விரத முறையை கடைப்பிடித்தனர். நேற்று 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு கடலூர் திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் அலைமோதி பயபக்தியுடன் சாமி கும்பிட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை முடிந்த நிலையில் இன்று காலை முதல் கடலூர் துறைமுகம் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி தங்களுக்கு தேவையான மீன் மற்றும் இறைச்சிகளை வாங்கி சென்றனர்.
இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் கடந்த மூன்று வாரமாக பொது மக்கள் இல்லாமல் வெறிச் சோடி காணப்பட்டதோடு, நேற்று ஆங்காங்கே இறைச்சி கடைகள் மூடப் பட்டு இருந்தது. இன்று அதிகாலை 3 மணி முதல் வியாபாரி களும், பொதுமக்களும் ஏராளமான அளவில் அங்கு குவிந்தனர். மேலும் தங்களுக்கு தேவையான மீன் வகைகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர்.
இதில் வஞ்சரம் கிலோ 650 முதல் 700 ரூபாய்க்கும், சங்கரா மீன் 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரைக் கும், பன்னி சாத்தான் மீன் 350 ரூபாய்க்கும், பாறை மீன் 350 ரூபாய்க்கும், கனவா வகை மீன்கள் 250 ரூபாய்க்கும், நெத்திலி மீன் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல இறைச்சி கடைகளிலும் பொது மக்கள் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப் பட்டது.
- மேற்கு கடற்கரையில் தடையால் மீன் விலை மேலும் உயர வாய்ப்பு
- கடலுக்குள் ஏற்படும் சுழற்சியால் வலைகள் சிக்கிக்கொள்கின்றன
கன்னியாகுமரி:
61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிவடைந்த பிறகு கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு போதுமான மீன்கள் கிடைக்காததால்அதிர்ச்சி தான் காத்திருந்தது.
தற்போது நடுக்கடலு க்குள் ஏற்பட்ட சுழற்சி யின் காரணமாக கடலுக்குள் வீசப்படும் மீன் வலைகள் சுற்றி கயிறு போல் ஆகிவிட்டன. இதனால் பெரும்பாலான மீனவர்கள் வீசிய வலைகளில் மீன்கள் சிக்கவில்லை.
எனவே குறைந்த அளவு மீன்களுடன் அவர்கள் கரைக்கு திரும்பி வருகின்றனர். மீன் வரத்து குறைந்ததால் மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
தடை காலத்தில்ரூ.250க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சுறாமீன் தற்போதும் அதே விலையில் விற்கப்படுகிறது. இதேபோல் வஞ்சிரம் ரூ.350- க்கும், கருப்பு வாவல் ரூ.250- க்கும் , நண்டு ரூ.150- க்கும் ,ஊசி கணவாய் ரூ.200-க்கும், கொடுவா ரூ.250-க்கும், சங்கரா ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விளமீன் ரூ.250- க்கும், கொச்சாம்பாறை ரூ250- க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடலில் மீன்கள் அதிக மாக கிடைத்தபோது கன்னியாகுமரி சின்ன முட்டம் துறைமுகத்துக்கு தினமும் 5 முதல் 10 டன்கள் வரை மீன்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் தற்போதைய நிலையில் 700 கிலோ முதல் 1 டன்வரை தான் மீன்கள் வருகின்றன. இதனால் மீனவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
மேலும் கடலுக்குள் வெகு தொலைவு செல்ல வேண்டி உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். மீனவர்கள் விசைப் படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும்போது 1500 முதல் 2000 லிட்டர் டீசல், 50 ஐஸ்கட்டிகள், உணவு பொருட்கள் என ரூ.1 லட்சம் செலவாகிறது.
ஆனால் தற்போது மீன்கள் குறைவாக கிடைப்பதால் முதலுக்கே மோசமாகிவிட்ட கதை யாகிவிட்து என்று மீனவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் வருகிற ஜூலை மாதம் வரை நீடிப்பதால் மீன் விலை இன்னும் கிடுகிடு வென உயரும் என்று மீனவர் ஒருவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்