search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருவிழா"

    • கிராமத்தில் முக்கிய வீதி வழியாக வலம் வந்த தேரினை பக்தர்கள் தீப ஆராதனை காண்பித்து தரிசனம் செய்தனர்.
    • சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

    திருவண்ணாமலை கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் திருத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    காலை முதலே அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் பிற்பகலில் தேரோட்டம் நடைபெற்றது சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

    கிராமத்தில் முக்கிய வீதி வழியாக வலம் வந்த தேரினை பக்தர்கள் தீப ஆராதனை காண்பித்து தரிசனம் செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் கலசப்பாக்கம், வில்வாரணி, மேலாரணி, போளூர், புதுப்பாளையம், செங்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அகில உலக ஓய்வு நாள் பாடசாலை தினம்
    • சிறப்பு விருந்தினராக போதகர் ராஜபக்தசிங் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.

    மார்த்தாண்டம் :

    அகில உலக ஓய்வு நாள் பாடசாலை தினத்தை முன்னிட்டு தென்னிந்திய திருச்சபை குமரி பேரராயம் மார்த்தாண்டம் காஞ்சிரபுரம் சேகரம் சார்பில் 7 திருச்சபைகள் பங்கேற்ற ராலி பெருவிழா நடைபெற்றது.

    காஞ்சிரபுரம் சேகரத்து போதகர் முத்துசாமி கிறிஸ்துதாஸ் தலைமை தாங்கினார். மருதூர் குறிச்சி போதகர் ரெஞ்சித்வேத குமார் முன்னிலை வகித்தார். பவனியை காட்டத்துறை திருச்சபை வளாகத்தில் வைத்து சேகரத்துக்குட்பட்ட போதகர்கள் புறாவை பறக்க விட்டு தொடங்கி வைத்தனர். பவனியானது மருதூர் குறிச்சி திருச்சபையில் முடிவடைந்து சிறப்பு கூடுகையும் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக போதகர் ராஜபக்தசிங் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.

    கூட்டத்தை சேக ரத்துக்குட்பட்ட அனைத்து திருச்சபை போதகர்கள், சேகர திருமறை பள்ளி செயலாளர் பிறேம் ஜெயக்குமார், சேகர திருமறைப்பள்ளி கணக்கர் சுனிதா, மருதூர் குறிச்சி திருமறைப்பள்ளி சேகர செயலாளர் லாறன்ஸ் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.

    • ஆண்டு பெருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மாதா மற்றும் அந்தோனியார் சொரூபம் தேரில் ஏற்றப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப்பொய்கைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள வேளாங்கண்ணி பேரா லயத்தின் உபகோவிலான பழைமை வாய்ந்த புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான் அந்தோ னியாரின் பெரியதிருத்தேர் பவனி நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு ஆலயத்தில், வேளாங்கண்ணி பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் தலைமையில் சிறப்புத்திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தொடர்ந்து, மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட சப்ப ரத்தில், மாதா மற்றும் அந்தோனியாரின் சொரூபம் தேரில் ஏற்றப்பட்டு,புனிதம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று தரிசனம் செய்த னர்.

    இதனை தொடர்ந்து வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

    • வருகிற 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி கொடியேற்றத்து டன் தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறித்தவ ஆலயங்களில் ஒன்றான மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய பாதுகாவலர் பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி கொடியேற்றத்து டன் தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறுவது வழக்கம்.

    விழாவின் முதல் நாளான வருகிற 6-ந்தேதி காலை 7.30 மணிக்கு திருப்பலி, மாலை 5.30 மணிக்கு புனித ஜோசப் தொடக்கப் பள்ளியின் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு பாண்டிச்சேரி-கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவில் 14-ந்தேதி காலை 8.30 மணிக்கு ஆலஞ்சி வட்டார முதல்வர் பேரருட்பணி தேவதாஸ் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு முளகுமூடு வட்டார முதல்வர் பேரருட்பணி மரிய ராஜேந்திரன் தலைமை தாங்கி ஆடம்பர மாலை ஆராதனை நடத்துகிறார். இரவு 8.30 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது.

    விழாவின் 15-ந்தேதி காலை 6 மணிக்கு அருட்பணியாளர் மரிய டேவிட் தலை மை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். 7 மணிக்கு இரையுமன் துறை பங்குத்தந்தை அருட்பணி சூசை ஆன்றனி தலைமை தாங்கி, மலையாள திருப்பலி நிறைவேற்றுகிறார். 9 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட முன் னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி அன்னையின் விண்ணேற்பு பெருவிழா மற்றும் சுதந்திர தினவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுகிறார். 11 மணிக்கு தேர்பவனி, இரவு 7 மணிக்கு சிறப்பு நற்கருணை ஆசீர், சிறப்பு வாணவேடிக்கை ஆகியவை நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை பங்குத்தந்தை ஜெஸ்டின் பிரபு தலைமையில் இணை பங்குத்தந்தை மகிமை நாதன், பங்கு இறைமக்கள், பங்குபேரவை துணை தலைவர் பெர்னாண்டஸ், செயலாளர் மைக்கலோஸ், ஜோண் ஆப் ஆர்க் ஜோஸ், பொருளாளர் செல்லம், துணை செயலாளர் கிறிஸ்துதாஸ், பங்குபேரவை உறுப்பினர்கள், விழாக்குழு பொறுப்பாளர்கள், அருட் சகோதரிகள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • தொடர்ந்து தூய இருதய ஆண்டவர் தேர் பவனி நடைபெற்றது.
    • இன்று 17-ந்தேதி தூய இருதய ஆண்டவர் ஆண்டு விழா நிறைவுற்று கொடியிறக்கம் நடைபெறும்.

    தருமபுரி,

    தருமபுரி மரை மாவட்ட தூய இருதய ஆண்டவர் பெருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயாஸ் தலைமையேற்று திருப்பலி உடன் கொடியேற்றி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 9 நாட்கள் நவ நோன்பு நடைபெற்று வந்த நிலையில் நேற்று 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு தூய இருதய ஆண்டவர் தேர் பவனி தொடங்கியது.

    அதற்கு முன்னதாக மறைமாவட்ட தலைமை அருள் ராஜ் தலைமையில் திருபலி நடைபெற்றது. இந்த திருப்பலி நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து தூய இருதய ஆண்டவர் தேர் பவனி நடைபெற்றது. இந்த தேர்பவனி எஸ்.வி. ரோடு, பி.எஸ்.என்.எல். அலுவலகம், செங்கொடிபுரம், பஸ்நிலையம் வழியாக தூய இருதய ஆண்டவர் ஆலயத்தை வந்தடைந்தது.

    இதனைத் தொடர்ந்து நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் தருமபுரி பங்கு ஆலயத்தின் சார்பில் நடைபெற்றது. இன்று 17-ந்தேதி தூய இருதய ஆண்டவர் ஆண்டு விழா நிறைவுற்று கொடியிறக்கம் நடைபெறும்.

    நிகழ்ச்சியில் தருமபுரி மறை மாவட்ட ஆயர் தலைமையில் பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகளின் நிர்வாகிகளும், ஆயர் இல்ல செயலர், தருமபுரி சமூக சேவை இயக்குனர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

    • ஏலாக்குறிச்சியில் புனித அடைக்கல அன்னை ஆலய 292-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது
    • இன்று (23-ந்தேதி) மாலை 6 மணிக்கு மன்னார்குடி பங்குதந்தை மரிய வியான்னி தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது.

    திருமானூர்:

    அரியலூர்மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உடபட்ட சுற்றுலா தலங்களிலில் ஒன்றான 1716-ம் ஆண்டு வீரமாமுனிவரால் கட்டப்பட்ட புனித அடைக்கல அன்னை ஆலயம் அமைந்துள்ளது. பழமைவாய்ந்த 53 அடி உயரமுள்ள மாதா பித்தளை சொரூபம் அமையபெற்றுள்ள திருக்கருக்காவூர் எனும் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயத்தின் 292-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.நிகழ்ச்சியில் ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலய பங்குதந்தை அதிபர் தங்கசாமி தலைமையில், திருச்சி மறைமாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் முன்னிலையில், புனித அடைக்கல அன்னை திருஉருவ கொடி ஏலாக்குறிச்சி ஊரைசுற்றி ஊர்வளமாக வந்து கொடிமரத்தி ஏற்றப்பட்டது.

    திருவிழாவின் தொடர்ச்சியாக இன்று (23-ந்தேதி) மாலை 6 மணிக்கு மன்னார்குடி பங்குதந்தை மரிய வியான்னி தலைமையில் திருப்பலியும் நடைபெறுகிறது.நாளை (24-ந்தேதி) பாண்டிச்சேரி மேமாலூர் பங்கு தந்தை ஜோஸ்வா தலைமையில் திருப்பலியும், 25-ந்தேதி தஞ்சாவூர் மறைமாவட்டம் முதன்மை குரு பங்கு சந்தை பிரபாகர் தலைமையில் திருப்பலியும், 26-ந்தேதி புள்ளம்பாடி மறை மாவட்ட பங்கு சந்தை முதன்மை குரு சூசை மாணிக்கம் தலைமையில் திருப்பலியும், 27-ந்தேதி மலத்தான் குளம் பங்கு தந்தை தனராஜ் தலைமையிலும், ஏலாக்குறிச்சி சுள்ளங்குடி அரண்மனை குறிச்சி வடக்கு பாளையம் பக்தர்கள் சிறப்பிப்போடு அலங்காரத் தேர் பவனியும் நடைபெறுகிறது.

    28-ந்தேதி பெரம்பலூர் கெத் செமணி தியான மையம் இயக்குனர் பங்கு தந்தை யூஜின் டோனி தலைமையில் வரதராஜன் பேட்டை, ஜெயங்கொண்டம், நாகப்பட்டினம் பக்தர்கள் சிறப்பிப்போடு தேர்பவனியும், 30-ந்தேதி கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் பாபநாசம் கபிஸ்தலம் பக்தர்கள் சிறப்பு முறையில் சிறப்பு வழியும் திருப்பலியும், உய்யக்கொண்டான் திருமலை பங்குதந்தை ஆம்புரோஸ் தலைமையில் புணவாசல் மாத்து பக்தர்கள் சிறப்பிப்போடு தேர்பவனியும், திருவிழாவின் நிறைவாக மே 1-ந்தேதி தேதி பங்கு தந்தை தங்கசாமி தலைமையிலும், உதவி பங்கு தந்தை ஞான அருள் தாஸ் முன்னிலையிலும் கொடி இறக்கம் நடைபெற இருக்கின்றது. நிறைவில் திருமானூர் பங்குதந்தை நன்றி கூறுகிறார்.

    • சில நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வேடங்கள் அணிந்தும், பம்பை, மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி குமாரசாமிபேட்டை அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக் கொள்ளை பெருவிழா கடந்த சில நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து இரண்டாவது நாள் பூமிதி திருவிழா நடந்தது. மாசி அமாவாசையை ஒட்டி, தருமபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது.

    இந்த திருவிழாவில் ஏராளமான பக்கதர் கலந்து கொண்டு, தாழ் அலகு, முதுகு அலகு போட்டு கொண்டும், கிரேனில் அந்தரத்தில் தொங்கியபடியும், சக்கரம் போல் சுற்றும் தேரில் அமர்ந்தும், காளி, அம்மன் உள்ளிட்ட பல்வேறு சாமி வேடங்கள் அணிந்தும், பம்பை, மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

    இதனை தொடர்ந்து தேர் ஊர்வலமாக சென்று தருமபுரி குமாரசாமிபேட்டை சுடுகாட்டில் மயான கொள்ளை சூறையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் சாட்டையடி வாங்கினர். மயான கொள்ளை சூறையாடுதல் திருவிழாவில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்.

    • ஞானபுகழ்ச்சி பாடும் நிகழ்வு
    • ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

    கன்னியாகுமரி:

    தக்கலை ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது ஸாஹிபு ஒலியுல்லா(ரலி) ஆண்டு பெருவிழா ஞானப்புகழ்ச்சி பாடுதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜாதி மத இன உணர்வுகளை தாண்டி பங்கேற்று கண்டு களித்தனர்.

    மறைகோடி மாமேதை முனிவர் பீரப்பா வாவஞ்சி கோலத்தில் சிறுமலுக்கரின் மகனாய் பிறந்தவர். இவரது தாயார் ஆமினா என சுவடி குறிப்பு கூறுகிறது. எங்கும் நிறைந்த ஏக இறைவனின் அருள்பெற்று சூபிச நெறி கண்டு சுத்த பரமானந்த நெறிகண்ட இறைஞான செல்வர்களுள் ஒருவர்தான் மெய்ஞஞான மாமேதை பீரப்பா ஆவார். ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா(ரலி) பெயரிலான தர்கா தக்கலை மேட்டுக்கடை அருகே உள்ளது. இப்பள்ளியில் வருடந்தோறும் விழா ரஜப்பிறை 1 முதல் 14 வரை நடைபெறும்.

    இந்த வருடம் இவ்விழா கடந்த 23-ந்தேதி இரவு 9 மணிக்கு நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது. ரஜப்பிறை 1 முதல் 14 வரை மவுலிது ஒதுதல் 28-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை மார்க்க பேருரைகள் நடைபெற்றன. மார்க்க பேருரை நடந்த நாட்களில் பங்கேற்ற அனைவருக்கும் கனிவர்க்கங்கள் அடங்கிய நேர்சை வழங்கப்பட்டது.

    நேற்று (5-ந் தேதி) நடைபெற்ற ஞானப்புகழ்ச்சி பாடுதலையொட்டி காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. மாலையில் பல சாலைகளில் குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை, முஸ்லிம் ஆரம்ப தொடக்கப் ்பள்ளி, மேட்டுக்கடை, திருவிதாங்கோடு சாலை உள்ளிட்ட சாலைகளின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.சரியாக இரவு 9 மணிக்கு பீரப்பா பற்றி ஞானப்புகழ்ச்சி பாடுதல் தொடங்கி விடிய விடிய நடைபெற்றது.

    முன்னதாக சம்பிரதாய முறைப்படி ஆசாரிமார்கள் பால்குடம் ஏந்தி வந்தனர். இவர்கள் கொண்டு வந்த பாலைதான் ஞானப்புகழ்ச்சி பாடல் பாடியவர்கள் பருகினர். ஞானப்புகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சியில் கொல்லம், திருவனந்தபுரம், திருநெல்வேலி, கோவை, சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவிதாங் கோடு, சுவாமியார்மடம், ஆளுர், குளச்சல், கோட்டார், தேங்காய்ப்பட்டணம், மணவாளக்குறிச்சி, இனயம், புத்தன்துறை, களியக்காவிளை, கொல்லங் கோடு உள்பட அனைத்து ஜமா-அத்களில் இருந்தும் மற்றும் ஜாதி மத இன உணர்வுகளை தாண்டியும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று விழாவினை கண்டு களித்தனர்.

    நிகழ்ச்சியில் அஞ்சு வன்னம் பீர் முகமது முஸ்லீம் அசோசியேசன் தலைவர் ஹாஜி அப்துல் ஜப்பார், துணைத்தலைவர் முகமது சலீம், பொருளாளர் ரபீக், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முகமது யாசின், சாகுல் ஹமீது,சாதிக், அலி அக்பர், அப்துல் ரசாக், பீர் முகமது, கமாலுதீன் முகமது சபீக், சத்தார், அப்துல் ரசீது, சுபியான், சாக்கிர் அலி, நிஜாம், முபாரக் அலி மற்றும் விழாக்குழுவினர் தலைவர் மாஹீன் அபூபக்கர், செய லாளர் சாகுல் ஹமீது, பொருளாளர் ஹாஜா மைதீன், துணைச் செய லாளர் அஸ்ரப் அலி, பூபந்தல் குழு தலைவர் பசில் மற்றும் நகராட்சி தலைவர் அருள்சோபன், தி.மு.க. நகர செயலாளர் சுபிகான், நகர் மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வியா பாரிகள் உட்பட பல்லா யிரக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

    விழாவிற்கான பாது காப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப் பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆலோசனைப்படி தக்கலை டி.எஸ்.பி. வழிகாட்டுதலில் தக்கலை இன்ஸ்பெக்டர் நெப்போலியன், சப்- இன்ஸ்பெக்டர்கள் சத்திய சோபன், கணேஷ் குமார், ஆஷா ஜெபகர் மற்றும் பல்வேறு காவல்துறைகளை சேர்ந்த அதிகாரிகள், தனிப்படை போலீசார் செய்திருந்தனர்.

    • வாழப்பாடி அடுத்த சிங்கிபுரத்தில் நித்திய சத்திய தர்மச்சாலை சார்பில், திரு வருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் 200-வது பெருநிலைப் பெருவிழா நடந்தது.
    • இவ்விழாவில், பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம், மூலிகை தேநீர் வழங்கப்பட்டது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த சிங்கிபுரத்தில் நித்திய சத்திய தர்மச்சாலை சார்பில், திரு வருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் 200-வது பெருநிலைப் பெருவிழா, வாழப்பாடி வாசவி மஹால் மண்டபத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

    சாது செல்வராஜ் தலை மையில் அகவல் பாராயணத்துடன் தொடங்கிய இவ்விழாவில், திருவிளக்கு பூஜை, மகா மந்திர வேள்வி மற்றும் ஆயில்பட்டி சன்மார்க்க சான்றோர்கள் கந்தசாமி, சண்முகம் மற்றும் வைத்தியகவுண்டன்புதுார் அங்கமுத்து ஆகியோரது திருவருட்பா இசைத்தல் நிகழ்வும் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து, திருவண்ணாமலை சாது ஜானகிராமனின், சன்மார்க்க நெறி வாழ்வு முறை, உடல், உள்ளம் பேணி காக்கும் முறைகள் குறித்த சொற்பொழிவும், இறையருள் பெறும் நெறி முறை குறித்து சென்னை கொளப்பாக்கம் சாது சந்தானம் அறவுரை நிகழ்வும் நடைபெற்றது. இவ்விழாவில், பங்கேற்ற அனைவருக்கும் அன்னதா னம், மூலிகை தேநீர் வழங்கப்பட்டது. நிறைவாக, சாது கலாவதி நன்றி கூறினார்.

    • 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா வாகன பேரணி நடைபெற்றது.
    • இந்த ஊர்வலத்தில் இன்ஸ்பெக்டர் தொல்காப்பி–யன், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன், கோவிந்தன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலத்தில் போலீசார் மற்றும் பொது–மக்கள் கலந்துகொண்ட 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா வாகன பேரணி நடைபெற்றது. தாரமங்கலம் போலீஸ் நிலையம் முன்பு இருந்து டி.எஸ்.பி. சங்கீதா தொடங்கி வைத்தார்.

    பேரணி அண்ணாசிலை, தேர்நிலையம், காமராஜர் சிலை, பஸ் நிலையம் வழியாக சென்று மீண்டும் போலீஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.

    பேரணியில் 100 இருசக்கர வாகனங்களும், 10 நான்கு சக்கர வாகனங்களும் தேசிய கொடிகளை கட்டியவாறு அணிவகுத்து சென்றது. இந்த ஊர்வலத்தில் இன்ஸ்பெக்டர் தொல்காப்பி–யன், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன், கோவிந்தன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கரூரில் இயற்கைப் பெருவிழா நடைபெற்றது.
    • பல்வேறு அரங்கங்கள் இடம் பெற்றிருந்தன.

    கரூர்:

    கரூர் மாநகராட்சி சார்பில் கொங்கு திருமண மண்டபத்தில் இயற்கை பெருவிழா கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. விழாவுக்கு மாநகரட்சி மேயர் கவிதா ப.சரவணன், ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் வீட்டிலேயே தொட்டி மூலம் உரம் தயாரிப்பது, மாடித்ேதாட்டம் அமைத்தல், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று, சூரிய ஒளி மின்சாரம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு அரங்கங்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றை பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் பார்வையிட்டனர். 

    • வந்தவழி கருப்பசாமி கோவிலில் ஆடி அன்னதான பெருவிழா நடந்தது.
    • 3 நாட்கள் திருவிழா நடைபெறும்

    கரூர்:

    தரகம்பட்டி அருகே சிங்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற வந்தவழி கருப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் 7 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே 3 நாட்கள் திருவிழா நடைபெறும். ஆனால் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு முடிந்து முதல் வியாழக்கிழமை அன்று ஆடி அன்னதான பெருவிழா நடைபெறும். அதேபோல் இந்தாண்டும் ஆடி அன்னதான பெருவிழா நடத்த பரம்பரை நிர்வாக அறங்காவலர் வெள்ளைச்சாமி மற்றும் கிராமமக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து குவிந்தனர். பின்னர் 500 கிடாய்களை பக்தர்கள் வெட்டி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் கிடாய்கள் அங்கேயே சமைக்கப்பட்டு வந்தவழி கருப்பசாமிக்கு படைக்கப்பட்டது. பின்னர் அனைத்து பக்தர்களும் ஒன்றாக அமர்ந்து கிடாய் கறிகளை சாப்பிட்டனர். முன்னதாக வந்தவழி கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்."

    ×