search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேட்டோ"

    • வாக்னர் தலைவர் பெலாரஸ் வந்துள்ளதால் அண்டை நாடுகள் அச்சம்
    • ரஷியா, பெலாரஸ் படையை எதிர்கொள்ள நேட்டோ தயார் நிலையை அதிகரிக்க முடிவு

    வாக்னர் படை ரஷியாவுக்கு எதிராக திரும்பி ஆயுத கிளர்ச்சி ஏற்படுத்த முயற்சி செய்தது. ஆனால், ஆயுத கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது. வாக்னர் படை தலைவர் பெலாரஸ் சென்றுவிட்டார். வாக்னர் படை மீதான கிரிமினல் வழக்குகளை ரஷிய முடித்து வைத்துள்ளது.

    இந்த ஆயுத கிளர்ச்சி முயற்சியால் ரஷியப் படைகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என நேட்டோ தலைவர் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.

    லிதுவேனியாவில் அடுத்த மாதம் 11 மற்றும் 12-ந்தேதிகளில் நேட்டோ மாநாடு நடைபெற இருக்கிறது. நேட்டோ அமைப்பில் உள்ள தலைவர்கள் சந்திக்க இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று நேட்டோ தலைவர் ஸ்டோல்டன்பெர்க், நேட்டோ அமைப்பில் உள்ள 8 நாட்டு தலைவர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது ''ரஷியாவில் ஆயுத கிளர்ச்சி ஏற்பட்டதால், அதன் ராணுவத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம். நேட்டோ மாநாடு நடைபெறும்போது ரஷியா மற்றும் அதன் ஆதரவு நாடான பெலாரஸ் படைகளை சமாளிக்கும் வகையில் எங்களுடைய தயார் நிலை அதிகப்படுத்தப்படும்.

    எந்தவொரு சாத்தியக்கூறான அச்சுறுத்தலுக்கு எதிராக நோட்டோ அமைப்பில் உள்ள நாடுகளின் பாதுகாப்பு திறன் குறித்து தவறான புரிதலுக்கு இடமில்லை'' என்றார்.

    லிதுவேனியா கிடானாஸ் நவுஸ்தா ''பெலாரசில் வாக்னர் படை குவிக்கப்பட்டால் அண்டை நாடுகளுக்கு அது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்'' என்றார்.

    அதற்கு ''யெவ்ஜெனி பிரிகோசின் தலைமையிலான வாக்னர் படை பெலாரஸில் குவிக்கப்படுமா? அவர்கள் என்ன செய்வார்கள்? என்பது குறித்து பேசுவது முன்னதாகவே எடுக்கப்படும் முடிவாகும்'' என்றார் ஸ்டோல்டென்பெர்க்.

    சிறிய ஆயுத கிளர்ச்சி முறியடித்த நிலையில், ரஷிய அதிபர் புதின் தனது படையை விரிவுப்படுத்த வாய்ப்புள்ள நிலையில் கிழக்குப் பகுதியில் தங்களது படைகளை வலுப்படுத்த வேண்டும் என்பதை நேட்டோ தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.

    ரஷியா உக்ரைன் மீது போர் தாக்குதல் தொடங்கியபோது, நோட்டோ ஸ்லோவாகியா, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரிய நாடுகளில் தங்களது படைகளை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தேவைப்பட்டால் லிதுவேனியாவில் நிரந்தரமாக படைகளை நிறுத்த தயார் என ஜெர்மனி அறிவித்திருந்ததது.

    • பால்டிக் கடல் எல்லையில் ரஷியாவின் நடவடிக்கையை தடுக்க சுவீடன் இந்த முடிவை எடுத்துள்ளது
    • சுவீடன் முழுநேர உறுப்பினராக துருக்கி தடையாக உள்ளது

    நேட்டோ அமைப்பில் முழுநேர உறுப்பினராவதற்காக நீண்ட காலமாக சுவீடன் முயற்சித்து வருகிறது. இருப்பினும், முழு நேர உறுப்பினராகும் முன்னதாகவே நேட்டோவுடன் இணைந்து பணியாற்றுவதை வரவேற்பதாக சுவீடன் பிரதமர் கிரிஸ்டர்ஸன் தெரிவித்துள்ளார்.

    நேட்டோ மற்றும் அதன் உறுப்பினர் நாடுகளுடன் இணைந்து ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் உல்ஃப் கிரிஸ்டர்ஸன், ராணுவ மந்திரி பால் ஜான்சனுடன் இணைந்து தெரிவித்திருக்கிறார்.

    சுவீடன் மண்ணில் நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளின் ராணுவ தளவாடங்களை இறக்கவும், ராணுவ வீரர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கவும் இந்த கூட்டு முயற்சியில் அனுமதிக்கப்படும் என தெரிவித்தார். இந்த செய்தி ரஷியாவுக்கு விடப்பட்ட ஒரு சமிக்ஞை செய்தியாகவும், சுவீடனின் தற்பாதுகாப்புக்கும் உதவும் ஒரு நிகழ்வாகவும் இந்த செய்தி பார்க்கப்படுகிறது.

    சுவீடனில் நேட்டோவின் இருப்பு அனுமதிக்கப்படுவதால், பால்டிக் கடற்பகுதியில் ரஷியா ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதை தடுக்கக்கூடிய வகையிலும் இது அமையக்கூடும் எனபதால், சுவீடனின் தற்பாதுகாப்புக்கான ஒரு முக்கிய செயலாக பார்க்கப்படுகிறது.

    சுவீடன் நாட்டின் நேட்டோ உறுப்பினருக்கான கோரிக்கை இன்னமும் ஏற்கப்படாமல் தடைசெய்யப்பட்டுள்ளது. நேட்டோவில் 2022-ம் வருடத்திலிருந்து சுவீடன் இணைய அழைப்பு இருந்தும் அதை உறுதி செய்ய வேண்டிய 31 உறுப்பினர் நாடுகளில், துருக்கி மற்றும் ஹங்கேரியும் சம்மதிக்கவில்லை.

    நேட்டோவின் சட்டப்பிரிவு 5-ன்படி ஒரு உறுப்பினர் நாடு மீது நடத்தப்படும் தாக்குதல், அனைத்து உறுப்பினர்களின் மீதும் நடத்தப்பட்டதாக கருதப்படும். ஆனால், இந்த பாதுகாப்பு அம்சம் முழு உறுப்பினர்கள் நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

    கடந்த மே மாதம், துருக்கி நாட்டின் அதிபராக எர்டோகன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் சுவீடனின் உறுப்பினர் அந்தஸ்து குறித்து இதுவரை அவர் ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை.

    துருக்கியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து அம்சங்களையும் சுவீடன் நிறைவேற்றி விட்டதால் விரைந்து முடிவெடுக்கும்படி துருக்கியை மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, கேட்டுக் கொண்டுள்ளது. இதில் துருக்கி நாட்டால் பயங்கரவாத அமைப்புகள் என அறிவிக்கப்பட்ட குர்திஷ் இன போராட்டக்காரர்களின் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் மீது சுவீடன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் அடங்கும்.

    ஆனால், சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் குடியேறியுள்ள ஒரு சில துருக்கி நாட்டு ஆர்வலர்களையும், சுவீடன் வெளியேற்ற வேண்டும் என துருக்கி நிர்பந்திக்கிறது. இதற்கு சம்மதிக்க மறுக்கும் சுவீடன், தங்கள் நாட்டில் நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதாகவும், இந்த விஷயத்தில் தலையிட முடியாதெனவும் அறிவித்தது.

    இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, சுவீடன் தமது நாட்டின் ராணுவத்திற்கான செலவினங்களையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து நேட்டோ ராணுவ அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகின்றன.
    • தென்சீன கடல் பகுதியில் சீன ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது.

    அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து நேட்டோ ராணுவ அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆசியா-பசிபிக் பகுதியில் நேட்டோ போன்ற அமைப்பை உருவாக்க முயற்சிக்கக் கூடாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற சீன பாதுகாப்பு மந்திரி லீ ஷங்பூ கூறும்போது, ஆசிய-பசிபிக்கில் நேட்டோ போன்ற முயற்சிகள் பிராந்திய நாடுகளில் மோதல்களை பெரிதுப்படுத்துவதற்கான ஒரு வழியாகும். இது ஆசிய-பசிபிக்கை சர்ச்சைகள் மற்றும் மோதல்களின் சுழலில் மட்டுமே மூழ்கடிக்கும்.

    இன்றைய ஆசிய-பசிபிக் பகுதிக்கு திறந்த மற்றும் உள்ளடக்கிய ஒத்துழைப்பு தேவை. அனைத்து நாடுகளின் மக்களும் இரண்டு உலக போர்கள் கொண்டு வந்த கடுமையான பேரழிவுகளை மறந்து விடக்கூடாது. இது போன்ற சோகமான வரலாறு மீண்டும் வருவதை நாம் அனுமதிக்கக் கூடாது என்றார்.

    தென்சீன கடல் பகுதியில் சீன ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது. தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து தைவானுக்கு ஆதரவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பாக நேட்டோ உள்ளது.
    • இந்த ராணுவ கூட்டமைப்பில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உள்ளன.

    பிரெசெல்ஸ்:

    உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ ஆகும். நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் மிகப்பெரிய ராணுவ பலத்துடன் அமெரிக்கா உள்ளது. இந்த ராணுவ கூட்டமைப்பில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உள்ளன.

    அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி உள்பட 30 நாட்கள் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன. இதனிடையே, உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததையடுத்து ஐரோப்பிய நாடுகள் இடையே போர் அச்சம் ஏற்பட்டது. இதனால், ஐரோப்பிய நாடுகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தினால் அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

    இந்நிலையில், நேட்டோ அமைப்பில் பின்லாந்து இன்று இணைந்துள்ளது. நேட்டோ அமைப்பின் 31-வது உறுப்பு நாடாக பின்லாந்து இணைந்துள்ளது.

    நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைந்துள்ளதால் அந்நாட்டிற்குள் நேட்டோ படைத்தளம், படைகள் குவிக்கப்படலாம். இது ரஷியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்த வழிவகுக்கும்.

    உக்ரைன் - ரஷியா இடையேயான போருக்கு மத்தியில் பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்துள்ள சம்பவம் உலக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பாக நேட்டோ அமைப்பு இருக்கிறது.
    • நேட்டோ தலைமையகத்தில் முதல் முறையாக ஃபின்லாந்து தேசிய கொடி ஏற்றப்பட இருக்கிறது.

    நேட்டோ அமைப்பில் 31 ஆவது நாடாக ஃபின்லாந்து இணைய இருக்கிறது என நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் அறிவித்து இருக்கிறார். உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பாக நேட்டோ அமைப்பு இருக்கிறது. வரும் மாதங்களில் ஃபின்லாந்தை தொடர்ந்து ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைய இருக்கிறது.

    "இது ஒரு வரலாற்றுப்பூர்வமான வாரம். நாளை முதல், ஃபின்லாந்து கூட்டமைப்பின் முழு நேர உறுப்பினர் ஆகிறது. நேட்டோ தலைமையகத்தில் முதல் முறையாக நாளை நாங்கள் ஃபின்லாந்து கொடியை ஏற்ற இருக்கிறோம். ஃபின்லாந்து பாதுகாப்பு, நார்டிக் பாதுகாப்பு மற்றும் நேட்டோ அமைப்பு முழுவதிற்கும் நல்ல நாளாக இருக்கும்," என்று ஸ்டால்டன்பர்க் தெரிவித்துள்ளார்.

     

    ஃபின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைய ஆட்சேபனை இல்லை என கடைசி நாடாக துருக்கி நாளை கையெழுத்திட இருக்கிறது. இந்த நிலையில், இது தொடர்பான ஆவணங்களை அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி அந்தோனி ப்ளிங்கனிடம் துருக்கி ஒப்படைக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஃபின்லாந்து அதிபர் சௌலி நினிஸ்டோ மற்றும் பாதுகாப்பு துறை மந்திரி அண்டி கைகொனென் மற்றும் வெளியுறவு துறை மந்திரி பெக்கா ஹாவிஸ்டோ ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    "இது எங்களுக்கு பெருமை மிக்க தருணம் ஆகும். சந்திப்பின் போது, ரஷ்யாவின் தொடர் சட்டவிரோத நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டு வரும் உக்ரைனுக்கு அதிக ஆதரவு அளிக்க நேட்டோவை வலியுறுத்துவதே ஃபின்லாந்துக்கு மிக முக்கிய குறிக்கோள் ஆக இருக்கும். ஐரோப்பா மற்றும் அட்லாண்டிக் பகுதி முழுக்க பாதுகாப்பை பலப்படுத்தவே நாங்கள் நினைக்கிறோம்," என்று ஹாவிஸ்டோ தெரிவித்துள்ளார்.

    • இரு நாடுகளும் நேட்டோவில் இணைய ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
    • அமெரிக்க செனட் சபை தனது ஒப்புதலை இன்று அளித்துள்ளது.

    வாஷிங்டன்:

    நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் மீது ரஷியா படையெடுத்து 150 நாட்களாக போர் செய்து வருகிறது.

    இதற்கிடையே, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ ராணுவக் கூட்டணியில் இணையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்த நடவடிக்கைக்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில், ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு அமெரிக்க செனட் சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்க செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நேட்டோவில் இணைவதன் மூலம் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் மற்றும் முழு அட்லாண்டிக் கூட்டணிக்கும் பயனளிக்கும் என பதிவிட்டுள்ளார்.

    ஏற்கனவே கனடா உள்ளிட்ட நாடுகள் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • எண்ணற்ற அச்சுறுத்தல்களின் ஆபத்தான கட்டத்தில் உலகம் மூழ்கியுள்ளதாக நேட்டோ மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
    • ரஷிய அதிபர் புதினின் அச்சுறுத்தல்கள் புதிது இல்லை என்று எஸ்டோனிய பிரதமர் பேச்சு

    மாட்ரிட்:

    நேட்டோ நாடுகளுக்கு ரஷியா நேரடி அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும், உலக ஸ்திரத்தன்மைக்கு சீனா கடும் சவால்களை முன்வைக்கிறது என்றும், நேட்டோ மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்டது. சைபர் தாக்குதல்கள் முதல் பருவநிலை மாற்றம் வரை, பெரும் அதிகாரப் போட்டி மற்றும் எண்ணற்ற அச்சுறுத்தல்களின் ஆபத்தான கட்டத்தில் உலகம் மூழ்கியுள்ளது என்று மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நேட்டோ அமைப்பை ரஷியா மற்றும் சீனா கடுமையாக சாடி உள்ளன. எங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், எந்த பிரதேசத்தில் இருந்து உருவாக்கப்படுகிறதோ, அதே அச்சுறுத்தல்களை நாங்களும் உருவாக்குவோம், என ரஷிய அதிபர் புதின் எச்சரித்தார். நேட்டோதான் உலகம் முழுவதும் பிரச்சினைகளை உருவாக்குகிறது என சீனா குற்றம்சாட்டி உள்ளது.

    ரஷிய அதிபர் புதினின் அச்சுறுத்தல்கள் புதிது இல்லை என்று எஸ்டோனிய பிரதமர் காஜா கல்லாஸ் தெரிவித்தார்.

    ×