என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agnipath"

    • ராணுவத்தில் ஆண்டுக்கு 50 ஆயிரம் அக்னி வீரர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
    • அக்னிபாத் வீரர்கள் முதல் குழுவினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    புதுடெல்லி:

    இந்திய ராணுவத்தில் தற்காலிகமாக பணியாற்ற வழிவகை செய்யும் அக்னிபாத் எனும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படும் இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி அனுப்பப்படுவார்கள். ராணுவத்தில் இருந்து வெளியேறும்போது ரூ.11 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

    ஆண்டுக்கு 50 ஆயிரம் அக்னி வீரர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்த அக்னிபாத் வீரர்கள் முதல் குழுவினர் பயிற்சியை தொடங்க உள்ளனர்.

    இந்நிலையில், அக்னிபாத் வீரர்கள் முதல் குழுவினர் மத்தியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

    அப்போது பிரதமர் மோடி கூறுகையில், நமது ஆயுதப்படையை வலுப்படுத்தவும், அதன் எதிர்காலத்தை தயார் செய்யவும், இந்த முன்னோடி கொள்கை முக்கியத்துவம் பெற்று விளங்கும். இளைய அக்னி வீரர்கள் ஆயுதப்படையை மேலும் இளமையானதாகவும், தொழில்நுட்ப அறிவு சார்ந்ததாகவும் ஆக்குவார்கள் என தெரிவித்தார்.

    • அக்னிபாத் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு இந்திய ராணுவத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்படுகிறார்கள்.
    • நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களில் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே நிரந்தர பணி வழங்கப்படும்.

    கார்கில் போரின் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று [ஜூலை 26] கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மத்திய பாஜக அரசு கொண்டுவந்த ராணுவ ஆட்சேர்ப்பு திட்டமான அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு தங்களது மாநில அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்குவதாக பாஜக ஆளும் 5 மாநிலங்கள் அறிவித்துள்ளது. உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய 5 மாநில முதல்வர்கள் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு இந்திய ராணுவத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்படுகிறார்கள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களில் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே நிரந்தர பணி வழங்கப்படும்.

     

    இந்த திட்டம் இளைஞர்களை பயன்படுத்திவிட்டு அவர்களை தூக்கியெறியும் வகையில் உள்ளது என்றும், முறையாக பயிற்சி கிடைக்காத அக்னிவீரர்களை, ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தும் சிக்கலும் இதில் உள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் இந்த திட்டம் தொடங்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    சமீபத்தில் பாராளுமன்றத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உயிரிழந்த அக்னி வீரர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், அக்னிபாத் திட்டத்தை ஆதரிக்கும் விதமாக பாஜக ஆளும் 5 மாநில முதல்வர்களும் இந்த முடிவை அறிவித்துள்ளனர்.

    அதன்படி மாநில அரசின் காவல்துறை மற்றும் மாநிலத்தின் ஆயுதக் காவல் படை [PAC] பணிகளில் ஓய்வுபெற்ற அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் அரியானாவில் ஆளும் பாஜக அரசு, மாநிலத்தின் காவல்துறை மற்றும் சிறைத்துறை பணிகளில் அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அக்னிபாத் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பயிற்சிக்கு வந்திருந்தனர்.
    • வழக்கம்போல் துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை வைத்து அக்னி வீரர்கள் பயிற்சி செய்தனர்.

    மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் பீரங்கி பயிற்சி மையம் [Artillery Centre] செயல்பட்டு வருகிறது. இங்கு ஐதராபாத்திலிருந்து அக்னிபாத் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பயிற்சிக்கு வந்திருந்தனர்.

     

    இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கம்போல் துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளை வைத்து அக்னி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத குண்டு வெடித்துள்ளது. இதில் கோஹில் விஸ்வராஜ் சிங் [20 வயது], சைபத் சித் [21 வயது] என்ற இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.

     

    உடனே அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டர். ஆனால் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் உயிரிழந்ததாக அறிவித்தனர். இதனையடுத்து விபத்து தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து தொடர்பான விரிவான விசாரணைக்கு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

    • சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் அக்னிபத் திட்டத்தை கைவிட கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாநில பொது செயலாளர் கே.பி.எஸ்.எம். கணிவண்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாநில பொது செயலாளர் கே.பி.எஸ்.எம். கணிவண்ணன் தலைமை வகித்தார்.

    சீர்காழி:

    சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் அக்னிபத் திட்டத்தை கைவிட கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாநில பொது செயலாளர் கேபிஎஸ்எம்.கணிவண்ணன் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் லட்சுமணன், வட்டாரத் தலைவர் ஞானசம்பந்தம், பாலகுரு, பாலசுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன், முன்னாள் இளைஞர் அணி தலைவர் சரவணன்,முன்னாள் மாநில இளைஞரணி காங்கிரஸ் செயலாளர் கமல் மணிரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரியகுமார், மாவட்ட பொருளாளர் சிவராமன், மாவட்ட பொது செயலாளர் தியாக கார்த்திகேயன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×