என் மலர்
நீங்கள் தேடியது "குடும்பத்தகராறு"
- நேற்று நெய்வேலியில் இருந்து வீட்டுக்கு வந்த அசோக்குமார் மனைவியுடன் தகராறு செய்தார்.
- தாய் தவமணி மற்றும் மகள் அருள்குமாரி ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் கெங்கவல்லி அருகே உள்ள 74. கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருபவர் அசோக்குமார் (வயது 42). இவரது மனைவி தவமணி (38). இவர்களுக்கு வித்யதாரணி (13), அருள்குமாரி (12), ஆகிய 2 பெண் குழந்தைகளும், அருள் பிரகாஷ் (5) என்ற மகனும் உள்ளனர்.
அசோக்குமார் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று நெய்வேலியில் இருந்து வீட்டுக்கு வந்த அசோக்குமார் மனைவியுடன் தகராறு செய்தார். இன்று அதிகாலை வேளையில் மனைவி தவமணி, குழந்தைகள் வித்யதாரணி, அருள்குமாரி, அருள் பிரகாஷ் ஆகியோர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது குடிபோதையில் இருந்த அசோக்குமார் அவர்களை கண்மூடித்தனமாக வெட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தவமணி மற்றும் குழந்தைகள் அப்பா விட்டு விடுங்கள்... அப்பா விட்டு விடுங்கள்... என கெஞ்சினர். ஆனால் அசோக்குமார் கோபத்தில் மனைவி மற்றும் தனது குழந்தைகளை கொடூரமாக வெட்டினார். தன் கண் முன்னே கணவர், குழந்தைகளை வெட்டுவதை பார்த்து தவமணி கதறி அழுதார். அப்போது குழந்தைளும் அம்மா, அம்மா என கதறி அழுதது.
அசோக்குமாரை தவமணி தடுக்க முயன்றார். அவரையும் சரமாரியாக வெட்டினார். கணவரிடம் இருந்து உயிர்பிழைக்க தனது குழந்தைகளுடன் தவமணி தப்பி ஓட முயன்றார். ஆனால் அசோக்குமார் விரட்டி விரட்டி அவர்களை வெட்டினார். இதில் தவமணி, குழந்தைகள் வித்யதாரணி, அருள்குமாரி, அருள் பிரகாஷ் ஆகிய 4 பேரும் வெட்டு காயங்களுடன் வீட்டில் ஆங்காங்கே சுருண்டு விழுந்தனர்.
4 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக தவமணியின் பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதைக்கேட்டு கதறியபடி பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து வந்து பார்த்து கதறி அழுதனர்.
அரிவாள் வெட்டில் மகள் வித்யதாரணி, மகன் அருள் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது தெரியவந்தது. தாய் தவமணி மற்றும் மகள் அருள்குமாரி ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இருவரையும் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு தாய் மற்றும் மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தும் ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஸ்குமார் மற்றும் கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகள் வித்யதாரணி, அருள் பிரகாஷ் ஆகியோர் உடல்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் இந்த கொலைகளை செய்த அசோக்குமாரை பிடித்து சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில், அசோக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவர் கடந்த 6 ஆண்டுகளாக நெய்வேலியில் தனியாக வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுவதில் கிடைக்கும் வருமானத்தை மது குடித்து செலவழித்து வந்தார். குடும்ப செலவுக்கு பணம் கொடுப்பதில்லை. இதனால் தவமணிக்கும், அசோக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
கணவர் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காததால் தவமணி தனது குழந்தைகளை கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் பணத்தில் 3 குழந்தைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார். இந்த நிலையில் அசோக்குமார் குடிபோதையில் வீட்டுக்கு வந்து அதிகாலை நேரத்தில் தூங்கி கொண்டிருந்த மனைவி மற்றும் குழந்தைகளை வெட்டி சாய்த்துள்ளார் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அசோக்குமார் தலையில் காயம் ஏற்பட்டதாக கெங்கவல்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- குடும்பத்தகராறில் மனைவி மீது கணவர் தாக்கினார்.
- சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ஜமீன்சல்வார்பட்டி கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்த–வர் கந்தாமி. இவரது மனைவி ராமச்சந்திரா (வயது 34). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. 2 பிள்ளைகள் உள் ளனர்.
பட்டாசு ஆலையில் ஊழி–யராக வேலை பார்த்து வரும் கந்தசாமி, தனது மனைவியுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள் ளார். பலமுறை கண்டித்தும் அவர் தன்னை திருத்திக் கொள்ளவில்லை.
இதையடுத்து கடந்த 31-ந்தேதி சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் ராமச்சந் திரா புகார் அளித்தார். இது–தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று இரவும் கந்தசாமி மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவர் மனை–வியை சரமாரியாக தாக்கி–யுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ராமச்சந் திரா, விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனும–திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திண்டிவனம் அருகே குடும்பத்தகராறில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- சங்கீதாவின் கணவர் செல்வராஜை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நெகனூர் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் .இவரது மகள் சங்கீதா (வயது28) என்பவருக்கும், திண்டிவனம் அடுத்த செங்கனிக் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ்(32) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த சிலநாட்களாக சங்கீ தாவிற்கும் செல்வ ராஜிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்தது. இந்நிலையில் சங்கீதா நேற்று மாலை செங்கனி குப்பத்தில் உள்ள தனது கணவரின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த வெள்ளிமேடுப் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்ககு நேரில் சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காகஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் சங்கீதாவின் கணவர் செல்வராஜை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். வரதட்சனை கொடுமையால் சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றார்கள்.
- திண்டிவனத்தில் குடும்பத்தகராறில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- அப்போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் குடிசை பாளையம் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன். வேன் டிரைவர். இவர் திண்டிவனம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வாடகை வீட்டில்அவரது மனைவியை மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் வேலையை முடித்துவிட்டுவீட்டிற்கு குடித்துவிட்டு வந்தார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர். இந்த நிலையில் பூமிநாதன் வீட்டின் அறை கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு சென்றவர் வெளியே வரவில்லை.
அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பூமிநாதன் வெகு நேரம் ஆகியும் வராததால் அக்கம் பக்கம் உதவியுடன் அறையை உடைத்து பார்த்தார். அப்போது பூமிநாதன் தூக்கில் பிணமாக தொடங்கினார். இது குறித்து ரோசனை போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வந்தனர். பூமிநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருத்தாசலம் அருகே மனைவியை இரும்பு தடியால் தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
- தகராறு முற்றி ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் இருந்த மண்வெட்டியின் இரும்பு பிடியால் மனைவி குணசுந்தரி மீது சரமாரியாக தாக்கியுள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சாத்தியம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(37), இவரது மனைவி குணசுந்தரி (29). இருவருக்கும் திருமணமாகி 9 மாதங்கள் ஆகிறது.இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்பத்தகராறு நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று ஆடி ப்பெருக்கை முன்னிட்டு மணிகண்டனுக்கும் அவரது மனைவி க்குமிடையே நேற்றிரவு மீண்டும் வாக்கு வாதம் ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. இந்த தகராறு முற்றி ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் இருந்த மண்வெட்டியின் இரும்பு பிடியால் மனைவி குணசுந்தரி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த குணசுந்தரி வலியால் அலறி துடித்துள்ளார், அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்ப க்கத்தினர் குணசுந்தரியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனயைில் சிகிச்சையில் சேர்த்தனர்.இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திட்டக்குடி அருகே குடும்பத்தகராறில் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் .
கடலூர்:
திட்டக்குடி அருகே பட்டூர் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். அவரது மனைவி சத்தியா (வயது 25). திருமணமாகி 6 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இவரது கணவர் முகாசபரூரில் உள்ள ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியில் சமையலாளராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இவரது மாமியார் மணிமேகலை என்பவர் சத்தியாவிடம் சண்டை போட்டுள்ளதாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த சத்தியா நேற்று மாலை 6 மணி அளவில் தனது வீட்டிலேயே தூக்கு போட்டு இறந்துள்ளார். இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆவினங்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் .