search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்கான்"

    • துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் அதிபர் டிரம்ப் காதில் இருந்து இரத்தம் சிந்தியது.
    • நியூயார்க்கில் நடந்த ஜெகந்நாதரின் முதல் ரத யாத்திரையில் பக்தர்களுக்கு ட்ரம்ப் உதவி செய்தார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த நபர் டொனால்ட் டிரம்ப்-ஐ சுட்டார். இந்த சம்பவத்தால் பரபர சூழல் உருவானது.

    துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் அதிபர் டிரம்ப் காதில் இருந்து இரத்தம் சிந்தியது. இதைத் தொடர்ந்து டிரம்ப்-ஐ பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிக்கொண்டு அவரை அங்கிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எஃப்பிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    துப்பாக்கி சூடு நடத்திய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்-ஐ பாதுகாவலர்கள் சம்பவ இடத்தில் வைத்தே சுட்டுக் கொன்றனர். இவர் ஏன் டிரம்ப்-ஐ சுட முயன்றார் என்பது பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கடவுள் ஜெகந்நாதரின் அருளால் தான் சிறு காயங்களுடன் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் உயிர் தப்பினார் என்று "சர்வதேச கிருஷ்ணர் விழிப்புணர்வுக்கான சமூக அமைப்பு" (ISKCON) தெரிவித்துள்ளது.

    48 ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க்கில் நடந்த ஜெகந்நாதரின் முதல் ரத யாத்திரையில் பக்தர்களுக்கு ட்ரம்ப் உதவி செய்தார். தற்போது ஜெகந்நாதரின் 9 ஆவது ரத யாத்திரை நடைபெறவுள்ள நிலையில், அதன் பிரதிபலனாக தற்போது ட்ரம்பின் உயிரை ஜெகந்நாதர் காப்பற்றியுள்ளார்" என்று இஸ்கான் செய்தித் தொடர்பாளர் ராதாரமன் தாஸ் தெரிவித்துள்ளார்.

    • பக்தர்கள் கிருஷ்ணன் புகழ் பாடும் சங்கீர்த்தனம் பாடினர்.
    • பக்தர்கள் தயாரித்த 1008 உணவு பதார்த்தங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

    கோவை கொடிசியாக அருகே புகழ்பெற்ற இஸ்கான் ஜெகநாதர் கோவில் உள்ளது. இங்கு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஜெக நாதர், பலதேவர், சுபத்ரா தேவியருக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த பந்தல் மேடையில் ஜெகநாதர், பலதேவர், சுபத்ராதேவி எழுந்தருளினர்.

    அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கிருஷ்ணன் புகழ் பாடும் சங்கீர்த்தனம் பாடினர். அதை்தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர், மலர் களை கொண்டு விக்ரகங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என்று பக்தி முழுக்கங்களை எழுப்பினர்.

    அதைத்தொடர்ந்து சுவாமிக்கு பக்தியுடன் பக்தர்கள் தயாரித்த 1008 உணவு பதார்த்தங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. நாட்டின் கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக பாரம்பரிய தென்னிந்திய மற்றும் வடஇந்திய உணவு வகைகள் ஜெகநாதருக்கு படைக்கப்பட்டன. இதையடுத்து பக்தி வினோத சுவாமி ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.இதுகுறித்து இஸ்கான் அமைப்பினர் கூறுகையில், ஒடிசா மாநிலத் தில் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலில் ஆண்டு தோறும் தேரோட்டத்திற்கு முன்பு மூலவருக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெறும். அதை பின்பற்றி கோவை இஸ்கான் கோவிலில் ஜெகநாதருக்கு திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. இஸ்கான் அமைப்பு சார்பில் கோவையில் வருகிற 24-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது என்றனர்.

    • ஜூலை 1 முதல் ஜூலை 10 வரை ரத யாத்திரை கொண்டாட்டம்.
    • ஊர்வலப் பாதை முழுவதும் பிரசாதம் வழங்கப்படும்.

    சென்னை : நாளை (ஞாயிற்றுக்கிழமை) 39-வது ஸ்ரீ ஜகந்நாதர் ரத யாத்திரை விழாவைக் கொண்டாடுகிறது. இது இஸ்கானின் நிறுவனர்-ஆச்சார்யா ஸ்ரீல பிரபுபாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டது, அவருடைய 125 வது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. பூரி ஜெகநாதர் கோயில் நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி, இந்த ஆண்டு முதல், இந்தியாவில் உள்ள அனைத்து இஸ்கான் கோயில்களும் ஜூலை 1 முதல் ஜூலை 10 வரை ரத யாத்திரையைக் கொண்டாடும்.

    தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரத யாத்திரை திருவிழா மீண்டும் தொடங்குகிறது, மேலும் குடிமக்களின் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக ஆசீர்வதிக்க இறைவன் கோவிலை விட்டு வெளியே வருகிறார். ஆளும் குழுவின் (ஜிபிசி) தலைவர் எச்.எச்.பானு சுவாமி மகராஜ் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து ஆசிர்வதிப்பார்.

    ஸ்ரீ எம்.கே. சிறப்பு விருந்தினராக அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ., மோகன்குமார், சிறப்பு விருந்தினராக திருமால் திருமகள் மண்டப உரிமையாளர் ஸ்ரீ கே.கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    ரத யாத்திரைக்கு திட்டமிடப்பட்ட பகுதி மற்றும் பாதை மற்ற ஆண்டுகளில் இருந்து வேறுபட்டது.

    ரதம் பிற்பகல் 3 மணியளவில் விஜயாஸ்ரீ மஹாலில் இருந்து புறப்படும், 3-வது அவென்யூ அண்ணாநகர், கே4 காவல் நிலைய சாலை, 6வது அவென்யூ, 13வது மெயின் ரோடு, 18வது மெயின் ரோடு, 100 அடி சாலை, வடக்கு மெயின் ரோடு, பார்க் ரோடு வழியாக செல்லும். பாடி மேம்பாலம் சேவை பாதை வழியாக திருமால் திருமகள் மண்டபத்தில் முடிவடையும்.

    பக்தர்கள் ரதம் இழுத்தும், பாடியும், கீர்த்தனையும் ஆடியபடி ஊர்வலம் வண்ணமயமான காட்சியாக இருக்கும். திருமால் திருமகள் மண்டபத்தில் ஆரத்தி நடைபெறும். சிறப்பு விருந்தாக, ஸ்ரீல பிரபுபாதா தியேட்டர்ஸ் வழங்கும் தமிழ் நாடகம் "ஸ்ரீ நீல மாதவர்". ஊர்வலப் பாதை முழுவதும் பிரசாதம் வழங்கப்படும், மேலும் மண்டபத்தில் கூடியிருந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்.

    அனைவரும் கலந்து கொண்டு ஜெகநாதரின் அருளைப் பெறுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

    மேலும் தகவலுக்கு, 044-24530921/23 என்ற எண்ணில் அழைக்கவும், www.iskconchennai.org ஐப் பார்க்கவும்.

    ×