என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொழில் நுட்பம்"
- முன்னணி நிறுவ னங்களில் பணிபுரியும் பயிற்சியா ளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
- 4.0 தர தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் " நமது தொழிற்ப யிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்" என்ற விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
இதில் தொழிற்பயிற்சி பள்ளியில் மாணவிகளின் ஆர்வத்தை தூண்டும் வகையில் முன்னணி நிறுவ னங்களில் பணிபுரியும் பயிற்சியா ளர்களை கொண்டு பயிற்சி அளிக்க ப்படுகிறது.
நவீன தொழில் நுட்பத்தில் ஆய்வகங்கள், பணிமனைகள் மற்றும் கண்காட்சி அமைக்க ப்பட்டுள்ளது.
இதனை மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கண்டுகளிக்கலாம்.
மேலும் 4.0 தர தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு பேச்சு ப்போட்டி, கவிதைபோட்டி, ஓவியப்போட்டி போன்றவை நடைபெறுகிறது.
புதிதாக சேர்ந்துள்ள மாணவிகளின் சகோதரிகள் மற்றும் பெண் உறவினர்கள் இலவசமாக பயிற்சி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- இயற்யை சீற்றம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்து கரைக்கு திரும்பி வரவைக்க முடியும்.
- தமிழ்நாட்டில் உள்ள படகுகளில் சுமார் 5 ஆயிரம் டிரான்ஸ்பாண்டர்களை நிறுவும் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.18 கோடி நிதி உதவி வழங்கி உள்ளது.
ராயபுரம்:
ஆழ்கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லும்போது அவர்களுக்கு இயற்கை சீற்றம் மற்றும் வானிலை மாற்றம் குறித்து தகவல்தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் அதிக கனமழை மற்றும் புயலின் போது மீனவர்கள் கடல் அலையின் வேகத்திற்கு ஏற்ப திசை மாறி செல்லும் நிலை ஏற்பட்டது.
இதனை தடுக்கும் வகையில் இஸ்ரோவின் தொழில் நுட்பத்துடன் அதிநவீன தொலைத்தொடர்பு டிரான்ஸ்மீட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை மீனவர்களின் படகுகளில் பொருத்தும்போது அவர்கள் கடலில் எந்த பகுதியில் உள்ளனர் என்பதை கண்டறிந்து இயற்யை சீற்றம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்து கரைக்கு திரும்பி வரவைக்க முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள படகுகளில் சுமார் 5 ஆயிரம் டிரான்ஸ்பாண்டர்களை நிறுவும் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.18 கோடி நிதி உதவி வழங்கி உள்ளது. இந்த டிரான்ஸ்பாண்டர்கள் ஜிசாட்-6 செயற்கைகோள் மூலம் தகவல் தொடர்பு அளிக்கும்.
இதனைத் தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 600 மீனவர்களின் படகுகளில் இஸ்ரோ தொழில்நுட்பத்துடன் கூடிய டிரான்ஸ்பா ண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது ஜிசாட்-6 செயற்கைகோள் வழியாக இயங்கும்.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, இஸ்ரோ இந்த தொழில்நுட்பத்தை வழங்கி உள்ளது. முதற்கட்டமாக 1,400 படகுகளில் இவை இணைக்கப்படும். சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் குளச்சல் ஆகிய இடங்களில் இதுவரை 900 டிரான்ஸ்பாண்டர்கள் படகுகளில் பொருத்தப்பட்டுள்ளன.
நாட்டிலேயே ஜிசாட்-6 மூலம் தகவல் தொடர்பு சாதனங்களைப் பெற்ற முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும். மீனவர்களுக்கு சூறாவளி எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட வேண்டும் என்றால் அதனை இந்த சாதனம் மூலம் செய்யலாம். மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகும் 28 மணி நேரம் இயங்கக்கூடிய செலவு குறைந்ததாகும் என்றார்.
- மானிய விலையில் அரசு கொடுக்கும் தோட்ட பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்.
- தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக லாபம் பெறலாம்.
முத்துப்பேட்டை;
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் தோட்டக்கலை பயிர் வீட்டு தோட்டம், மாடி தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், உதவி வேளாண்மை அலுவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இது குறித்து வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ்குமார் கூறுகையில்:-
வீட்டில் தோட்டம் வைப்பவர்கள் இயற்கையான உரங்களை பயன்படுத்துவதன் மூலம் சத்தான காய்கறிகளை பெற முடியும். தோட்டக்கலை பயிரான காய்கறிகள், கீரை வகைகள், பழ வகைகள், மருத்துவ குணம் வாய்ந்த செடிகள் போன்ற பயிர்களை பயிரிடலாம். வீட்டில் கிடைக்கும் காய்கறி கழிவுகள், முட்டை ஓடுகளையே இயற்கை உரமாக பயன்படுத்தலாம். இது தவிர ஆட்டு சாணம், சாம்பல், மாட்டு சாணம், மண்புழு உரம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
வீட்டில் தோட்டம் அமைப்பதற்கு ஜூன், ஜூலை மாதங்கள் தான் விதைகள் நட சரியான காலம். சில செடிகளை அக்டோபர் மாதத்திலும் நடலாம் புதிதாக தோட்டம் அமைப்பவர்கள், மானிய விலையில் அரசு கொடுக்கும் தோட்ட பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்.
தோட்டம் அமைப்பதற்கு பழைய குடங்கள், வாலிகள், மண் தொட்டி ஆகியவைகளை கொண்டு மண்புழு உரம், தென்னை நார் கழிவு, மணல் 2:2:1 என்ற விகிதத்தில் தொட்டிகளை நிரப்பி 2,3 விதைகள் இட்டு ஒரே வகையான செடிகளை விதைக்காமல் பல ரகங்களை கொண்டு விதைக்க வேண்டும்.
இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக லாபம் பெறலாம் என்றார். இது மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
- ஐ.சி.டி. அகாடமி வாயிலாக 1 லட்சத்திற்கும் மேலான இளைஞர்களுக்கு சூழலியலுக்கு ஏற்றவாறு வேலை வாய்ப்பு
- பயிற்சியின் வாயிலாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட படித்த- வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறுவார்கள்.
நாகர்கோவில் :
நாகர்கோவில், சுங்கான் கடை புனித சவேரியார் பொறியியல் கல்லூரியில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திறன் திட்ட பயிற்சி முகாம் தொடக்க விழா கலெக்டர்அரவிந்த் தலைமையில் நடந்தது. மேயர்மகேஷ் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் மனோ தங்கராஜ் முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டும். ஏற்றத்தாழ்வு களுக்கு இடம் கொடுக்காமலும், ஐ.சி.டி. அகாடமி வாயிலாக 1 லட்சத்திற்கும் மேலான இளைஞர்களுக்கு சூழலி யலுக்கு ஏற்றவாறு வேலை வாய்ப்பு தொடர்பான பல்வேறு திறன் திட்ட பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சியின் நோக்கமே இளைஞர்கள், இளம் பெண்களின் வாழ்வாதாரம், பொருளா தாரத்தில் முன்னேற் றம் அடைய செய்வதேயாகும்.
மேலும் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து முதலீட்டை கொண்டு வந்து, பொருளாதாரத்தை மேம்படுத்தவும் முன்னெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய சூழலில் தொழில்நுட்பம் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. மாணவ, மாணவியர்கள் அதற்கேற்றவாறு தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் வேலையானது அதிக வருவாய் தரும் வேலையாகும் .நிறுவனங்களின் திறன் தேவைக்கும் பணியாளர்களின் உண்மையான திறமைக்குமான இடை வெளியைக் குறைக்க . தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.யுடன் இணைந்து தமிழ்நாடு ஐ.சி.டி. அகாடமி, இளைஞர் வேலைவாய்ப்பு திறன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயிற்சியினை மாணவர்கள் மிகுந்த ஈடுபாட் டுடனும் , ஆர்வத்துடனும் கற்றுக்கொள்ள வேண்டும்.
பயிற்சியின் வாயிலாக கன்னியாகுமரி மாவட் டத்திற்குட்பட்ட படித்த- வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறுவார்கள். சூழ்நிலைகளை பாதிக்காத வகையில் வேலைநாடுநர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும் . பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு , தகுதியான வேலை வாய்ப்புகளைப் பெற அவர்களுக்கு வேலை வாய்ப்பு இயக்கங்கள் வசதி செய்து தரப்படும். படித்த இளைஞர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடை ய வேலை வாய்ப்பு திறன் திட்ட பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ( தேசிய நெடுஞ்சாலை ) ரேவதி, தலைமை செயல் அதிகாரி ஹரி பால சந்திரன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெரிபா, இம்மானுவேல், புனித சவேரியார் பொறியியல் கல்லூரி தாளாளர் மரிய வில்லியம், முதல்வர்மகேஸ்வரன் , பொது மேலாளர் ( ஐ.சி.டி அகாடமி) ஸ்ரீகாந்த், பூர்ண பிரகாஷ், சரவணன், ரெமோன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் மாணவர் அமைப்பு தொடக்க விழா நடைபெற்றது.
- இந்த அமைப்பின் மூலம் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சமுதாயத்தில் தொழில் நுட்பங்களின் பங்கு, ஆகியோருக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது என்றார்.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் கணிப்பொறியியல் துறை சார்பில் ''அசோசியேஷன் பார் கம்ப்யூட்டிங் மெஷினரி'' (ஏ.சி.எம்.) என்ற மாணவர் அமைப்பின் தொடக்க விழா நடந்தது.
பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம் தலைமையுரை ஆற்றினார். டீன் மாரிச்சாமி சிறப்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினராக சென்னையில் உள்ள வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் கணிப்பொறியியல் துறை பேராசிரியர் ஷேக் அப்துல்லா கலந்து கொண்டார்.
துறையின் 3-ம் ஆண்டு மாணவியும், ஏ.சி.எம். மாணவர் அமைப்பின் தலைவருமான வைஷ்ணவி வரவேற்றார். சிறப்பு விருந்தினரை 3-ம் ஆண்டு மாணவியும், ஏ.சி.எம். மாணவர் அமைப்பின் செயலாளருமான குருகீர்த்திகா அறிமுகம் செய்தார்.
கணிப்பொறியியல் துறைத்தலைவர் ராமதிலகம், பேராசிரியர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர் பேராசிரியர் ஷேக் அப்துல்லா பேசுகையில், மாணவர்களின் வெற்றிக்கு கல்விப்படிப்பு மட்டுமல்லாது பிற திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர் அமைப்பின் நன்மைகளையும், ஏ.சி.எம். மாணவர் சேப்டரின் பயன்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார். இந்த அமைப்பின் மூலமாக சர்வதேச அளவிலான மற்றும் தேசிய அளவிலான ேபராசிரியர்களின் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, நவீன தொழில் நுட்பங்கள் பற்றியும், அவற்றைக் கையாளுவது எப்படி எனவும் தெரிந்து கொள்ள கருத்தரங்குகள், போட்டிகள் ஆகியவை நடத்தப்படும்.
இந்த அமைப்பின் மூலம் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சமுதாயத்தில் தொழில் நுட்பங்களின் பங்கு, ஆகியோருக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது என்றார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், ஏ.சி.எம். சேப்டர் மற்றும் பி.எஸ்.ஆர்.இ.சி. ஏ.சி.எம். ஸ்டூடண்ட் சேப்டர் ஆகிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர். ஏ.சி.எம். மாணவர் குழு உறுப்பினரும், மாணவியுமான ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்