search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தப்பியோட்டம்"

    • ஜெயிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
    • இச்சம்பவம் குறித்து, மாவட்ட நிர்வாகம் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டது.

    கவுகாத்தி:

    அசாமில் உள்ள சிறைச்சாலையில் இருந்து 5 விசாரணை கைதிகள், பெட்ஷீட், போர்வை, லுங்கி ஆகியவற்றைப் பயன்படுத்தி 20 அடி உயர சுவரில் ஏறி குதித்து தப்பியோடிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

    மோரிகான் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விசாரணை கைதிகளான சைபுதீன், ஜியாருல் இஸ்லாம், நூர் இஸ்லாம், மபிதுல் மற்றும் அப்துல் ரஷீத் ஆகியோர் நேற்று அதிகாலை 1 மணியளவில் சிறையிலிருந்து வெளியேறி பெட்ஷீட், போர்வை, லுங்கி ஆகியவற்றை கயிறாக திரித்து 20 அடி உயர சுவரில் ஏறி தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து, மாவட்ட நிர்வாகம் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டது.

    மேலும் பிரசாந்தா சைகியா என்ற ஜெயிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து குவாஹாட்டியைச் சேர்ந்த இரண்டு உதவி ஜெயிலர்கள் சிறையை நிர்வகிக்க தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த குள்ளம்பாளையத்தில் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • குடியிருப்பு பகுதிகள் நிறைந்த இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக ரவுடிகளின் தொல்லை அதிகரித்துள்ளதால் அவர்களை பிடிக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். பதுங்கி இருக்கும் ரவுடிகளை தனிப்படை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    சமீபத்தில் ரவுடிகளை பிடிக்க முயன்ற போது அவர்கள் போலீசாரை தாக்க முயன்ற போது தற்பாதுகாப்புக்காக துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர். சமீபத்தில் கூட காஞ்சிபுரத்தில் 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இதேபோல் துப்பாக்கி சூடு சம்பவம் மீண்டும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள குள்ளம்பாளையம் பகுதியில் நடைபெற்று உள்ளது.

    இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

    திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த சிவசுப்பு என்கிற சுப்பிரமணி (26) என்பவரை பிடிக்க திருநெல்வேலி போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். ஆனால் சுப்பிரமணி போலீசார் கண்ணில் தென்படாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். திருநெல்வேலியில் சுப்பிரமணி மீது கொலை, கொள்ளை, ரேஷன் அரிசி கடத்தல், கஞ்சா உள்பட மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    சுப்பிரமணி தனது கூட்டாளிகள் முத்து மணிகண்டன், இசக்கி, வசந்தகுமார், சத்யா 4 பேருடன் ஒவ்வொரு ஊராக தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார். சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க திருநெல்வேலி சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சுப்பிரமணி குறித்த தகவல்களை ரகசியமாக சேகரித்து வந்தனர்.


    அதன்படி தனிப்படை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதில் சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த குள்ளம்பாளையத்தில் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோ தலைமையில் மற்றொரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் குள்ளம்பாளையத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் மறைந்திருந்து சுப்பிரமணி தங்கி இருந்த வீட்டை ரகசியமாக கண்காணித்தனர்.

    அப்போது அந்த வீட்டில் சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனையடுத்து தனிப்படை போலீசார் திடீரென சுப்பிரமணி தங்கி இருந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். இதை சற்றும் எதிர்பாராத சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சுப்பிரமணி வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோ மீது வீசி உள்ளார். அப்போது சுதாரித்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோ தற்காப்புக்காக ஒரு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆனால் அந்த குண்டு சுப்பிரமணி மீது படாமல் வீட்டின் ஓரத்தில் பாய்ந்தது. இதனையடுத்து சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரும் வீட்டின் பின்பக்க கதவை திறந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினர். போலீசாரும் அவர்களை பிடிக்க விரட்டி உள்ளனர். ஆனால் அதற்குள் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    குடியிருப்பு பகுதிகள் நிறைந்த இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து தனிப்படை போலீசார் பெருந்துறை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனை அடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தேசிய நெடுஞ்சாலை மற்றும் சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டில் புகுந்த மர்மநபர் பெண் அணிந்திருந்த 4 கிராம் நகையை திருடினார்.
    • மேலும், செல்போனை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டார்.

    பேராவூரணி:

    பேராவூரணி ரயிலடி எதிரில் உள்ள வர்த்த சங்க கட்டிடத்தின் அருகில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் விக்னேஷ்.

    ஆட்டோ டிரைவர் .

    இவரது மனைவி பவித்ரா (வயது 25). இவர் நேற்று இரவு தனது மாமியார் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டில் புகுந்த மர்மநபர் பவித்ரா கழுத்தில் அணிந்திருந்த 4 கிராம் கொண்ட தாலி கயிறு மற்றும் இரண்டு வயது குழந்தை சுகன்யாஸ்ரீ அணிந்திருந்த வெள்ளி கொலுசு, அருணாகயிறு ஆகியவற்றை அறுத்துக் கொண்டும், மாமியார் இந்திராணி (53) வைத்திருந்த செல்போனை எடுத்து கொண்டும் தப்பி ஓடி விட்டார்.

    இது குறித்து பேராவூரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பபேரில் ட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரித்விராஜ் சௌகான், பேராவூரணி இன்ஸ்பெக்டர் காவேரி சங்கர், சப்- இன்ஸ்பெக்டர்கள் ராம்குமார், வாகீஸ்வரன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • மர்ம நபர்கள் எடுத்த துணி களுக்கு பில் வழங்கப்பட்டு பணம் செலுத்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
    • பணம் செலுத்தாமல் கடை ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி தப்பியுள்ளனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத் தில் பிரதான சாலையான பாரதியார் வீதியில் அன்சாரி என்பவர் துணிக் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று இரவு காரில் வந்த 5 பேர், அந்த கடையில் விலை உயர்ந்த துணிகள் எடுத்த னர். தொடர்ந்து மர்ம நபர்கள் எடுத்த துணி களுக்கு பில் வழங்கப்பட்டு பணம் செலுத்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது அவர்கள், பணம் செலுத்தாமல் கடை ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி, அவர்களை தாக்கி விட்டு துணிகளை எடுத்துக்கொண்டு காரில் தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து கடை ஊழி யர்கள் நகர போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில் போலீஸ் சூப்பிரண்ட் சுப்ரமணியம் தலைமையிலான போலீசார் அந்த கடையில் பணிபுரிந்த ஊழியர்களிடம் விசாரணை செய்தனர். மேலும் கடை யில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி, போலீசார் வழக்கு பதிவு செய்து 5 மர்ம நபர்களை தேடி வரு கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தேவனோடை கொள்கை ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை வழிமறித்து சோதனை.
    • மாட்டு வண்டியை பறிமுதல் செய்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்- இன்ஸ்பெக்டர் முருகேசன், பயிற்சி சப் -இன்ஸ்பெக்டர் நஸ்ரின் மற்றும் போலீசார் கபிஸ்தலம் காவல் சரக பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது கபிஸ்தலம் அருகே உள்ள தேவனோடை கொள்கை ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை வழிமறித்து சோதனை செய்ததில் மாட்டு வண்டி ஓட்டி வந்த தேவனோடை நடுத்தெரு ராஜன் (வயது 45) என்பவர் தப்பி ஓடிவிட்டார்.

    அதில் திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி மாட்டு வண்டியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய ஜோதி ராஜனை தேடி வருகின்றனர்.

    • சற்று முன்னதாகவே லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடி விட்டார்.
    • எங்கிருந்து அரிசி மூட்டைகளை கடத்தி வந்தார் என விசாரணை.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேல ராஜ வீதியில் நேற்று இரவு துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரையன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு மினிலாரியை மறிக்க முயன்றனர். ஆனால் சற்று முன்னதாகவே லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடி விட்டார்.

    இதையடுத்து மினி லாரியை சோதனை யிட்டனர். அதில் 2Ñ டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து லாரி மற்றும் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவர் யார் ? எங்கிருந்து அரிசி மூட்டைகளை கடத்தி வந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆடு திருட்டு, சிலிண்டர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
    • போலீசாரை பார்த்ததும் செல்லத்துரை தப்பி ஓட முயன்றார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம்வேதா ரண்யம் அடுத்த கோடியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 47).

    இவர் மீது ஆடு திருட்டு, சிலிண்டர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் சிலிண்டர் திருட்டு வழக்கில் செல்லத்துரையை கைது செய்ய கோடியக்காட்டில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் செல்லத்துரை தப்பி ஓட முயன்றார். இருந்தாலும் போலீசார் அவரை பிடித்தனர்.

    அந்த நேரத்தில் திடீரென செல்லத்துரை மற்றும் அவரது மகன் வீரக்குமார் (24) ஆகியோர் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர்கள் ராஜ்ஐயப்பன், சக்திவேல் ஆகியோரை குத்தினர்.

    மேலும் இன்ஸ்பெக்டர் குணசேகரனை தாக்கி விட்டு வீரக்குமார் தப்பி ஓடி விட்டார். செல்லத்துரையை சக போலீசார் மடக்கி பிடித்தனர்.

    இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த போலீசா ர்கள் ராஜ்ஐயப்பன், சக்திவேல் ஆகியோர் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியிலும், இன்ஸ்பெக்டர் குணசேகரன் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் போலீசாரை பார்த்தார்.

    மேலும் தப்பி ஓடிய வீரக்குமாரை உடனே பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லத்துரையை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் லீலாவதி கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தனர்.
    • மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி விட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாக்கோட்டை நல்லான் நகரை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மனைவி லீலாவதி (வயது 63).

    இவர் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். திடீரென அவர்கள் லீலாவதி கழுத்தில் கிடந்த 11 Ñ பவுன் தங்க சங்கிலியை சட்டென்று பறித்தனர்.

    அதிர்ச்சியடைந்த லீலாவதி திருடன்.. திருடன்.. கத்தி கூச்சலிட்டார்.

    அதற்குள் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று தப்பி விட்டனர்.

    இது குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் கற்களை வீசி பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி சென்றனர்.
    • மேலஒட்டங்காடு என்ற இடத்தில் மற்றொரு அரசு பஸ்சின் கண்ணாடியை கல்வீசி உடைத்து விட்டு சென்றுள்ளனர்.

    பேராவூரணி:

    பேராவூரணி அரசு போக்கு வரத்து கழக பணிமனை யில் இருந்து (தடம் எண் 1) அதிராம்பட்டினம் சென்று விட்டு மீண்டும் பேராவூரணி நோக்கி வந்து கொண்டிருந்தது.

    மரக்காவலசை அருகே நேற்று மாலை வந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென கற்களை வீசி முன் பக்க கண்ணாடியை உடைத்து விட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

    தொடர்ந்து சேதுபாவா சத்திரம் வழியாக இரண்டா ம்புளிக் காடு சென்றவர்கள் பேராவூரணி பணிமனையைச் சேர்ந்த (தடம் எண் 10) பட்டுக்கோட்டையிலிருந்து பேராவூரணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்பொழுது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து அழகியநாயகிபுரம் வழியாக ஒட்டங்காடு சென்று, மேலஒட்டங்காடு என்ற இடத்தில் பேராவூரணி அரசு போக்குவரத்து கழக நகர பேருந்து பட்டுக்கோட்டையில் இருந்து பேராவூரணி நோக்கி வந்து கொண்டிருந்த (தடம் எண் 6 ஏ) பேருந்தின் கண்ணாடியை கல்வீசி உடைத்து விட்டு சென்றுள்ளனர்.

    இச்சம்பவம் பேராவூரணி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. மர்ம நபர்கள் குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • அமரன், ஆறுமுகம், ரவி ஆகிய 3 பேர் சாராயம் விற்பனை செய்வதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஆறுமுகம் தப்பித்து ஓடி விட்டார். அமரன், ரவி ஆகிய 2 பேரை கைது செய்து திண்டிவனம் சிறையில் அடைத்தனர்.

    விழுப்புரம்:

    மரக்காணத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர்கள் அமரன், ஆறுமுகம், ரவி ஆகிய 3 பேர் சாராயம் விற்பனை செய்வதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் மரக்காணம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் மரக்காணத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் ஆய்வு செய்தனர். அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அமரன் (வயது 29). ரவி (32), ஆறுமுகம் (42) ஆகியோரை பிடித்தனர். இதில் ஆறுமுகம் தப்பித்து ஓடி விட்டார். அமரன், ரவி ஆகிய 2 பேரை கைது செய்து திண்டிவனம் சிறையில் அடைத்தனர். இவர்களிலிருந்து100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • அதே பகுதியில் உள்ள பெண் ஒருவர் கணவன் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
    • சத்தம் கேட்டதில் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது பின்பக்க கதவு வழியாக தப்பி ஓடிவிட்டார்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பேரளம் அடுத்து கடகம்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ்குமார் இவர் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.

    திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில்அதே பகுதியில் உள்ள 30 வயதுடைய பெண் கணவன் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் உறங்கி கொண்டிருந்தார் அப்போது ரமேஷ்குமார் வீட்டின் உள்ளே புகுந்து உறங்கி கொண்டிருந்த பெண்ணை கற்பழிக்க முயன்றுள்ளார்.

    அப்போது அலறியடித்த வெளியே அவர் ஓடி வந்துவிட்டார். சத்தம் கேட்டதில் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது பின்பக்க கதவு வழியாக தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து பேரளம் காவல் நிலையத்தில் பெண் புகார் கொடுத்துள்ளார் புகாரின் அடிப்படையில் ரமேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • தங்க பொட்டு தாலியை அறுத்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக ஓடியுள்ளார்.
    • அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை துரத்தி செல்வதர்க்குள் அவர் தப்பி சென்று விட்டார்.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள வல்லம் - திருச்சி சாலையில் ஆலமரம் அருகே உள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். இக்கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பிரகாரத்தின் வெளியே பக்தர்கள் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் தரிசனம் செய்வது போல் உள்ளே சென்று அம்மன் கழுத்தில் அணிந்திருந்த. தங்க பொட்டு தாலியை அறுத்து கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக ஓடி உள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை துரத்தி சென்றனர். ஆனால் அவர் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து வல்லம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில் தனிப்படை அமைக்க ப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் வல்லம் ஏகவுரியம்மன் கோவில் அருகே அம்மன் தாலியை பறித்து சென்ற கரூரை சேர்ந்த செல்லதுரை (வயது 28) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். இது குறித்து வல்லம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×