என் மலர்
நீங்கள் தேடியது "டாஸ்மாக் கடைகள்"
- கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உண்ணா நோன்பு இருந்து தேவாலயங்களில் பிரார்த்தனை செய்வது வாடிக்கை.
- கிறிஸ்தவ பெருமக்கள் இப்புனித நாளில், மாநிலத்தில் உள்ள மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவை மரணத்தையும் நினைவு கூர்ந்து உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களால் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் துக்க நாளாகும்.
இயேசுபிரான் அனுபவித்த கஷ்டங்களையும், சிலுவையில் தன்னையே தியாகம் செய்ததை நினைவு கூர்ந்து கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உண்ணா நோன்பு இருந்து தேவாலயங்களில் பிரார்த்தனை செய்வது வாடிக்கை.
கிறிஸ்தவ பெருமக்கள் இப்புனித நாளில், மாநிலத்தில் உள்ள மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களது கோரிக்கையை ஏற்று வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி அன்று, மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமாறு இந்த அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சென்னை மண்டலத்துக்குட்பட்ட 6 டாஸ்மாக் மாவட்டங்களிலும் டாஸ்மாக் பார்கள் மூடிகிடப்பதால் ஒவ்வொரு மாதமும் அரசுக்கு ரூ.11 கோடி நிதி இழப்பு ஏற்படுகிறது.
- பார் உரிமையாளர்கள் கட்டிடங்களுக்கு வாடகை கட்ட முடியாமல் தவித்து வருகிறோம்.
சென்னை:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் டாஸ்மாக் பார்கள் கடந்த 2 மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. இதனால் மதுக்கடைகளுக்கு செல்லும் குடிமகன்கள் பார்களில் அமர்ந்து மது அருந்த முடியாத சூழல் இருந்து வருகிறது.
இதனால் ரோட்டோரங்களில் அமர்ந்தே சென்னை குடிமகன்கள் மது குடித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின்படி பார்களுக்கான உரிமத்தை வழங்கக்கோரி டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இது தொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் கட்டிட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நல சங்கத்தின் தலைவர் அன்பரசன் மற்றும் நிர்வாகிகள் தலைமை செயலாளர், டாஸ்மாக் மேலாண் இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பி உள்ளனர்.
இது தொடர்பாக பார் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய சங்க தலைவர் அன்பரசன் கூறியதாவது:-
சென்னை மண்டலத்துக்குட்பட்ட 6 டாஸ்மாக் மாவட்டங்களிலும் டாஸ்மாக் பார்கள் மூடிகிடப்பதால் ஒவ்வொரு மாதமும் அரசுக்கு ரூ.11 கோடி நிதி இழப்பு ஏற்படுகிறது. பார் உரிமையாளர்கள் கட்டிடங்களுக்கு வாடகை கட்ட முடியாமல் தவித்து வருகிறோம்.
இந்த மாத இறுதிக்குள் பார்களுக்கான உரிமத்தை வழங்காவிட்டால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 900 மதுக்கடைகளையும் பூட்டி போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- டாஸ்மாக் கடைகள் நாளை மறுநாள் மூடப்படுகிறது.
- மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளும், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களும் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்தும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளும், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களும் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும், என்று மாவட்ட நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தினமும் டாஸ்மாக் கடைகளில் சராசரியாக ரூ.130 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி வருகிறது.
- நாளை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இன்று வழக்கத்தைவிட அதிக கூட்டமும் காணப்பட்டதால் மது விற்பனையும் அதிக அளவில் நடைபெற்றது.
சென்னை:
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் வாரத்தில் அனைத்து நாட்களும் செயல்படுகின்றன. குடியரசு தினம், சுதந்திர தினம், மே தினம் உள்பட ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே விடுமுறை விடப்படுகிறது.
நாளை (26-ந்தேதி) குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கிளப்புகளிலும் நாளை மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை சரக்கு கிடைக்காது என்பதால் குடிமகன்கள் பெரும் திண்டாட்டத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால் இன்றே மதுபாட்டில்களை வாங்கி வைக்கும் பணியில் குடிமகன்கள் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளிலும் இன்று குடிமகன்களின் கூட்டம் அலை மோதியது. எல்லோருமே நாளைக்கும் இருப்பு வைக்கும் வகையில் பாட்டில் பாட்டிலாக வாங்கிச் சென்றனர்.
இன்று கடை திறந்தவுடனேயே பெரும் அளவில் படையெடுத்து வந்து மது பாட்டில்களை வாங்கினார்கள்.
தினமும் டாஸ்மாக் கடைகளில் சராசரியாக ரூ.130 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி வருகிறது. நாளை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இன்று வழக்கத்தைவிட அதிக கூட்டமும் காணப்பட்டதால் மது விற்பனையும் அதிக அளவில் நடைபெற்றது.
- வடலூர் ராமலிங்கம் நினைவு தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
- மதுபானம் சட்ட விரோதமாக இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடடிக்கை எடுக்கப்படும்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வடலூர் ராமலிங்கம் நினைவு தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அனைத்து மதுக்கூடங்களும் நாளை (ஞாயிற்றுகிழமை) மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்றைய தினங்களில் கடைகள், மதுபானக் கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்ட விரோதமாக இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தன.
- நகர சபை கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
- பெண்கள் செல்வதற்கு அச்சமாக உள்ளதாக புகார்
குடியாத்தம்:
குடியாத்தம் நகரமன்ற அவசரக் கூட்டம் தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி.சிசில்தாமஸ், மேலாளர் சுகந்தி, சுகாதார அலுவலர் மொய்தீன், நகரமைப்பு வளர் சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் துவங்கியவுடன் நகரமன்ற தலைவர் சவுந்தர்ராஜன் பேசுகையில்:-
நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி தனது வார்டில் உள்ள சித்திவிநாயகர் கோவில் தெருவில் சாலை மற்றும் வடிகால் வசதிக்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 9 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் செய்ய பொதுமக்கள் பங்களிப்பாக 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை தனது சொந்த பணத்திலிருந்து தந்துள்ளார் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் இதேபோல் நகரமன்ற உறுப்பினர்கள் அந்தந்த பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்த நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பங்களிப்புடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
உறுப்பினர் ராணி குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே எம் ஜி ஆர், ஜெயலலிதா, அண்ணா சிலைகள் உள்ளன.
அதன் பின்புறம் 2 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல், பெண்கள் செல்வதற்கு மிகவும் அச்சமாக உள்ளது இந்த கடையை மாற்றவேண்டும் வலியுறுத்தினார்.
உறுப்பினர் ஆட்டோ மோகன் உள்ளிட்ட உறுப்பினர்கள் நேதாஜி சவுக் அருகே உள்ள டாஸ்மாக் கடையும் அகற்ற வேண்டும் ஒரு வழி பாதையாக உள்ள அங்கு டாஸ்மாக்கடை இருப்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என கூறினார்.
அப்போது உறுப்பினர்கள் பலர் எழுந்து அப்பகுதியில் உள்ள டாஸ்மாக்கடை அருகே காலை முதலே மது விற்பனை செய்கிறார்கள் இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது இந்த டாஸ்மாக் கடை விற்பனை தவிர மற்ற நேரங்களிலும் அங்கே மதுபானங்கள் விற்கப்படுகிறது, குடியாத்தம் நகரில் அதிகளவு கஞ்சா விற்பனை உள்ளது இதனையும் நகர போலீசார் கண்டுகொள்வதில்லை என குற்றம் சாட்டினர்.
உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதில் அளித்த நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன் கலெக்டர் ஆய்வுக்கு வந்தபோது நானும் உடன் சென்றிருந்தேன் அப்போதே இரண்டு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது இருப்பினும் அந்த மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.இறைச்சி கடைக்காரர்கள் கூட்டம் நடத்த வேண்டும் கூட்டத்திற்கு கலந்து கொள்ளாத கடைகளுக்கு நோட்டீஸ் கொடுத்து சீல் வைக்க வேண்டும் இறைச்சி கழிவுகளை எக்காரணம் கொண்டு பொதுவெளியில் கால்வாயிலோ கொட்ட அனுமதிக்க கூடாது அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர்கள் கூறிய பல்வேறு கோரிக்கைகள் உடனடியாக செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் பல்வேறு அடிப்படை வசதிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரியை ஒப்பிடும்போது இந்த ஆண்டு விற்பனை பாதியாக குறைந்துள்ளது.
- சிவகங்கை மாவட்டத்தில் 10 சதவீதம் விற்பனை சரிந்துள்ளது.
சென்னை:
டாஸ்மாக் மதுக்கடைகளில் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை காலங்களில் ரூ.1000 கோடிக்கு மேல் மது விற்பனை நடந்தது. தினமும் ரூ.180 கோடிக்கு மதுவிற்பனை நடைபெறுவது வழக்கம். மதுபார்கள் முழுமையான அளவில் செயல்படாத நிலையிலும் மதுவிற்பனை குறையவில்லை.
ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் தமிழகம் முழுவதும் மது விற்பனை குறைந்து உள்ளது. எல்லா மாவட்டங்களிலும் மதுவிற்பனை சற்று குறைந்துள்ளது. சென்னையில் 3 சதவீதம் மது விற்பனை குறைந்து இருப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரியை ஒப்பிடும்போது இந்த ஆண்டு விற்பனை பாதியாக குறைந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 10 சதவீதம் விற்பனை சரிந்துள்ளது. இதேபோல பெரும்பாலான மாவட்டங்களில் மது விற்பனை குறைந்துள்ளதால் அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர்.
மாவட்ட மேலாளர்கள் கடை பணியாளர்களிடம் விற்பனை குறைவுக்கான காரணம் குறித்து விளக்கம் கேட்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் போலி மது விற்பனை நடைபெறுவதால் டாஸ்மாக் விற்பனை சரிவுக்கு காரணம் என்று ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் மது விற்பனை குறைவுக்கான காரணம் என்ன? என்பது பற்றி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
- சித்திரை திருவிழாவின் போது டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை விட வேண்டும்.
- பா.ஜ.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா. சுசீந்திரன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரையின் உலக புகழ்வாய்ந்த சித்திரை திருவிழாவில் மே 5-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. இதில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அப்போது சில போதை ஆசாமிகள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் பாலியல் சீண்டல், நகை பறிப்பு, வழிப்பறி போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.
இதையொட்டி வருகிற 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 5நாட்களுக்கு மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட வேண்டும். மதுரை மாவட்ட டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு உடந்தையாக இருக்கும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்திரை திருவிழாவில் கடந்த ஆண்டு போல உயிர்பலி ஏற்படாத வகையில் பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விவசாய அணி மாநில துணைத் தலைவர் முத்துராமன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, துணைத்தலைவர் குமார், பொருளாளர் ராஜ்குமார், ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன், மகளிரணி தலைவி மீனா, சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் முத்துகுமார் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- தமிழகத்தில் பள்ளி- கல்லூரிகள், கோவில்கள் அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.
- டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
சென்னை:
தமிழகத்தில் பள்ளி- கல்லூரிகள், கோவில்கள் அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.
அதே நேரத்தில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.
இதன் படி சட்டசபையில் கூட்டம் நடைபெற்றபோது அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் 500 மதுபான சில்லரை விற்பனை கடைகள் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கோவில்களின் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.
50 மீட்டர் இடைவெளியில் செயல்படும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட வேண்டிய கடைகளின் பட்டியலில் உள்ளது. அது போன்று குறைந்த இடைவெளியில் உள்ள கடைகளும் மூடப்பட உள்ளன.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் பள்ளிகள் மற்றும் கோவில்களின் எதிரில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி டாஸ்மாக் நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ளன.
இதையடுத்து அது போன்ற கடைகளும் மூடப்படவேண்டிய டாஸ்மாக் கடைகளின் பட்டியலில் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் போரூர் டோல்கேட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை (எண்.9170), பள்ளிக்கூடம் அருகில் செயல்பட்டு வருவதாக புகார்கள் கூறப்பட்டு வந்தன. இதேபோன்று போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையும் (எண்9043) பள்ளி எதிரில் உள்ளது.
இந்த 2 கடைகளும் மூடப்பட வேண்டிய டாஸ்மாக் கடைகளின் பட்டியலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வடபழனி ஏ.வி.எம். ஸ்டூடியோ பகுதியில் பெருமாள் கோவில் எதிரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை (எண்506), விருகம்பாக்கம், ஆழ்வார் திருநகர் பகுதியில் பள்ளி எதிரில் உள்ள டாஸ்மாக் கடை (எண்8870) மற்றும் செங்குன்றம், அலமாதி ஆட்டந்தாங்கல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஆகியவையும் மூடப்பட வேண்டிய கடைகளின் வரிசையில் இருப்பதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேபோன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பள்ளி, கோவில்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நடவடிக்கைகள் இன்னும் சில தினங்களில் நிறைவுபெற்று பிரச்சினைக் குரிய கடைகள் மூடப்படும் என்று தெரிகிறது.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த கடைகளை மூடலாம் என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.
- 500 கடைகளை கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி முதல் மூடுவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் 5329 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.44 ஆயிரம் கோடி வரை அரசுக்கு வருமானம் கிடைத்து வருகிறது.
இந்த வருமானம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகளை ஒரு இடத்தில் மூடினாலும் இன்னொரு இடத்தில் திறந்து விடுவதாக மக்கள் குறை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் சட்டசபையில் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த கடைகளை மூடலாம் என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள கோவில்கள் அருகில் இருக்கும் கடைகளை மூடுவது, 500 மீட்டர் சுற்றளவில் 2 கடைகள் இருந்தால் அதில் ஒரு கடையை மூடுவது என்று பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி 500 கடைகளை கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி முதல் மூடுவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- டாஸ்மாக் கடைகளிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க டாஸ்மாக் ஊழியர்கள் மறுத்து வருகிறார்கள்.
- சமீப காலமாகவே டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிகமாக வருவது இல்லை என்று டாஸ்மாக் கடை ஊழியர் கூறியுள்ளார்.
சென்னை:
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் அனைத்து வணிக நிறுவனங்களுமே அந்த நோட்டை வாங்குவதற்கு மறுத்துவிடுகின்றன.
அந்த வகையில் டாஸ்மாக் கடைகளிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க டாஸ்மாக் ஊழியர்கள் மறுத்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவர் கூறும்போது, 'சமீப காலமாகவே டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிகமாக வருவது இல்லை.
இருப்பினும் தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் மது பிரியர்கள் யாராவது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொண்டுவந்து கொடுத்தால் அதனை வாங்குவது இல்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
- போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.
- கடும் நடவடிக்கையால், குற்ற செயல்களில் ஈடுபடுவோர் முடங்கி உள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஜவகர் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். போலீசாருக்கு விடுமுறை, சாதாரண காரணத்துக்காக மாற்றப்ப ட்டவர்களுக்கு மீண்டும் பழைய பணியிடம் ஒதுக்கீடு, மனு மற்றும் கோரிக்கைக்காக பார்க்க வருவோரை காக்க வைக்காமல் உடனுக்குடன் பார்ப்பது உள்பட பல்வேறு மாற்றங்கள் அமலாகி உள்ளது.
குறிப்பாக பாதுகாப்பு, சட்டம் – ஒழுங்கு, போக்கு வரத்து நெரிசலை தவிர்த்தல் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்ப டுகிறது. திருட்டு, கொள்ளை, வழிப்பறி, மிரட்டல், ரவுடிகள் நடமாட்டம், தேவையற்ற வகையில் சுற்றித்திரிபவர்களை கட்டுப்படுத்துதல் போன்ற வற்றுக்காக, தெருக்கள், கடை வீதிகள், பிரதான சாலைகளில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.
இதனை ஏற்று மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப்களில் மக்கள் நடமாட்டம் உள்ள மற்றும் நடமாட்டம் இல்லாத தெருக்கள், கடை வீதிகள், பிரதான சாலைகள், பஸ் நிறுத்தங்கள் போன்ற இடங்களில் போலீசார் ரோந்துப்பணி செல்கின்ற னர். குறிப்பிட்ட போலீசார், குறிப்பிட்ட பகுதிக்கு ரோந்து சென்று குறிப்புகள் அனுப்பி வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில், விரைவாக போக்குவரத்தை சீர்செய்யவும், தேவை யானால் கூடுதல் போலீ சாரை பயன்படுத்த உத்தர விட்டதால் கடந்த ஒரு வாரமாக கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
குறித்த நேரம் தவிர மற்ற நேரங்களில் டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த பார்களை கண்காணிக்கின்றனர். இரவு குறிப்பிட்ட நேரத்துக்கு ப்பின் தேவையற்ற கடை களை மூடவும், நடமா ட்டங்களை கட்டுப்படுத்த வம், அனுமதியற்ற சட்ட விரோத மது விற்பனை, லாட்டரி, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மீதும் கடும் நடவடிக்கையால், குற்ற செயல்களில் ஈடுபடு வோர் முடங்கி உள்ளனர்.