என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "3 பேர் மீது வழக்கு"
- லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ராம்பிரபு மற்றும் போலீசார் அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் வினோத்குமார் (வயது 31), நசியனூர் வேலுச்சாமி மனைவி வாணிஸ்வரி (37), வீரப்பன்சத்திரம் வெள்ளியங்கிரி மகன் கணேஷ் (23) ஆகியோ மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர்களிடமிருந்து ரூ.6 ஆயிரத்து 400 மற்றும் மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- 16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை, பவானி, கோபி பகுதிகளில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுண், கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு அரசு அனுமதியின்றி மது விற்றுக்கொண்டிருந்த சென்னிமலை கே.ஜி.வலசை சேர்ந்த தங்கவேல் (வயது 60), பவானி வரதநல்லூரை சேர்ந்த மாதேஸ்வரன் (53), கோபி மல்லிபாளையத்தை சேர்ந்த காந்தி வேல் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடமிருந்த 16 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் அரைகுறை ஆடையுடன் பெண்கள் நடனம் ஆடினர்.
- 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி கிராமத்தில் கடந்த 5-ந் தேதி செல்லியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
இதையடுத்து அன்று மாலை நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் அரைகுறை ஆடையுடன் பெண்கள் நடனம் ஆடினர்.
இதுகுறித்து பேளாரஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் துரைராஜ் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பேளாரஅள்ளியை சேர்ந்த முனியப்பன் (வயது 60), பெரியாம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (28), சித்திரப்பட்டியை சேர்ந்த செல்வம் (30) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அந்த தெருவைச் சேர்ந்த பேர் சாக்கடை வசதி ஏற்படுத்தி கொடுங்கள் அதன்பிறகு சாலை போடுங்கள் என கூறி வாக்குவாதம் செய்தனர்.
- பின்னர் தகாத வார்த்தையால் திட்டி, தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர்
கொடைரோடு:
கொடைரோடு அடுத்த பொம்மணம்ப ட்டியைச் சேர்ந்த முனியப்பன் மனைவி சத்யா (வயது 40). இவர் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் 6-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். பொம்மணம்பட்டியில் உள்ள ஒரு தெருவில் சாலை அமைக்க சர்வே பணிகள் நடைபெற்றது. அங்கு கவுன்சிலர் சத்யா பார்வையிட்ட சென்றார்.
அப்போது சத்யாவிடம் அந்த தெருவைச் சேர்ந்த சரவணன், பாண்டிராஜ், பாண்டிராஜ் மனைவி சண்முகவடிவு ஆகியோர் சாக்கடை வசதி ஏற்படுத்தி கொடுங்கள் அதன்பிறகு சாலை போடுங்கள் என கூறி வாக்குவாதம் செய்தனர். பின்னர் தகாத வார்த்தையால் திட்டி, தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயம் அடைந்த சத்யா நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் அம்மையநாயக்கனூரில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமணத்தி ன்போது கொடுத்த 15 பவுன் நகையை மனைவிக்கு தெரியாமல் செலவழித்து விட்டார்.
- 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி பழனிசெட்டி பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது50). இவருக்கும் கோடாங்கிபட்டியை சேர்ந்த ஜெயலட்சுமி (33) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இது 2-ம் திருமணம் ஆகும்.
செந்தில்குமார் கோவையில் உள்ள நகை பட்டறையில் வேலை பார்த்து வந்ததால் அங்கு குடி பெயர்ந்தனர். அதன்பின்னர் திருமணத்தி ன்போது கொடுத்த 15 பவுன் நகையை ஜெயலட்சுமிக்கு தெரியாமல் செலவழித்து விட்டார்.மேலும் ரூ.2 லட்சம் பணம் கொடுத்துள்ளனர்.
இது குறித்து தட்டிக்கேட்டதால் செந்தில்குமார் மற்றும் அவரது தந்தை அப்பாவிமணி, தாய் ராஜம்மாள் ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
மேலும் அவருக்கு பிறந்த 2 குழந்தைகளையும் பார்க்க விடாமல் ஜெயலட்சுமியை வீட்டை விட்டு துரத்தி விட்டனர். இது குறித்து தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- செல்வம் இவருடைய மனைவி சின்னபொண்ணு (வயது 50). இவர் கடந்த சில வருடங்களாக கணவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
- தனது கணவர் மற்றும் மகனிடம் தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை பிரித்து கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகி லுள்ள கருக்கல்வாடி கிராமம், குலுமிகாடு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி சின்னபொண்ணு (வயது 50). இவர் கடந்த சில வருடங்களாக கணவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அவர், தனது கணவர் மற்றும் மகனிடம் தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை பிரித்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கணவன் செல்வம், மகன் ராஜா, மருமகள் கோகிலா ஆகியோர் சின்னபொண்ணுவை அடித்து உதைத்ததாக தெரிகிறது.இதுபற்றி சின்னப்பொண்ணு கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- திருமணமண்டபம் உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதியபட்டது
- விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
திருச்சி செப் 13-
திருச்சி துறையூர் பெரிய சிட்டி தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது40). நேற்று முன்தினம் பெரிய செட்டி தெரு பகுதிக்கு எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற காதுகுத்து திருவிழா கொண்டாட்டத்தின் போது வெடி வைத்துள்ளனர்.
இதில் திருமண மண்டபத்திற்கு அருகே உள்ள வினோத்குமாரின் மகன் ரோகன் வைபவ் (வயது11) காயமடைந்தார். இதையடுத்து ரோகன் திருச்சி அரசு மருத்து வமனையில் அ னுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் தனியார் திருமண மண்டப உரிமையாளர் மற்றும் காது குத்து திருவிழா நடத்திய நபர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதே போல் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கீழக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (வயது49). இவர் நேற்று திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரது கடவு சீட்டை சோதனை செய்த இமிகிரேஷன் அதிகாரிகள் அதில் காணாமல் போன நான்கு பக்கங்கள் குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அவரை திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்ததால் விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கார்த்திகேயன் கவிதாவிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததால் கவிதா தனது பெற்றோர் வீட்டில் தற்போது வசித்து வருகிறார்.
- அப்போது கார்த்திகேயன், அவரது தாயார் மாதம்மாள், சகோதரி ரம்யா ஆகியோர் தகராறு செய்து கவிதாவை தாக்கினர்.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் ஓந்தா பிள்ளைகாடு காளியம்மன் கோவில் 1-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). இவரது மனைவி கவிதா (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கார்த்திகேயன் கவிதாவிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததால் கவிதா தனது பெற்றோர் வீட்டில் தற்போது வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கார்த்திகேயன் கவிதாவிற்கு கடந்த 26-ந் தேதி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிஉள்ளார்.இதனைக்கண்ட கவிதா கணவரை சமாதானம் செய்ய அவரது வீட்டிற்கு தனது குழந்தைகளுடன் வந்துள்ளார்.அப்போது கார்த்திகேயன், அவரது தாயார் மாதம்மாள், சகோதரி ரம்யா ஆகியோர் தகராறு செய்து கவிதாவை தாக்கினர். இதனால் தலையில் காயம் அடைந்த கவிதா சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தாங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அதில் நீங்கள் பணத்தை முதலீடு செய்தால் மூன்று மாதத்தில் வாங்கிய தொகையை திருப்பித் தருவதோடு, மூன்றில் ஒரு பங்கு லாபமும் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
- அது மட்டுமல்லாமல் அவரது உறவினர்கள் நண்பர்கள் வாயிலாக பல்வேறு கட்டங்களில் மொத்தம் ரூ.1 கோடியே 77 லட்சம் பணத்தை கொடுத்ததாக கூறப்பட்டது.
திருச்சி :
திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் மரியம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் (வயது 32 ). இவர் அந்தப் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நகை, நிலம் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் பணம் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் சேலம் அயோத்தியாபட்டணம் வித்யா மந்திர் பள்ளி பின்புறம் உள்ள பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தாமசின் நிதி நிறுவனத்தில் கடந்த 2020 முதல் பணம் கடனாக பெற்று அதனை திருப்பி செலுத்தி வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரவணன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி ஆகிய இருவரும் தாமசை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் தாங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அதில் நீங்கள் பணத்தை முதலீடு செய்தால் மூன்று மாதத்தில் வாங்கிய தொகையை திருப்பித் தருவதோடு, மூன்றில் ஒரு பங்கு லாபமும் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதை நம்பிய தாமஸ் தனது நிதி நிறுவனத்தில் இருந்த ரூ.44 லட்சம் பணத்தை முதல் கட்டமாக சரவணன், வெள்ளைச்சாமி ஆகியோரிடம் வழங்கினார். அது மட்டுமல்லாமல் அவரது உறவினர்கள் நண்பர்கள் வாயிலாக பல்வேறு கட்டங்களில் மொத்தம் ரூ.1 கோடியே 77 லட்சம் பணத்தை கொடுத்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர்கள் சொன்னபடி பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. லாபத்திலும் பங்கு தரவில்லை.
இதையடுத்து தாமஸ் சேலம் அயோத்தியாபட்டணத்தில் உள்ள சரவணன் வீட்டுக்குச் சென்று வாங்கிய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார். அப்போது சரவணன் அவரது மனைவி ஷோபனா, வெள்ளைச்சாமி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து பணத்தை திருப்பித் தர மறுத்ததோடு மிரட்டலும் விடுத்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட தாமஸ் திருச்சி ஒன்றாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் புகார் மனு அளித்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் மேற்கண்ட 3 பேர் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். நிதி நிறுவன அதிபரிடமே ரூ.1 கோடியே 77 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பணம்,செல்போன்,ஏ.டி.எம்.கார்டு முதலியவற்றை பறித்துக்கொண்டு தப்பி விட்டனர்.
- குருபரப்பள்ளி போலீசார் மர்ம நபர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி போலீஸ் சரகம் குந்தாரப்பள்ளி என்ற இடத்தருகே தனியார் நிறுவன லாரியை உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 36) என்பவர் ஒட்டி சென்றார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்து லாரியை மறித்த 3 மர்மநபர்கள் தினேஷ்குமாரை கீழே இறக்கி அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர் வைத்திருந்த ரூ.7 ஆயிரம் பணம்,செல்போன்,ஏ.டி.எம்.கார்டு முதலியவற்றை பறித்துக்கொண்டு தப்பி விட்டனர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த தினேஷ்குமார் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் மர்ம நபர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- கடலூர் அருகே ஷேர் ஆட்டோ கண்ணாடி உடைத்ததால் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- மருத்துவமனையில் இருந்த ஜானகிராமனிடம் வீண் தகராறு செய்து தாக்கினார்கள்.
கடலூர்:
கடலூர் அருகே தோட்டப்பட்டு பகுதியில் தனியார் மருத்துவமனையில் கோண்டூர் சேர்ந்த ஜானகிராமன் இரவு காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் 3 பேர் கொண்ட கும்பல் திடீரென்று மருத்துவமனையில் இருந்த ஜானகிராமனிடம் வீண் தகராறு செய்து தாக்கினார்கள். பின்னர் அங்கு இருந்த ஷேர் ஆட்டோ கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி தப்பி ஓடினர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் ஜெயக்குமார், உதயா, அஜித் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன்விரோதம் காரணமாக இளம்பெண்ணை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.
- பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
வருசநாடு:
கடமலைக்குண்டு அருகில் உள்ள பொன்ன ம்மாள்பட்டியை சேர்ந்த சேகர் மனைவி முருகேஸ்வரி (வயது 24). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருப்பு ச்சாமி குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று துரை ச்சாமி புரத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் முருகேஸ்வரி இருந்தார். அங்கு வந்த கருப்புச்சாமி, விஸ்வா, சித்திரைவேல் ஆகிய 3 பேரும் சேர்ந்து முருகே ஸ்வரியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்த னர்.
படுகாயமடைந்த முருகேஸ்வரி ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்