search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சுப்போட்டிகள்"

    • ஒரு கல்லூரியிலிருந்து 2மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
    • வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்பரிசு ரூ.5ஆயிரம் வழங்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் அனைத்து பள்ளி மாண வர்களுக்கும் மற்றும் அனைத்து கல்லூரி மாணவர்க ளுக்கும் பேச்சுப்போட்டி கள் காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி 30-ந் தேதியும், ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி அடுத்த மாதம் 2-ந் தேதியும் தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

    30-ந் தேதி நடைபெறும் போட்டியில் பள்ளி மாண வர்களுக்கு காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் மற்றும் வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள் உள்ளிட்ட தலைப்பும், கல்லூரி மாண வர்களுக்கு காந்தியடிகள் நடத்திய தண்டியாத்திரை, வெள்ளை யனே வெளி யேறு இயக்கம், சத்திய சோதனை மற்றும் மதுரையில் காந்தி ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறவுள்ளது.

    அடுத்த மாதம் 2-ந் தேதி அன்று பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், ஆசிய ஜோதி மற்றும் மனிதருள் மாணிக்கம் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு சுதந்திர போராட்டத்தில் நேரு, பஞ்ச சீல கொள்கை மற்றும் நேருவின் வெளியுறவுக் கொள்கை ஆகிய தலைப்புகளிலும் போட்டிகள் நடை பெற உள்ளது.

    போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்கள் அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று அதனை நேரில் அளிக்க வேண்டும். ஒரு கல்லூரியிலிருந்து 2மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

    தென்காசி மாவட்ட அளவில் நடைபெறும் கல்லூரி பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்க ளுக்கு முதல்பரிசு ரூ.5ஆயி ரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிர மும், 3-ம் பரிசு ரூ.2 ஆயி ரம் மற்றும் பாராட்டு சான்றித ழும் வழங்கப்படும்.

    இதேபோல் 6 -ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்பரிசு ரூ.5ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-வது பரிசுத்தொகை ரூ.2ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும்.

    போட்டிகளில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2 ஆயிரம் வீதம் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி அன்று நேரில் அளிக்க வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து ஒரு மாணவர் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ளலாம்.

    இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் 2-ம் தளத்தில் செயல்பட்டுவரும் மண்டல தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, 0462- 2502521 என்ற தொலைபேசி எண் மூலமோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இப் பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன் பெறவேண்டும்

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென தனித்தனியாக பேச்சுப் போட்டிகள் காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
    • பள்ளி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) அன்றும் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) அன்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென தனித்தனியாக பேச்சுப் போட்டிகள் காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.

    இந்த போட்டியானது பள்ளி மாணவர்களுக்கு காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் ஒரு மணிக்கும் தொடங்க உள்ளது.

    கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் கல்லூரிக்கு 2 பேர் வீதம் அந்தந்த கல்லூரிகளின் முதல்வரே தெரிவு செய்தும், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் பள்ளிகளின் தலைமையாசிரியர்களே ஒரு பள்ளிக்கு ஒருவர் வீதம் தெரிவு செய்து போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 1. தாய் மண்ணுக்கு பெயர் சூட்டிய தனயன், 2. மாணவர்க்கு அண்ணா, 3. அண்ணாவின் மேடைத்தமிழ், 4. அண்ணா வழியில் அயராது உழைப்போம் போன்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டிகளும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு, 1. பேரறிஞர் அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், 2. பேரறிஞர் அண்ணாவின் சமுதாய சிந்தனைகள், 3. அண்ணாவின் தமிழ்வளம், 4. அண்ணாவின் அடிச்சுவட்டில், 5. தம்பி! மக்களிடம் செல் போன்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

    மேலும், தந்தை பெரியார் பிறந்த நாள் அன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு, 1. தொண்டு செய்து பழுத்த பழம், 2. தந்தை பெரியாரும் தமிழ் சமுதாயமும், 3. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், 4. தந்தை பெரியார் காண விரும்பிய உலக சமுதாயம், 5. தந்தை பெரியாரும் பெண் விடுதலையும் போன்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டிகளும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு, 1. தந்தை பெரியாரும் பெண் விடுதலையும், 2. தந்தை பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், 3. பெண் ஏன் அடிமையானாள்?, 4. இனிவரும் உலகம், 5. சமுதாய விஞ்ஞானி பெரியார், 6. உலகச் சிந்தனையாளர்களும் பெரியாரும் போன்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

    இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன.

    இதேபோன்று பள்ளி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன.

    மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது.

    இதில் கல்லூரி மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.
    • ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஈரோடு:

    பேரறிஞர் அண்ணா அவர்களால் தாய்த்தமிழ் நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய நாளான ஜூலை 18-ம் நாள் இனிய தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பின்படி தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.

    இதன்படி வருகின்ற 18-ந் தேதி தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் வரும் 6-ந் தேதி (புதன்கிழமை) கலைமகள் கல்வி நிலையத்தில் காலை 10 மணி முதல் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    இப்போட்டிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் மட்டும் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று வர வேண்டும். ஒரு பள்ளியில் இருந்து ஒரு போட்டிக்கு 2 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    போட்டிக்கள் தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள், பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிர்தியாகம், மொழிவாரிமாநிலம் உருவாக்கத்தில் தந்தைபெரியார், மொழிவாரிமாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி, சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, எல்லைப்போர்த் தியாகிகள், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு என்ற தலைப்புகளில் நடைெபறுகிறது.

    இப்போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம் மற்றும் 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பட உள்ளது.

    போட்டிகள் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×