என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொறியியல்"
- 'என்னை மன்னித்து விடுங்கள், என்னால் இதை செய்ய முடியவில்லை'
- தேர்ச்சி பெறவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று சிறுமி தாயிடம் ஏற்கனவே கூறியுள்ளார்.
பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் JEE நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் 17 வயது மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி ஜாமியா நகரை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி சமீபத்தில் நடந்த JEE நுழைவுத் தேர்வில் கலந்துகொண்டுள்ளார்.
தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதில் தேர்ச்சி பெறாததால் விரக்தியில் இருந்த மாணவி, 'என்னை மன்னித்து விடுங்கள், என்னால் இதை செய்ய முடியவில்லை, என்னால் JEE பரீட்சையை ஜெயிக்க முடியவில்லை' என்று தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது வீடு உள்ள 7 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
அவர் மாடியில் இருந்து குதித்து கீழே விழும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படடுத்தி வருகிறது.
Shocking CCTV video has emerged from #Delhi, where a 12th class student in #JamiaNagar area committed #suicide by jumping from a building because she could not pass the #JEE Exam.The deceased girl was 17 years old. pic.twitter.com/C2iKW3Zffr
— Hyderabad Netizens News (@HYDNetizensNews) October 26, 2024
இதுதொடர்பாக வழக்குப் பதிந்து போலீசார் விசாரித்து வருகிறனர். தான் இந்த பரீட்ச்சையில் தேர்ச்சி பெறவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று உயிரிழந்த சிறுமி தனது தாயிடம் ஏற்கனவே கூறியிருந்தாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.
- கல்லூரி முதல்வர் மகேஸ்வரன் முன்னிலை வகித்து, பேசினார்.
- பேராசிரியை ஜஸ்மின் சுகுனா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.
நாகர்கோவில்:
சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான 8-வது மேலாண்மை விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் மரியவில்லியம் தலைமை தாங்கினார். மாணவி சகாய ரினோஷா வரவேற்றார். விழாவின் அமைப்பு செயலாளர் பேராசிரியை பமிமா விழாவிற்கான அறிமுக உரையாற்றினார். கல்லூரி முதல்வர் மகேஸ்வரன் முன்னிலை வகித்து, பேசினார்.
கல்லூரி பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் வாழ்த்தி பேசினார். பேராசிரியை ஜஸ்மின் சுகுனா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். சிறப்பு விருந்தினராக பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற துணை மேலாளர் அமல்ராஜ் கலந்துகொண்டு பேசினார்.
விழாவில் மாணவர்களுக்கான சிறந்த மேலாளர் போட்டி, படத்தொகுப்பு போட்டி, வினாடி-வினா, மவுன மொழி நாடகம் போன்ற பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் இணை ஒருங்கிணைப்பா ளர் மாணவர் சேக் சித்தா அர்ஷக் நன்றி கூறினார்.
விழாவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் வணிக மேலாண்மை துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.
- கட்ஆப் மதிப்பெண் 160- ல் இருந்து 170-க்குள் எடுத்தவர்கள் எண்ணிக்கையில் கடந்த ஆண்டுக்கும், தற்போதும் எந்த மாற்றமும் இல்லை.
- கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு விரும்பிய தரமான கல்லூரிகளும், பாடப்பிரிவுகளும் கிடைப்பது கடினம்.
சென்னை:
என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் கட்ஆப் மதிப்பெண் நிலவரம் குறித்து கல்வி ஆலோசகர் ஜெயப் பிரகாஷ் காந்தி கூறியதாவது:-
கடந்த ஆண்டில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 278 பேருக்கு என்ஜினீயரிங் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு 1 லட்சத்து 76 ஆயிரத்து 744 பேருக்கு தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த ஆண்டை விட 20 ஆயிரம் பேர் வரை கூடுதலாக கவுன்சிலிங்கில் பங்கேற்கின்றனர். அதனால் பாடப்பிரிவுகள் மற்றும் கல்லூரிகள் தேர்வில் போட்டி அதிகரித்துள்ளது.
மொத்தம் 195-ல் இருந்து 170-க்குள் கட்ஆப் மதிப் பெண்ணை ஒப்பிட்டால் கடந்த ஆண்டை விட குறைந்த பட்சம் 2 ஆயிரம் பேர் வரை இந்த ஆண்டு அதிகமாக கவுன்சிங்கில் பங்கேற்கின்றனர்.
அதனால் 170-க்கு மேல் கட்ஆப் பெற்றவர்களுக்கு கடந்த ஆண்டை போன்றே கல்லூரிகள், பாடப்பிரிவுகள் கிடைக்கும்.
கட்ஆப் மதிப்பெண் 160- ல் இருந்து 170-க்குள் எடுத் தவர்கள் எண்ணிக்கையில் கடந்த ஆண்டுக்கும், தற்போதும் எந்த மாற்றமும் இல்லை. அதனால் கடந்த ஆண்டு கிடைத்தது போன்ற கல்லூரிகள், பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு கிடைக்கும். 150-ல் இருந்து 160 பெற்றவர்களுக்கு கடந்த ஆண்டை விட கட்ஆப் அளவு சற்று அதிகரிக்கும்.
ஆனால் 100-க்கு மேல் 30 ஆயிரம், 120-க்கும் மேல் 25 ஆயிரம், 140-க்கு மேல் 11 ஆயிரம் என கடந்த ஆண்டை விட அதிகம் பேர் உள்ளதால் இந்த கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு விரும்பிய தரமான கல்லூரிகளும், பாடப்பிரிவுகளும் கிடைப்பது கடினம்.
இதற்கு தமிழக என்ஜினீயரிங் கவுன்சிலிங் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள 4 ஆண்டு கட்ஆப் மதிப்பெண்ணுக்கு கிடைத்த கல்லூரி விபரங்களை பார்த்து கொள்வதும் நல்லதாகும்.
பிளஸ்-2 பொதுத் தேர்வில் கணித வினாத்தாள் கடினம் என்பதால் அதிக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் தேர்ச்சி விகிதம் குறையவில்லை. எனவே கட்ஆப் அதிகரித்து என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் போட்டியும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவர்களின் கல்வியும், எதிர்காலமும், ஆசிரியர்களின் வேலை வாய்ப்பும் பாதிக்கப்படும்
- பலர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர்.
நாகர்கோவில் :
முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், பணி மாற்றம் தொடர்பான கூகுள் மீட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததாக காரணம் காட்டி கட்டிடவியல் மற்றும் எந்திரவியல் ஆகிய தமிழ் வழி பொறியியல் பாடப்பிரி வுகளை ரத்து செய்ய அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இந்த முடிவை கைவிட வேண்டும். மேலும் துணை வேந்தர் கூறியதாக கூறப்படும் இத்தகவலால் மாணவர்களின் கல்வியும், எதிர்காலமும், ஆசிரியர்களின் வேலை வாய்ப்பும் பாதிக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பொறியியல் கல்வியின் தேவையை கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக்கழ கத்தின் வாயிலாக தமிழகம் எங்கும் 14 உறுப்பு கல்லூரிகள் பல்வேறு காலக்கட்டங்களில் தொடங்கப்பட்டன.
இந்த கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் அண்ணா பல்கலைக்கழ கத்தின் துணை வேந்தர் கூகுள் மீட்டின் வழியாக கலந்தாய்வு நடத்தியதாக வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், இக்கலந்தாய்வில் உறுப்பு கல்லூரிகளில் உள்ள தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவுகளையும், ஆங்கில வழியில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பாடப்பரிவுகளையும் ரத்து செய்வதற்கு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ரத்து செய்யப்படும் பாடப்பிரிவுகளில் பணியாற்றி வரும் இடைக்கால பேராசிரி யர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்படும் நிலை ஏற்படும். மேலும் கிராமப்புற மாணவர்களின் பொறியியல் கனவை நனவாக்க அவர்கள் வெகுதூரம் சென்று பொறியியல் படிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் நிலையும் ஏற்படும்.கட்டிடவியல் மற்றும் எந்திரவியல் பாடப்பரி வுகள் நீக்கப்படுவதற்காக பல்கலைக் கழக நிர்வாகத்தின் சார்பில் கூறப்படும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களில் பெரும்பான்மையினர் இடைக்கால பணியாளர்கள் தான். அவர்களில் பலர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை ஒரே ஆணையில் பணி நீக்குவது நியாயமற்றது. அவர்கள் மட்டுமன்றி உறுப்பு கல்லூரிகளில் சேர்ந்து கட்டிடவியல் அல்லது எந்திரவியல் படிக்கும் வாய்ப்பை கல்லூரிகள் உள்ள பகுதியை சார்ந்த மாண வர்கள் இழப்பார்கள்.
தமிழ்நாட்டில் தமிழ் வழி கல்வியில் அனைத்து அரசு வேலை வாய்ப்புகளிலும் 20 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. தமிழ் வழிப் படிப்புகள் அனைத்தும் மூடப்பட்டால், தமிழ்நாடு அரசு பணிகளில் இந்த இட ஒதுக்கீட்டிற்கு எந்த அர்த்தமும் இல்லை. ஏனெனில் இந்த கல்லூரிகள் மட்டுமே தமிழ் வழி பொறியியல் படிப்புகளை வழங்குகின்றன. மேலும் இவ்வாறு தமிழ் வழி கல்வியை நிரந்தரமாக மூடுவதன் மூலம் பள்ளிகளிலும், மாணவர்கள் தமிழ் வழியில் சேர்ந்து பயில்வது கணிசமாக குறையும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இதே பாடப்பிரிவில் சேர்வதற்கு கடும் போட்டி நிலவும் நிலையில் உறுப்பு கல்லூரிகளில் சேர மாணவர்கள் முன்வராததற்கு காரணம் இரண்டிற்கு இடையிலான கட்டமைப்பு வசதிகள் வேறுபாடுகள் தான். உறுப்பு கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை அண்ணா பல்கலைக்கழ கத்திற்கு இணையாக மேம்படுத்தும் சவாலை தான் பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டுமே தவிர பாடப்பரிவுகளை ரத்து செய்யும் முடிவை அல்ல. தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்த விவாதம் எழும்போதெல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் வழியில் பொறியியல் படிப்பை அறிமுகப்படுத்தியதை தமிழ்நாடு அரசு பெருமையுடன் நினைவு கூறுகிறது. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக ஒரே நேரத்தில் 11 உறுப்பு கல்லூரிகளின் தமிழ் பாடப்பிரிவை ரத்து செய்வது அரசுக்கும், அண்ணா பல்கலைக்கழ கத்திற்கும் கண்டிப்பாக பெருமை சேர்க்காது. இதன் அடிப்படையில் உறுப்பு கல்லூரிகளின் கட்டிட வியல் மற்றும் எந்திரவியல் பாடப்பரிவு களை ரத்து செய்யும் திட் டத்தை கைவிட வேண் டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
- திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா), மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் மூலம் வட்டார விவசாயிகள் ஆலோசனை கூட்டம் வட்டார குழு அமைப்பாளரும், வேளாண்மை உதவி இயக்குனருமான சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
வட்டார விவசாய ஆலோசனை குழு தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார்.
முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், கால்நடை மருத்துவர் மகேந்திரன், உதவி தோட்டக்கலை அலுவலர் புலவேந்திரன் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர்.
இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை திட்டங்கள் குறித்தும், அட்மா திட்டங்கள் குறித்தும், கால்நடைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும், உள்மாநிலம், வெளிமாநிலம், உள் மாவட்ட விவசாயிகள் பயிற்சிகள், கண்டுனர் சுற்றுலா, செயல் விளக்கங்கள், பண்ணை பள்ளி, திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி போன்ற இனங்களை கொண்டு விவசாயக்குழு உறுப்பினர்களோடு கலந்து ஆலோசிக்கப்பட்டது.
முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
- பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
- கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிகளவில் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர்.
சென்னை :
மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த பிளஸ்-2 மாணவர்கள் உயர் கல்வியில் சேர கடந்த மாதம் முதல் விண்ணப்பித்து வருகின்றனர். கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சி.பி.எஸ்.இ., பிளஸ்-2 தேர்வு முடிவு தாமதம் ஆனதால் அம்மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக கல்லூரிகள், பல்கலை கழகங்களில் மாணவர்கள் சேர்க்கையை முடிக்க கூடாது என யு.ஜி.சி. உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து கல்லூரிகளில் சேருவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு கடந்த 22-ந்தேதி வெளியானது.
முடிவு வெளியான பின்னர் 5 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி இன்று (27-ந் தேதி) வரை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
இதே போல 163 கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 1494 பேர் நேற்று வரை விண்ணப்பித்து உள்ளனர். சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கடந்த 4 நாட்களாக என்ஜினீயரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வந்த நிலையில் இன்று மாலையுடன் அவகாசம் முடிகிறது.
கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிகளவில் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர்.
- விண்ணப்பிக்க வருகிற 27-ந் தேதி (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும்.
- சி.பி.எஸ்.இ. மாணவர்களும் விண்ணப்பிக்க தொடங்கினர்
சென்னை :
தமிழகம் முழுவதும் உள்ள 450-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கும் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். போன்ற படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி தொடங்கியது. விண்ணப்பம் அறிவிக்கப்பட்ட நாளில் விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாளாக கடந்த 19-ந் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது.
சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகாததை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த கடைசி தேதி மாற்றப்பட்டு, சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு வெளியானதில் இருந்து 5 நாட்கள் அவகாசத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.
அதன்படி, சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. தேர்வு முடிவு வெளியான அன்றைய தினத்தில் இருந்தே என்ஜினீயரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு எண்ணிக்கை உயரத்தொடங்கி இருக்கிறது.
அதற்கு முந்தைய நாட்கள் வரை தினமும் 1,000 பேர் பதிவு செய்து வந்த நிலையில், தேர்வு முடிவு வெளியான நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 300-க்கு மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்று 3 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோரும் விண்ணப்ப பதிவு செய்திருக்கின்றனர்.
அந்த வகையில் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு 2 லட்சத்தை நெருங்கி உள்ளது. நேற்று மாலை வரையிலான நிலவரப்படி, 1 லட்சத்து 99 ஆயிரத்து 213 பேர் விண்ணப்ப பதிவை மேற்கொண்டு இருக்கின்றனர். அவர்களில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 858 பேர் கட்டணங்களை செலுத்தி உள்ளதாகவும், அதில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 281 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு இதுவரை 3 லட்சத்து 97 ஆயிரத்து 463 பேர் விண்ணப்ப பதிவு செய்திருக்கின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் 4 லட்சத்தை கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 27-ந் தேதி (புதன்கிழமை) ஆகும்.
- திருநங்கைகளையும் சமுதாயத்தில் மனிதர்களாக மதிக்க வேண்டும் அனைத்து திறமைகளும் அவர்களுக்கும் உள்ளது.
- மாணவர்களாகிய நீங்கள் திருநங்கைகளை இழிவாக எண்ணாமல் நன்மதிப்புடன் மதிக்க வேண்டும் என்றார்.
பாபநாசம்:
பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பில் ரெகுநாதபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான திருநங்கைகள் என அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவர்கள் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவருமாண அப்துல் கனி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். திருநங்கைகளையும் சமுதாயத்தில் மனிதர்களாக மதிக்க வேண்டும் என்றும் அனைத்து திறமைகளும் திருநங்கைகளுக்கு உள்ளது. மாணவர்களாகிய நீங்கள் திருநங்கைகளை இழிவாகவும் கேவலமாகவும் எண்ணாமல் நன்மதிப்பு அளிப்பதுடன் மற்றவ ர்களும் திருநங்கைகளை மதிக்க சொல்லித் தர வேண்டும் என்று கூறினார்.
முகாமில் சிறந்த திருநங்கைகாண டாக்டர் பட்டம் பெற்ற தஞ்சாவூரை சேர்ந்த ராகினி என்ற திருநங்கையும் மற்றும் பொறியியல் பட்ட படிப்பு முடித்த திருநங்கையும் கலந்து கொண்டு மாணவர்கள் திருநங்கை களுக்கு நன்மதிப்பு அளிக்க வேண்டும் என்பது பற்றி கூறினார்கள் முகாமில் கல்லூரி முதல்வர்கள் நேர்முக உதவியாளர் இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சட்ட பணியாளர் தனசே கரன் செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்