search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாய"

    • இல்லந்தேடி நேரடியாக முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் விவசாய கடன் அட்டை பெறுவது தொட ர்பாக அனைத்து வட்டாரங்களிலும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் முன்னோடி வங்கி அலுவ லர்கள் இணைந்து சிறப்பு முகாம்கள் மற்றும் இல்லந்தேடி நேரடியாகவும் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த முகாம்களில் இது வரை விவசாய கடன் அட்டை பெறாத விவசாயிகள் அனைவரும் விண்ண ப்பிக்கலாம். விவசாயகடன் அட்டை திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயிர் கடன்க ளுக்கும் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்வோர் நடைமுறை கடன்களுக்கும் ரூ.3 லட்சம் வரையிலும் வங்கிக்கடன் பெற முடியும். விவசாயகடன் அட்டை மூலம் விவசாயிகள் 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் பெறலாம்.

    மேலும் இக்கடன் பெற்ற விவசாயிகள் நிர்ணயிக்க ப்பட்ட காலக்கெடுவிற்குள் முறையாக தவணை தவறாமல் திரும்ப செலுத்தினால் 3 சதவீதம் வரை வட்டி மானியம் பெற வாய்ப்பு உள்ளது. விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.1.60 லட்சம் வரை எவ்வித பிணையமும் இன்றி கடன் வழங்கப்படும்.

    விவசாய கடன் அட்டை கடன் பெற விவசாயிகள் தங்களின் நிலஆவணங்கள் (பட்டா, சிட்டா மற்றும் அடங்கல்), ஆதார் அட்டை, பான்கார்டு, குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடை யாள அட்டை போன்ற ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பதாரரின் கடன் மனுக்கள் தகுதியின் அடிப்படையில் பரிசீலி க்கப்பட்டு விவசாயிகளின் விவரம் மற்றும் வங்கிகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நிலம், பயிர் கடன் அளவீடு பொறுத்து கடன் வழங்கப்படும்.

    எனவே இது வரை விவசாயகடன் அட்டை பெறாத விவசாயிகள் அனைவரும் வரும் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாம் நடைபெறும் விபரங்கள் குறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குர்களை தொடர்பு கொண்டு விவசாயகடன் அட்டை பெற்று பயன்பெறு மாறு கேட்டுக்கொண்டு ள்ளனர்.

    • விவசாயிகள் மகிழ்ச்சி
    • அணைகளில் இருந்து பாசனத்துக்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் இரண்டாம் போக சாகுபடியான கும்பப்பூ சாகுபடி முடிந்து அறுவடைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்த அணைகளில் இருந்து பாசனத்துக்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக கொளுத்திய கடும் வெயிலினால் ஆறு, கால்வாய், குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தன. இந்த நிலையில் முதல் போக சாகுபடியான கன்னிபூ சாகுபடிக்காக கால்வாய்கள் தூர்வாரப்படாமல் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது.

    இதில் நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் தூர்வாரப்படாததால் ஆங்காங்கே கழிவுகள் தேங்கி கடைவரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கால்வாயை தூர்வாரி கடைவரம்பு பகுதி வரை தண்ணீர் தடங்கல் இன்றி வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள மிக நீளமான கால்வாயான நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் எனப்படும் என்.பி. கால்வாய் ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரி சீரமைக்கும் பணி நடந்தது. இந்த கால்வாய் தொடங்கும் சீதப்பால் அருகே உள்ள சாட்டுப்புதூர் பகுதியில் இருந்து கொட்டாரம் பகுதியில் உள்ள மேட்டுக்கால்வாய் மற்றும் பள்ளக்கால்வாய் பகுதி வரை 24 கிலோ மீட்டர் 560 மீட்டர் தூரம் வரை கால்வாயின் இருபுறமும் வளர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணி நடந்து முடிந்தது.

    இதைத்தொடர்ந்து விவசாய பாசனத்துக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து கொட்டாரம் புத்தனாறு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொட்டாரம் பகுதியில் உள்ள புத்தனாறு கால்வாயில் தண்ணீர் இருபுறமும் கரைபுரண்டு ஓடுகிறது. இதைத்தொடர்ந்து கொட்டாரம் கடைவரம்பு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கன்னிபூ சாகுபடி விவசாயப் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.

    • 6 ஏக்கரில் 55 சென்ட் புறம்போக்கு நிலத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து விவசாயம், பனைத் தொழிலும் செய்து வருகிறோம்.
    • வாழ்வாதாரத்திற்கான இந்த இடத்தை, எங்களுக்கு பட்டா செய்து தந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பொன்னரம்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னையன் உள்பட பலர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் சொந்த கிராமத்தில் 6 ஏக்கரில் 55 சென்ட் புறம்போக்கு நிலத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து விவசாயம், பனைத் தொழிலும் செய்து வருகிறோம்.

    எங்களுக்கு வேறு இடமோ, வீடோ இல்லை. பனைத் தொழில் தான் எங்களுக்கு வாழ்வாதாரம். இந்த இடத்திற்கு எங்களுக்கு 2சி பட்டா வழங்கப்பட்டுள்ளது. பனை மரங்களுக்கு வரியும் நிலத்திற்கு கந்தாயர் ரசிதும் செய்து வருகிறோம்.

    ஆனால் தற்போது வருவாய்த்துறை அதிகாரிகள் வீடுகளை இடித்தும் விவசாயத்தை அழித்தும் எங்கள் இடத்தை காலி செய்ய சொல்லியும் மிரட்டி வருகின்றனர். எனவே 3 தலைமுறையாக எங்கள் அனுபவத்தில் மற்றும் எங்களின் வாழ்வாதாரத்திற்கான இந்த இடத்தை, எங்களுக்கு பட்டா செய்து தந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

    • அறுவடைக்காலம் முடிந்து நிலத்தை உழுது சமன் செய்ய இருந்தார். கடும் வெயிலின் காரணமாக நிலத்தில் பயிர்கள் காய்ந்து இருந்தது. இதனால் விவசாய நிலத்தில் திடீரென தீ பிடித்தது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா இரும்புப்பாலம் அடுத்த செங்கோடம்பாளையம் செல்லும் வழியில் ஏராளமான ஏக்கரில் மானாவரி சாகுபடி செய்யும் விவசாய நிலங்கள் உள்ளன.

    இதில் மக்காசோளம், உளுந்து, வேர்க்கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகள் பயிரிடப் பட்டுள்ளன. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவரது நிலத்தில், அறுவடைக்காலம் முடிந்து நிலத்தை உழுது சமன் செய்ய இருந்தார். கடும் வெயிலின் காரணமாக நிலத்தில் பயிர்கள் காய்ந்து இருந்தது.

    இந்த விவசாய நிலத்தில் திடீரென தீ பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென அருகில் இருந்த விவசாய நிலங்களுக்கும் பரவியது. அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

    இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து திருச்செங்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்அடிப்படையில் நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    இந்த திடீர் தீவிபத்திற்கு காரணம் மர்ம நபர்களா? அல்லது கடுமையான வெயிலின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • தினசரி சம்பளமாக 265 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு ஊரக வளர்ச்சி முகமை மூலம் வழங்கப்படுகிறது
    • தினமும் 40 ஆயிரம் பேர் வரை பணி செய்வர்.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புறம் தவிர்த்து அவிநாசி, பல்லடம், பொங்கலூர், தாராபுரம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத் தொழில் தான் பிரதானம்.தென்னை, வாழை, கரும்பு, பருத்தி, சோளம், நிலக்கடலை என அந்தந்த பகுதியின் மண், மழை வளத்துக்கேற்ப பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    சமீப ஆண்டுகளாக விவசாய நிலங்களில் உழவு செய்வது, களை எடுப்பது, உரமிடுவது, தண்ணீர் பாய்ச்சுவது, விளைபொரு ட்களை அறுவடை செய்வது, சந்தைக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள விவசாய தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதற்கு 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் தான் முக்கிய காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர். கிராமங்களில் கல், மண் வரப்பு, தென்னை மரங்களை சுற்றி அகழி எடுப்பது, உரக்குழி அமைப்பது, குளம், குட்டையோரம் மரக்கன்று நடுவது, சாலையோரம் உள்ள புதர் செடிகளை வெட்டுவது, நர்சரி பராமரிப்பு உள்ளிட்ட வேலைகளில் 100 நாள் திட்ட பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு தினசரி சம்பளமாக 265 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு ஊரக வளர்ச்சி முகமை மூலம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கூடுதலாக 50 நாள் வேலை நாள் உயர்த்தப்படும் என சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் கூறுகையில், 100 நாள் திட்டத்தில், ஊராட்சிகளில் வேலை அதிகமுள்ள சமயங்களில் தினமும் 40 ஆயிரம் பேர் வரை பணி செய்வர் என்றனர். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், 100 நாள் திட்டத்தில் பல இடங்களில் பணிகள் முறைப்படி நடப்பதில்லை.100 நாள் வேலை உறுதியளிப்பு திட் டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கட்டுமானப்பணி, சாலை அமைத்தல் போன்ற கடினமான பணிகள், தனியாருக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டு, உடல் உழைப்பு தொழிலாளர்கள் மூலமே மேற்கொள்ளப்படுகிறது.

    ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் 100 நாள் திட்ட தொழிலாளர்களின் பெயரில் வழங்கப்படுகிறது. விவசாய தொழிலாளர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் 100 நாள் திட்டம் தான். எனவே 100 நாள் திட்ட பணியாளர்களை விவசாய தொழிலில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்.

    அரசு வழங்கும் சம்பளத்துக்கு நிகரான சம்பளம் வழங்க விவசாயிகளும் தயாராக உள்ளனர். இதன் மூலம், தொழிலாளர்களுக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும். விவசாயமும் செழிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் லட்சுமிநாராயண சாமி கோவில் வளாகத்தில் அந்த கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலம் ஏலம் நடைபெற்றது.
    • தொகை அதிகமாக இருந்ததால் விவசாயிகள் புறக்கணிப்பு.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் லட்சுமிநாராயண சாமி கோவில் வளாகத்தில் அந்த கோவிலுக்கு சொந்தமான குள்ளநாயக்கன்பாளையம் பகுதி விவசாய நிலம் ஏலம் நடைபெற்றது. ஆய்வாளர் வடிவுக்கரசி, தக்கார் நவீன்ராஜ் தலைமை வகித்தனர். இதில் செயல் அலுவலர் சின்னசாமி, அலுவலக நிர்வாகி வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இந்த ஏலத்தில் பங்கேற்ற விவசாயிகள் ஏலத்தை புறக்கணித்து மனு கொடுத்தனர். இது குறித்து ஏலத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது-

    3 வருடத்திற்கு ஒருமுறை ஏலம் நடந்து வந்தது. கடந்த ஆண்டு ஒரு வருடம் என மாற்றினார்கள். இதில் விவசாயம் செய்ய கால நேரம் போதுமானதாக இல்லை. வாய்க்காலில் தண்ணீர் வந்தால்தால் விவசாயம் செய்ய முடியும்.

    தற்போது பொட்டாஷ் உள்பட உரங்களின் விலை அதிகமானது. இடு பொருட்கள் செலவு அதிகம் ஆகி வருகிறது. ஒரு வருடம் வாய்க்காலில் தண்ணீர் வராவிட்டால் செலுத்திய பணம் முழுதும் நஷ்டம் ஏற்படும். விவசாயம் செய்தாலே நஷ்டம் ஏற்படும் நிலையில், இந்த ஆண்டு ஏலத்தில், கடந்த ஆண்டு ஏலத்தொகையை விட 10 சதவீதம் அதிகப்படுத்தி கேட்டனர். இதில் எங்களுக்கு உடன்பாடில்லை.

    ஆகவே, 10 சதவீத ஏலத்தொகை உயர்வை தள்ளுபடி செய்ய வேண்டும். ஒரு வருடம் என்பதை 3 அல்லது 5 வருடமாக உயர்த்த வேண்டும் என அதிகாரிகளிடம் மனு கொடுத்து, ஏலத்தை புறக்கணித்தோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×