search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 பேர் மீது வழக்கு"

    • போதை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என மொடக்குறிச்சி, பவானி, காஞ்சிகோவில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சாமிநாதபுரம், நஞ்சை ஊத்துக்குளி, கருக்கம்பாளையம், பவானி புது பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த மொடக்கு றிச்சி சாமிநாதபுரம் கரட்டங்காடு பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் காமராஜர் (வயது 32), நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்த ராமசாமி மகன் முருகேசன் (57), பெத்தம்பாளையம் அடுத்த கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த நல்ல கவுண்டர் மகன் லோகநாதன் (26), பவானி காமராஜர் நகர் பெருமாள்புரம் சுரமணி மனைவி மலர்விழி (44) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ஹான்ஸ், கூலிப், பான் மசாலா உள்ளிட்ட போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • லாட்டரி விற்பனை சீட்டு விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கிரு ஷ்ணம்பாளையம் சுற்றுவ ட்டார பகுதியில் லாட்டரி விற்பனை சீட்டு விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலி ன் பேரில் அங்கு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த வண்டியூரான் கோவில் தெருவை சேர்ந்த மனோகரன் மகன் முரளி (வயது 38), கிருஷ்ணாபாளையம் ரோடு பகுதியைச் சேர்ந்த பன்னீ ர்செல்வம் மகன் சிவகுமார் (540 மற்றும் சிவா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர்கள் வைத்தி ருந்த லாட்டரி சீட்டுகள், 2 மொபைல் போன்கள் மற்றும் ரூ.8 ஆயிரத்து 90 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதைப்போல் சத்தியமங்கலம் கரட்டூர் சாலை யில் லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த கரட்டூர் சுப்பிரமணியர் தெருவை சேர்ந்த கிருஷ்ணப்பகவுண்டர் மகன் பழனிச்சாமி (60) என்பவர் மீது சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நட த்தி வருகி ன்றனர்.

    மேலும் அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • விற்பனைக்காக வைத்திருந்த 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறு கிறதா என ஈரோடு டவுன், கோபி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சென்னிமலை, ெரயில் நிலையம், அம்மா பேட்டை, கடத்தூர் பகுதி யில் அனுமதியின்றி மதுவி ற்று கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் விவேக்ராஜ் (வயது 37), சென்னிமலை ரோடு பெரிய தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் முருகேசன் (41), பவானி தொட்டி பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி (43), கடத்தூர் பகுதியை சேர்ந்த நல்லதம்பி மகன் ஆறுமுகம் (63) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இதைப்போல் கருங்க ல்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த முபாரக் மகன் இப்ராஹிம் (22) என்பவரை கருங்கல்பாளையம் போலீ சார் பிடித்தனர்.

    பின்னர் அவரிடம் இரு ந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தவர்களை போலீ சார் பிடித்தனர்.
    • 24 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொ டக்குறிச்சி, சிவகிரி, ஈரோடு டவுண், ஹாசனூர் ஆகிய பகுதிகளில் சட்டவி ரோத மாக மது பாட்டில்கள் விற் பனை நடைபெறுவதாக ஈரோடு டவுண், கோபி போ லீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீ சார் அங்கு அனுமதியின்றி சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த மொ டக்குறிச்சி திருவள்ளுவர் தெருவை சேர்ந்த பழனி ச்சாமி மனைவி தனலட்சுமி (வயது 45),

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலை சேர்ந்த சாரதி (25), புதுக்கோட்டை மாவட்டம் பெரிய கோட்டையை சேர்ந்த தங்கராசு மகன் பாரதி (24) புளியம்பட்டி மாதவி தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் இளவரசன் ஆகியோரை போலீ சார் பிடித்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 24 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்

    • காரைக்குடியில் சப்- இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி யாற்றி வருபவர் லெனின். இவர் அங்குள்ள மகளிர் போலீஸ் நிலையம் முன்பு வந்தபோது அப்துல் கனி உள்பட 4 பேர் பெண் போலீஸ் நிஷாந்தினி, அமலரூபம் ஆகியோரிடம் போக்சோ வழக்கு தொடர் பாக வந்த பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை செய்ய கூடாது என்று வற்பு றுத்தி கொண்டிருப்பதை பார்த்தார்.

    இதனை கண்ட அவர் பெண் போலீசாரிடம் இவ்வளவு கடுமையாக பேசக்கூடாது என்று 4 பேரிடமும் கூறி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் அவரை தகாத வார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இது பற்றி லெனின் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து அப்துல் கனி என்ப வரை கைது செய்தார்.

    மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மதன் வீட்டில் வரதட்சனை கேட்டு கொடுமை செய்துள்ளனர்.
    • கார்த்திகா அவருடைய செல்போனை எடுத்து பார்த்தபோது அதில் தனது கணவர் பல பெண்களுடன் பழக்கம் வைத்திருப்பது தெரிய வந்தது.

    தருமபுரி,

    ஈரோடு மாவட்டம், செங்குண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா (வயது 21). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி படித்து வந்தார். இந்நிலையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள பட்டுகோனம்பட்டிக்கு கபடி விளையாட வந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த நாகராஜ் மகன் மதன் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    இதனையடுத்து இருவரும் கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் மதன் வீட்டில் வரதட்சனை கேட்டு கொடுமை செய்துள்ளனர்.

    இந்த நிலையில் ஊத்தங்கரையில் உள்ள மதனுடைய சித்தி வீட்டில் தங்கி இருக்கும் போது கார்த்திகா அவருடைய செல்போனை எடுத்து பார்த்தபோது அதில் தனது கணவர் பல பெண்களுடன் பழக்கம் வைத்திருப்பது தெரிய வந்தது. பின்னர் இருவருக்கும்

    ஏற்பட்ட தகராறில் மதன் கார்த்திகாவை அடித்து மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து கார்த்திகா பாப்பிரெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் மதன், அவரது உறவினர்கள் மகேஷ்வரி, சாமிநாதன், பழனியம்மாள் ஆகிய 4 பேர் மீது வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலியான ஆவணம் தயாரித்து வங்கியில் நகையை அபகரிக்க முயற்சி செய்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • கனகரத்தினம் திருமங்கலம் கனரா வங்கியில் 100 பவுனுக்கு மேற்பட்ட நகைகளை லாக்கரில் வைத்துள்ளார்.

    திருமங்கலம்

    சென்னை பூந்தமல்லி அரசு பார்வையற்றோர் பள்ளியில் நெசவுத் தொழில் செய்து வருபவர் அதியப்பன். இவரது மனைவி கனகரத்தினம் (வயது65). இவர் பார்வையற்றவர். இவருடைய சகோதரி சந்திரபிரபா. அவரது கணவர் பாலசுப்பிரமணி ஆகிய 2 பேரும் இறந்து விட்டனர். அவர்களுக்கு வாரிசு இல்லாததால் கனகரத்தினம் திருமங்கலம் கனரா வங்கியில் 100 பவுனுக்கு மேற்பட்ட நகைகளை லாக்கரில் வைத்துள்ளார். இந்த நிலையில் அவருடைய உறவினர்கள் போலியான ஆவணம் தயாரித்து நகையை அபகரிக்க முயற்சி செய்துள்ளனர். இதுபற்றி அறிந்த கனகரத்தினம் திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கனகரத்தினம் உறவினரான பாலமுருகன், அவரது மகன்கள் பிரதீப், வினித். இவர்களின் நண்பர் வினோத் ஆகிய 4 பேர் மீது திருமங்கலம் டவுன் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாமனாரை வேனை ஏற்றி கொல்ல முயன்ற மருமகன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • சிலம்பரசன், கார்த்திகேயன் ஆகிய 3 சேர்ந்து அவர்கள் இருவரையும் தடியால் அடித்து, கல்லால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே துண்டுக்காடு வடக்கு தெருவை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது53). அதே கிராமத்தை சேர்ந்த மாயவேல் என்பவர் சேகர் மகள் உஷா என்பவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இதனால் இரண்டு குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சேகரும் அவரது இரண்டாவது மகள் சுஜாதா என்பவரும் நேற்று முன்தினம் கடைக்கு செல்வதற்கு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மருமகன் மாயவேல் என்பவர் வேனை எடுத்து வந்து அவர்கள் மீது மோத வந்துள்ளார். இதில் சுதாரித்து ஒதுங்கிக்கொண்ட அவர்கள் ஏன் எங்கள் மீது வேனை ஏற்ற வருகிறாய் என்று கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாயவேல் மற்றும் அவரது நண்பர்கள் சிலம்பரசன், கார்த்திகேயன் ஆகிய 3 சேர்ந்து அவர்கள் இருவரையும் தடியால் அடித்து, கல்லால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் கழுத்து, தலை, கண்ணம் போன்ற பகுதிகளில் பலத்த காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக சேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காடாம்புலியூர் போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • வரதட்சணை கேட்டு அவரை துன்புறுத்தி வீட்டைவிட்டு அனுப்பியதால் நிலக்கோட்டை போலீசில் பெண் புகார் அளித்தார்
    • வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விருவீடு பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் மகள் பிரியங்கா(28). இவருக்கும் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியை சேர்ந்த ஜோதிபாஸ்(33) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    அப்போது 10 பவுன் நகை சீர்வரிசை கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளார். ஜோதிபாஸ் கடந்த சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் தனது மனைவியிடம் தொழில் ெதாடங்க ரூ.15 லட்சம் வாங்கி வர வற்புறுத்தி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியங்கா தட்டிகேட்டுள்ளார். ஆனால் வரதட்சணை கேட்டு அவரை துன்புறுத்தி வீட்டைவிட்டு அனுப்பி விட்டார். இதுகுறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் பிரியங்கா புகார் அளித்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லதா வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ஜோதிபாஸ், பெருமாள், மலர்கொடி,ரவீனா ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரிஷிவந்தியம் அடுத்த லா.கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்.
    • கரும்பு வெட்டும் கூலித்தொகை சம்பந்தமாக பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் அடுத்த லா.கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். கரும்பு வெட்டும் தொழிலாளியான இவருக்கும், கீழ்பாடி கிராமத்தை சேர்ந்த ஞானபிரகாஷ் என்பவருக்கும் கரும்பு வெட்டும் கூலித்தொகை சம்பந்தமாக பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது. சம்பவத்தன்று இரவு பழனிவேல் மற்றும் அவரது தம்பி அய்யப்பன் ஆகியோர் கீழ்பாடிக்கு சென்று ஞானபிரகா சிடம் தங்களுக்கு வரவேண்டிய கரும்பு வெட்டு கூலி பணத்தை கேட்டுள்ளனர்.

    அப்போது பணத்தை தர மறுத்த ஞானபிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து பழனிவேலுவை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஞானபிரகாஷ், ராமசாமி, நாகராஜ், இவரது மனைவி கனிபாக்கியம் ஆகிய 4 பேர் மீதும் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நிலக்கோட்டையில் தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
    • இதில் காயமடைந்த பன்னீர்செல்வம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள கருத்தாண்டிபட்டியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 60). கூலித் தொழிலாளி. இவர் அங்குள்ள விநாயகர் கோவில் அருகே அமர்ந்திருந்தார்.

    அப்போது கமலேஷ் (16), ஹரிஸ் (17), விஜயன், திலகம் ஆகிய 4 பேரும் குடிபோதையில் அவரிடம் தகராறு செய்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பன்னீர்செல்வம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

    இது குறித்து விளாம்பட்டி போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • குழந்தையை கடத்தியதாக 4 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கண்டமனூரைச் சேர்ந்தவர் ஜோதிபாசு (வயது 30). இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்று விட்டனர்.

    இதனைத் தொடர்ந்து இவர்களது மகளான நிலவரசி (7) என்பவர் யாரிடம் இருக்க வேண்டும் என்பது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் மகளை தந்தையுடன் இருக்குமாறு கூறி உத்தரவிட்டது.

    இதனைத் தொடர்ந்து தந்தை வீட்டில் வசித்து வந்த நிலவரசி கடந்த சில நாட்களாக அதே பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

    இந்நிலையில் பள்ளிக்கு சென்ற அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் நிலவரசியை அழைத்துச் சென்று விட்டனர். இது குறித்து ஜோதிபாசுக்கு தகவல் கிடைக்கவே அவர்களது வீட்டுக்கு சென்று நிலவரசியை அனுப்புமாறு கேட்டுள்ளார்.

    ஆனால் அவர்கள் சரியான பதில் சொல்லாமல் இருந்து விட்டனர். இதனால் தனது மகளை கடத்திச் சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதன் பேரில் செல்வி, கருப்பசாமி, கிருஷ்ணம்மாள், சிவக்குமார் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×