என் மலர்
நீங்கள் தேடியது "சஸ்பெண்டு"
- பாண்டி விஸ்வநாதனின் ஒப்புதலுடன் பஸ்சில் டிரைவர் சீட்டில் அமர்ந்த சரவணன் கைலியுடனே சுமார் 7 கி.மீ தூரம் வரை பஸ்சை ஓட்டி உள்ளார்.
- தேனி அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் சத்தியமூர்த்திக்கு புகார் வந்தது.
தேனி:
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் உள்ள அரசு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவராக இருப்பவர் பாண்டி விஸ்வநாதன். கண்டக்டராக இருப்பவர் வினோத் குமார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி - வீரபாண்டி சுற்றுச்சாலை நகர பஸ்சை இயக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது வீரபாண்டியில் அரசு பஸ் டிரைவரின் நண்பரான ஆட்டோ டிரைவர் சரவணன் என்பவர் கைலி அணிந்து பஸ்சில் ஏறினார். அவர் தான் அரசு பஸ்சை ஓட்ட வேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார்.
அதன்படி பாண்டி விஸ்வநாதனின் ஒப்புதலுடன் பஸ்சில் டிரைவர் சீட்டில் அமர்ந்த சரவணன் கைலியுடனே சுமார் 7 கி.மீ தூரம் வரை பஸ்சை ஓட்டி மகிழ்ச்சியடைந்தனர். இந்த காட்சியை பஸ்சில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இதுகுறித்து தேனி அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் சத்தியமூர்த்திக்கு புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து அரசு பஸ்சை வேறு ஒரு நபருக்கு ஓட்ட அனுமதி அளித்தது ஏன்? என பாண்டி விஸ்வநாதனிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தனது நண்பரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து அரசு பஸ்சின் டிரைவர் பாண்டி விஸ்வநாதன், கண்டக்டர் வினோத்குமார் ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சஸ்பெண்டு செய்யப்பட்ட மாணவர்கள், பள்ளி மற்றும் சுற்றுப்புறங்களில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- பள்ளியின் அருகே போதைப்பொருட்கள் விற்பனை நடப்பதால் மாணவ-மாணவிகள் தடம் மாறிச் செல்கின்றனர்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதில் சிலர் கோஷ்டியாக செயல்பட்டு உள்ளனர். இவர்களுக்குள் அடிக்கடி மோதல் சம்பவங்களும் நடந்து வந்தன. நேற்றும் 2 தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 மாணவர்கள் தாக்கப்பட்டனர்.
காயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அறிந்ததும் பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
மோதல் சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சந்திரகுமார், ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர். பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களையும் அழைத்துப் பேசினர்.
இதற்கிடையில் பள்ளி தலைமை ஆசிரியை மேரி அல்போன்சாள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மேகலிங்கம் மற்றும் மேலாண்மைக் குழுவினரும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 12 மாணவர்களை ஒரு மாத காலத்திற்கு சஸ்பெண்டு செய்தும், ஒரு மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
சஸ்பெண்டு செய்யப்பட்ட மாணவர்கள், பள்ளி மற்றும் சுற்றுப்புறங்களில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவர்களது பெற்றோருக்கும் அறிவுரை விடுக்கப்பட்டது.
மாணவர்கள் மோதல் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பள்ளியின் அருகே போதைப்பொருட்கள் விற்பனை நடக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் தடம் மாறிச் செல்கின்றனர்.
அரசு பள்ளியின் அருகே உள்ள கோவில் மைதானம் மற்றும் தெருக்களில் பள்ளிக்கூட மாணவர்கள் மட்டுமல்ல வெளியில் உள்ள இளைஞர்களும் பைக் ரோமியோக்களாக மாறி நாளுக்கு நாள் அட்டகாசம் செய்கின்றனர்.
எனவே இந்தப் பகுதியில் காலை, மாலை வேளைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும் என்றனர்.
- முறைகேடு நிதியில் 1.50 கோடி ரூபாயை மோகன் சங்கத்துக்கு திருப்பி செலுத்திய நிலையில் மீது பணத்தை திருப்பி செலுத்தவில்லை.
- வெங்கடேசை சஸ்பெண்டு செய்து மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளரிவெள்ளி தொடக்க வேளான் கூட்டுறவு கடன் சங்கத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய பயிர்க்கடனில் ரூ.3.50 கோடி முறைகேடு நடந்தது 6 மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சங்க செயலாளர் மோகன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். பின்னர் முறைகேடு நிதியில் 1.50 கோடி ரூபாயை மோகன் சங்கத்துக்கு திருப்பி செலுத்திய நிலையில் மீது பணத்தை திருப்பி செலுத்தவில்லை. இந்த முறைகேடுக்கு மத்திய கூட்டுறவு வங்கியை சேர்ந்த ஆய்வாளர் வெங்கடேஷ் (வயது 40)என்பவர் உடந்தையாக செயல்பட்டது தெரிய வந்தது. இதனால் முறைகேடு நிதியில் பாதியை அவரிடம் வசூலிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து வெங்கடேசிடம் நடத்திய விசாரணையில் அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. இதையடுத்து வெங்கடேசை சஸ்பெண்டு செய்து மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
- முறைகேடு செய்த ரேசன்கடை விற்பனையாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டது.
- முறைகேடு செய்த கொண்டையம்பட்டி நியாயவிலைக்கடை விற்பனையாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை
மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக்கடைகளை ஜூன் மாதத்தில் மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையிலான பறக்கும்படையினர் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது வேலை நேரத்தில் கடை திறக்காமல், ரேசன் பொருட்களை முறையாக விநியோகம் செய்யாமலும், இருப்புக் குறைவு மற்றும் இருப்பு கூடுதல் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது. இவற்றில் கடுமையான முறைகேடு செய்த அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி நியாயவிலைக்கடை விற்பனையாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் மீது குடிமைப்பொருள் குற்றப்புல னாய்வுத்துறையில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது போன்று நியாயவிலைக் கடையை குறித்த நேரத்தில் திறக்காமல் இருப்பது, ரேசன் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யாமல் இருப்பது போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் நியாயவிலைக்கடையின் விற்பனையாளர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கல்லூரிகளில் ராக்கிங் செய்வது நாடு முழுவதிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
- காக்கிநாடா என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை தொடர்ந்து ராக்கிங் செய்து வந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். வெளியூர் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ராக்கிங் செய்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகி சிலர் தற்கொலைக்கு ஆளாகின்றனர்.
எனவே கல்லூரிகளில் ராக்கிங் செய்வது நாடு முழுவதிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் காக்கிநாடா என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை தொடர்ந்து ராக்கிங் செய்து வந்தனர். இதனால் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் ஜூனியர் மாணவர்கள் புகார் செய்தனர்.
இதையடுத்து ராக்கிங்கில் ஈடுபட்ட 11 மாணவர்களை 15 நாட்களுக்கு சஸ்பெண்டு செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார். மேலும் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.