search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பான் கார்டு"

    • பான்.2.0 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    • இந்தியாவில் இதுவரை 78 கோடி பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

    தற்போது பயன்பாட்டில் இருக்கும் பான் கார்டை க்யூ ஆர் கோடு வசதி உடன் மேம்படுத்துவதற்காக ரூ.1,435 கோடி செலவில் வருமான வரித் துறையின் பான் 2.0 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் தற்போதுள்ள பான் கார்டு முழுமையாக மேம்படுத்தப்பட்டு, டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்படும். பின்னர் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் பொதுவான வணிக அடையாளமாக பான் கார்டு மாற்றப்படும் என தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    இந்த திட்டத்தின் கீழ் புதிய பான் கார்டுகளை விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பான் கார்டுகள் அப்கிரேடு செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. க்யூஆர் கோட் உடன் கூடிய பான் கார்ட் வேண்டும் என்றால் மட்டும் அப்ளை செய்து கொள்ளலாம். அது இலவசமாகவே வழங்கப்படும்.

    இந்தியாவில் இதுவரை 78 கோடி பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன, அவற்றில் 98 சதவீதம் தனிநபர் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • போலியான 2 இறப்பு சான்றிதழ்களிலும் டாக்டர் யாதவ் என்பவர் கையெழுத்திட்டதும் தெரிய வந்தது.
    • இந்த மோசடி அம்பலமானதும் குற்றம் சாட்டப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

    இறந்ததாக போலி சான்றிதழ் வாங்கி 1.1 கோடி இன்சூரன்ஸ் பணத்தை பெண் ஒருவர் மோசடி செய்த சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.

    மும்பையில் 2021 ஆம் ஆண்டு 11 ஆம் தேதி கஞ்சன் ராய் என்பவர் இதய நோயால் மரணமடைந்துள்ளார். கஞ்சன் ராயின் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து அவரது மகன் தன்ராஜ் 20.4 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுள்ளார்.

    இதே இறப்பு சான்றிதழை பயன்படுத்தி இன்னொரு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் 25 லட்ச ரூபாயை தன்ராஜ் பெற்றுள்ளார்.

    பின்பு 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி பவித்ரா என்பவர் உயிரிழந்துள்ளார். பவித்ராவின் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து அவரது கணவர் ரோகித் 24.2 லட்ச ரூபாயை பெற்றுள்ளார்.

    இந்நிலையில் இந்தாண்டு ஜனவரி 30 ஆம் தேதி இன்சூரன்ஸ் நிறுவனம் ஆடிட்டிங் செய்த போது ஒரே முகவரியில் இரண்டு வெவ்வேறு பெயர்களில் இன்சூரன்ஸ் பெற்றுள்ளதை பார்த்து சந்தேகம் அடைந்தது.

    இதனையடுத்து இன்சூரன்ஸ் நிறுவனம் இது சம்பந்தமாக போலீசில் புகாரளித்தது.

    இந்த வழக்கின் விசாரணையில், 2 தனித்தனி ஆதார் மற்றும் பான் கார்டுகளை பயன்படுத்தி 5 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் காஞ்சன் ராய் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருப்பது தெரிய வந்தது.

    மேலும், காஞ்சன் ராய், பவித்ரா என்ற பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட போலியான 2 இறப்பு சான்றிதழ்களிலும் டாக்டர் யாதவ் என்பவர் கையெழுத்திட்டதும் தெரிய வந்தது.

    இந்த மோசடி அம்பலமானதும் குற்றம் சாட்டப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவாகியுள்ளனர். இந்த மோசடியில் இன்சூரன்ஸ் நிறுவனம், நகராட்சி அதிகாரிகள் உட்பட பலருக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாட்டில் உள்ள 130 கோடி மக்களில் பெரும்பாலானவர்கள் ஆதாருடன் பான் எண்ணை இணைத்து விட்டனர்.
    • ஆதாருடன் பான் எண்ணை இணைக்க மேலும் அவகாசம் கொடுக்கப்படுமா என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரையில் எவ்வித அறிவிப்பும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை.

    சென்னை:

    ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. நாட்டில் உள்ள மக்களின் வங்கி பணவர்த்தனை நடவடிக்கைகள், சொத்து விவரங்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இதனை இணைக்க வலியுறுத்தியது.

    சாமான்ய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை ஒட்டுமொத்த இந்திய மக்களின் புள்ளி விவரங்களை சேகரிக்கும் வகையில் பான்-ஆதார் இணைப்பு கருதப்படுகிறது. கடந்த 2 வருடத்திற்கு மேலாக பொதுமக்களை வலியுறுத்தி வந்த நிலையில் 3 முறை நீட்டிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது.

    முதலில் ஒரு வருடத்திற்குள் இணைக்க வேண்டும் என அவகாசம் கொடுக்கப்பட்டது. பின்னர் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரூ.500 அபராதத்துடன் இணைக்க மார்ச் 31-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

    அதன்பின்னர் இணைப்பவர்களுக்கு ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஜூன் 30-ந்தேதிக்குள் பான்-ஆதாரை இணைக்க இறுதி கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் நேற்றுடன் அவை முடிந்தது.

    நாட்டில் உள்ள 130 கோடி மக்களில் பெரும்பாலானவர்கள் ஆதாருடன் பான் எண்ணை இணைத்து விட்டனர். கூலி தொழிலாளர்கள், விவசாயிகள் குறிப்பிட்ட அளவில் இணைக்கவில்லை. வங்கி நடைமுறையை பின்பற்றாதவர்கள் தான் அதிகளவில் இணைக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆதாருடன் பான் எண்ணை இணைக்க மேலும் அவகாசம் கொடுக்கப்படுமா என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரையில் எவ்வித அறிவிப்பும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. இதுகுறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி தான் வெளியிட வேண்டும். இன்னும் குறிப்பிட்ட அளவிலான சதவிகிதத்தினர் இணைக்காததால் மீண்டும் வாய்ப்பு கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து வங்கி உயர் அதிகாரிகள் கூறும்போது, பானுடன் ஆதார் எண்ணை இன்னும் பலர் இணைக்காமல் உள்ளனர். இது முழுக்க முழுக்க வங்கி பணியை சார்ந்ததாகும். ஒருவருக்கு எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது. புதிதாக வாங்குவது போன்ற விவரங்கள் ஆதார் மூலம் தெரியவந்து விடும். வங்கியில் பணம், காசோலை பரிவர்த்தனை விவரங்கள் பான் கார்டு மூலம் தெரியும். இந்த இரண்டையும் இணைத்து விட்டால் ஒட்டுமொத்த ஒருவரது சொத்து, பண பரிவர்த்தனை தெரிந்து விடும்.

    அதனால் சிலர் இணைக்காமல் உள்ளனர். ஒருசிலர் அறியாமையால் இணைக்கவில்லை. இணைக்காதவர்களின் வங்கி கணக்கு முடக்கப்படுமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி தான் முடிவு செய்யும். இதுபற்றிய அறிவிப்பு ஓரிரு நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கிறோம், என்றனர்.

    • வருமான வரித்துறை சார்பில் 5 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • 1,000 ரூபாய் அபராதம் செலுத்தி பான் ஆதார் இணைப்பை மேற்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    பான் கார்டுஎண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க, வரும் ஜூன் 30-ந் தேதி இறுதி நாள். பான் கார்டு எண் வைத்திருப்போர், ஆதாருடன் இணைப்பது கட்டாயம். இதற்காக வருமான வரித்துறை சார்பில் 5 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 1,000 ரூபாய் அபராதம் செலுத்தி பான் ஆதார் இணைப்பை மேற்கொள்ளலாம்.வரும் ஜூன் 30ந் தேதிக்குள் இணைக்காவிட்டால், பான் எண் செயலிழக்கும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

    https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற இணைய பக்கத்துக்குள் சென்று லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ்,லிங்க் ஆதார் என்ற இணைப்புக்குள் சென்று இணைப்பை சரிபார்க்கவோ, இணைக்கவோ செய்யலாம்.என ெதரிவிக்கப்பட்டுள்ளது.  

    • பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் இணைப்பதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • காலக்கெடுவே ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2020ஆம் ஆண்டு பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் அனைவரும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி அதற்கு கடைசி நாளாக இருந்தது.

    இருப்பினும், நாட்டில் அப்போது நிலவிய கொரோனா சூழல் காரணமாக இந்த காலக்கெடு வரும் இந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    அவகாசத்திற்கு இன்னும் 3 நாட்களே இருந்த நிலையில் கூடுதல் காலக்கெடு நீட்டிப்பு வழங்கப்படுமா என கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில் பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் இணைப்பதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    காலக்கெடுவே ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    • அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்து உள்ளது.
    • செயல்படாத பான் எண்ணைப் பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்ய முடியாது.

    புதுடெல்லி:

    வருமான வரி செலுத்துவதற்கான நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி வருமான வரி செலுத்துவோர் தங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்து வருகின்றனர்.

    தற்போது இதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை நிர்ணயித்து இருக்கிறது. அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்து உள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள பொது அறிவுறுத்தல் நோட்டீசில், 'வருமான வரிச்சட்டம் 1961-ன்படி, விலக்கு பெறாத அனைத்து பான் கார்டுதாரர்களும் 31.3.2023-க்குள் தங்கள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும். ஆதார் இணைக்காத பான் கார்டுகள் 1.4.2023 முதல் செயலற்றதாகி விடும்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    மேலும், 'இது கட்டாயம், அவசியம். தாமதிக்க வேண்டாம், இன்றே இணைக்கவும்' என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.

    கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, அசாம், காஷ்மீர், மேகாலயா மாநிலங்களை சேர்ந்தவர்கள், வருமான வரிச்சட்டம் 1961-ன் படி வீடில்லாதவர்கள், 80 மற்றும் அதற்கு மேல் வயதுடையவர்கள், இந்தியர் அல்லாதவர்கள் போன்ற பிரிவினர் விலக்கு பெற்றவர்கள் ஆவர்.

    எனவே இவர்களை தவிர மீதமுள்ளவர்கள் பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆகும்.

    அதேநேரம் ஒருவரின் பான் கார்டு செயலற்றதாகி விட்டால், வருமான வரிச்சட்டத்தின் அனைத்து விளைவுகளுக்கும் அந்த தனிநபர் பொறுப்பாவதுடன், பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தது.

    அந்தவகையில், செயல்படாத பான் எண்ணைப் பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்ய முடியாது; நிலுவையில் உள்ள வருமானம் செயலாக்கப்படாது; நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப் பெற முடியாது; குறைபாடுள்ள வருமானம் தொடர்பான நிலுவையில் உள்ள நடைமுறைகளை முடிக்க முடியாது மற்றும் அதிக விகிதத்தில் வரி கழிக்கப்பட வேண்டும்.

    இவற்றைத் தவிர, அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கான முக்கியமான கே.ஒய்.சி. (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) அளவுகோல்களில் ஒன்று பான் என்பதால், வங்கிகள் மற்றும் பிற நிதி இணையதளங்கள் போன்ற பல்வேறு தளங்களிலும் வரி செலுத்துவோர் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆதார்-பான் எண்ணை இணைக்க அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
    • அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை ரூ.1000 அபராதம் செலுத்தி பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கலாம்.

    புதுடெல்லி:

    ஒவ்வொருவரும் தன்னுடைய பான் கார்டு எண்ணை ஆதார் கார்டு எண்ணுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

    இந்த இரு எண்களையும் இணைப்பதற்கு கடந்த மார்ச் 31-ந் தேதி வரை வருமான வரித்துறை அலுவலகம் அவகாசம் அளித்தது. அதன் பிறகு அந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு (2023) மார்ச் 31-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் கடந்த மார்ச் 31-ந் தேதிக்கு பிறகு பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைப்பவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி தற்போது ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த ரூ.500 அபராதத்துடன் பான் எண், ஆதார் எண்ணை இணைக்க ஜூன். 30-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு அபராதம் ரூ.1000 என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ.500 அபராதத்துடன் கூடிய காலக்கெடு இன்றுடன் முடிகிறது.

    எனவே நாளை (1-ந் தேதி) முதல் இரண்டையும் இணைக்க அபராதம் ரூ.1000 ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை ரூ.1000 அபராதம் செலுத்தி பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கலாம். அதற்குள் இணைக்காவிட்டால் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து பான் கார்டு செயலற்றதாக மாறி விடும். அதன்பிறகு பான் எண்ணை எதிலும் பயன்படுத்த முடியாமல் போய் விடும் என்றும் வருமான வரித்துறை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×