என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சேலம் ஸ்பார்டன்ஸ்"
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் அப்ராஜித் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
- சேலம் அணி தரப்பில் சன்னி சந்து, பொய்யாமொழி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கோவை:
8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இன்றைய ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ்- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க வீரர்களாக சந்தோஷ் குமார் - ஜெகதீசன் களமிறங்கினர். தடுமாறிய இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த பிரதோஷ் ரஞ்சன் 15 ரன்னிலும் சித்தார்த் 9 ரன்னிலும் டேரில் ஃபெராரியோ 23 ரன்னிலும் அஸ்வின் கிறிஸ்ட் 0 என வெளியேறினா. ஒரு முனையில் சிறப்பாக ஆடிய கேப்டன் அப்ராஜித் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் அதிரடி காட்டிய அபிஷேக் தன்வர் 4 சிக்சர்களை பறக்க விட்டார். இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. சேலம் அணி தரப்பில் சன்னி சந்து, பொய்யாமொழி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- இன்று சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின.
- திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.
8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது.
இங்கு அரங்கேறிய முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11-ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிமைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன் படி முதலில் களமிறங்கிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய சஞ்சய் யாதவ் 33 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சேலம் அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அடுத்ததாக களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி வீரர்கள் திருச்சி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை மட்டுமே சேலம் அணி எடுத்தது.
இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி அபார வெற்றி பெற்றது. சேலம் அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது அட்னான் கான் 40 ரன்களும் விவேக் 33 ரன்களும் எடுத்தனர். திருச்சி அணி தரப்பில் சரவண குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- நெல்லை வேகப்பந்து வீச்சாளர் சோனு யாதவ் 30 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.
- சேலத்துக்கு 2-வது தோல்வியாகும்.
8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு சேலத்தில் நடந்த 9-வது லீக்கில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி, சேலம் ஸ்பார்டன்சை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த சேலம் அணி 19.2 ஓவர்களில் 141 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ராபின் பிஸ்ட் 23 ரன்னும், கேப்டன் ஷிஜித் சந்திரன் 20 ரன்னும் எடுத்தனர். நெல்லை வேகப்பந்து வீச்சாளர் சோனு யாதவ் 30 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.
அடுத்து களம் இறங்கிய நெல்லை அணி 18.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. அஜிதேஷ் 45 ரன்னும், சூர்யபிரகாஷ் 43 ரன்னும் (நாட்-அவுட்) விளாசினர். நெல்லைக்கு இது 2-வது வெற்றியாகும். சேலத்துக்கு 2-வது தோல்வியாகும்.
போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். அடுத்த கட்ட ஆட்டங்கள் கோவையில் நடைபெறுகிறது. கோவையில் நாளை நடைபெறும் ஆட்டங்களில் மதுரை பாந்தர்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் (மாலை 3.15 மணி), கோவை கிங்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் (இரவு 7.15 மணி) அணிகள் சந்திக்கின்றன.
- முதலில் ஆடிய சேலம் அணி 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- நெல்லை அணி சார்பில் சோனு யாதவ் 5 விக்கெட் கைப்பற்றினார்.
சேலம்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் சேலத்தில் நடந்துவருகிறது. லீக் சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில், டி.என்.பி.எல். தொடரில் சேலத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி, சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே நெல்லை அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர்.
இதனால் சேலம் அணியின் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க தடுமாறினர்.
இறுதியில், சேலம் அணி 19.2 ஓவரில் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ராபின் 23 ரன்கள் எடுத்தார்.
நெல்லை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சோனு யாதவ் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து, 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்குகிறது.
- 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 9 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது.
- விவேக் நிலைத்து நின்று மட்டையை சுழற்றி தங்கள் அணியின் வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டார்.
8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப்- 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில் நேற்றிரவு நடந்த 6-வது லீக்கில் திண்டுக்கல் டிராகன்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் சந்தித்தன. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணிக்கு திருப்திகரமான தொடக்கம் கிடைக்கவில்லை. ஷிவம் சிங் 2 ரன்னிலும், கேப்டன் ஆர்.அஸ்வின் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விமல்குமார் (47 ரன்), பாபா இந்திரஜித் (51 ரன், 34 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். பின்வரிசையில் தினேஷ் ராஜ் (20 ரன்) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தனர். 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 9 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது.
அடுத்து களம் இறங்கிய சேலம் அணிக்கு எஸ்.அபிஷேக்கும் (28 ரன்), விக்கெட் கீப்பர் கவினும் (41 ரன்) அதிரடியான தொடக்கம் தந்தனர். இதன் பின்னர் ஆர்.விவேக் நிலைத்து நின்று மட்டையை சுழற்றி தங்கள் அணியின் வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டார்.
சேலம் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விவேக் 51 ரன்களுடன் (28 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார்.
திண்டுக்கல் சுழல் சூறாவளிகள் ஆர்.அஸ்வினும் (4 ஓவரில் 24 ரன்), வருண் சக்ரவர்த்தியும் (27 ரன்னுக்கு ஒரு விக்கெட்) ரன்வேகத்தை ஓரளவு கட்டுப்படுத்தினாலும், அவர்களால் விக்கெட் வேட்டை நடத்த முடியாமல் போனது பின்னடைவாக அமைந்தது.
2-வது லீக்கில் ஆடிய சேலத்துக்கு இது முதலாவது வெற்றியாகும். தொடக்க ஆட்டத்தில் மதுரையிடம் தோற்றிருந்தது. திண்டுக்கல் அணிக்கு இது முதலாவது தோல்வியாகும்.
இன்றைய ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்- திருச்சி கிராண்ட் சோழாஸ் (இரவு 7.15 மணி) அணிகள் மோதுகின்றன.
- சிறப்பாக விளையாடிய இந்திரஜித் தனது பிறந்தநாளில் அரை சதம் விளாசி அசத்தினர்.
- சேலம் தரப்பில் சன்னி சந்து, ஹரிஸ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
சேலம்:
8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி திண்டுக்கல் அணியின் தொடக்க வீரர்களாக சிவம் சிங் - அஸ்வின் களமிறங்கினர். சிவம் சிங் 2 ரன்னிலும் அஸ்வின் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து பாபா இந்திரஜித் - விமல் குமார் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் விமல் குமார் 47 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய இந்திரஜித் தனது பிறந்தநாளில் அரை சதம் விளாசி அசத்தினர். அவர் 51 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
இதனால் திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தனர். சேலம் தரப்பில் சன்னி சந்து, ஹரிஸ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
- திண்டுக்கல் தனது தொடக்க ஆட்டத்தில் திருச்சியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
- சேலம் தனது தொடக்க ஆட்டத்தில் மதுரையிடம் தோற்றது.
சேலம்:
8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. திண்டுக்கல் தனது தொடக்க ஆட்டத்தில் திருச்சியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. சேலம் தனது தொடக்க ஆட்டத்தில் மதுரையிடம் தோற்றது. அந்த அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறது.
சேலம் ஸ்பார்டன்ஸ் (பிளேயிங் லெவன்):
எஸ் அபிஷிக், ஆர் கவின், முஹம்மது அட்னான் கான், ஆஷிக் ஸ்ரீனிவாஸ், கே விஷால் வைத்யா, ஷிஜித் சந்திரன்(சி), சன்னி சந்து, ராஜேந்திரன் விவேக், எஸ் ஹரிஷ் குமார், எம் பொய்யாமொழி, என் செல்வ குமரன்
திண்டுக்கல் டிராகன்ஸ் (பிளேயிங் லெவன்):
சிவம் சிங், ரவிச்சந்திரன் அஷ்வின்(கேட்ச்), விமல் குமார், பாபா இந்திரஜித்(வ), பூபதி குமார், சி சரத்குமார், எஸ்.தினேஷ் ராஜ், ஜி.கிஷூர், வருண் சக்ரவர்த்தி, பி.விக்னேஷ், வி.பி.திரன்
- திண்டுக்கல் டிராகன்ஸ் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
- சேலம் அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறது.
சேலம்:
8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
திண்டுக்கல் தனது தொடக்க ஆட்டத்தில் திருச்சியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணியில் ஷிவம் சிங், பாபா இந்திரஜித், பூபதிகுமார், விமல்குமார் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், வி.பி.தீரன், விக்னேஷ் ஆகியோர் உள்ளனர்.
சேலம் தனது தொடக்க ஆட்டத்தில் மதுரையிடம் தோற்றது. அந்த அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறது. அந்த அணியில் கவின், அபிஷேக், விஷால் வைத்யா, ஹரீஷ்குமார், சன்னி சந்து, பொய்யாமொழி, விவேக் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
- கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.
- முருகன் அஷ்வின் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மதுரை அணியை வெற்றி பெறவைத்தார்.
சேலம்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக கவின் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 70 ரன்னில் அவுட்டானார். விஷால் வைத்யா சிறப்பாக ஆடி அரை சதமடித்து 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், சேலம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்தது. மதுரை அணி சார்பில் முருகன் அஷ்வின் 3 விக்கெட்டும், அலெக்சாண்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான சுரேஷ் 38 பந்துகளில் 69 ரன்கள் விளாசி அவுட்டானார். நிதானமாக விளையாடிய ஜெகதீசன் 57 ரன்கள் அடித்தார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களத்தில் இருந்த முருகன் அஷ்வின் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மதுரை அணியை வெற்றி பெறவைத்தார்.
3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மதுரையை வெற்றி பெற வைத்த முருகன் அஷ்வின் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- முதலில் ஆடிய சேலம் 180 ரன்களை குவித்தது.
- அந்த அணியின் கவின், விஷால் வைத்யா அரை சதமடித்தனர்.
சேலம்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக கவின் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 70 ரன்னில் அவுட்டானார். விஷால் வைத்யா சிறப்பாக ஆடி அரை சதமடித்து 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், சேலம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.
மதுரை அணி சார்பில் முருகன் அஷ்வின் 3 விக்கெட்டும், அலெக்சாண்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய கோவை அணி 199 ரன்கள் குவித்தது.
- தொடர்ந்து ஆடிய சேலம் அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சேலம்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய கோவை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. ராம் அரவிந்த் அதிரடியாக ஆடி 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். சுஜய் 44 ரன்களும், சாய் சுதர்சன் 41 ரன்களும், ஆதீக் ரஹ்மான் 31 ரன்களும் எடுத்தனர்.
சேலம் அணியின் சார்பில் சன்னி சந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. கோவை அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சேலம் அணி வீரர்கள் சிக்கினர். இதனால் விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்தன. சன்னி சந்து அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், சேலம் அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் கோவை அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்தில் நீடிக்கிறது.
கோவை அணி சார்பில் தாமரைக் கண்ணன் 3 விக்கெட்டும், ஷாருக் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- சேலம் அணியின் பந்துவீச்சாளர் சன்னி சந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.
- சுஜய் - சாய் சுதர்சன் ஜோடி நிலைத்து நின்று ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.
சேலம்:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சேலத்தில் நடைபெறும் ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேலம் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
லைக்கா கோவை கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் சுரேஷ் குமார் 4 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், சுஜய் - சாய் சுதர்சன் ஜோடி நிலைத்து நின்று ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. சுஜய் 44 ரன்களும், சாய் சுதர்சன் 41 ரன்களும் எடுத்தனர். ஆதீக் ரஹ்மான் 31 ரன்களும், ராம் அரவிந்த் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும் அடிக்க, கோவை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. சேலம் அணியின் பந்துவீச்சாளர் சன்னி சந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்குகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்