என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழனி முருகன் கோவில்"

    • ஏப்ரல் 11-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
    • பக்தர்கள் விரதம் இருந்து தீர்த்தக் காவடி எடுக்க தயாராகி வருகின்றனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களின் பங்குனி உத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    இத்திருவிழாவின் போது பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து மலைக்கோவில் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு அம்சமாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரத்திருவிழா ஏப்ரல் 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    திருஆவினன்குடி கோவிலில் காலை 11 மணிக்கு மேல் நண்பகல் 12 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமி தங்க குதிரை வாகனம், தங்க மயில், வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்க குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினமும் இரவு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    6ம் நாள் நிகழ்ச்சியாக ஏப்ரல் 10-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் வள்ளிநாயகி அம்மன், திருமுருகன், திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு மேல் வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக 7ம் நாளான ஏப்ரல் 11-ந் தேதி பங்குனி உதிரத்தன்று தேரோட்டம் நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு கிரி வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் நிறைவாக ஏப்ரல் 11-ந் தேதி இரவு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி உலா வரும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கொடி இறக்கமும் நடைபெறும். பங்குனி உத்திரம் தொடங்க உள்ள நிலையில் பக்தர்கள் விரதம் இருந்து தீர்த்தக் காவடி எடுக்க தயாராகி வருகின்றனர்.

    • இந்திய நேரப்படி பிற்பகல் 2.20 முதல் மாலை 4.17 மணி வரை நிகழ உள்ளது.
    • நாளை வழக்கம் போல் 6 கால பூஜைகள் நடைபெறும்.

    பழனி:

    இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ்வு தெரியாது என்பதால் நாளை பழனி முருகன் கோவிலில் வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    வானியல் நிகழ்வுகளில் கிரகணங்கள், கிரகண காலங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த வகையில் நாளை (29-ந் தேதி) இந்திய நேரப்படி பிற்பகல் 2.20 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி மாலை 4.17 மணி வரை நிகழ உள்ளது.

    இந்த நிகழ்வு இந்தியாவில் தெரியாது என்பதால் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சூரிய அனுஷ்டானம் கிடையாது. எனவே நாளை வழக்கம் போல் 6 கால பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் எப்போதும்போல் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வழக்கமாக சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தின் போது குறிப்பிட்ட நேரத்துக்கு பழனி முருகன் கோவிலில் அனைத்து சன்னதிகளும் அடைக்கப்படும். பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.

    கிரகணம் முடிந்து பரிகார பூஜைகளுக்கு பின்னே கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நாளை பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் உப கோவில்களான திருஆவினன்குடி, பெரியாவுடையார், பெரியநாயகி அம்மன் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் வழக்கமாக பூஜைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • செல்வமணியை உடனடியாக மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
    • செல்வமணி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த 11 ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்றுவிட்டு பழனிக்கு சென்றனர்.

    அப்போது, செல்வமணி என்பவர் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தபோது திடீரென மூச்சுத்திணறல், நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கினார்.

    பிறகு, செல்வமணியை உடனடியாக மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், செல்வமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்றுக் கொண்டிருந்த பக்தர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

    • கார்த்திகை மாதம் பிறந்ததை யொட்டி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு அய்யப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து கோவிலுக்கு சென்று வருகிறார்கள்.
    • மேலும் 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 2480 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2590 ரூபாய்க்கும், சராசரி விலையாக 2580 ரூபாய்க்கும் ஏலம் போனது.

    கவுந்தப்பாடி:

    கார்த்திகை மாதம் பிறந்ததை யொட்டி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு அய்யப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து கோவிலுக்கு சென்று வருகிறார்கள்.

    பழனி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பெரு ம்பாலானோர் பஞ்சாமிர்த பிரசாதம் வாங்கிச் செல்வார்கள். இதனால் பஞ்சாமிர்த பிரசாதம் பெரு மளவில் விற்பனை செய்ய ப்படுகிறது.

    பழனி கோவிலில் தயாரி க்கப்படும் பஞ்சாமிர்தம் பிரசாதத்தின் மூலப்பொரு ளான நாட்டு சக்கரை கவுந்தப்பாடி பகுதியில் இருந்து அதிகளவில் ஏற்று மதி செய்யப்பட்டு வருகிறது.

    இதையொட்டி இந்த வாரம் கவுந்தப்பாடி விற்ப னைக் கூடத்தில் இருந்து ரூ.87 லட்சத்து 8 ஆயிரத்துக்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கரும்புச்சர்க்கரை (நாட்டு சர்க்கரை) ஏலம் நடை பெற்றது. ஏலத்தில் ஓ டத்துறை, மாரப்பம்பாளையம், ஆண்டி பாளையம் பொன்னாச்சி புதூர், பெரு ந்தலையூர், நல்லி கவுண்டனூர், அய்யம்பாளையம், வேலம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 3649 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.

    இதில் 60 கிலோ மூட்டை முதல் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.2600-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2620-க்கும், சராசரி விலையாக ரூ.2600-க்கும் ஏலம் போனது.

    மேலும் 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 2480 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2590 ரூபாய்க்கும், சராசரி விலையாக 2580 ரூபாய்க்கும் ஏலம் போனது.மொத்தம் 2900 மூட்டைகள் 2 லட்சத்து 5 ஆயிரத்து 980 கிலோ எடையுள்ள கரும்புச்சர்க்கரை ரூ.87 லட்சத்து 8 ஆயிரத்து 290-க்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாகம் கொள்முதல் செய்தனர்.

    மேலும் பழனி முருகன் கோவில் சார்பில் வரும் வாரங்களில் அதிகமான கரும்பு சர்க்கரை கொள்முதல் செய்வார்கள் எனவும் விற்பனைக் கூடத்தின் கண்காணி ப்பாளர் தெரிவித்தார்.

    • பழனி கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை கண்டறிந்து மீட்க அதிகாரிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
    • வழக்கின் விசாரணையை நீதிபதி வரும் பிப்ரவரி 15-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    சென்னை:

    திண்டுக்கல் மாவட்டம் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு, கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த பலர் 220 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர். இந்த நிலங்களை கண்டறிந்து மீட்கக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அவர் தாக்கல் செய்த மனுவில், பழனி கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை கண்டறிந்து மீட்க பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அடங்கிய குழுவை அமைத்து கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்ததாகவும், ஆனால் அதன் பின்னர் இந்த விவகாரத்தில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்த போது, கோவிலுக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்துக்களை அடையாளம் கண்டு மீட்பது தொடர்பாக அதிகாரிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோவை மாவட்ட கலெக்டருக்கு தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பிருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து இந்த கூட்டத்தை பிப்ரவரி 1-ந்தேதி முதல் 9-ந்தேதிக்குள் கூட்ட வேண்டும் என்று கோவை மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த சொத்துக்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து பிப்ரவரி 10-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிபதி வரும் பிப்ரவரி 15-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • நேற்று தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனியில் 16 வருடங்களுக்கு பிறகு கடந்த 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 2000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

    இதனால் பெரும்பாலான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை நேரடியாக காண முடியாமல் இணையதளம் மற்றும் எல்.இ.டி. திரை மூலம் கண்டுகளித்தனர். நேற்று தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனையடுத்து பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் அடிவாரம், கிரிவீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. தைப்பூசத் திருவிழா நெருங்கும் நாட்களில் மேலும் பக்தர்கள் வருகை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் போது வெயிலின் தாக்கம் இல்லாமல் இருக்க குளிர்ச்சி தரும் மேற்கூரை வேயப்பட்டு இருந்தது. கும்பாபிஷேகத்துக்காக அவை அகற்றப்பட்டது. தற்போது கேரள கோவில்களிலும், கட்டிடங்களிலும் பாரம்பரிய முறையில் அமைக்கப்படும் கூரைகள் போல பழனி கோவிலிலும் பிரசாத ஸ்டால், அன்னதானக்கூடம் உள்ளிட்ட இடங்களில் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற இடங்களிலும் இதே போன்று கூரைகள் வேயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கும்பாபிஷேகம் முடிந்த நிலையிலும் பக்தர்களின் வருகை அதிகரிப்பால் மலைக்கோவிலில் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. 

    • தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி பக்தர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.
    • பஞ்சாமிர்த குழுவினர் நேற்று பழனி வந்தனர். அவர்கள் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி பக்தர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். காங்கேயம், தாராபுரம், மானூர் வழியாக வரும் அவர்கள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பழனி சண்முகநதி வந்தடைகின்றனர். அங்கு காலை மகாபூஜை நடத்திவிட்டு காவடிகளுடன் புறப்பட்டு பழனி முருகன் கோவில் வருகின்றனர். பழனிக்கு வரும் இவர்களுக்கு கோவில் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படும்.

    இந்நிலையில் பஞ்சாமிர்த குழுவினர் நேற்று பழனி வந்தனர். அவர்கள் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக சுமார் 12 டன் வாழைப்பழங்கள், 9 டன் சர்க்கரை, 3 டன் பேரீச்சம் பழம், 1 டன் கற்கண்டு, 200 கிலோ தேன், 200 கிலோ நெய், 30 கிலோ ஏலக்காய் ஆகியவற்றை பயன்படுத்தி 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது.

    • பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்
    • நெல், வெல்லம், மிளகாய் வற்றல், பயிறு உள்பட நவதானியங்கள் டன் கணக்கில் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மேலும் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பணம் மற்றும் நவதானியங்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

    அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை மாதம் ஒருமுறையும், திருவிழா காலங்களின் போது மாதம் இருமுறையும் எண்ணுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ.7.17 கோடி வருவாய் கிடைத்தது.

    இதனைதொடர்ந்து தற்போது நவதானிய காணிக்கை உண்டியல் திறக்கப்பட்டது. நெல், வெல்லம், மிளகாய் வற்றல், பயிறு உள்பட நவதானியங்கள் டன் கணக்கில் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.

    இந்த மூட்டைகளை கோவில் வளாகத்தில் வைத்துள்ளனர். இவை விரைவில் ஏலத்தில் விடப்படும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


    • நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமாவுடன் இன்று பழனி கோவிலுக்கு வந்தார்.
    • அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று பக்தர்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பழனி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகைகள் சமந்தா, அமலாபால், நடிகர் கவுதம் கார்த்திக், அவரது மனைவி மஞ்சிமாமோகன், காமெடி நடிகர் சந்தானம் உள்பட ஏராளமானோர் தொடர்ந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    அதன் வரிசையில் இன்று நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமாவுடன் பழனி கோவிலுக்கு வந்தார். அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர்கள் பக்தர்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தும் அவர்கள் வழிபட்டனர். பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    அதன்பின் ரோப்கார் மூலம் அடிவாரம் வந்த பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா ஆகியோர் காரில் புறப்பட்டு சென்றனர்.

    • அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருகின்றனர்.
    • முகூர்த்த தினம் என்பதால் அடிவார பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பழனி:

    தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழா கோலம் பூண்டிருக்கும் பழனிக்கு காவடி எடுத்தும், பாதயாத்திரையாக வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருகின்றனர்.

    விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நாளை தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு தொடங்க உள்ளது. எனவே நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என முருகனை வேண்டி வழிபட குடும்பத்துடன் வந்திருந்தனர். இதனால் அடிவாரம், கிரிவீதிகள், மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம், திருஆவினன்குடி கோவில் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் குவிந்தனர்.

    மலைக்கோவிலுக்கு படிப்பாதை மற்றும் யானைப்பாதை வழியாகவும், பக்தர்கள் நடந்து சென்றனர். கூட்டம் அதிகரித்ததால் சுமார் 2 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று முகூர்த்த தினம் என்பதால் அடிவார பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பகல் பொழுதில் கடுமையான வெயில் சுட்டெரித்த போதும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா பழனி கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடி கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கோவில் யானை கஸ்தூரி முன்செல்ல கொடி படத்திற்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளன்று தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்த நாளே ஒவ்வொரு முருகன் கோவில்களிலும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    கோடை வெயில் தொடங்கும் பங்குனி மாதத்தில் பழனி முருகப்பெருமானை குளிர்விக்கும் விதமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து ஈரோடு, கொடுமுடிக்கு சென்று அங்கிருந்து தீர்த்தம் எடுத்து பழனி முருகன் கோவிலில் அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா பழனி கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடி கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் மண்டபத்தில் எழுந்தருளினர். வேல், மயில், சேவல் உருவம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் உட்பிரகாரமாக வலம் வந்தது.

    கோவில் யானை கஸ்தூரி முன்செல்ல கொடி படத்திற்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பிறகு காலை 10.45 மணிக்கு மிதுன லக்னத்தில் வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க முருகப்பெருமானை வழிபட்டனர். அதனை தொடர்ந்து வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைதொடர்ந்து மலைக்கோவிலில் உச்சிகால பூஜையில் காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    10 நாட்கள் நடைபெறும் பங்குனிஉத்திர திருவிழாவில் தினந்தோறும் சாமி வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி நாளை வெள்ளிகாமதேனு, நாளை மறுநாள் வெள்ளிஆட்டுகிடா, 3-ம் நாள் தங்கமயில், 4-ம் நாள் தங்ககுதிரை போன்ற வாகனங்களில் முருகப்பெருமான் வீதிஉலா வருகிறார். 6-ம் நாள் திருவிழாவாக ஏப்ரல் 3-ந்தேதி மாலை 5.30 மணிக்குமேல் 7.30 மணிக்குள் திருக்கல்யாணமும், அதனை தொடர்ந்து 8.30 மணிக்குமேல் வெள்ளி தேரோட்டமும் நடைபெறுகிறது.

    ஏப்ரல் 4-ந்தேதி முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தேரோட்டம் மாலை 4.45 மணிக்கு நடைபெறும். ஏப்ரல் 7-ந்தேதி இரவு கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு தற்போதே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி நோக்கி பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டுள்ளது.

    • பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் 2 நாட்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • 2 நாட்களும் ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது.

    பழனி:

    பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) என 2 நாட்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    இதையொட்டி 2 நாட்களும் ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது. எனவே பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×