என் மலர்
நீங்கள் தேடியது "துண்டு பிரசுரம்"
- கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்திய இந்த விழிப்புணர்வு மாணவர்களை வெகுவாக கவர்ந்தது.
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை வடக்குவாசல் புனித ஜான் டி பிரிட்டோ அரசு உதவி பெறும் பள்ளியில் வல்லம் அடைக்கலமாதா கல்லூரி சமூகப்பணித்துறை மாணவ-மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர்.
பள்ளி தலைமை ஆசிரியை சகோ.பவுலின் தெரசாள் தலைமை வகித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக நகராட்சி ஊழியர் ஞானசேகரன், ஆசிரியை எஸ்தர் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை மாணவர்களிடையே எடுத்துரைத்தனர்.
சமூகப்பணித்துறை பேராசிரியர் வனிதா பேசுகையில், கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்திய இந்த விழிப்புணர்வு மாணவர்களை வெகுவாக கவர்ந்தது என பாராட்டி பேசினார்.
சமூகப்பணித்துறை தலைவர் முத்துக்குமார் வழிகாட்டுதல்படி நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
முன்னதாக பள்ளி ஆசிரியை ரோஸ்லின் வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தை ஒருங்கிணைத்த கல்லூரி சமூகப்பணித்துறை மாணவ-மாணவிகளான ஜோ, புவனா, தேவி, அலெக்ஸ், அசோக், வனஜா ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியை பவுலின் தெரசாள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை அரசு உதவி பெறும் பள்ளியான வடக்குவாசல் புனித ஜான் டி பிரிட்டோ பள்ளியில் ஏற்படுத்தியதன் மூலம் வல்லம் அடைக்கலமாதா கல்லூரி சமூகப்பணித்துறை மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
- பழைய பஸ் அருகில் உள்ள கடைகள், பேருந்துகளில் உள்ள மக்கள் , பொதுமக்களுக்கு வீதி வீதியாக நேரடியாக வழங்கினார்.
- இந்தியாவின் பன்முகத் தன்மையை காப்போம் என்ன முழக்கங்கள் இட்டு வீதி வீதியாக சென்றனர்.
தஞ்சாவூர்:
இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் விளக்கப் பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நாளை நடைபெற உள்ளது.
இது தொடர்பாக பொதுக்கூட்டத்தை விளக்கியும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் தஞ்சையில் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தலைமையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
பழைய பஸ் அருகில் உள்ள கடைகள், பேருந்துகளில் உள்ள மக்கள் , பொதுமக்களுக்கு வீதி வீதியாக நேரடியாக வழங்கினார். இந்தித் திணிப்பை ஏற்க மாட்டோம் என முழக்கங்கள் இட்டு அனைவருக்கும் வழங்கினார்.
அன்னைத் தமிழை அரியணை ஏற்றி போற்றுவோம், ஆதிக்க இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், இந்தியாவின் பன்முகத் தன்மையை காப்போம் என்ன முழக்கங்கள் இட்டு வீதி வீதியாக சென்றனர். இந்த நிகழ்வில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாமன்ற உறுப்பினர் மேத்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
- வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் தொடர்பான விழிப்புணர்வு பேரணி.
- துண்டு பிரசுரங்களை மாணவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் சி.க.சு. அரசு மேல்நிலைப்பள்ளியில் வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் தொடர்பான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
பேரணியை வேதார ண்யம் வருவாய் கோட்டா ட்சியர் ஜெயராஜ் பவுலின் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், வேதாரண்யம் வருவாய் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், தேர்தல் துணை வட்டாட்சியர் ராஜா, வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் உத்ராபதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நாகராஜன், அன்பழகன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய சைக்கிள் பேரணி சேது ராஸ்தா, மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி தெற்கு வீதிவழியாக சென்று பள்ளியை வந்தடைந்தது.
வழிநெடுகிழும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, துண்டு பிரசுரங்களை மாணவர்கள் பொது மக்களுக்கு வழங்கினர்.
- வரும் ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.
- ராமசாமி, கேபிள் மணி, சுமித்ராமற்றும் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சியில் வரும் ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.இது குறித்த துண்டு பிரசுரங்களை வியாபாரிகள்,மற்றும் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பணியை பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஆர்.ரவி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் ப.நடராஜன், கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.சித்துராஜ், ஊராட்சி செயலாளர் காந்திராஜ், வார்டு உறுப்பினர்கள் உமா மகேஷ்குமார், ஜோதிமணி முத்துசாமி,சாந்தி ராமசாமி, கேபிள் மணி, சுமித்ராமற்றும் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பழைய கழிவுகள், பிளாஸ்டிக், துணிகள் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டும்.
- பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
தரங்கம்பாடி:
புகையில்லாபோகி பண்டிகை கொண்டாட வேண்டி மயிலாடுதுறை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தியாகி நாராயணசாமி மேல்நிலைப்பள்ளியில் இருந்து பேரணியை நகர்மன்ற தலைவர் குண்டாமணி என்ற செல்வராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பேரணிக்கு நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமை தாங்கினார்.
நகர்நல அலுவலர் லெஷ்மி நாராயணன், நகர்மன்ற துணை தலைவர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ராமையன், பிச்சமுத்து, டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியில் ஞானாம்பிகை கல்லூரி மாணவிகள், தியாகி நாராயணசாமி மேல்நி லைப்பள்ளி மாணவர்கள், டி.பி.டி.ஆர். மாணவர்கள் கலந்து கொண்டு பொது இடங்களில் பழைய கழிவுகள், பிளாஸ்டிக், துணிகள் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டியும், வடிகால்களில் திடக்கழிவுகள் கொட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொதுமக்கள் தங்களது திடக்கழிவுகளை நகராட்சி தூய்மை பணியாளரிடம் வழங்கி புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்றனர்.
நகராட்சி சார்பில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோ கிக்கப்பட்டது.
பேரணியில் மயிலாடு துறை மிட்டவுன் ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
- நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி கால்நடை மருத்துவமனைக்கு வந்தடைந்தது.
- பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகி க்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி கால்நடை அரசு மருத்துவ மனை மற்றும் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு பேரணியை திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் திருவாரூர் மாவட்ட மண்டல இணை இயக்குனர் ராமலிங்கம் கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
நகராட்சிஆணையர் (பொ), கால்நடை மருத்துவர்கள் சந்திரன், இலக்கியா ராஜசேகர், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் வி.ஐ.ஏ. ஷிப் கேட்டரிங் காலேஜ் பிரைட் பீப்புள் சமுதாய கல்லூரி மாணவ- மாணவிகள், நகராட்சி ஊழியர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் பேரணியில் கலந்து கொண்டனர்.
பேரணியானது நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி புதிய பஸ் நிலையம் வழியாக சென்று கால்நடை மருத்துவ மனைக்கு வந்தடைந்தது.
இதில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகி க்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முகாமில் செல்ல பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.
- மத்திய அரசு அதிக வரி வசூல் செய்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம்.
- 50-க்கும் மேற்பட்ட பா.ஜனதாவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்:
டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தவர் வழக்கறிஞர் நந்தினி.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வழக்கறிஞர் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோர் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் நாகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து பிரசாரம் செய்தனர்.
மத்திய அரசு அதிக வரி வசூல் செய்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை நாகை புதிய, பழைய பஸ் நிலையங்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களில் விநியோகம் செய்துள்ளனர்.
தொடர்ந்து நாகை கடைத்தெருவில் இருவரும் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து கொண்டு இருப்பதை அறிந்த பா.ஜ.க.வினர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் நகர பொறுப்பாளர் சுதாகர் கொடுத்த புகாரின்பேரில் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோரை இரவில் போலீஸ் நிலையம் அழைத்து வந்த இன்ஸ்பெக்டர் சுப்ரியா அவர்களிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்.
அப்போது காவல் நிலையம் முன்பு 50 -க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பா.ஜ.க.வினரை சமாதானம் செய்து அப்புறப்படுத்திய போலீசார் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோரை காவல்துறை வாகனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏற்றி சென்று நாகை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.
- ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம்.
- ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் போக்குவரத்து போலீசார், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கி, ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தையும் கொடுத்து அனுப்பினர்.
தொடர்ந்து எச்சரித்து அனுப்பியும் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.
பள்ளி குழந்தைகளுடன் வந்த பெற்றோரை நிறுத்தி, அவர்கள் குழந்தைகளிடம், உங்கள் அப்பாவிற்கு ஹெல்மெட் அணியாததால் நாங்கள் போடும் ரூ.1000 அபராத தொகை தேவையா என்றும், ஹெல்மெட் அணியாமல் வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் உங்களால் தாங்க முடியுமா? என்று கேட்டு இனி வரும் நாட்களில் உங்கள் அப்பா ஹெல்மெட் அணிந்து வர வேண்டியது உங்கள் பொறுப்பு என்று கூறி அனுப்பினர்.
- இயற்கை வேளாண்மை சாகுபடி செய்வதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து எடுத்து கூறினார்.
- பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்வி சங்கம் மற்றும் ஆர்விஎஸ் வேளாண்மை கல்லூரியில் இறுதிஆண்டு படிக்கும் மாணவிகள் இணைந்து நடத்திய இயற்கை முறையில் வேளாண் சாகுபடி செய்வது மற்றும் சிறு தானியங்கள் உபயோகம் மற்றும் உற்பத்தி செயவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
விவேகானந்தா தொண்டு நிறுவனச் செயலாளர் தங்க.கண்ணதாசன் வழிகாட்டுதலுடன் கோவில் தேவாராயன்பேட்டை, அன்னுகுடி கிராமங்களில் நடைபெற்றது.
இதில் ஆர்விஎஸ் கல்லூரி மாணவிகள் மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் களப்பணியாளர்கள் விவசாயிகளை நேரடியாக சந்தித்து இயற்கை வேளாண்மை சாகுபடி செய்வதால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றியும், அவற்றின் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறினார்.
மேலும் சிறுதானியங்கள் ஏன் பயிரிட வேண்டும், அவற்றின் தொழில் நுட்பங்கள், சரி விகித உணவு வகைகள், சிறுதானியங்கள் சந்தை வாய்ப்புகள் பற்றி கிராமப்புற பெண்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் வேளாண் கல்லூரி முன்னோடி மாணவி ஜனோ அபிஷா தலைமையில் 10க்கும் மேற்பட்ட மாணவிகள், விவேகானந்தா சமூக கல்வி சங்கத் தலைவர் தேவராஜன், சங்க உறுப்பினர் சிவக்குமார் களப்பணியாளர் புனிதவள்ளி மற்றும் மகளிர் சுய உதவிகுழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.
- ஏராளமான மாணவ- மாணவிகள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு மாரத்தான் ஓடினர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் நெகிழி இல்லாத மாவட்டமாக விளங்க கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சி, கவின்மிகு தஞ்சை இயக்கம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஆகியவை இணைந்து இன்று தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் என்பதை வலியுறுத்தி மாரத்தான் போட்டியை நடத்தியது.
புதிதாக திறக்கப்பட்ட ஸ்கேட்டிங் தளத்தில் இருந்து தொடங்கப்பட்ட இந்த போட்டியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் ஏராளமான மாணவ- மாணவிகள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு மாரத்தான் ஓடினர்.
இந்த நிகழ்ச்சியில் ஆணையர் சரவணகுமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் குணசேகரன், ரவிக்குமார், கவின்மிகு தஞ்சை இயக்கம் டாக்டர் ராதிகா மைக்கேல், இந்தியா ரெட் கிராஸ் துணைத் தலைவர் பொறியாளர் முத்துக்குமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- முக்கிய வீதிகள் வழியாக சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் பேரணி முடிவடைந்தது.
- பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சீர்காழி:
சீர்காழியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பாக போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் போதைப்பொருட்கள் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக், மாவட்ட கலால் துறை அலுவலர் ஹரிதரன், தேர்தல் துணை வட்டாட்சியர் ரஜினி, பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் செல்வமுத்துக்குமாரசாமி, உதவி பேராசிரியர்கள் பிரவினா, பிரகாஷ், பேரணி ஒருங்கிணைப்பாளரும், அரிமா மாவட்ட தலைவருமான சக்திவீரன் முன்னிலை வகித்தனர்.
சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணியை வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணி முக்கிய வீதிகள் வழியே சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
போதை பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- மாணவர்கள் ரோலர் ஸ்கேட்டிங் மூலம் பேரணியாக சென்றனர்.
- சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
மதுக்கூர்:
மதுக்கூர் அருகே உள்ள மோகூர் விநாயகா பப்ளிக் பள்ளி, மதுக்கூர் ரோட்டரி சங்கம், காவல்துறை இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மாணவர்கள் ரோலர் ஸ்கேட்டிங் மூலம் பேரணியாக சென்றனர்.
இந்த பேரணியை மதுக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் மதுக்கூர் ரோட்டரி சங்க தலைவர் தவசு மணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மதுக்கூர் போலீஸ் நிலையம் முன்பு இருந்து தொடங்கிய பேரணி பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.
இதற்கு விநாயக பப்ளிக் பள்ளியின் தலைவர் ராமலிங்கம், தாளாளர் அய்யநாதன், முதல்வர் ஜான்பால், துணை முதல்வர் பொன். கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனை அடுத்து வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. சாலை பாதுகாப்பு பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.இதில் மதுக்கூர் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், காவல் துறையினர், பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள், மதுக்கூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.