என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆற்றங்கரை"

    • வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பக்தி, கற்பூரம் காட்டி தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர்.
    • காவிரியாற்றின் கரையில் திருச்சியில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது.

    ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால்தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையட்டியே ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் விளைந்தது.

    மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கை கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோவில்களுக்கு சென்று வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன்மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர்.

    வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பக்தி, கற்பூரம் காட்டி தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர்வளம் பெருகியதுபோல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள். அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பலவிதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர்சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கரையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.

    காவிரியாற்றின் கரையில் திருச்சியில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது. ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.

    நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அரப்பளிசுவரரை தொழுவது வழக்கம். ஆடிப்பெருக்கு நாளில் தமிழக அரசு போக்குவரதது கழகத்தினர் நாமக்கல், சேலம் மற்றும் ராசிபுரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம்.

    பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் மட்டுமாவது அணைகளை திறந்து விட்டு நீர்பெருக்கெடுத்து ஒடச் செய்கின்றனர்.

    • உலகின் பெரும்பாலான நாடுகளில் விநாயகர் வழிபாடு இன்றும் உள்ளது.
    • விநாயகரின் உருவ அமைப்பு மற்ற கடவுள்களிடம் இருந்து வித்தியாசப்படுகிறது.

    இந்து மதத்தில் எத்தனையோ கடவுள்கள் உள்ள போதிலும் எல்லாரது மனதிலும் `பளிச்' என்று நிற்கும் சிறப்புக்குரியவர், விநாயகர். மற்ற இந்து கடவுள்களுக்கும் இவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

    பொதுவாக கடவுள்களிடம் மக்கள் மிகுந்த பயபக்தியுடன் இருப்பார்கள். ஆனால் விநாயகரை மட்டும் பக்தர்கள் மிகுந்த செல்லமாகவும், பாசமாகவும் அணுகுவார்கள்.

    விநாயகரின் உருவ அமைப்பும் மற்ற கடவுள்களிடம் இருந்து வித்தியாசப்படுகிறது. சூறைத் தேங்காய் உடைப்பது, தோப்புக் கரணம் போடுவது, தலையில் குட்டிக் கொள்வது என்று விநாயகருக்கான வழிபாடுகளும் முற்றிலும் மாறுபட்டவை.

    உலகின் பெரும்பாலான நாடுகளில் விநாயகர் வழிபாடு இன்றும் உள்ளது. எந்த மதத்தின் கடவுளும், விநாயகர் அளவுக்கு உலகம் முழுவதும் பரவி வியாபித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆராய்ச்சியாளர்களுக்கே இது விடை கண்டுபிடிக்க முடியாத ஒன்றாக உள்ளது.

    இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களிலும் விநாயகர் வழிபாடு அதிக அளவில் உள்ளது. அதுவும் தமிழ்நாடு, புதுச்சேரியில் விநாயகர் நீக்கமற முழுமையாக நிறைந்துள்ளார்.

    தமிழ்நாடு, புதுச்சேரியில் விநாயகர் சிலை இல்லாத ஊரே இல்லை என்று சொல்லலாம். தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் விநாயருக்குத்தான் அதிக தனி ஆலயங்கள் இருப்பதாக ஒரு கருத்துக்கணிப்பு சொல்கிறது.

    தமிழக, புதுச்சேரி மக்கள் விநாயகருடன் இரண்டற கலந்து விட்டதையே இது காட்டுகிறது. தமிழர்கள் அளவுக்கு விநாயகருக்கு விதம், விதமாக பெயர் சூட்டியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

    சந்தி பிள்ளையார், வேடிக்கை விநாயகர், தையல் விநாயகர், கிரிக்கெட் விநாயகர், கள்ள விநாயகர், மாடி விநாயகர், மருந்து விநாயகர்.... என்று என்ன பெயர் மனதில் தோன்றுகிறதோ, அதை விநாயகருக்கு சூட்டி விடுவார்கள். அது போல அந்தந்த சீசனுக்கு ஏற்பவும் விநாயகருக்கு பெயர் சூட்டப்படுவதுண்டு.

    அது போல இந்த இடம் என்று இல்லாமல், எந்த இடத்தில் வேண்டுமானாலும் விநாயகரை பிரதிஷ்டை செய்து விடுகிறார்கள். அரச மரம், ஆற்றங்கரை, முச்சந்திகளில் நிச்சயம் விநாயகர் இருப்பார்.

    விநாயகரின் கருணை உள்ளம் எல்லாரையும் கவர்ந்து இழுத்து விடும். பக்தர்களின் குறைகளை தவறாமல் தீர்த்து வைக்கிறார்.

    அவரை நினைக்காமல் எந்த ஒரு செயலையும் செய்து முடிக்க முடியாது. அவரை பூஜிக்காமல் தொடங்கப்படும் எந்த செயலுக்கும் இடையூறு வந்து விடும். அவரது வடிவங்கள் அளவிட முடியாதது. பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பார்கள்.

    சானியாக இருந்தாலும், சந்தனமாக இருந்தாலும் ஒரு பிடி, பிடித்து வைத்து விட்டால் அவர் பிள்ளையாராகி விடுவார். அந்த அளவுக்கு `எடுப்பார் கைப்பிள்ளை' போன்று விநாயகர் உள்ளார். விநாயகரை வழிபாடு செய்வது என்பது மிக, மிக எளிதானது.

    இதனால்தான் நாம் விநாயகரை `முதன்மை தெய்வம்' என்றும், `முழு முதற் கடவுள்' என்றும் சொல்கிறோம்.

    நாம் மேற்கொள்ளும் ஒரு செயல் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் விநாயகர் அருள் வேண்டும். அந்த அருளை நாம் ஒவ்வொருவரும் எளிதாகப் பெற முடியும்.

    தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் விநாயகர் வழிபாடு 6-ம் நூற்றாண்டுக்குப் பிறகே உருவானதாக சொல்கிறார்கள். ஆனால் அதற்கு முந்தைய நாட்டுப்புறப்பாடல்களில் விநாயகர் பற்றிய குறிப்புகள் உள்ளதால், விநாயகர் வழிபாடு காலம், காலமாக இருந்து வருவதை உணரலாம்.

    பல ஊர்களில் விநாயகர் எப்படி அந்த தலத்தில் தோன்றினார் என்பதற்கான வரலாறு எதுவும் இருப்பதில்லை. மற்ற கடவுள் அவதாரம் போல விநாயகரை அத்தகைய எந்த தல வரலாறுகளுக்குள்ளும் அடக்க முடிவதில்லை.

    அந்த அளவுக்கு ஆதியும், அந்தமும் இல்லாமல் விநாயகர் உள்ளார். அத்தகைய சிறப்பான தலங்களில் புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலும் ஒன்றாகும்.

    மணக்குள விநாயகருக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பக்தர்கள் இருக்கிறார்கள். இவர் அருள்பெற தினம், தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புதுச்சேரி வந்து செல்கிறார்கள்.

    மணக்குள விநாயகரை நேரில் தரிசனம் செய்து விட்டால் மனதில் உள்ள பாரம் எல்லாம் குறைந்து விட்டது போல உணர்கிறார்கள்.

    மணக்குள நாயகனின் மலரடியை எப்போதும் மனதில் பதித்துக் கொண்டால், நம் வாழ்வு மேன்மை பெறும் என்பது நிதர்சனமான உண்மை.

    • கொசுக்கள் சூறாவளி போல கூட்டமாக பறக்கிறது.
    • ஆற்றங்கரைகளில் கொசுக்கள் குவிந்து கிடப்பதை காணமுடிகிறது.

    தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக மணல் சூறாவளி, நீர் சூறாவளி உருவாவதை பார்த்திருப்போம். ஆனால் மராட்டிய மாநிலம் புனேவில் ஆயிரக்கணக்கான கொசுக்கள் சூழ்ந்து சூறாவளி உருவானது போன்று பரவிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் 'பீயிங் புனே அபிஷியல்' என்ற பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் ஆற்றங்கரைகளில் கொசுக்கள் குவிந்து கிடப்பதை காணமுடிகிறது.

    பின்னர் அந்த கொசுக்கள் சூறாவளி போல கூட்டமாக பறக்கிறது. இந்த வீடியோ வைரலாகி 45 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். புனே மாநகராட்சி அதிகாரிகள் ஆற்றங்கரை மற்றும் நதிகளை சுத்தம் செய்யும் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும். இதன் மூலம் பல பிரச்சினைகள் தீர்க்கப்படும் என ஒரு பயனரும், இதுபோன்ற கொசு சூறாவளி ஆபத்தானதாக தெரிகிறது என மற்றொரு பயனரும் பதிவிட்டனர். பொது சுகாதாரம் மோசமாக இருப்பதாக பயனர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    • தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? போலீசார் விசாரணை
    • உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கான்வென்ட் ஆக்கி விளையை சேர்ந்தவர் மார்க்கோஸ் (வயது 55). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்காக ஊருக்கு வந்து உள்ளார்.

    நேற்று மார்க்கோஸ், குழித்துறை தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்று உள்ளார். வெகு நேரமா கியும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடிச் சென்றனர்.

    அப்போது ஆற்றின் கரை யோரம் அவரது துணிகள் கிடந்துள்ளன. தொடர்ந்து தேடியபோது ஆற்றின் கரையோரம் மார்க்கோஸ் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    உடனடியாக மார்த்தா ண்டம் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    மார்க்கோஸ் தண்ணீரில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
    • சூரக்கோட்டை அருகே ஆற்றங்கரையில் ஸ்ரீராம் பிணமாக கரை ஒதுங்கி கிடந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருளானந்த நகரை சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது 28). இவர் விபத்தில் அடிபட்டு கால் இழந்த நிலையில் செயற்கை கால் உதவியுடன் நடந்து வந்தார்.

    சம்பவத்ன்று வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி யடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீராமை தேடி வந்தனர். இந்த நிலையில் சூரக்கோட்டை அருகே ஆற்றங்கரையில் ஸ்ரீராம் பிணமாக கரை ஒதுங்கி கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஸ்ரீராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கால் இழந்த மன வேதனையில் ஸ்ரீராம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூமி வெப்பமயமாதலை தடுக்க ஆற்றங்கரைகளில் பொதுப்பணித்துறை கரை காவலர்களை கொண்டு சமூக காடு வளர்க்கும் திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டும்.
    • மழை காலங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து கிராமங்களைப் பாதுகாக்கும் வகையில் சமூக காடுகள் வளர்க்கப்பட வேண்டும்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, முடிகொண்டான், அரச லாறு, சுள்ளான் ஆறு, திருமலைராஜன் ஆறு, உள்ளிட்ட ஆறுகளின் கரைகளில், ஆக்கிரமிப்புகளை அகற்றி, மாசுகளை குறைக்கும் வகையில், பூமி வெப்பமயமாதலை தடுக்கும் வகையிலும், நிலத்தடி நீரை சேமிக்க கூடியவகையில், ஆற்றங்கரைகளில், பொதுப்பணித்துறை கரை காவலர்களைகொண்டு, சமூக காடுவளர்க்கும் திட்டத்தை அமுல்படு த்தப்பட வேண்டும்.

    இதனால் சுற்றுப்புற சூழல் பேணி காப்பதோடு, அரசு நிலங்களை, பாதுகாக்கவும், ஆற்றுக்கரைகளில் சேதம் ஏற்படாத வகையில் பாதுகாக்கவும், மழை வெள்ள காலங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து, கிராமங்க ளைப் பாதுகாக்கும் வகையில், இந்த சமூக காடுகளை வளர்க்கப்பட வேண்டும்.

    எனவே பொதுப்பணித் துறையின் மூலம், ஆற்றங்க ரைகளில் வலுப்படுத்தும் வகையில், பயன் தரும் மரங்களை வளர்த்து, கரைகளை வலுப்படுத்தவும் அதோடு, அரசுக்கு வருவாய் ஆதாரம் தேடும் வகையில், அவற்றில் குத்தகைக்கு விட லாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×