என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "செயற்கைக்கோள்"
- இன்று அதிகாலை ஷென்சோ-19 விண்கலத்தில் புறப்பட்டனர்.
- 3 விண்வெளி வீரர்களும் 6 மாதம் தங்கிருந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட உள்ளனர்.
சீனா, சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைத்து உள்ளது. இந்த நிலையில் விண்வெளி நிலையத்துக்கு முதல் பெண் விண்வெளி என்ஜினீயர் உள்பட 3 விண்வெளி வீரர்களை சீனா அனுப்பியது. அவர்கள் இன்று அதிகாலை ஷென்சோ-19 விண்கலத்தில் புறப்பட்டனர்.
இந்த விண்கலம் வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்தில் இருந்து லாங் மார்ச்-2எப் கேரியர் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஏவப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு, ஷென்சோ-19 விண்கலம் ராக்கெட்டிலிருந்து பிரிந்து நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையை வெற்றிகரமாக சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 விண்வெளி வீரர்களும் 6 மாதம் தங்கிருந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட உள்ளனர்.
- இஸ்ரோ புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
- செயற்கைக்கோளை ஏவுவதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் கார்டோ சாட், ஸ்காட்சாட், ரிசர்ட் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள்கள் தொலைத்தொடர்பு பயன்பாட்டுக்காக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் புவிக்கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இ.ஓ.எஸ்.-08 எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ தற்போது வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோளை சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவுவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாளை ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை 9.17 மணிக்கு சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட்டை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய செயற்கைக்கோள் ஏவப்படுவதை ஒட்டி இஸ்ரோ குழுவினர் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
இ.ஓ.எஸ்.-08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டாகும். இது தரையில் இருந்து 475 கி.மீ. தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இதில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு, குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்- ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு மற்றும் சிக் யுவி டோசிமீட்டர் ஆகிய 3 ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இ.ஓ.ஐ.ஆர். கருவி பேரிடர் மேலாண்மை சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக இரவிலும் துல்லியமான படம் எடுக்க உதவும்.
இதேபோல் ஜி.என்.எஸ்.எஸ்-ஆர் கருவி மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும். சிக் யுவி டோசி மீட்டர் (SiC UV Dosimeter) விண்ணில் புற ஊதா கதிர்வீச்சு அளவை கண்காணித்து எச்சரிக்கை அளிக்கும்.
- இஸ்ரோ புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
- செயற்கைக்கோளை ஏவுவதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் கார்டோ சாட், ஸ்காட்சாட், ரிசர்ட் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள்கள் தொலைத்தொடர்பு பயன்பாட்டுக்காக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் புவிக்கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இ.ஓ.எஸ்.-08 எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ தற்போது வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோளை சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவுவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து வருகிற 15 ஆம் தேதி காலை 9.17 மணிக்கு எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்து இருந்தது. எனினும், இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ராக்கெட் ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை 9.17 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
இ.ஓ.எஸ்.-08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டாகும். இது தரையில் இருந்து 475 கி.மீ. தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இதில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு, குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்- ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு மற்றும் சிக் யுவி டோசிமீட்டர் ஆகிய 3 ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இ.ஓ.ஐ.ஆர். கருவி பேரிடர் மேலாண்மை சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக இரவிலும் துல்லியமான படம் எடுக்க உதவும்.
இதேபோல் ஜி.என்.எஸ்.எஸ்-ஆர் கருவி மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும். சிக் யுவி டோசி மீட்டர் (SiC UV Dosimeter) விண்ணில் புற ஊதா கதிர்வீச்சு அளவை கண்காணித்து எச்சரிக்கை அளிக்கும்.
?SSLV-D3/EOS-08?️ Mission:The launch of the third developmental flight of SSLV is scheduled for August 16, 2024, in a launch window of one hour starting at 09:17 Hrs. IST pic.twitter.com/JWxq9X6rjk
— ISRO (@isro) August 12, 2024
- H3 வகையைச் சேர்ந்த ராக்கெட் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது.
- ஆனால் விண்ணில் பாய்ந்த 14 நிமிடத்தில் வெடித்து சிதறியது.
ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம்) இன்று புதிய H3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை (Daichi-4 (ALOS-4)) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.
இந்த ராக்கெட் நேற்று விண்ணில் பாய இருந்தது. ஆனால் சீதோஷ்ண நிலை காரணமாக (மோசமான வானிலை) தள்ளிவைப்பட்டது. இந்த நிலையில் டனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
சுமார் 15 நிமிடம் 34 வினாடிகளில் ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள் பிரிந்து சென்றதாகவும், அதன்பின் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது.
H3 வகையைச் சேர்ந்த ராக்கெட் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் விண்ணில் பாய்ந்த 14 நிமிடத்தில் வெடித்து சிதறியது. 2-ம் வகை என்ஜின் செயல்படாமல் தோல்வியடைந்ததால் வெடித்து சிதறும் நிலை ஏற்பட்டது. அதன்பின் 2-வது முறையாக கடந்த பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக செலுத்தியது.
H3 இரண்டு நிலை திரவ எரிபொருள் ராக்கெட் ஆகும். H2A வகை ராக்கெட் தற்போது பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாக H3 வகை ராக்கெட் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
H2A ராக்கெட்டை விட 1.3 மடங்கு அதிகமான சரக்குகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது H3 ராக்கெட். H2A ராக்கெட்டை விட பாதி அளவே செலவினம் கொண்டது H3 ராக்கெட் ஆகும்.
1.5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 9 வருடங்களுக்கு முன்னதாக இந்த ராக்கெட் உருவாக்கும் பணி தொடங்கியது.
- தற்போது சாங்கே-6 என்ற செயற்கைக்கோளை சீனா அனுப்பி உள்ளது.
- வருகிற 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் சீனா அறிவித்துள்ளது.
பீஜிங்:
நிலவை ஆராய்ச்சி செய்வதில் உலக நாடுகள் பலவும் போட்டிப்போட்டு வருகின்றன. குறிப்பாக நிலவின் தென் துருவத்தில் முதன்முறையாக சந்திரயான்-3 செயற்கைக்கோளின் லேண்டரை தரையிறக்கி இந்தியா சாதனை படைத்தது.
இந்தநிலையில் தற்போது சாங்கே-6 என்ற செயற்கைக்கோளை சீனா அனுப்பி உள்ளது. இந்த செயற்கைக்கோள் நிலவில் 53 நாட்கள் தங்கி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். பின்னர் முதன்முறையாக நிலவில் இருந்து தூசி, பாறை உள்ளிட்ட மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வர உள்ளது.
இதற்காக சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-5 ஒய்-8 என்ற ராக்கெட் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இதேபோல் வருகிற 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் சீனா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரோ இன்சாட்-3டிஎஸ் என்ற செயற்கைக்கோளை வடிவமைத்தது.
- எப்-14 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவியது.
ஸ்ரீஹரிகோட்டா:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, இன்சாட்-3டிஎஸ் என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் 17.2 24 அன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்தது. இதற்கான ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தயார் நிலையில் உள்ளது. ராக்கெட் செலுத்துவதற்கான 27.5 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று மதியம் தொடங்கியது.
எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இஸ்ரோ அனுப்பிய ஜி.எஸ்.எல்.வி.எப்-14 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
- ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் லேண்டரை தரையிறக்கியது.
- லேண்டர் 100 மீட்டர் தொலைவில் இருந்து தரையிறங்கியது.
ஜப்பானின் ஸ்மார்ட் லேன்டர் ஃபார் இன்வெஸ்டிகேடிங் மூன் (SLIM) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இவ்வாறு நிலவில் தரையிறங்கிய 5-வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றிருக்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் இந்தியாவின் சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதைத் தொடர்ந்து நிலவில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது. ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையம் 100 மீட்டர் தொலைவில் இருந்து நிலவில் லேண்டரை தரையிறங்க முயற்சித்தது.
தற்போது லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், இந்த விண்கலம் தனது செயல்பாடுகளில் வெற்றி பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ள ஒரு மாத காலம் வரை ஆகலாம் என ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
- கடந்த 27-ந்தேதி விண்வெளி தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொள்ள செயற்கைக்கோள்களை லாங் மார்ச்-11 மூலம் ஏவியது.
- ராக்கெட்டின் பூஸ்டர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறியது.
விண்வெளி தொழில்நுட்பத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இணையாக சீனாவும் கடும் போட்டியிட்டு வருகிறது. அடிக்கடி செயற்கைக்கோள்களை ஏவி சோதனை நடத்தி வருகிறது.
அந்த வகையில் இன்று செயற்கைக்கோள் இணைய தொழில்நுட்பம் தொடர்பாக சோதனை செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. இது வெற்றிகரமான நிர்ணயிக்க சுற்றுவட்ட பாதையை அடைந்ததாக சீனா தெரிவித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் லாங் மார்ச்-2சி கேரியர் ராக்கெட் மூலம் இன்று காலை உள்ளூர் நேரப்படி செலுத்தப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் இணைய தொழில்நுட்பம் சோதனை வெற்றி பெற்றால், செயற்கைக்கொள் மூலம் தகவல் தொடர்புக்கான இணையதள வசதியை வழங்க முடியும். தற்போது எலான் மஸ்க் நிறுவனம செயற்கைக்கோள் மூலம் இணையதளம் வழங்கும் வசதியை கொண்டுள்ளது.
கடந்த 27-ந்தேதி விண்வெளி தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொள்ள செயற்கைக்கோள்களை லாங் மார்ச்-11 மூலம் ஏவியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் திசைமாறி விண்ணில் இருந்து பூமியை நோக்கி வந்தது. ராக்கெட்டின் பூஸ்டர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறியது.
- வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் திட்டம் தோல்வியடைந்தது
- கடலில் கிடந்த பாகங்களை சேகரித்து தென்கொரியா சோதனை
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை செய்து வருகிறது. அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த போதிலும், அதைப்பற்றி கண்டு கொள்வதில்லை.
இறுதியாக கடந்த மே மாதம் செயற்கைக்கோள் ஒன்றை ஏவியது. இந்த செயற்கைக்கோள் அமெரிக்கா, தென்கொரியாவின் ராணுவப் பணிகளை உளவு பார்க்க உதவிகரமாக இருக்கும். இந்த செயற்கைக்கோளை நிலைநிறுத்தினால் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என தென்கொரியா கருதியது.
ஆனால், ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோள், வடகொரிய தீபகற்ப கடலில் விழுந்து நொறுங்கியது. இதை மிகப்பெரிய தோல்வியாக வடகொரியா கருதுகிறது. இருந்தாலும் தவறுகளை கண்டறிந்து, சரிசெய்யப்பட்டு மீண்டும் செயற்கைக்கோளை செலுத்த முயற்சி மேற்கொள்வோம் எனத் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே செயற்கைக்கோளின் உடைந்த பாகங்களை தேடும் பணியில் தென்கொரியா ஈடுபட்டது. கப்பற்படை, விமானப்படை, நீரில் மூழ்கி தேடும் வல்லுனர்கள் ஆகியோரை கொண்டு 36 நாட்கள் தேடுதல் வேட்டை நடத்தி செயற்கைக்கொளில் துண்டுகளை சேகரித்தது. அவற்றை ஆராய்ந்த பார்த்தபோது ராணுவ பணிகளை உளவு பார்க்கும் திறனில்லை என தெரியவந்துள்ள என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.
எண்ணற்ற மற்றும் முக்கிய பகுதிகளை நாங்கள் மீட்டெடுத்துள்ளோம். தென்கொரியா மற்றும் அமெரிக்க வல்லுனர்கள் கொண்டு ஆய்வு செய்தபோது வடகொரியாவின் செயற்கைக்கோளுக்கு ராணுவ பணிகளை உளவு பார்க்கம் திறனில்லை என்பது தெரியவந்தது என தென்கொரியா தெரிவித்துள்ளது.
தென்கொரியாவின் தகவலுக்கு வடகொரிய இன்னும் பதில் அளிக்கவில்லை.
- ஜிலின்-1 செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 108ஆக உயர்ந்துள்ளது.
- 2030ம் ஆண்டுக்குள் சந்திரனில் விண்வெளி வீரர்களை தரையிறக்க சீனா திட்டம்.
சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று மதியம் 1.30 மணிக்கு ஒரே நேரத்தில் 41 செயற்கைக்கோள்களுடன் நீண்ட 2டி ராக்கெட்டை விண்ணில் செலுத்தி அந்நாடு புதிய சாதனையை படைத்துள்ளது.
இந்த நீண்ட ராக்கெட் 476வது விமானப் பயணமாகும். ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் முக்கியமாக வணிக ரிமோட் சென்சிங் சேவைகள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்ப சரிபார்ப்பை வழங்கும் எனவும் செயற்கைக்கோள்களில் பெரும்பாலானவை 36 ஜிலின்-1 தொடரைச் சேர்ந்தவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஜிலின்-1 செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 108ஆக உயர்ந்துள்ளது.
சீனா, 420 கிலோகிராம் எடை கொண்ட ஜிலின்-1 செயற்கைக்கோளை 2015ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளில், அதன் எடையை வெறும் 22 கிலோவாகக் குறைத்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, 2030ம் ஆண்டில் நிலவு மற்றும் அதற்கு மேற்பட்ட பயணங்கள் மற்றும் பூமியில் தரை செயல்பாடுகளுக்கு இடையே ஒரு தகவல் தொடர்பு பாலமாக செயல்படும் ரிலே செயற்கைக்கோள்களை உருவாக்கவும் சீனா செயல்பட்டு வருகிறது.
2030ம் ஆண்டுக்குள் சந்திரனில் விண்வெளி வீரர்களை தரையிறக்க சீனா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஒரு வருடத்தில் வடகொரியா கிட்டத்தட்ட 100 ஏவுகணைகளை சோதனை செய்து இருக்கிறது.
- செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்று ஜப்பான் அரசிடம் வடகொரியா நோட்டீஸ் மூலம் தெரிவித்தது.
ராணுவ உளவு செயற்கைக்கோள் ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று வடகொரியா அறிவித்து இருக்கிறது. தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான பொறுப்பற்ற ராணுவ பயிற்சிகளுக்கு இதுபோன்ற வசதிகள் மிகவும் அவசியமான ஒன்று என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
மே 31-ம் தேதி முதல் ஜூன் 11-ம் தேதிக்குள் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் வடகொரியா தெரிவித்து இருக்கிறது. இது குறித்து ஜப்பான் அரசுக்கு வடகொரியா அனுப்பிய நோட்டீசில், ராணுவ உளவு முயற்சியின் அங்கமாக முதன் முறையாக செயற்கைக்கோள் ஒன்றை ஏவுகணை தொழில்நுட்பத்தில் அனுப்ப இருப்பதாக தெரிவித்து இருந்தது.
இது மஞ்சள் கடல், கிழக்கு சீன கடல் மற்றும் பிலிப்பைன்சின் கிழக்கு பகுதியில் உள்ள லூசோன் தீவுகளில் கடல்நீரை பாதிக்கச் செய்யலாம் என்றும் வடகொரியா நோட்டீசில் தெரிவித்து இருந்தது. ஜப்பான் எல்லைக்குள் வடகொரிய ஏவுகணை நுழைந்தால், அதனை உடனடியாக சுட்டு வீழ்த்த ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜப்பான் நாட்டு பாதுகாப்பு துறை மந்திரி யசுகாசு ஹமடா உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.
கடந்த ஆண்டு துவங்கியதில் இருந்து வடகொரிய கிட்டத்தட்ட 100 ஏவுகணைகளை சோதனை செய்து இருக்கிறது. இந்த சோதனைகள் தென் கொரியா மற்றும் ஜப்பான் கடற்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்து இருக்கிறது. எனினும், தடையை மீறி செயற்கைக்கோளை விண்ணில் ஏவ வடகொரியா முடிவு செய்துள்ளது.
ஐ.நா. தடையை மீறி ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயல் என்று ஜப்பான் தெரிவித்து இருக்கிறது. வடகொரியாவின் புதிய செயற்கைக்கோள் ஏவும் நடவடிக்கை ஜப்பான், தென் கொரிய கடல் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
- செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட 20 நிமிடங்களில் அதற்கான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
- செயற்கைக்கோள், 'ஐஜிஎஸ்-5' செயற்கைக்கோளுக்கு மாற்றாக செலுத்தப்பட்டிருக்கிறது.
டோக்கியோ:
ஜப்பான் 'ஐ.ஜி.எஸ். 7' என்ற உளவு செயற்கைக்கோளை உருவாக்கியது. இந்த ரேடார் செயற்கைக்கோள், மின்காந்த கண்காணிப்பு அமைப்புடன் இரவிலும், கடுமையான வானிலை நிலவுகிற நேரங்களிலும் படங்களை பிடிக்கும் என்று கேபிடன் செயற்கைக்கோள் புலனாய்வு மையம் தெரிவித்தது. இந்த 'ஐ.ஜி.எஸ். 7 ' செயற்கைக்கோளை '46 எச்2ஏ' ராக்கெட் சுமந்து கொண்டு ககோஷிமா மாகாணத்தில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி 10.50 மணிக்கு விண்ணில் சீறிப்பாய்ந்தது. இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட 20 நிமிடங்களில் அதற்கான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இந்த செயற்கைக்கோள், 'ஐஜிஎஸ்-5' செயற்கைக்கோளுக்கு மாற்றாக செலுத்தப்பட்டிருக்கிறது. மோசமான வானிலை காரணமாக ஒரு நாள் தாமதமாக விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்