என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிர்வாகிகள் கூட்டம்"
- எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை.
- காரசாரமாக கருத்துக்கள் பரிமாறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த 10-ந்தேதி முதல் பாராளுமன்ற தொகுதி வாரியாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டு உள்ளார்.
முதல் நாளில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 2 தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி அதற்கு மறுநாளில் இருந்து தினமும் 3 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன்மூலம் கடந்த 6 நாட்களில் 17 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசித்து தோல்விக்கான காரணங்கள் பற்றி அலசி ஆராய்ந்தார்.
நேற்று ராமநாதபுரம் நெல்லை, விருதுநகர் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் காரசாரமாக கருத்துக்கள் பரிமாறப்பட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி யுள்ளன.
ராமநாதபுரம் போன்ற தென்மாவட்ட தொகுதிகளில் முக்குலத்தோர் அதிகம் இருப்பதால் அவர்களது வாக்குகள் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை கட்சியினர் முன் வைத்திருக்கிறார்கள்.
எனவே சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சி யில் சேர்ப்பது பற்றி ஆலோசிக்க வேண்டும். அவர்களை கட்சியில் சேர்த்தால் அ.தி.மு.க. மீண்டும் வலுப்பெறும் என்கிற பேச்சு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பரவலாகவே உள்ளது எனவும் ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் வற்புறுத்தி கூறியுள்ளனர்.
இவர்கள் 3 பேரும் கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதால் முக்குலத்தோர் சமுதாய மக்களிடமிருந்து அ.தி.மு.க. விலகியே நிற்பதாகவும் வெளியில் பேசப்படுகிறது என்றும் நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளின் இந்த கருத்தை பொறுமையுடன் கேட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் பற்றி நீங்கள் இங்கே குறிப்பிட்டீர்கள். அவர்களை எல்லாம் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்வது பற்றி தனியாக குழு அமைத்து ஆலோசிக்கலாம் என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் சசிகலா-ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க.வின் தொடர் தோல்வியால் எடப்பாடி பழனிசாமி முதன் முறையாக தனது பிடிவாதத்தை தளர்த்தி இறங்கி வந்திருப்பதாகவும் ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகள் கூறி உள்ளனர்.
பாராளுமன்ற தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி நாளை மற்றும் நாளை மறுநாளும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
வருகிற 19-ந்தேதியுடன் இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைகிறது. இதன் பின்னர் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க அ.தி.மு.க. மேலிடம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிகிறது.
- காணொலி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்ள வேண்டும்.
- அதில், வாக்கு எண்ணிக்கையின்போது பூத் முகவர்கள் செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
சென்னை:
தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
கழக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுரையின்படி, ஜூன் 4-ம் தேதி அன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து கலந்தாலோசித்திட, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் "மாவட்டக் கழகச் செயலாளர்கள்-கழக வேட்பாளர்கள் தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட் டம்" வருகிற 1-6-2024 காலை 11 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
இக்கூட்டத்தில் தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., வாக்கு எண்ணிக்கையின்போது தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்குவார்.
அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- அடுத்த 7 மாதங்களுக்கு யாருக்கும் ஓய்வு கிடையாது.
- மத்திய அரசின் திட்டங்களால் பயன் அடைந்த மக்களை அழைத்து பேச வேண்டும்.
சென்னை:
தமிழக பா.ஜனதா மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் கடந்த 3-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி முறிந்ததால் அதுபற்றி டெல்லி மேலிட தலைவர்களிடம் விளக்கம் அளிக்க சென்ற அண்ணாமலை சென்னை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி பா. ஜனதா மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் அமைந்த கரையில் உள்ள அய்யாவு மகாலில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 66 மாவட்ட தலைவர்கள் 66 மாவட்ட பார்வையாளர்கள், மாநில நிர்வாகிகள் 32 பேர், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் 30 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.
வெளி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் இன்று காலையிலேயே சென்னை வந்தனர். அவர்களுக்கு காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
காலை 11 மணியளவில் நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்துக்கு வந்த அண்ணாமலையை மண்டப வாசலில் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றார்கள். பின்னர் அண்ணாமலை தலைமையில் கூட்டம் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி மற்றும் சசிகலா புஷ்பா, நயினார் நாகேந்திரன், துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம், இசை அமைப்பாளர் தினா, சக்கரவர்த்தி, கருப்பு முருகானந்தம், கனகசபாபதி, கார்த்தியாயினி, மலர்க்கொடி, ஏ.பி.முருகானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டம் தொடங்கியதும் நிர்வாகிகள் ஒவ்வொருவராக பேசி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
பா.ஜனதா அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் பேசுகையில், "தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி இருக்கிறது. நாம் இந்த சூழ்நிலையில் தனித்து போட்டியிட தயாராக இருக்க வேண்டும். பா.ஜனதா தனித்து போட்டியிடுவது என்பது புதிதல்ல.
மாவட்ட தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம். பா.ஜனதா அகில இந்திய தலைமை, மாநில தலைமையை கண்காணித்து வருகிறது. எனவே நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் சரியாக பேச வேண்டும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் அகில இந்திய தலைமைதான் உரிய பதிலை அளிக்கும். அதுவரை கூட்டணி பற்றிய கருத்துக்களை வெளியில் தெரிவிக்க வேண்டாம்" என்றார்.
பின்னர் கூட்டத்தில் ஒவ்வொருவராக தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலை பரபரப்பாக பேசினார். அவர் பேசியதாவது:-
அடுத்த 7 மாதங்களுக்கு தி.மு.க. அரசுக்கு எதிராக பா.ஜனதா போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். அடுத்த 7 மாதங்களுக்கு யாருக்கும் ஓய்வு கிடையாது. தீவிரமாக உழைக்க வேண்டும். பெண்களை அதிக அளவில் பூத் கமிட்டிகளில் சேர்க்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களால் பயன் அடைந்த மக்களை அழைத்து பேச வேண்டும்.
கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம். சர்க்கசில் ஒரு கம்பியை பிடித்து தொங்கி விளையாடும்போது ரிஸ்க் எடுத்து இன்னொரு கம்பியை பிடித்து விளையாடி வெற்றி பெறுவது உண்டு. நம்மை பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களாகிய மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
ஜனவரி 2-வது வாரம் சென்னையில் 10 லட்சம் பேர் திரளும் பிரமாண்ட யாத்திரை நிறைவு விழா பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கூட்டத்தில் முன்னாள் மாணவர் உறுப்பினர்கள் சேர்க்கையை அதிக படுத்த வேண்டும். பள்ளியில் 3 விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகள் மாவட்ட, மாநில அளவில் நடத்த வேண்டும்.
- 10 மற்றும் பிளஸ்-2 அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்துகின்ற வகையில் கல்வித்துறை ,விளையாட்டு துறையில் சிறந்து விளங்கக்கூடிய அறிஞர்களைக் கொண்டு கூட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளியின் ஆட்சி குழு தலைவர் டாக்டர் மதிச்செல்வன், பள்ளி தாளாளர் முருகேசன் நாடார் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்கத் தலைவர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். சங்கச் செயலாளர் துரை சங்கத்தின் செயல் திட்டங்களை விளக்கி கூறினார். உதவி தலைவர் சண்முகவேலு சென்ற ஆண்டு கூட்டத் தீர்மானங்களை பற்றி வாசித்தார். கூட்டத்தில் முன்னாள் மாணவர் உறுப்பினர்கள் சேர்க்கையை அதிக படுத்த வேண்டும். பள்ளியில் 3 விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகள் மாவட்ட, மாநில அளவில் நடத்த வேண்டும்.
நன்றாக படிக்கக்கூடிய ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் தேசிய நல்லாசிரியர் முன்னாள் தலைமை ஆசிரியர் ரத்தனபாண்டியன் பிறந்த நாள், ஆசிரியர் தினநாள், முன்னாள் மாணவர் சங்க ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். மேலும் 10 மற்றும் பிளஸ்-2 அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்துகின்ற வகையில் கல்வித்துறை ,விளையாட்டு துறையில் சிறந்து விளங்கக்கூடிய அறிஞர்களைக் கொண்டு கூட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில்சங்க ஆலோசனை குழு உறுப்பினர் முன்னாள் தலைமை ஆசிரியர் நடராஜன் உள்பட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் மதி தேவராஜ் நன்றி கூறினார்.
- மதுரை புறநகர் வடக்கு மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
- திருப்பூர் துரை சாமிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை
மதுரை புறநகர்வடக்கு மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் மார்நாடு பேசினார்.
இதில் பொருளாளர் துரைசெழியன், துணைசெயலாளர்கள் அழகர்சாமி, அறிவழகன், கருப்பையா, தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தர், மாநில இளைஞரணி துணை செயலாளர் பூப்பாண்டி மற்றும் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தலைமைக்கு எதிரான கருத்துக்களை கூறிவரும் அவைதலைவர் திருப்பூர் துரைசாமியை உடனே கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொது செயலாளர் வைகோவை கேட்டு கொள்வது, தி.மு.க.வுடன் ம.தி.மு.க.வை இணைக்க அறிக்கை விடுத்து. தொண்டர்க ளிடையே குழப்பம் ஏற்படுத்தும் திருப்பூர் துரை சாமிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- திருப்பத்தூரில் அ.தி.மு.க. இளைஞர் பாசறை சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
- பெண்கள் மற்றும் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட செயலாளர் பேசினார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அ.தி.மு.க. மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆேலாசனை கூட்டம் நடந்தது. முன்னதாக பஸ் நிலையம் அருகே கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர்-மோர் பந்தல் திறப்புவிழா நடந்தது.
அதனை தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர். செந்தில்நாதன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் இப்ராம்ஷா, மாவட்ட மகளிரணி இணைச் செயலாளரும், சிங்கம்புணரி ஒன்றிய குழுத்தலைவருமான திவ்யாபிரபு ஆகியோர் வரவேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பா ட்டை இளைஞர்- இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பிரபு செய்திருந்தார். இதில் மாநில பாசறை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பரமசிவம் பூத்கமிட்டி அமைப்பது குறித்து சிறப்புரையாற்றினார்.
இதில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கியும், அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எடுத்துரைத்தார். அவர் பேசுகையில், அ.தி.மு.க.வில் 1½ கோடி தொண்டர்கள் இருக்கின்றனர். அதை மேலும் அதிகரிக்க வேண்டும். இதற்கான உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். அ.தி.மு.க.வில் இளைஞர்கள், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண்கள் மற்றும் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். இதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட அவைத்தலைவர் ஏ.வி.நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.உமாதேவன், ஒன்றிய செயலாளர் சிவமணி, மாவட்ட பேரவை இணைச்செயலாளர் முருகேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
- மதுரையில் தமிழர் தேசம் கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
- நிறுவன தலைவர் கே.கே.செல்வகுமார் பங்கேற்றார்.
மதுரை
மதுரையில் தமிழர் தேசம் கட்சியின் தென்மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நிறுவனத் தலைவர் செல்வக்குமார் தலைமையில் நடந்தது.
இதில் மாநில பொதுச்செயலாளர் தளவாய் ராஜேஷ், தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு.மணிகண்டன், மாநில செயலாளர் பனங்காடி வி.எம்.எஸ்.அழகர் மற்றும் தென் மாவட்ட பொறுப்பாளராக பதவி ேயற்ற மதுரை மாவட்ட செயலாளர் சிங்க கண்ணன், மதுரை மாவட்ட மகளிர் அணி கவிதா, மதுரை மாவட்ட இளைஞர் அணி ராஜ்குமார், ஆதி முருகன், கரிசல்குளம் செல்லபாண்டி, மேலூர் ஒன்றிய செயலாளர் ஆத்துகரைபட்டி சரவணன் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்ட கிழக்கு நத்தம் மாவட்ட செயலாளர் பிரபு அம்பலம், அழகுராஜா, வத்திபட்டி துணை செயலாளர், திண்டுக்கல் மாவட்ட இளைஞர் அணி சங்கிலி, திண்டுக்கல் மாவட்ட மேற்கு மாவட்ட விஜய் அம்பலம், திண்டுக்கல் எழில் அன்பு, டாக்டர் அவைத் தலைவர் தூத்துக்குடி மாவட்டம் இசக்கிமுத்து, தேனி மாவட்டம் வழக்கறிஞர் மணிகண்டன், தென்காசி மாவட்டம் திருமலை, மதுரை மாவட்டம் கல்லுபட்டி ராஜ்குமார், ஆனையூர் பகுதி நிவாஸ், மதுரை மாநகரம் பரசுராம்.
தென் மாவட்ட மாநில மாவட்ட மகளிர் அணி,இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி பெரியசாமி ஏராளமான பெண்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் திருமுருகன்பூண்டியில் திருப்பூர் புறநகர் மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தேளி.கே.காளிமுத்து தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில துணைத்தலைவரும், மாவட்ட தலைவருமான எஸ்.கர்ணன்,முன்னாள் மத்திய குழு உறுப்பினர் ராஜசேகர், திருப்பூர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மகேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். எஸ்.ராஜா அனைவரையும் வரவேற்றார். திருப்பூர் மாவட்ட தலைவர் எஸ்.கர்ணன் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளராக மத்திய குழு உறுப்பினர் தேளி.கே.காளிமுத்து தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார். அவருக்கு நிர்வாகிகள், உறுப்பினர்கள் அவருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி இனிப்புகள் வழங்கி வாழ்த்தினர். புறநகர் மாவட்ட தலைவராக தாமோதரன், பொருளாளராக ராமர், துணைத்தலைவராக லட்சுமணன், இணை செயலாளராக எஸ்.ராஜா, தொழிற்சங்க நிர்வாகிகளாக ஈஸ்வரன், ரமேஷ்முருகானந்தம், வெள்ளத்துரை, பிரபு, இளைஞர் அணி நிர்வாகிகளாக வீரமணி, ஜெயராம், சரவணன், மகாதிருநாவுக்கரசு, நவனேஷ், கார்த்திக், மாணவரணி நிர்வாகிகளாக ஜீவா, வினோத்குமார், பிரபாகரன்,பசுபதி, மணிகண்டன், தொண்டர் அணி நிர்வாகிகளாக ரகு,ராஜேஸ், முத்து உள்பட பல்வேறு அணி நகர,ஒன்றிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். கூட்டத்தில் மத்திய பட்ஜெட்டில் கிராமப்புறத்தில் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற வகையில் எந்த திட்டமும் இல்லை. தமிழக அரசு சார்பில் திருப்பூரில் சுதந்திர போராட்ட வீரர் சுபாஸ்சந்திரபோசுக்கு திருஉருவ சிலை அமைக்க வேண்டும். திருப்பூரில் நடந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மோதல் போக்கை தடுக்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், சமூக நல அமைப்புகள் இணைந்து ஆலோசனைக்கூட்டம் நடத்த வேண்டும். திருப்பூர் புறநகரில் பாதிப்படைந்து வரும் பனியன்,பவர் லூம் சிறு,குறு தொழில்களின் பின்னடைவுக்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே காரணமாகும். இ்தற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- ராஜபாளையத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
- இந்த கூட்டத்தில் ஜெயா கல்வி குழுமங்களின் சேர்மன் கனகராஜ் கலந்து கொண்டு பேசினார்.
ராஜபாளையம்
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேசன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கம் சார்பில் தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராஜபாளையம் காமராஜர் நகரில் உள்ள தொழில் வர்த்தக சங்க கூட்ட அரங்கில் நடந்தது.
விருதுநகர் மாலட்ட தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லட்சுமணபெருமாள் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாநில தலை வரும், சென்னை ஜெயா கல்வி குழுமங்களின் நிறுவன தலைவருமான டாக்டர் கனகராஜ் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் கல்வி கற்றுத் தரும் விதத்தை 2 ரகமாக பிரித்து பார்த்தால் சுலபமாக புரிந்து கொள்ளலாம். சுதந்தி ரத்திற்கு முன்பு, பின்னர் என்று எடுத்துக் கொள்ளலாம். கடும் எதிர்ப்புகளையும் தாண்டித்தான் நர்சரி,பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. வாயிலாக தரமான ஆங்கில வழிக்கல்வியை கற்பிக்க முடிந்தது. அதன் பலனாகத் தான் தமிழ்நாட்டுக்கு பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளை வெளிக் கொண்டு வரமுடிந்தது.
கல்விக் கண் திறந்த காமராஜர் அவதரித்த புண்ணியபூமி என்பதால் விருதுநகர் மாவட்டம் அரசு தேர்வில் தொடர்ந்து விருதுகளை குவித்து வருகிறது. அரசு பள்ளிகளில் பல சலுகைகள் வழங்கப்பட்டாலும் நாம் என்றும் தரமான கல்வியை வழங்கும் நிறுவனங்க ளாகவும், ஒழுக்கத்தையும் வாழ்க்கையில் மேன்மையுற கடைப்பிடிக்க வேண்டிய நல்ல பழக்கவழக்கங்களை கற்றுதரும் சிறந்த கல்வி நிறுவனங்களாகவும் திகழவேண்டும்.
தரம், நிரந்தரம் ஆக்கப்படும் போது தான் குழந்தைகளை பெரிய, பெரிய அதிகாரிகளாக வளர்க்க முற்படும் பெற்றோர்கள் நமது கல்வி நிலையங்களை தேடி வருவார்கள். அவர்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
விருதுநகர் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு கேடயமும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
பள்ளி கட்டிடங்களுக்கு சொத்து வரி விதிக்கக்கூடாது, விண்ணப்பித்து காத்திருக்கும் பள்ளிகளுக்குதொடர் அங்கீகாரசான்று வழங்க வேணடும், ஆர்.டி.இ கல்வி கட்டணத்தை உடனே வழங்க வேண்டும், அனைவருக்கும் ஒரே மாதிரியான, நியாயமான கல்வி கட்டணம் நிர்ணயிக்க வேண்டும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொதுசெயலாளர் நந்தகுமார், சாத்தூர் சன் இந்தியா பப்ளிக் பள்ளி நிர்வாகி சுரஜ்குமார் உள்பட பலர் பேசினர். மாவட்ட பொருளாளர் கந்தையா நன்றி கூறினார்.
இதற்கான எற்பாடுகளை விருதுநகர் மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- ஓ.பி.எஸ். அணி அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
- அ.தி.மு.க. அடிமட்ட தொண்டர்கள் தான் அவர்களுக்கு வாரிசு என்றார்.
வாடிப்பட்டி
மதுரை மாநகர் மாவட்டம் பரவை பேரூர், மேற்குதொகுதி ஊராட்சி அ.தி.மு.க. ஓ.பன்னீர் செல்வம் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் எம்.பி.கோபால கிருஷ்ணன் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், தற்போது அ.தி.மு.க.வில் ஓ பன்னீர் செல்வம் கரத்தை வலுப்படுத்த இருப்பவர்கள் உண்மையான அ.தி.மு.க. தொண்டர் அணியினர். எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருப்பவர்கள் டெண்டர் பெற்ற அணியினர். தனக்கு கிடைக்காதது யாருக்கு கிடைக்கக் கூடாது என்ற எண்ணம் படைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த இயக்கம் மனிதரால் ஆரம்பிக்கப்பட்டது அல்ல. மனித புனிதர் எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருக்கும் பிள்ளைகள் கிடையாது வாரிசுகள். கிடையாது. அ.தி.மு.க. அடிமட்ட தொண்டர்கள் தான் அவர்களுக்கு வாரிசு என்றார்.
- மதுரையில் அகில இந்திய நாடார் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
- சிறப்பு அழைப்பாளராக நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கலந்து கொண்டார்.
மதுரை
அகில இந்திய நாடார் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் மதுரை எம்.கே.புரம் வாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
மாநில செயலாளர் செல்வராஜ் நாடார் வரவேற்றார். முருகானந்தம் நாடார் தலைமை தாங்கினார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநில நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஏ.பி.எஸ். லிங்கம்நாடார், கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், சுந்தரேசனார் நாடார், முருகானந்தம் நாடார் உள்ளிட்ட பலர் பேசினர்.
சிறப்பு அழைப்பாளராக நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் கலந்து கொண்டார். கொள்கை பரப்புத்துறை மாநில ஒருங்கிணைப்பாளர் நாலுமாவடி ராமஜெயம் நாடார் நன்றி கூறினார்.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
- இயற்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான்.
அரவேணு
கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் பொரங்காடு சீமை படுகர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு சங்கத் தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், ஹரிச்சந்திரன் செயலாளர் ரவி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன. வருகிற 1-ந் தேதி இயற்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் படுக அகராதி வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்துவது .
மேலும் தேயிலைக்கு குறைந்த பட்சம் ரூபாய் 30 விலை நிர்ணயம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது விவசாயி நிலங்களை சீரழித்து வரும் பன்றிகளை சுட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் பொருளாளர் சிவசுப்பிரமணி, நிர்வாகி ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்