என் மலர்
நீங்கள் தேடியது "கண் சிகிச்சை முகாம்"
- கோபிசெட்டிபாளையத்தில் போலீசார்களுக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
- இந்த முகாமில் கண்கள் சம்பந்தமான குறைபாடுகள் குறித்து பரிசோதிக்கப்பட்டது.
கோபி:
கோபிசெட்டிபாளையத்தில் போலீசார்களுக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் போலீசாருக்கு கிட்ட ப்பார்வை, தூரப்பார்வை மற்றும் கண்கள் சம்பந்த மான குறைபாடுகள் குறித்து பரிசோதிக்கப்பட்டது.
முகாமில் கோபி உட்கோட்டத்துக்கு உட்பட்ட கோபி, சிறுவலூர், கவுந்தப்பாடி,நம்பியூர்,கடத்தூர், வரப்பாளையம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் இருந்து இன்ஸ்பெக்டர்கள், மற்றும் சப்-இன்ஸ்பெக்ட ர்கள். ஏட்டுகள், இரண்டாம் நிலை, முதல் நிலை போலீ சார், போக்குவரத்து போலீ சார் என ஏராளமனோர் கண்சிகிச்சை முகாமில் கலந்து கொண்டனர்.
இதில் ஈரோடு டாக்டர் விஜயகுமார் தலைமையிலான மருத்துவர் குழுவினர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தனர்.
- கண் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவர் ஆலோசனை வழங்கினார்.
- குறைந்த விலையில் கண்ணாடி கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் கோபி கிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில், மத்தூர் மாநகர அரிமா சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் கோபி கிருஷ்ணா பள்ளி தலைவர் எம்.கே.எஸ் மாதன் முன்னிலை வகித்தார். எம்.கே.எஸ் பள்ளியின் தாளாளர் புஷ்பக் தலைமை யேற்று, குத்துவிளக்கு ஏற்றி கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். பள்ளி துணைத் தலைவர் எம்.கே.எஸ் பிரசன்ன குமார் வாழ்த்துரை வழங்கினார்.
இம்முகாமில் கண்ணில் புரை, கண்ணில் நீர் வடிதல், உள்ளிட்ட அனைவருக்கும் விரிவான கண் பரிசோதனை செய்யப்பட்டு கண் மருத்துவர் கலந்து ஆலோசனை வழங்கினார்.
மேலும் கண்ணாடி அணிபவர்களின் கண்ணாடி பரிசோதித்து மிக குறைந்த விலையில் ஓரிரு நாட்களில் கண்ணாடி கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் இப்பள்ளியில் படித்த மாணவி ரம்யா அரசு மருத்துவக் கல்லூரியில் பயில தேர்வாகியுள்ளார் என கோபி கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் புஷ்பக் தெரிவித்தார். இதனை யடுத்து அந்த மாணவியை அனைவரும் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மத்தூர் மாநகர அரிமா சங்க உறுப்பினர்கள் பள்ளியின் முதல்வர் நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் முதியோர் ஏராளமானோர் கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
- ராஜபாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரெங்க பாளையம் சீட்டு அழகுராஜா குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் சக்கராஜா கோட்டை முதனூர் தாயாதியார் சாவடியில் ஸ்ரீரெங்கபாளையம் சீட்டு அழகுராஜா நினைவாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, சக்கராஜாகோட்டை சத்திரிய ராஜுக்கள் பொதுமகாசபை, விருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுத்துச் சங்கம் நிதி உதவியுடன் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. சக்கராஜாகோட்டை ராஜூக்கள் மகாசபை தலைவர் சின்ன வெங்கட்டராஜா முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அறுவை சிகிச் சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் உடனடியாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு விழிலென்ஸ் பொருத்துதல், உணவு, தங்கும் இடம், மருத்துவம் மற்றும் போக்குவரத்து செலவு அனைத்தையும் இலவசமாக செய்து கொடுக்கப்பட்டது. மேலும் இலவச பல் சிகிச்சை முகாமும் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீரெங்க பாளையம் சீட்டு அழகுராஜா குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
- விருதுநகர் அருகே இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
- முகாம் ஏற்பாடுகளை சக்கராஜா கோட்டை சத்திரிய ராஜுக்கள் மகாசபை தேசிங்கு ராஜா பண்ணை குடும்பத்தார் செய்திருந்தனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சக்கராஜா கோட்டை பூசப்பாடி தாயார் பி.ஏ.சி ராமசாமி ராஜா பண்ணை மாளிகையில் விருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் சக்கராஜாகோட்டை மகாசபை மற்றும் தேசிங்கு ராஜா நினைவாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமை சக்கராஜா கோட்டை ராஜூக்கள் மகாசபை தலைவர் சின்ன வெங்கட ராஜா தொடங்கி வைத்தார்.
கண் சிகிச்சை சக்தி கண் மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ் குழுவினர் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு கண்புரை, கண்ணீர் அழுத்தம், நீர் வடிதல், மாலை கண், மாறு கண், கண்களில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளித்தனர். முகாமில் கண்புரை உள்ளவர்களை அன்றே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இலவச லென்ஸ் பொருத்தப்பட்டனர் மேலும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் லென்ஸ் பொருத்துபவர்களுக்கும் இலவசமாக மருந்துவம் மற்றும் கண் கண்ணாடி சலுகை விலையில் வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை சக்கராஜா கோட்டை சத்திரிய ராஜுக்கள் மகாசபை தேசிங்கு ராஜா பண்ணை குடும்பத்தார் செய்திருந்தனர்.
- காரிமங்கலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது
- முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தொடங்கி வைத்தார்.
.தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் நகர தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
ஸ்ரீ பி.சி.ஆர். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்த முகாமிற்கு நகர செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். விவசாய அணி மாநில துணை தலைவர் சூட்டப்பட்டி சுப்பிரமணி, மாவட்ட துணை செயலாளர் வக்கீல் மணி, பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர் மனோகரன் முன்னிலை வகித்தார்.
மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார்.முகாமில் சிறப்பு மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கண் சம்பந்தப்பட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சை களை வழங்கி அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணி மேற்கு மாவட்ட அமைப்பாளர் சிவகுரு, துணை அமைப்பா ளர்கள் ஹரிபிரசாத், மகேஷ்குமார், கவுன்சிலர்கள் சக்திரமேஷ், மாதப்பன், கீதா முத்துசெல்வம், ரமேஷ், சதீஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் குட்டி, ஒன்றிய கவுன்சிலர் முருகன், பள்ளி முதல்வர் சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை எம்.டி.சமுதாய அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
- இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
மதுரை
மதுரை எம்.டி. சமுதாய அறக்கட்டளை பெண்களுக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்த அறக்கட்டளையின் சார்பில் விசாலாட்சி புரத்தில் உள்ள சித்து மெட்ரிக் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இம்முகாமில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், குழந்தைகள், முதியோர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
முகாமில் கணினி அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் பார்வை குறைபாடு, கண் நரம்பு சிகிச்சை. கண்பார்வை சோதனை, கண் அழுத்த சோதனை, கண்புரை, நீரழிவினால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, அடிக்கடி தலைவலி, கண் நரம்பு ஆகியவற்றால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சையும் ஆலோசனையும் வழங்கப்பட்டது. இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்க ப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி யின் தாளாளர் சுகன்யா ஜெகநாதன், பள்ளி தலைமை ஆசிரியர் கவுரி சாலமன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் கண் பரிசோதனை முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் எம்.டி. சமுதாய அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர். இ.ஜெரினா நன்றி தெரிவித்தார்.
- 100க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
- குறைபாடுகள் கண்டறியப்பட்டு காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக அறுவை சிகிச்சையும் செய்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருப்பூர் :
திருப்பூர் 54-வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் சி .அருணாச்சலம் தலைமையில், மாவட்ட பார்வை இழப்பு சங்கம் மற்றும் திருப்பூர் ஐ பவுண்டேஷன் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் திருப்பூர் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக திருப்பூர் துணை மேயர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். 54 -வது வார்டு கவுன்சிலரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 4ம் மண்டல பொறுப்பாளர் அருணாச்சலம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பாரதி, ஜெயக்குமார், ஜீவானந்தம், ஜீவா ஆகியோர் உடனிருந்தனர்.
சிகிச்சை முகாமில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் 100க்கு ம் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். கண் பரிசோதனையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக அறுவை சிகிச்சையும் செய்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.