என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஊர்க்காவல் படை"
- மாணவர் ஓட்டிச் சென்ற கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
- போலீசார் மாணவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.
தெலுங்கானா மாநிலம் பஞ்சகுட்டா போலீஸ் நிலையத்தை சேர்ந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஞ்சநேயலு, ஊர்க்காவல் படை வீரர் ரமேஷ் ஆகியோர் நாகார்ஜுன சர்க்கிள் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஐதராபாத்தை சேர்ந்த சையது மஜுதீன் நசீர் (வயது 20) என்ற மாணவர் தனது காரில் கல்லூரிக்கு சென்று கொண்டு இருந்தார். அவரது காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.
இதனைக் கண்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆஞ்சநேயலூ, ஊர்காவல் படை வீரர் ரமேஷ் ஆகியோர் காரை நிறுத்துமாறு சைகை செய்தனர்.
மாணவர் காரை நிறுத்தாமல் வந்தார். இதனால் ஊர்க்காவல் படை வீரர் ரமேஷ் காரின் பேனட்டை பிடித்தார். அப்போது மாணவர் காரை வேகமாக ஓட்டினார். ரமேஷ் காருக்கு முன் பகுதியில் தொங்கியபடி சென்றார்.
மேலும் கத்தி கூச்சலிட்டார். மாணவர் ஓட்டிச் சென்ற கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட போலீசார் காரை மடக்கி ரமேசை மீட்டனர். போலீசார் மாணவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.
காரில் ஊர்க்காவல் படை வீரர் இழுத்து செல்லப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
- இரவு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரத்தை சேர்ந்தவர் சிவசுபன் (வயது 28). இவர் ஊர் காவல் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சசிகலா (27). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை சம்பந்தமாக தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல நேற்று இரவு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிவசுபன் வீட்டுக்கு வெளியில் வந்து படுத்து தூங்கி உள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் உள்ள படுக்கை அறையில் படுத்திருந்த சசிகலா நேற்று இரவு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலையில் வீட்டுக்கு வெளியே படுத்திருந்த சிவசுபன் எழுந்து வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது சசிகலா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது பற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி னார்கள்.
அதன்பிறகு அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியா குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட் டது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தமிழ்நாடு ஊர்க்காவல் படை சார்பில் ஊர்க்காவல் படை விளையாட்டு போட்டிகள் நடந்தது.
- இந்த போட்டிகள் ராஜபாளையம் பி.ஏ.சி.எம். மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
ராஜபாளையம்
தமிழ்நாடு ஊர்க்காவல் படை சார்பில் அடுத்த மாதம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி மதுரை சரக அளவிலான விளையாட்டுப் போட்டி மற்றும் பணி திறன் போட்டிகளுக்கான தேர்வு ராஜபாளையம் பி.ஏ.சி.எம். மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மதுரை சரக துணை தளபதி ராம்குமார் ராஜா தலைமை தாங்கினார்.
இந்த போட்டி தேர்வில் விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டாரத் தளபதி அழகர்ராஜா, மதுரை மாவட்ட ஊர் காவல் படை வட்டார தளபதி ஆனந்த் வெங்கடேஷ், மதுரை மாநகர வட்டார தளபதி வெங்கடேஷ், விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார துணை தளபதி அருள் செல்வி, மதுரை மாவட்ட வட்டார துணை தளபதி இந்திராகாந்தி, மதுரை மாநகர வட்டார துணை தளபதி சகாயஜென்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விளையாட்டுப் போட்டி தேர்வை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடந்தது.
- 20 வயதிற்கு மேற்பட்டவராகவும், 45 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
- எந்த அரசியல் அமைப்பைச் சார்ந்தவராகவும் இருக்கக்கூடாது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படை பணிகளுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அறிவித்துள்ளது. திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, திருப்பூர் மாநகரில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆண், பெண் ஆகியோர் ஆளினர் பதவிக்கு நிரப்பப்பட உள்ளனர்.
இந்த பணிகளுக்கான விண்ணப்பத்தை திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இந்தப் பணியில் சேர 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 20 வயதிற்கு மேற்பட்டவராகவும், 45 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். நல்ல உடல் தகுதியுடனும், நன்னடத்தை உடையவராகவும் இருக்க வேண்டும். எந்த அரசியல் அமைப்பைச் சார்ந்தவராகவும் இருக்கக்கூடாது. திருப்பூர் மாநகரப் பகுதிக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். தகுதியுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் 24-ந் தேதிக்குள் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஊர்க்காவல் படை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- விருதுநகர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு வருகிற 12-ந் தேதி நடக்கிறது.
- தகுதி வாய்ந்த நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் ஊர்காவல் படையில் காலியாக உள்ள பணி யிடத்திற்கு சேவை செய்ய மற்றும் தன்னார்வ மனப்பான்மையுடன் பணியாற்ற ஆட்கள் தேர்வு வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற உள்ளது.
விருதுநகர் மாவட்ட ஊர்காவல் படையில் பணிபுரிய விருப்பமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் நேரில் வந்து கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள வேண்டிய நபர்கள் நல்ல உடல் திறன் மற்றும் கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், வயது 18 முதல் 45 வயது உடையவராகவும், எந்தவித குற்றப்பின்னணி இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.
சாதி, மதம், அரசியல் மற்றும் எந்தவித சங்கத்திலும் உறுப்பினராக இருக்க கூடாது. அரசு ஊழியராக இருந்தால் அவர்கள் தங்கள் துறைசார்ந்த அதிகாரியிடம் தடையில்லாச்சான்று பெற்று சமர்பிக்க வேண்டும். என்.சி.சி., என்.எஸ்.எஸ்., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஊர்காவல் படையில் வீரர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு காவல் துறையினரின் மூலம் 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். ஊர்காவல் படை வீரர்க ளுக்கு மாதத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படும். அவ்வாறு பணிபுரியும் ஊர்காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு மதிப்பூதியமாக ரூ.560 வழங்கப்படும்.
நேர்முக தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கல்வி தகுதிக்கான அசல் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் இவைகளுக்குண்டான நகல், சமீபத்தில் எடுக்கப்பட்ட 3 பாஸ்போர்ட் புகைப்படம் அனைத்தும் எடுத்து வர வேண்டும். தகுதி வாய்ந்த நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போலீஸ் சூப்பிரண்டு தகவல்
- ஒரு நபருக்கு ஒரு மாதத்துக்கு 5 அழைப்பு பணி மட்டுமே இருக்கும்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு வலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
குமரி மாவட்ட ஊர்க்கா வல் படையில் 20 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 23 பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளன. ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப வினியோகம், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு வலகத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்று, நாளை (16-ந்தேதி) மாலை 5 மணிக்குள், எஸ்.பி. அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பதாரர் 31.10.22 அன்று 18 வயது முடிவு பெற்றவராக இருக்க வேண்டும்.
50 வயதுக்கு மேல் இருக்க கூடாது. நல்ல உடல் ஆரோக் கியம் உடையவராகவும், நன்னடத்தை மற்றும் நல் லொழுக்கம் உடையவராக வும் இருக்கவேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் நாட்டை சேர்ந்தவராகவும், தமிழ்நாட் டில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். பொது நலத்தொண்டில் ஆர்வம் உடையவராக இருக்க வேண்டும்.
குறைந்தது மூன்று வரு டம் பணிபுரிய விருப்பம் உள் ளவராக இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழி யராகவோ, சுய வேலை பார்ப்பவர்களாகவோ அல்லது ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்களாகவோ இருத்தல் வேண்டும். ஒரு அழைப்புக்கான ஊதியம் ரூ.560 ஆகும். ஒரு நபருக்கு ஒரு மாதத்துக்கு 5 அழைப்பு பணி மட்டுமே இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இத்தேர்வில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த ஆண்களும், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண்களும் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
- வயது வரம்பு 18 முதல் 45 வரை இருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் உயரம் 167 செ.மீ., பெண்கள் உயரம் 157 செ.மீயாக இருக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 35 பணியிடங்களுக்கு (34 ஆண் மற்றும் 1 பெண்) தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர்களுக்கு மட்டும் ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.
இத்தேர்வில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த ஆண்களும், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண்களும் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
இத்தேர்விற்கான விண்ணப்பங்கள் தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நாளை ( வெள்ளிக்கிழமை ) காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை மட்டுமே வழங்கப்படும்.
ஊர்க்காவல் படையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை நேரில் பெற்று உரிய முறையில் பூர்த்தி செய்து, சமீபத்தில் எடுக்கப்பட்ட 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் இருப்பிட முகவரிக்கான ஆதார் அட்டையின் நகல்கள் ஆகியவற்றுடன் இணைத்து வரும் 17.10.2022 அன்று காலை 6 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் உடற்தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வில் கலந்த கொள்ளலாம். தேர்வில் கலந்து கொள்ளும் அனைவரும் அசல் கல்விச்சான்றிதழ்கள் மற்றும் அசல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.
வயது வரம்பு 18 முதல் 45 வரை இருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் உயரம் 167 செ.மீ., பெண்கள் உயரம் 157 செ.மீயாக இருக்க வேண்டும்.
ஆண்கள் மார்பளவு 81-86 செ.மீ ஆக இருக்க வேண்டும்.
ஆண்/பெண் -100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஊர்க்காவல் படையில் பணிபுரிய இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- அரியலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. தகவல்
அரியலூர் :
அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊர்க்காவல் படையினருக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 25 ஆண்கள் மற்றும் 3 பெண் பணியிடங்களை பூர்த்தி செய்யவதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் வழங்கப்படுகிறது. இந்த இரு தினங்களிலேயே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பெறாதவர்களாக இருக்கலாம். ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பாலரும் சேரலாம். உடல் ஆரோக்கியமாகவும் தேர்வு நடைபெறும் நாட்களில் 20 வயது நிறைந்தவராகவும், 45 வயது நிறைவடையாதவராகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்.
கல்விச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியன அசல் மற்றும் நகல்கள் ஒன்று எடுத்து வர வேண்டும். தற்போது எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 எடுத்து வர வேண்டும்.
இந்திய குடியுரிமை பெற்றவராகவும், அரசியல் கட்சி தொடர்பு இல்லாதவராகவும் இருக்க வேண்டும். மேலும் உடல் தகுதிகள் காவல்துறையை போன்றது. ஆண்களில் பி.சி., எம்.பி.சி. போன்ற பிரிவினருக்கு 170 செ.மீ. உயரமும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 167 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும்.
மார்பளவு அனைவருக்கும் சாதாரணமாக 81 செ.மீ. விரிந்த நிலையில் 86 செ.மீ. இருக்க வேண்டும். பெண்களில் பி.சி., எம்.பி.சி. பிரிவினுருக்கு 159 செ.மீ. உயரமும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 157 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். இப்பணிக்கு மாதம் ஊதியம் எதுவும் இல்லை. பணி நாட்களுக்கு உரிய படித்தொகை மட்டும் தரப்படும்.
பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஊர்க்காவல் படைக்கு மூன்று ஆண்டுகள் கட்டாயம் தொடர்ந்து வருகை தர வேண்டும். தேர்வு நாளன்று எவ்வித பயணப்படியும் வழங்கப்பட மாட்டாது. 45 நாட்கள் கவாத்து பயிற்சி நடைபெறும்.
அரசு பணியில் உள்ளவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- கடலூரில் ஊர்க்காவல் படை கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது.
- கடலோர காவல் குழமம் பணிக்கு 35 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஊர்க்காவல் படைக்கு 24 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் ஊர்காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு ஆட்கள் உடற்தேர்வு இன்று கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. ஊர்க்காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமம் ஆட்கள் தேர்வு நடைபெறுவதை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் சக்திகணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் கடலோர காவல் குழமம் பணிக்கு 35 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஊர்க்காவல் படைக்கு 24 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கடலோர காவல் படை மற்றும் ஊர்க்காவல் படை உடற்தேர்வு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன், ஊர்க்காவல் படை வட்டார தளபதி அம்ஜத்கான், ஊர் காவல் படை துணை வட்டார துணைதளபதி கலாவதி, ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருட்செல்வம், ஊர் காவல் படை சப் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் மற்றும் காவல் அதிகாரிகள், ஊர் காவல் படை அதிகாரிகள் உடற்தேர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்