search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துண்டுபிரசுரம்"

    • பொதுமக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
    • இளைஞர்கள் மற்றும், பெண்கள் மத்தியில் 100 சதவீதம் வரவேற்பு கிடைத்துள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சை அருகே உள்ளது பொன்னப்பூர் கிழக்கு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், தங்கள் ஊருக்குள் மது உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என ஏகமனதாக முடி வெடுத்துள்ளனர்.

    இந்த முடிவின்படி பொன்னாப்பூர் கிழக்கு கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மது உள்ளிட்ட எந்தவிதமான போதைப் பொருளையும் விற்க தடை செய்யப்பட்டுள்ளது, மீறி விற்றாலோ விற்பனைக்குத் துணை போனாலோ அது இந்த கிராமத்துக்கு நீங்கள் செய்யும் துரோகம்.

    பல குடும்பங்களின் பாவ செயலில் ஈடுபடாதீர்கள் என போஸ்டர் அடித்து பஸ் நிறுத்தம், மளிகை கடைகள், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் ஒட்டியுள்ளனர்.

    அத்துடன் மது உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக, வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து கிராம இளைஞர்கள் கூறும்போது, 'இளைஞர்கள் ஒன்றிணைந்து எங்கள் கிராமத்துக்குள் போதைப்பொருள் விற்பதையும் பயன்படுத்துவதையும் தடை செய்வது என முடிவு செய்துள்ளோம். இந்த முடிவுக்கு இளைஞர்கள் மற்றும், பெண்கள் மத்தியில் 100 சதவீதம் வரவேற்பு கிடைத்துள்ளது.

    கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் எங்கள் கிராமம் மிகவும் பின் தங்கி உள்ளதுக்கு போதைப் பொருள் பயன்பாடு தான் காரணம். ஆகவே எங்கள் ஊரின் ஒட்டுமொத்த நலனுக்காக போதைப்பொருள் பயன்படுத்தக்கூடாது விற்கக் கூடாது என முடிவெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    நாங்கள் மற்ற கிராமங்களுக்கு முன்மாதிரியாக விளங்குவதில் பெருமையாக உள்ளது என்றனர். இளைஞர்களின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • ஸ்பர்ஷ் தொழு நோய் குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் விழிப்புணர்வு.
    • கடைவீதி, பஸ் நிலையங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டரின் உத்தரவுபடியும், மாவட்ட சுகாதார அலுவலர் மற்றும் மாவட்ட தொழுநோய் அலுவலர் அறிவுறுத்தலின் படியும் இடையூர் சங்கேந்தி வட்டார மருத்துவ அலுவலர் கிள்ளிவளவன மேற்பார்வையில் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிழ்ச்சி பள்ளியின் தலைமை யாசிரியர் நித்தையன் தலைமையில் நடைபெற்றது.

    இடையூர் சங்கேந்தி மருத்துவம் சாரா மேற்பா ர்வையாளர் கதிரேசன், ஸ்பர்ஷ் தொழு நோய் குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் வருவதை தடுப்பது குறித்தும் விரிவாக விழிப்புணர்வு செய்தார். அதனை தொடர்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர் .மேலும் கடைவீதி, பேருந்து நிலையம் போன்றவற்றில் விழிப்புணர்வு துண்டுபிர சுரங்கள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஆரோக்கிய அந்தோணி ராஜா, செல்வசிதம்பரம், அன்பரசு, முருகேசன், முத்து லெட்சுமி, இந்திரா, அமிர்தம், பென்சிராணி, வனிதா மற்றும் சுகாதாரத்துறையினர் பங்கேற்றனர்.

    • கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரத்தை வினியோகம் செய்தனர்.
    • பொள்ளாச்சி ரோடு, பூ கடைக்கார்னர்,தினசரி மார்க்கெட், தாலுகா ஆபீஸ்ரோடு மற்றும் உடுமலை ரவுண்டானா பகுதிகளில் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.

     தாராபுரம்:

    தாராபுரம் தீயணைப்பு துறை நிலை அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்புத்துறை ஊழியர்கள் தீபாவளி பண்டிகை குறித்து விபத்தில்லா பட்டாசை பயன்படுத்த வேண்டி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தாராபுரம் கடைவீதி பகுதியில் துண்டு பிரசுரம் வழங்கி கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரத்தை வினியோகம் செய்தனர்.

    அப்போது பொள்ளாச்சி ரோடு, பூ கடைக்கார்னர், தினசரி மார்க்கெட், தாலுகா ஆபீஸ் ரோடு மற்றும் உடுமலை ரவுண்டானா பகுதிகளில் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. துண்டு பிரசுரத்தில் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் தன் குழந்தைகளை தங்கள் கண்முன்னே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். வாளிகளில் நிறைய தண்ணீர் மற்றும் மணல் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். நீண்ட ஊதுபத்தி உபயோகத்தில் பக்கவாட்டில் பட்டாசு கொளுத்துவது நல்லது. அவ்வாறு கொழுத்தும்போது முகத்தை திருப்பியவாறு கொள்ள வேண்டும் உள்பட பல்வேறு நெறிமுறைகள் அந்த துண்டு பிரசுரத்தில் இடம் பெற்றுள்ளது. 

    • பேரணியில் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி புறப்பட்டனர்.
    • போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதைப்பொருள் பயன்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தியும் செல்லும் வழியில் பொது மக்களுக்கு துண்டுபிரசுரம் விநியோகித்தனர்.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் சர்வதேச போதை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தஞ்சை ரயிலடியில் இன்று காலை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி புறப்பட்டனர். அப்போது போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதைப்பொருள் பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியும் செல்லும் வழியில் பொது மக்களுக்கு துண்டுபி ரசுரம் விநியோகித்தனர். பேரணியானது பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களின் வழியாக சென்று தஞ்சை அரண்மனை வளாகத்தில் நிறைவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் வெங்கடேசன், மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம், டாக்டர்கள் சிங்காரவேலு, பாரதி, நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சமூக ஆர்வலர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×