search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவன் கொலை"

    • கார், சைக்கிள் மீது மோதிய விபத்தில் ஆதிசேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பூவாச்சல் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி தீபா. இவர்களது மகன் ஆதிசேகர் (வயது 15). இவன் கட்டக்கடை பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

    கடந்த 30-ந்தேதி ஆதிசேகர், அந்தப்பகுதியில் சைக்கிளில் சென்றான். அப்போது அந்த வழியாக வந்த கார், சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ஆதிசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் ஆதிசேகரின் பெற்றோர், போலீசில் ஒரு புகார் கொடுத்தனர். அதில் தங்கள் மகன் விபத்தில் சாகவில்லை. அவனது சாவில் சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டு இருந்தனர். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    விபத்து நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சிறுவன் ஆதிசேகர் சென்ற சைக்கிள் மீது கார் மோதும் காட்சி பதிவாகி இருந்தது. ஆனால் அந்த கார், வேண்டும் என்றே மோதுவது போல் இருந்தது.

    இதனால் போலீசார், கார் குறித்து விசாரணை நடத்தினர். இதில் ஆதிசேகர் மீது திட்டமிட்டு காரை ஏற்றி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    சிறுவனின் உறவினரான பூவாசலை சேர்ந்த பிரியரஞ்சன் என்பவர் தான் இந்த கொலை செயலில் ஈடுபட்டுள்ளார் என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

    இதனை தொடர்ந்து போலீசார் அவரை தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியரஞ்சன், கோவில் அருகே அமர்ந்து மது அருந்தியதாகவும் கோவில் சுவற்றில் சிறுநீர் கழித்ததாகவும் அதனை பார்த்த சிறுவன் ஆதிசேகர் மற்றவர்களிடம் கூறியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த சம்பவம் நடைபெற்று இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து பிரியரஞ்சனை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவனை கொலை செய்த பின்னர் அவர் படிக்கும் பள்ளி வளாகத்தில் பிணத்தை வீசி விட்டு கண்களை எடுத்து சென்றனர்.
    • மாணவனின் பிணத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஏலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், ஏலூர் மாவட்டம், மறுமுலாவை சேர்ந்தவர் கோகுல ஸ்ரீனிவாச ரெட்டி. இவர் தன்னார்வலராக வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி ராமலட்சுமி. இவரது மகன்கள் ஹர்ஷவர்தன் ரெட்டி மற்றும் அகில்வர்தன் ரெட்டி (வயது 9).

    அலிரமூடு கூடமில் உள்ள பழங்குடியினர் நல விடுதியில் தங்கி அங்குள்ள பள்ளியில் ஹர்ஷவர்தன் ரெட்டி 6-ம் வகுப்பும், அகில்வர்தன் ரெட்டி 4-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    நேற்று முன்தினம் இரவு மாணவர்கள் அனைவரும் உணவு சாப்பிட்டுவிட்டு தங்களது அறைகளில் தூங்கினர். நள்ளிரவு மர்ம நபர்கள் அகில்வரதன் ரெட்டி அறைக்குள் புகுந்தனர். தூங்கிக் கொண்டிருந்த அவரை தூக்கிக் கொண்டு வெளியே சென்றனர்.

    பின்னர் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்தனர். அவரது 2 கண்களை கத்தியால் குத்தி பிடுங்கினர். மாணவனை கொலை செய்த பின்னர் அவர் படிக்கும் பள்ளி வளாகத்தில் பிணத்தை வீசி விட்டு கண்களை எடுத்து சென்றனர்.

    நேற்று காலை அகில்வர்தன் ரெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்ட மாணவர்கள் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சிங்கங்க ராஜூக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மோப்பநாய் கொண்டு சோதனை நடத்தினர். அது மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    மாணவனின் பிணத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஏலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவனின் கண்களை எடுக்க கொலை செய்தார்களா? அல்லது அகில்வர்தன் ரெட்டி சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தமிழக அரசு சார்பில் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தினர்
    • ஒரு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தால் ஆரணி-பாலவாக்கம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம்,ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆரணி சுப்பிரமணிய நகர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரது மகன் தமிழ்ச்செல்வன் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், இதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மதுரவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்ற மாணவன் வியாழக்கிழமை மதியம் தமிழ்ச்செல்வனை அடித்ததில் மயங்கி விழுந்தான். பின்னர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போனான்.

    இந்நிலையில், சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்து தமிழ்ச்செல்வன் உடல் சுப்பிரமணிய நகரில் உள்ள அவனது வீட்டுக்கு இன்று மாலை கொண்டு வந்து வைத்திருந்தனர். அவனது உடலுக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு அவனது குடும்பத்துக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றார். இதன் பின்னர், பொன்னேரி தொகுதி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், ஆரணி பேரூராட்சி மன்றத்துணைத் தலைவர் வழக்கறிஞர் சுகுமார் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வந்து தமிழ்ச்செல்வன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அவனது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.

    இதன்பின், புறப்பட்டு சென்ற சட்டமன்ற உறுப்பினரை தமிழ்செல்வனின் குடும்பத்தினர் மற்றும் சுப்ரமணிய நகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இறந்த மாணவனின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மாணவன் இறப்புக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இப்பள்ளியில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தால் ஆரணி-பாலவாக்கம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் உறுதி கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இப்பிரச்சனையால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.

    • ஆடுகளை ஓட்டிச் சென்ற சுரேஷ் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
    • மாணவர் எடுத்துச்சென்ற செல்போனில் ஐ.எம்.இ.ஐ எண்ணை வைத்து சோதனை செய்ததில் வேறு ஒரு வாலிபர் அந்த செல்போனை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனக்கா பள்ளி மாவட்டம் பாடால பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமு இவரது மூத்த மகன் சுரேஷ் (வயது 13). அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த வாரம் சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் அங்குள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்காக ஆடுகளை ஓட்டி சென்றார். அப்போது அவரது தந்தையின் செல்போனை எடுத்துச் சென்றார்.

    மாலை 6 மணிக்கு மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் வழக்கம் போல் வீட்டிற்கு வந்து விட்டன. ஆனால் ஆடுகளை ஓட்டிச் சென்ற சுரேஷ் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகனை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மறுநாள் வனப்பகுதியில் சுரேஷ் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். அவன் எடுத்துச் சென்ற செல்போன் காணாமல் போய் இருந்தது.

    இதுகுறித்து அனக்கா பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

    மாணவர் எடுத்துச்சென்ற செல்போனில் ஐ.எம்.இ.ஐ எண்ணை வைத்து சோதனை செய்ததில் வேறு ஒரு வாலிபர் அந்த செல்போனை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.

    தனிப்படை போலீசார் செல்போனை வைத்திருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் அனக்கா பள்ளியில் உள்ள ஒரு கடையில் செல்போன் வாங்கியதாக தெரிவித்தார். போலீசார் செல்போன் கடைக்கு சென்று விசாரித்தபோது அனக்கா பள்ளி பகுதியை சேர்ந்த வெங்கட சூரியா நாகேஸ்வரராவ் என்பவர் தனது ஆதார் அட்டை, பான் கார்டு எண்களை கொடுத்துவிட்டு செல்போனை விற்று சென்றது தெரிய வந்தது.

    நேற்று இரவு திருப்பதி பஸ் நிலையம் அருகே இருந்த வெங்கட சூரிய நாகேஸ்வரராவிடம் விசாரித்தனர். இதில் ஆடு மேய்த்து கொண்டிருந்த சுரேசை கொலை செய்துவிட்டு செல்போனை பறித்து சென்றதாக அவர் கூறினார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    • படிப்பில் ஏற்பட்ட போட்டியில் சக மாணவியின் தாய் சகாயமேரி விக்டோரியா மாணவன் பால மணிகண்டனுக்கு குளிர் பானத்தில் விஷம் கலந்து கொடுத்தார்.
    • மாணவி சகாய மேரி விக்டோரியா வீட்டில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நேரு நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். காரைக்காலில் உள்ள ரேசன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது 2-வது மகன் பாலமணிகண்டன் (13). இவர் கோட்டுச்சேரி பாரதி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்ப படித்து வந்தார். படிப்பில் ஏற்பட்ட போட்டியில் சக மாணவியின் தாய் சகாயமேரி விக்டோரியா மாணவன் பால மணிகண்டனுக்கு குளிர் பானத்தில் விஷம் கலந்து கொடுத்தார்.

    இதில் மயங்கி விழுந்த பால மணிகண்டன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து காரைக்கால் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தாய் சகாய மேரி விக்டோரியாவை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மாணவி சகாய மேரி விக்டோரியா வீட்டில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு எலி மருந்து ஏேதனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என இந்த சோதனை நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக மாணவனை சக மாணவியின் தாய் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கொலை செய்யப்பட்ட மாணவனின் குடும்பத்துக்கு உரிய நஷ்டஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரி சிகிச்சையை தரமாக்க வேண்டும் என்று கூறி உறவினர்கள் காமராஜர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

    காரைக்கால்:

    புதுவை மாநிலம் காரைக்கால் நேருநகர் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40). காரைக்காலில் உள்ள ரேசன்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி மாலதி. இவர்களது 2-வது மகன் பாலமணிகண்டன் (13). இவர் கோட்டுச்சேரி பாரதி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவன் பாலமணிகண்டன் படிப்பில் முதல் மாணவனாகவும், விளையாட்டு, கலைநிகழ்ச்சியில் ஆர்வம் உள்ள துடிப்பானவராகவும் இருந்தார்.

    தற்போது பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற உள்ளது. இதற்காக ஒத்திகை நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் ஒத்திகை நிகழ்ச்சியில் பாலமணிகண்டன் கலந்து கொண்டுவிட்டு மதியம் வீட்டுக்கு சென்றார். அப்போது தனது தாய் மாலதியிடம் பாலமணிகண்டன் எனக்கு பள்ளியில் குளிர்பானம் கொடுத்து அனுப்பியது யார் என கேட்டார். அப்போது பேசிக்கொண்டிருக்கும் போதே பாலமணிகண்டன் வாந்தி எடுத்து திடீரென மயங்கி விழுந்தார்.

    அதிர்ச்சியடைந்த தாய் மாலதி கூச்சல்போட்டார். சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். உடனடியாக மாணவன் பாலமணிகண்டனை மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலமணிகண்டன் இன்று காலை இறந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நேரடியாக பாலமணிகண்டன் படித்த பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.

    அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. பாலமணிகண்டனுடன் வகுப்பில் மாணவி அருள்மேரி என்பவர் படித்து வருகிறார். இவருக்கும் பாலமணிகண்டனுக்கும் இடையே படிப்பில் கடும் போட்டி நிலவி உள்ளது. இந்த விபரத்தை அருள்மேரி தனது தாய் சகாயமேரி விக்டோரியாவிடம் தெரிவித்தார். இவர் காரைக்கால் வேட்டைக்காரன் தெருவில் வசித்து வருகிறார்.

    மகள் தன்னிடம் தெரிவித்ததை சகாயமேரி விக்டோரியா ஆத்திரம் அடைந்தார். எனவே மாணவன் பாலமணிகண்டனை பழி தீர்க்க திட்டம்போட்டார். அதன்படி குளிர்பானத்தில் விஷம் கலந்து சகாயமேரி விக்டோரியா கலைநிகழ்ச்சி ஒத்திகை நடக்கும் பள்ளிக்கு சென்று விஷம் கலந்த குளிர்பானத்தை பள்ளி காவலாளி தேவதாஸ் என்பவரிடம் மாணவன் பாலமணிகண்டனின் அவனது பெற்றோர் கொடுத்ததாக கொடுக்குமாறு கூறி விட்டு சென்று விட்டார்.

    இந்த விஷம் கலந்த குளிர்பானத்தை மாணவன் பாலமணிகண்டன் குடித்ததால் இறந்துள்ளார். மேற்கண்டவை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து காரைக்கால் டவுன் போலீசில் மாணவனின் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்கு பதிந்து சகாயராணி விக்டோரியாவை கைது செய்தனர். இவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனை அறிந்த மாணவனின் உறவினர்கள் மற்றும் இந்து முன்னணியினர் ஒன்று திரண்டனர். அவர்கள் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். ஆத்திரம் அடைந்த அவர்கள் ஆஸ்பத்திரியை சூறையாடினர்.

    கொலை செய்யப்பட்ட மாணவனின் குடும்பத்துக்கு உரிய நஷ்டஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரி சிகிச்சையை தரமாக்க வேண்டும் என்று கூறி காமராஜர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சமரசபடுத்தினர்.

    படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக மாணவனை சக மாணவியின் தாய் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மாதவன் மற்றும் அல்லாபிச்சை, முகமது இஸ்மாயில் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய அனைவரும் மாலை நேரங்களில் ஒன்றாக விளையாடுவது வழக்கம்.
    • அல்லாபிச்சையை தேனி சிறையிலும், மற்ற 2 சிறுவர்களும் மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் கல்லறை தோட்ட தெருவை சேர்ந்த ஸ்டீபன் மகன் மாதவன்(16). ராயப்பன்பட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 தேர்வு எழுதியிருந்தார். கடந்த 18-ந்தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற மாதவன் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் 20-ந்தேதி அங்குள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

    இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். தங்களது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து மாதவனுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் சிலரிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியானது. இதில் மதுரை செல்லூரை சேர்ந்த அல்லாபிச்சை(23) மற்றும் 2 சிறுவர்கள் சேர்ந்து மாதவனை அடித்து கொன்றுவிட்டு கிணற்றில் வீசியது தெரியவந்தது.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவர்கள் அளித்த வாக்குமூலம் விபரம் வருமாறு:

    மாதவன் மற்றும் அல்லாபிச்சை, முகமது இஸ்மாயில் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய அனைவரும் மாலை நேரங்களில் ஒன்றாக விளையாடுவது வழக்கம். இந்த சிறுவர்களுக்கு மது மற்றும் கஞ்சா பழக்கம் இருந்துள்ளதால் அதனை வாங்கி வருவதற்காக மாதவனை பயன்படுத்தி வந்துள்ளனர்.

    அதன்படி 17-ந்தேதி ரூ.1500 கொடுத்து மதுபானம், கஞ்சா மற்றும் சாப்பாடு வாங்கி வருமாறு அவர்கள் மாதவனை அனுப்பி உள்ளனர். ஆனால் மாதவன் மது வாங்கி வராமல் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மறுநாள் ஆத்திரத்தில் இருந்த அவர்கள் 3 பேரும் கத்தியால் குத்தி, தாக்கி கிணற்றில் வீசி சென்றுவிட்டனர்.

    இதனையடுத்து அல்லாபிச்சையை தேனி சிறையிலும், மற்ற 2 சிறுவர்களும் மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

    ×