search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாம்பழங்கள்"

    • சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் அதிக அளவில் மாம்பழங்கள் விளைச்சல் உள்ளது.
    • சேலம் மாவட்டத்தில் மட்டும் 4 கோடிக்கும் மாம்பழங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.

     சேலம்:

    சேலம் என்றாலே அனை

    வருக்கும் நினைவுக்கு வருவது தித்திக்கும் மாம்பழங்கள் தான். அந்த வகையில் சேலத்தில் உற்பத்தியாகும் மாம்பழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    அதிக விளைச்சல்

    தமிழகத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் அதிக அளவில் மாம்பழங்கள் விளைச்சல் உள்ளது. இந்த பகுதிகளில் சேலம் பெங்களூரா, அல்போன்சா, மல்கோவா, பங்கனப்பள்ளி, செந்தூரா, நடுசாளை குண்டு, இமாம் பசந்த், நீலம் உள்பட பல வகையான மாம்பழ ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    இந்த பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் மாமரங்கள் பூக்க தொடங்கும். ஏப்ரல் முதல் வாரததில் மாங்காய் விளைச்சல் தரும். ஜுலை மாத இறுதியுடன் சீசன் முடியும் என்பதால் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. நடப்பாண் டில்மாம்பழ சீசன் நல்ல முறையில் இருந்தது. இத னால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்துள்ள தால் மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.

    இது குறித்து சேலத்தை சேர்ந்த வியாபாரிகள் கூறு கையில்,சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மா விளைச்சல் உள்ளது. சேலம் மாவட்டத்தில் வரகம்பாடி, நங்கவள்ளி, ஜலகண்டா புரம், மேச்சேரி, மேட்டூர், ஓமலூர், அயோத்தி யாப்பட்ட ணம், வலசையூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் மாமரங்கள் உள்ளன. நடப்பாண்டில் அனைத்து பகுதிகளிலும் நல்ல விளைச்சல் இருந்தது. குறிப்பாக சேலம் பெங்க ளூரா, பங்கனப்பள்ளி, மல்கோவா பழங்கள் அதிக அளவில் விளைச்சல் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் மாம்பழ சீசன் 100 நாட்கள் இருக்கும். அந்த நேரத்தில் வியாபாரிகள் மட்டுமின்றி லாரி, வேன், ஆட்டோ ஓட்டுனர்கள் சுமை தூக்குவோர், சாலையோர வியாபாரிகள் என பலருக்கும் வருமானம் கிடைக்கும்.

    4 கோடிக்கு விற்பனை

    நடப்பாண்டில் சேலத்தில் இருந்து இந்தியா வின் பல்வேறு பகுதிகளுக்கும் மாம்பழங் கள் அனுப்பி வைக்கப்பட் டன.

    இதன்மூலம் சேலம் மாவட்டத்தில் மட்டும் 4 கோடிக்கும் மாம்பழங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. தற்போது மாம்பழத்தின் கடைசி ரகமான நீலம், குதாதத் ரக மாம்பழங்கள் விற்பனைக்கு வருகிறது. இன்னும் வரு வாரத்தில் சீசன் முடியும் நிலையில் உள்ளதால் இறுதி கட்ட வியாபாரம் நடைபெறுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.   

    • நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலத்திலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மாமரங்கள் அதிகளவில் உள்ளன.
    • கடந்த 2 நாட்களாக சேலம் மார்க்கெட்டுக்கு மாம்பழம் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

    சேலம்:

    இந்தியாவில் மாம்பழம் சாகுபடியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் உள்பட பல மாநிலங்களில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன. தமிழக அளவில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் உள்பட பல பகுதிகளில் மாமரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

    இந்த ஆண்டில் மாம்பழம் விளைச்சல் சீராக இருந்தது. குறிப்பாக மே மாதம் தொடக்கத்தில் மாம்பழம் வரத்து அதிகமாக இருந்தது. தற்போது சேலம் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்து வருகிறது. இதனால் மாம்பழம் சீசன் ஓரிரு வாரத்தில் முடியும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து சேலம் கடைவீதி மாம்பழம் மொத்த வியாபாரிகள் கூறியதாவது:-

    சேலம் மாவட்டத்தில் வரகம்பாடி, அடிமலைப்புதூர், அயோத்தியாப்பட்டணம், நங்கவள்ளி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், மேச்சேரி, பேளூர், நீர்முள்ளிக்குட்டை, கூட்டாத்துப்பட்டி, ஏற்காடு அடிவாரம், தும்பல், கருமந்துறை, வாழப்பாடி, மேட்டூர், காமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலத்திலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மாமரங்கள் அதிகளவில் உள்ளன.

    இந்த பகுதிகளில் இருந்து மாம்பழம் சேலம் மார்க்கெட்டுக்கும், இதைதவிர தமிழகத்தில் பிற இடங்களுக்கும் அனுப்பப்படுகிறது. குறிப்பாக சேலத்தில் இருந்து வட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு மல்கோவா, குண்டு, சேலம் பெங்களூரா, செந்தூரா, இமாம்பசந்த், குதாத், கிளிமூக்கு மாங்காய் வரத்து கணிசமாக இருந்தது. மே 15-ந் தேதிக்கு மேல் உச்சக்கட்டமாக வரத்து 70 முதல் 80 டன்னாக இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சேலம் மார்க்கெட்டுக்கு மாம்பழம் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சேலம் மார்க்கெட்டுக்கு 30 டன் மாங்காய்தான் விற்பனைக்கு வந்தது. இன்னும் ஓரிரு வாரத்தில் மாங்காய் சீசன் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த வாரம் மாம்பழம் சீசனில் கடைசி ரகமான நீலம் வரத்து தொடங்கும். நீலம் பழம் இரு வாரத்திற்கு இருக்கும்.

    இம்மாதம் கடைசியில் சீசன் முழுமையாக முடிந்து விடும். ஜூலையில் மொத்த மார்க்கெட்டுக்கே 3 முதல் 5 டன் அளவுக்கு மட்டுமே மாம்பழம் வரத்து இருக்கும். தற்போது மாம்பழம் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.150 என விற்பனை செய்யப்படுகிறது.

    இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

    • ஐதராபாத், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாம்பழப் பிரியர்கள் 77 வகை மாம்பழங்களை வாங்கிச் சுவைக்க இங்கு வருகிறார்கள்.
    • மாம்பழ ரகங்களை கண்காட்சி மூலம் பிரபலபடுத்த திட்டமிட்டுள்ளனர்.

    திருப்பதி:

    இந்த சீசனில் எத்தனை வகையான மாம்பழங்களை சுவைத்திருக்கிறீர்கள்? எண்ணிக்கை ஒன்று அல்லது 2 அல்லது 5 என இருக்கலாம்

    பலவித ருசியான மாம்பழங்களை சுவைக்க நீங்கள் தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி நகரத்தில் உள்ள ஸ்ரீ கோண்டா லக்ஷ்மன் தெலுங்கானா மாநில தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பழ ஆராய்ச்சி நிலையத்திற்குச் செல்ல வேண்டும்.

    அங்கு சுமார் 4,000 மா மரங்கள் உள்ளன. இந்த பருவத்தில் 77 வகை மாம்பழங்கள் பழுத்து மனம் ருசிக்க ஈர்க்கிறது.

    ஐதராபாத், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாம்பழப் பிரியர்கள் 77 வகை மாம்பழங்களை வாங்கிச் சுவைக்க இங்கு வருகிறார்கள்.

    இந்த மாம்பழ ரகங்களை கண்காட்சி மூலம் பிரபலபடுத்த திட்டமிட்டுள்ளனர்.

    மேலும் ஒவ்வொரு ரகத்தின் சாகுபடி முறைகள், லாபம் மற்றும் சவால்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கி வருகின்றனர்.

    அஸாம்-உஸ்-சமர் ரக மாம்பழம் விலை உயர்ந்தது, ஒரு கிலோ ரூ.600-க்கும், ஹிமாயத் ரகம் ஒரு கிலோ ரூ.250-க்கும் விற்கப்படுகிறது

    வழக்கமான ரகங்களான பெனிஷான், பெட்டா ரசலு, தாஷேரி, கேசரி, தோதாபுரி, மல்லிகா மற்றும் செருகு ரசலு தவிர, பாம்பே பேடா, கஜூ, தில்பசந்த் மற்றும் ஆசம்-உஸ்-சமார் போன்ற அரிய வகை ரகங்கள் கண்காட்சிகளில் வைத்து வருகின்றனர்.

    • அறந்தாங்கி பகுதியில் ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைத்த 250 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யபட்டன
    • சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    அறந்தாங்கி நகராட்சி பகுதியில் உள்ள பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைத்து விற்கப்பட்ட 250 கிலோ மாம்பழங்கள் மற்றும் இதர பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பேராவூரணி சாலையில் ஒதுக்குப்புறத்தில் கொட்டி அழிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் ரசாயனம் கலந்த பழங்களை விற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    • 2 மாம்பழ குடோன்களில் வேதிப்பொருட்கள் வைத்து பழங்கள் பழுக்க வைக்கப்ப ட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
    • மாநகராட்சி மூலம் உரக்கிடங்கிற்கு உரம் தயாரிப்பிற்க்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூரில் பல்வேறு இடங்களில் வேதிப்பொருட்கள் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவி, பாலமுருகன், தங்கவேல், கேசவராஜ், கோடீஸ்வரன், சிரஞ்சீவி, ரகுநாதன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நான்கு குழுக்களாக பிரிந்து திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கே. எஸ் .சி. ஸ்கூல் ரோடு, தினசரி மார்க்கெட், அதியமான் வீதி, நொய்யல் வீதி மற்றும் வெள்ளியங்காடு ஆகிய இடங்களில் உள்ள மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்கள் மற்றும் வாழைப்பழ குடோன்களில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின்போது 2 மாம்பழ குடோன்களில் வேதிப்பொருட்கள் வைத்து பழங்கள் பழுக்க வைக்கப்ப ட்டிருப்பதை கண்டு பிடித்தனர். அங்கு இருந்து சுமார் 3.50 டன் அளவிலான வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் மாநகராட்சி மூலம் உரக்கிடங்கிற்கு உரம் தயாரிப்பிற்க்காக அனுப்பி வைக்கப்பட்டது. மாம்பழங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2.50லட்சம் ஆகும். இது தொடர்பாக 5 மொத்த விற்பனை நிலையங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் ஒருமுறை பயன்படுத்தும் பாலித்தீன் பைகள் வைத்தி ருந்த கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    இது தொடர்பாக நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை கூறிய தாவது:-

    பழங்களை இயற்கையான முறையில் மட்டுமே பழுக்க வைக்க வேண்டும் .எத்திலின் ரசாயனத்தை பழங்களின் மேல் நேரடியாக படும்படி யாக பழுக்க வைப்பதற்கு அனுமதி கிடையாது. சரியான முறைகளை பயன்படுத்தி மட்டுமே பழங்களை பழுக்க வைக்க வேண்டும். கால்சியம் கார்பைடு ,அசிட்டலின் போன்ற ரசா யனங்களை வைத்து பழங்களை செயற்கையான முறையில் பழுக்க வைக்க கூடாது. இவ்வாறு செய ற்கையான முறையில் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை சாப்பிடும் போது உடல் உபாதைகள் ஏற்படும்.

    குறிப்பாக செயற்கையான முறையில் பழுக்க வைக்க ப்பட்ட மாம்பழம் சாப்பி ட்டால் தோல் அலர்ஜி ,வயிற்று வலி ,வயிற்று ப்போக்கு, வாந்தி ஏற்படும். ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்ப ழங்களின் தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் .உட்பகுதி காயாக இருக்கும் .பழச்சாறு அளவு குறைவாக இருக்கும். பழத்தின் இயற்கையான மனம் குறைவாக இருக்கும். சுவை குறைவாக இருக்கும். மாம்பழ விற்பனை உரிமை யாளர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்றார்.

    • கடந்த வாரத்தில் 100 டன் அளவுக்கு மாம்பழங்கள் வரத்து இருந்தது. இப்போது 250 டன்னாக வரத்து அதிகரித்து உள்ளது.
    • மார்கெட்டில் அதிக அளவு மாம்பழங்கள் குவிந்து வருவதால் ஏராளமான சில்லறை வியாபாரிகள் புதிதாக மாம்பழ விற்பனையை தொடங்கி உள்ளனர்.

    போரூர்:

    மாம்பழம் சீசன் தற்போது தொடங்கி உள்ளது. கோயம்பேடு பழ மார்கெட்டுக்கு திருவள்ளூர், திருச்சி, சேலம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் மாம்பழங்கள் விற்பனைக்கு வருகிறது.

    கடந்த வாரத்தில் 100 டன் அளவுக்கு மாம்பழங்கள் வரத்து இருந்தது. இப்போது 250 டன்னாக வரத்து அதிகரித்து உள்ளது.

    அதிக சுவை உள்ள இமாம்பசந்த், பங்கனப் பள்ளி, ஜவாரி, மல்கோவா, செந்தூரா, அல்போன்சா உள்ளிட்ட மாம்பழங்கள் விற்பனைக்கு அதிக அளவில் குவிந்து வருகின்றன.

    மொத்த விற்பனை கடைகளில் இமாம்பசந்த் ஒரு கிலோ ரூ.130-க்கும், பங்கனப்பள்ளி ரூ.60, மல்கோவா ரூ.120, செந்தூரா-ரூ.50, ஜவாரி ரூ.80, அல்போன்சா-ரூ.120-க்கும் விற்கப்பட்டு வருகிறது.

    மார்கெட்டில் அதிக அளவு மாம்பழங்கள் குவிந்து வருவதால் ஏராளமான சில்லறை வியாபாரிகள் புதிதாக மாம்பழ விற்பனையை தொடங்கி உள்ளனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலை யோரங்களில் தற்போது புதிதாக பழக்கடைகள், தள்ளு வண்டிகளில் வியாபாரிகள் மாம்பழங்களை அதிகளவில் குவித்து வைத்து விற்பனை செய்து வருவதை காண முடிகிறது.

    இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மாம்பழம் மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்புவரை தினசரி 150டன் அளவுக்கு வந்து கொண்டிருந்த மாம்பழங்களின் வரத்து தற்போது 2 மடங்காக அதிகரித்து உள்ளது. கோடை மழை, காற்று உள்ளிட்ட பருவ நிலை மாற்றம் காரணமாக தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த மாம்பழங்கள் அதிகளவில் சேதமடைந்து வீணாகி விட்டது.

    இதனால் கடந்த ஆண்டைவிட இப்போது மாம்பழங்களின் உற்பத்தி குறைவாகவே உள்ளது. கடந்த சில நாட்களாக மந்தமாக இருந்து வந்த மாம்பழம் விற்பனை தற்போது சூடு பிடித்து உள்ளது.

    இனி வரும் நாட்களில் மாம்பழம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கோயம்பேடு மார்கெட்டில் சிலர் ரசாயனம் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்து வருவதால் மக்களிடையே தவறான தகவல் பரவி வருகிறது. இதனால் விற்பனை பாதிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாம்பழங்கள் சேலத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் பல ஆண்டுகளாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
    • வெளியூர் வியாபாரிகள் பல்வேறு ரக மாம்பழங்களை ஆன்லைனில் புக்கிங் செய்து வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது சேலத்து மாம்பழங்கள் தான். அத்தகைய மாம்பழங்கள் சேலத்தில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் பல ஆண்டுகளாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, ஆத்தூர், குப்பனூர், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், சங்ககிரி , மேட்டூர், எடப்பாடி, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மா மரங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் ,மே மாதங்களில் மாம்பழ சீசன் களை கட்டும்.

    சேலம் மாவட்டத்தில் மாம்பழம் சீசன் வழக்கமாக 60 நாட்களுக்கு மேலாக களை கட்டும். அப்போது சேலம் மார்க்கெட்டுகள், கடைவீதிகள் மற்றும் முக்கிய சாலைகள், தள்ளுவண்டிகளில் தெருவோர வியாபாரிகள் மாம்பழங்களை குவித்து வைத்து வியாபாரம் செய்வார்கள். இதனால் எங்கும் சேலம் மாம்பழத்தின் மனம் வீசும்.

    தற்போது மாம்பழம் சீசன் தொடங்கி உள்ளதால் சேலம் உழவர் சந்தைகளுக்கும் மற்றும் பழ மண்டிகளுக்கும், சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் தினமும் அதிக அளவில் மாம்பழங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் மாம்பழம் லோடு வருகிறது.

    தற்போது மாம்பழம் வரத்து தொடங்கியுள்ள நிலையில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் மாம்பழங்கள் வரத்து சற்று அதிகரித்து இருக்கிறது.

    சேலம் மார்க்கெட்டுகளுக்கு தற்போது கிளி மூக்கு, பங்கனப் பள்ளி, சேலம் பெங்களூரா, சேலம் குண்டு, இமாம் பசந்த், ஆகிய மாம்பழங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    சேலம் ஏற்காடு ரோடு , அஸ்தம்பட்டி , செவ்வாய்ப்பேட்டை, கடை வீதி, பழைய பஸ் நிலைய கடை வீதி, புதிய பஸ் நிலையம் மற்றும் 5 ரோடு, ஜங்ஷன், அம்மாபேட்டை ,கொண்டலாம்பட்டி என பெரும்பாலான பகுதிகளில் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் ஆன்லைன் மூலம் வியாபாரமும் தொடங்கியுள்ளது. வெளியூர் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் ஆன்லைனில் புக்கிங் செய்து சேலம் மாம்பழத்தை வாங்கி ருசித்து வருகிறார்கள். இந்த வியாபாரம் இனி வரும் நாட்களில் மேலும் சூடுபிடிக்கும்.

    இந்த மாம்பழங்கள் தற்போது கிலோ ரூ.50 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கிளி மூக்கு மாங்காய் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்படுகிறது.

    சேலம் மார்க்கெட்டுகளுக்கு தற்போது நாள் ஒன்றுக்கு கிளிமூக்கு மாங்காய்கள் 5 டன் வரையும், மற்ற ரக மாம்பழங்கள் 3 டன் அளவுக்கு வந்து கொண்டிருக்கிறது. இனிவரும் நாட்களில் 25 டன்னுக்கும் அதிகமாக மாம்பழங்கள் வர வாய்ப்புள்ளது. அப்போது மாம்பழங்களின் விலையும் பாதியாக குறைய வாய்ப்புள்ளது.

    அடுத்த மாதம் தொடக்கத்தில் அதிக சுவை கொண்ட பிரசித்தி பெற்ற மல்கோவா மாம்பழங்கள் அறுவடை செய்யப்பட்டு சேலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு மற்றும் பருவம் மாறிய மழையால் வரத்து குறைவால் வியாபாரிகள் பாதிப்படைந்த நிலையில் தற்போது மாம்பழ வரத்து அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் மகிழ்ச்சியான நிலையில் வியாபாரம் இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து சேலத்தைச் சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர் கூறியதாவது- கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது . கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொடங்கிய மாம்பழ சீசன் தற்போது படிப்படியாக வரத்து அதிகரித்து வருகிறது.

    மார்க்கெட்டுகளுக்கு வந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள்.

    அதேபோல தற்போது வெளியூர் வியாபாரிகள் பல்வேறு ரக மாம்பழங்களை ஆன்லைனில் புக்கிங் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு அனுப்பி வைத்து வருகிறோம். இன்னும் 15 நாட்களில் மாம்பழம் வரத்து உச்சம் பெறும். தொடர்ந்து 2 மாதங்களுக்கு மாம்பழம் விற்பனை அதிக அளவில் இருக்கும். தற்போது விலை சற்று அதிகமாக இருந்தாலும் இனி வரும் நாட்களில் விலை குறையும் .இதனால் மாம்பழ விற்பனையும் சூடு பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாம்பழங்கள் இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • கடந்த மே மாதத்தில் மாங்காய் வரத்து உச்சம் பெற்ற நிலையில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு தினமும் 80 டன் வரை மாங்காய்கள் வந்தது.

    சேலம்:

    இந்தியாவில் மாம்பழ உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. அதில் குறிப்பாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விளையும் மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு.

    சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டனம், வரகம்பாடி, அடிமலைபுதூர், ஆத்தூர், வாழப்பாடி, நங்கவள்ளி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், மேச்சேரி, பேளூர், நீர்முள்ளிக்குட்டை, கூட்டாத்துபட்டி, தும்பல், கருமந்துறை, மேட்டூர், காமலாபுரம், வனவாசி, எடப்பாடி, சங்ககிரி மற்றும் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சேலம்-பெங்களூரா, மல்கோவா, அல்போன்சா, இமாம்பசந்த், பங்கனப்பள்ளி, நடுசாலை, செந்தூரா உள்பட பல்வேறு ரக மாம்பழங்கள் அதிக அளவில் விளைகின்றன.

    இந்த மாம்பழங்கள் இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாம்பழ சீசன் தொடங்கிய நிலையில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழ வரத்து படிப்படியாக அதிகரித்தது.

    கடந்த மே மாதத்தில் மாங்காய் வரத்து உச்சம் பெற்ற நிலையில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு தினமும் 80 டன் வரை மாங்காய்கள் வந்தது. அப்போது மல்கோவா, குண்டு, சேலம்-பெங்களூரா, சேந்தூரா, குதாதத், கிளிமூக்கு உள்பட மாம்பழங்கள் வரத்து அதிகரித்தது. இதனால் மாம்பழங்கள் ஒரு கிலோ 50 முதல் 150 வரை விற்கப்பட்டது . இதனால் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    இந்த நிலையில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழங்கள் வரத்து குறைந்துள்ளது. தற்போது ஒரு நாளைக்கு 10 டன் அளவுக்கே மாம்பழங்கள் வரத்து உள்ளது. இதனால் கடைகளில் மாம்பழங்கள் இருப்பு குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் மாம்பழங்கள் வரத்து மேலும் குறையும் என்றும் ஒரு மாதத்தில் முற்றிலும் மாம்பழங்கள் வரத்து நின்று விடும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×