search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொய்யாப்பழம்"

    • உடலின் சீரான இயக்கத்திற்கு ரத்த ஓட்டத்தின் பங்களிப்பு இன்றியமையாதது.
    • ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது.

    உடலின் சீரான இயக்கத்திற்கு ரத்த ஓட்டத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. சுவாசத்திற்கு அவசியமான ஆக்சிஜனை கடத்துவதற்கும், ஹார்மோன்கள், சர்க்கரை, கொழுப்புகள், செல்கள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கும் பக்கபலமாக இருக்கிறது.

    சுற்றுச்சூழல் மாசுபாடு, மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கங்கள் போன்றவற்றால் உடலில் நச்சுக்கள் சேர்வது தவிர்க்கமுடியாதது. அவைகளை அப்புறப்படுத்தி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது அவசியமானது. அதற்கு ரத்த ஓட்டம் சீராக இருப்பதுடன் அதனை சுத்திகரிப்பதும் முக்கியமானது.

    நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல் போன்றவை இயற்கையாகவே ரத்தத்தை சுத்தப்படுத்தும் பணியை செய்கின்றன. எனினும் ரத்த சுத்திகரிப்பு செயல்முறையை தூண்ட உதவும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. அத்தகைய உணவு வகைகளை பார்ப்போம்.

    * உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவும் இயற்கை சுத்திகரிப்பானாக பிரக்கோலி விளங்குகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது. பிராக்கோலியை காய்கறி சாலட்டாக தயாரித்தோ, சமையலில் சேர்த்தோ சாப்பிடலாம்.

    * ஆப்பிள், பிளம்ஸ், பேரிக்காய், கொய்யாப்பழம் போன்றவை ரத்தத்தை சுத்திகரிக்கும் பழ வகைகள். இவை ரத்தத்தில் உள்ள அதிக கொழுப்புக்களைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள், கழிவுகளை நீக்கும் பணியையும் செய்கின்றன.

    * தக்காளி பழத்தில் இருக்கும் லைகோபின், குளுட்டாயோன் போன்றவையும் உடலிலுள்ள கழிவுகள், ரசாயனங்களை நீக்கும் தன்மை கொண்டவை.

    * ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி, கிரான்பெர்ரி போன்ற பெர்ரி இன பழங்களையும் சாப்பிட்டு வருவது நல்லது. அவை கல்லீரலின் ஆரோக்கியத்தைக் காக்க உதவும்.

    * கீரை வகைகள் ரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதற்கு துணை நிற்பவை. கல்லீரலில் உள்ள நொதிகளை அதிகரிக்கவும், ரத்த சுத்திகரிப்புக்கும் உதவி புரியும்.

    * பீட்ரூட் சாறு இயற்கையாகவே உடலில் நச்சுத்தன்மையற்ற நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. கல்லீரல் வீக்க பிரச்சினையில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும். ஆதலால் பீட்ரூட்டை ஜூசாகவோ, சாலட்டாகவோ, பொரியலாகவோ தயார் செய்து சாப்பிடுவது நல்லது.

    * சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்துவது நல்லது. இதில் இரும்புச் சத்து அதிகமிருக்கிறது. ஹீமோகுளோபின் அளவுகளையும், ரத்த ஓட்டத்தையும் சீராகப் பராமரிக்கவும், ரத்தத்தைத் தூய்மைப்படுத்தவும் உதவுகிறது.

    * குடிநீர், இயற்கையாகவே ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பணியை மேற்கொள்கிறது. சிறுநீரகம் மூலம் உடலில் உள்ள கழிவுகளை சிறுநீராக வெளியேற்றுகிறது. இரவு முழுவதும் செப்பு பாத்திரத்தில் நீரை ஊற்றி வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். இவ்வாறு செய்து வருவது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களையும் நீக்க உதவும்.

    * முகப்பரு, வறண்ட மற்றும் ஆரோக்கியமற்ற சருமம் போன்ற தோல் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு, ரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் காரணமாக இருக்கின்றன.

    * ரத்தத்தைச் சுத்திகரித்துத் தூய்மைப்படுத்துவதன் மூலம் தலைவலி, ஒவ்வாமை, குமட்டல் உள்பட பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.

    * சிறுநீரகம், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் நிணநீர் மண்டலம் ஆகிய அனைத்தின் செயல்பாடுகளுக்கும் ஆரோக்கியமான ரத்த செல்கள் இன்றியமையாதது. ரத்தத்தில் உள்ள அதிக எண்ணிக்கையிலான வெள்ளை அணுக்கள் விபத்தின்போது ரத்த இழப்பை குறைக்க உதவுகின்றன.

    • ராமநாதபுரம் பகுதியில் கொய்யாப்பழம் வரத்து அதிகரித்துள்ளது.
    • விலை குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ராமநாதபுரம்

    மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் தினமும் கொய்யாப்பழம் ஏலம் நடக்கிறது. ராமநாதபுரம் பழ வியாபாரிகள் பாலமேடு சென்று ஏலத்தில் கலந்து கொண்டு பழங்களை கொள்முதல் செய்கின்றனர். சராசரியாக 25 பெட்டிகள் வரை கொள்முதல் செய்து வருகின்றனர்.

    இது குறித்து ராமநாதபுரம் பழவியாபாரி கூறியதாவது:-

    ஒரு பெட்டியில் 40 கிலோ பழங்கள் இருக்கும். தினமும் 20 முதல் 25 பெட்டிகள் கொள்முதல் செய்து விற்கிறேன்.ராமநாதபுரத்தில் புது பஸ்-நிலையம், சர்ச் முன்பு, பாரதி நகர் மெயின் ரோடு, பஜார் என 4 இடங்களில் சில்லரை விற்பனை கடைகள் உள்ளது.

    ஏலம் எடுக்கப்படும் கொள்முதல் விலையைக் கணக்கில் கொண்டு சில்லரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.கடந்த வாரம் கிலோ ரூ.70 வரை விற்ற கொய்யாப்பழங்கள் தற்போது ரூ.50க்கு விற்கப்படுகிறது. தற்போது கொய்ய ப்பழ சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது.

    இனி கொய்யாப்பழம் சீசன் பிப்ரவரிக்கு பின்னர் தான் வரும். அதுவரை பழங்கள்வரத்து குறைவாகவும், விலை அதிகரித்தும் காணப்படும். 4 நாட்களாக பாலமேடு கொய்யா வரத்து அதிகரித்து, சில்லரை விலை குறைந்து உள்ளது. மக்களும் மகிழ்ச்சியாக கிலோ கணக்கில் வாங்கி செல்கின்றனர்.

    • உற்பத்தி அதிகரிப்பால் கொய்யாப்பழம் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • மொத்த விற்பனைக்கு ஒரு கிலோ கொய்யா ரூ.7 மட்டுமே விலைபோகிறது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான முடுவார்பட்டி, சரந்தாங்கி, சேந்தமங்கலம், தெத்தூர், புதுப்பட்டி, அழகாபுரி, உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 1500 ஏக்கருக்கு மேல் கொய்யா, மா, பப்பாளி உள்ளிட்ட பழ வகை மரங்கள் உள்ளன.

    சில ஆண்டுகளாக இந்த பகுதியில் அதிக அளவில் கொய்யா பயிரிடப்பட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். கொய்யா பழங்கள் சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்தாக விளங்குவதால் பொதுமக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.

    இந்த பழங்கள் மதுரை, நத்தம், திண்டுக்கல், உள்ளிட்ட பகுதிகளுக்கும், கேரளா, பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் முடுவார்பட்டி பழ கமிஷன் கடைகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் உற்பத்தி அதிகரிப்பால் தற்போது கொய்யா பழம் அதிக அளவில் விளைந்துள்ளது.

    இதன் காரணமாக கொய்யா பழத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சரந்தாங்கி முத்தையன், கொய்யா முருகன் ஆகியோர் கூறியதாவது:-

    சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பழ சந்தைக்கு கொய்யாப் பழங்கள் அதிகளவில் வருகிறது. இதனால் கொய்யா பழத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு 30 கிலோ எடை கொண்ட பெட்டி ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை விற்பனை ஆனது.

    இந்த ஆண்டு மொத்த விற்பனைக்கு ஒரு கிலோ கொய்யா ரூ.7 மட்டுமே விலைபோகிறது. 30 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டியின் விலை ரூபாய் ரூ.150 முதல் ரூ.200 வரை மட்டுமே விலை போகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். கொய்யாப்பழத்தின் உற்பத்தி அதிகமானதால் அதனை சந்தைப்படுத்த முடியாமல் தேக்கமடை வதால் குறைந்த விலைக்கு மொத்தமாக சரக்கு வாகனங்கள் மூலம் வெளி மாநிலங்களுக்கு ஜூஸ் தயாரிக்கவும், மிட்டாய் தயாரிக்கவும் அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டு விளைச்சல் குறைவு விலை அதிகம். இந்தாண்டு விளைச்சல் அதிகமாக உள்ளது ஆனால் விலை மிக குறைவு.

    இதனால் தோட்ட வேலை செய்யும் ஆட்களுக்கும், பழங்களை மரத்திலிருந்து பறிக்கும் கூலி ஆட்களுக்கும் சம்பளம் வழங்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதன் காரணமாகவே கொய்யாப்பழங்கள் மரத்தில் இருந்து பறிக்காமல் மரத்திலேயே அழுகி விடுகின்றன. பழங்களை பறித்தாலும் அவற்றை விற்பனை செய்ய முடியாமல் மாடுகளுக்கு உணவாக கொடுக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2 ஆண்டுகளில் இந்த பகுதியில் மட்டும் புதிதாக 1.50 லட்சம் கொய்யா மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நத்தம், மேலூர், வாடிப்பட்டி, உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து முடுவார்பட்டி பழ சந்தைக்கு தினந்தோறும் அதிகளவில் பழங்கள் வருவதால் இந்த பகுதியில் பழங்கள் பதப்படுத்தும் தொழிற்சாலை மற்றும் பழக்கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ×