என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்சி நிதி நிறுவன அதிபரிடம் ரூ. 1கோடியே 77 லட்சம் மோசடி -கணவன் , மனைவி உட்பட 3 பேர் மீது வழக்கு
- தாங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அதில் நீங்கள் பணத்தை முதலீடு செய்தால் மூன்று மாதத்தில் வாங்கிய தொகையை திருப்பித் தருவதோடு, மூன்றில் ஒரு பங்கு லாபமும் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
- அது மட்டுமல்லாமல் அவரது உறவினர்கள் நண்பர்கள் வாயிலாக பல்வேறு கட்டங்களில் மொத்தம் ரூ.1 கோடியே 77 லட்சம் பணத்தை கொடுத்ததாக கூறப்பட்டது.
திருச்சி :
திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் மரியம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் (வயது 32 ). இவர் அந்தப் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நகை, நிலம் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் பணம் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் சேலம் அயோத்தியாபட்டணம் வித்யா மந்திர் பள்ளி பின்புறம் உள்ள பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தாமசின் நிதி நிறுவனத்தில் கடந்த 2020 முதல் பணம் கடனாக பெற்று அதனை திருப்பி செலுத்தி வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரவணன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி ஆகிய இருவரும் தாமசை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் தாங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அதில் நீங்கள் பணத்தை முதலீடு செய்தால் மூன்று மாதத்தில் வாங்கிய தொகையை திருப்பித் தருவதோடு, மூன்றில் ஒரு பங்கு லாபமும் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதை நம்பிய தாமஸ் தனது நிதி நிறுவனத்தில் இருந்த ரூ.44 லட்சம் பணத்தை முதல் கட்டமாக சரவணன், வெள்ளைச்சாமி ஆகியோரிடம் வழங்கினார். அது மட்டுமல்லாமல் அவரது உறவினர்கள் நண்பர்கள் வாயிலாக பல்வேறு கட்டங்களில் மொத்தம் ரூ.1 கோடியே 77 லட்சம் பணத்தை கொடுத்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர்கள் சொன்னபடி பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. லாபத்திலும் பங்கு தரவில்லை.
இதையடுத்து தாமஸ் சேலம் அயோத்தியாபட்டணத்தில் உள்ள சரவணன் வீட்டுக்குச் சென்று வாங்கிய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார். அப்போது சரவணன் அவரது மனைவி ஷோபனா, வெள்ளைச்சாமி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து பணத்தை திருப்பித் தர மறுத்ததோடு மிரட்டலும் விடுத்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட தாமஸ் திருச்சி ஒன்றாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் புகார் மனு அளித்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் மேற்கண்ட 3 பேர் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். நிதி நிறுவன அதிபரிடமே ரூ.1 கோடியே 77 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்