என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊரடங்கு"

    • ஆளும் ஷேக் ஹசீனா அரசாங்கத்துக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    • ஜெயலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கைதிக்ள தப்பி ஓடிவிட்டனர்.

    பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

     

    தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்தனர். போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த போராட்டம் நாட்டின் பெரும்பாலான பகுதியில் பரவியுள்ளது. போராட்டக்காரர்கள் கண்ணில் பட்டதையெல்லாம் தாக்குவதோடு, தீ வைத்து எரித்து வருகிறார்கள். டாக்காவில் உள்ள BTV தொலைக்காட்சியின் தலைமையகத்துக்கு வெளியில் போலீசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. BTV அலுவலகத்தின் வரவேற்பு கட்டிடத்துக்கும் பார்க்கிங்கில் நின்றிருந்த வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடத்துக்குள்ளே பலர் சிக்கினர்.

     

    வங்காளதேசத்தின் மத்திய பகுதியில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள ஜெயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனை பயன்படுத்தி ஜெயலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கைதிக்ள தப்பி ஓடிவிட்டனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிகிறது. இதுபோன்று பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்கள், கலவரங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 105 ஆக  உயர்ந்துள்ளது.

    போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் உள்ள மெட்ரோ நிலையங்கள் சேவையை நிறுத்தியுள்ளன.

    போராட்டக்காரகள் மீது ரப்பர் குண்டுகளையும், ஒலியெழுப்பும் கிரைனைடுகளையும் போலீசார் உபயோகித்து வருகின்றனர். போராட்டம் தொடர்வதால் ஆளும் ஷேக் ஹசீனா அரசாங்கத்துக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர அரசு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

     

    இதற்கிடையில் வங்காளதேசத்தில் வசிக்கும் 15,000 இந்தியர்களும்பாதுகாப்பாக உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களை கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதால் இந்திய மாணவர்கள் 300 பேர் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். 

    • இம்பாலில் அரசைக் கண்டித்து ஆளுநர் மாளிகை மற்றும் தலைமைச் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
    • மாணவர்கள் போராட்டம் வலுவடையாமல் இருக்க வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிவரை அடுத்த 5 நாட்களுக்கு இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.

    மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இனக்குழு மக்களுக்கிடையிலான மோதல் கலவரமாக வெடித்து 220க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.16 மாதங்களாகியும் எந்த தீர்வும் எட்டப்படாததால் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர்.

    ராக்கெட் டிரோன் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் மூலம் அவர்கள் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே நேற்று தலைநகர் இம்பாலில் அரசைக் கண்டித்து ஆளுநர் மாளிகை மற்றும் தலைமைச் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி பலத்தைப் பிரயோகித்து போராட்டத்தை ஒடுக்கும் பணியில் போலீஸ் மற்றும் சிஆர்பிஎப் பாதுகாப்புப்படை தீவிரம் காட்டி வருகிறது.

    இந்நிலையில் போராட்டத்தை ஒடுக்க இம்பால் மேற்கு மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டம் வலுவடையாமல் இருக்க வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிவரை அடுத்த 5 நாட்களுக்கு இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. தலைமை காவல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்யக்கோரி மாணவர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். மருத்துவம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளுக்கு மட்டும் ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

    • அனைத்து கல்வி நிலையங்களுக்கும் 24-ந்தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
    • இன்றும் நாளையும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு காற்று தரக்குறியீடு 1,600 என்ற அளவில் உயர்ந்து உள்ளது. இது பேரழிவு அளவாக இருக்கிறது.

    அம்மாகாணத்தில் தொடர்ந்து புகை மூட்டம் நிலவி வருகிறது. காற்று மாசுக்களால் ஏற்படும் அடர்ந்த புகை, பஞ்சாபின் பல நகரங்களை சூழ்ந்துள்ளது. லாகூர் மற்றும் முல்தான் ஆகியவை மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து உள்ளனர்.

    அவர்கள் சுவாசப் பிரச்சனைகள், கண் பாதிப்பு உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த நிலையில் காற்று மாசு காரணமாக பஞ்சாப் மாகாணத்தில் சுகாதார அவசரநிலையை அம்மாகாண அரசு விதித்து இருக்கிறது. லாகூர், முல்தான் மாவட்டங்களில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    புகைமூட்டம் தற்போது ஒரு தேசிய பேரழிவாக உள்ளது என்றும் இது ஒரு மாதம் அல்லது ஒரு வருடத்தில் முடிந்துவிடாது. 3 நாட்களுக்குப் பிறகு நிலைமை மதிப்பீடு செய்யப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே காற்று மாசு காரணமாக பஞ்சாப் மாகாணத்தில் 17-ந்தேதி வரை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தொடர்ந்து மோசமான நிலை இருப்பதால் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் 24-ந்தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் ஆன்லைன் வழியே கல்வி பயிற்சியை தொடர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. புகைமூட்டம் அதிகம் உள்ள லாகூர், முல்தான் நகரங்களில் வாரத்திற்கு 3 நாட்கள் வரை முழு ஊரடங்கை பஞ்சாப் அரசு நேற்று அமல்படுத்தியது. அதன்படி அங்கு இன்றும் நாளையும் இந்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு 5 மாவட்டங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
    • பா.ஜ.க. எம்.எல்.ஏ சபம் கொஞ்சகேசு, சபம் நிஷிகந்தா, ஆர்.கே.லிமோ ஆகியோரின் வீடுகள் சூறையாடப்பட்டன

    மணிப்பூரில் கடந்த வருடம் தொடங்கிய கலவரத்தின் நீட்சியாக கடந்த வாரம் முதல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தலைநகர் இம்பாலில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜிர்பாம் மாவட்டத்தில் மார் பழங்குடி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் அரமாய் தெங்கோல் பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி புகுந்த கிளர்ச்சியாளர்கள் வீடுகளுக்கு தீ வைத்தனர்.

    31 வயது ஆசிரியை ஒருவரை உயிருடன் தீ வைத்து எறிந்தனர். தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை அன்று ஜிர்பாம் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் மாயமாகினர். தீ வைத்து எரிக்கப்பட்ட 2 மெய்த்தேய் முதியவர்கள் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மாயமானவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில் போரோபெக்ராவில் இருந்து 16 கி.மீ. தொலைவில் ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டன.

    இன்றைய தினம் மேலும் 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த 6 உடல்களும் மாயமானவர்களின் உடல்கள் என்று கருதப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த செய்தி பரவியதால் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு 5 மாவட்டங்களில் போராட்டம் வெடித்துள்ளது. மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு கூடுதல் காவல்துறையும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது., இம்பாலில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் மார்க்கெட்டுக்கு செல்லும் சாலைகளை மறித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 2 அமைச்சர்கள் மற்றும் 3 எம்.எல்.ஏக்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் சூறையாடியுள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ சபம் கொஞ்சகேசு, சபம் நிஷிகந்தா, ஆர்.கே.லிமோ ஆகியோரின் வீடுகள் சூறையாடப்பட்டன. நிலைமை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளதால் இம்பால் மேற்கு மாவட்டத்தில் மீண்டும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • அவரது 2 குழந்தை, மனைவி, மாமியார், மனைவியின் சகோதரியும் அவரது மகளும் கடத்தப்பட்டவர்கள் ஆவர்.
    • முதலமைச்சர் வீடு முற்றுகை இடப்பட்டது. 2 அமைச்சர்கள், பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரின் வீடுகள் சூறையாடப்பட்டன.

    மணிப்பூரில் கடந்த வாரம் முதல் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த நவம்பர் 7 ஆம் தேதி ஜிர்பாம் மாவட்டத்தில் ஆசிரியை எரித்துக் கொல்லப்பட்டார்.

     

    தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை தலைநகர் இம்பாலில் இருந்து 220 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜிர்பாம் மாவட்டத்தின் போரோபெக்ரா பகுதியில் மெய்தேய் சமூகத்தைச் 2 முதியவர்கள் முதியவர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். 6 பேரை குக்கி கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.

     

    அவர்கள் 6 பெரும் அவர்களால் கொலை செய்யப்பட்டதை அரசுத் தரப்பு அதிகாரிகள் நேற்று உறுதி செய்தனர். கடத்தப்பட்டவர்கள், நிவாரண முகாமில் தங்கியிருந்த லைசாராம் ஹெரோஜித் என்பவரது குடும்பத்தினர் ஆவர். அவரது 2 குழந்தை, மனைவி, மாமியார், மனைவியின் சகோதரியும் அவரது மகளும் கடத்தப்பட்ட 6 பேர் ஆவர். மணிப்பூர் அசாம் எல்லைப்பகுதிக்கு இவர்கள் கடத்தப்பட்டனர்.

    கடத்தப்பட்டவர்களில் மூன்று பேரின் உடல்கள் கடந்த வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. அது லைசாராமின் 8 மாத குழந்தை, அவரது மனைவியின் சகோதரியும் அவரது 8 வயது மகள் ஆகியோரது உடல்கள் ஆகும். லைசாராம் மனைவியின் உடல் இன்னும் தேடப்பட்டு வருகிறது. கொல்லப்பட்டது தனது குடும்பத்தினர் தான் என லைசாராம்  உறுதிப்படுத்தியுள்ளார்.

    மேலும் தலை இல்லாத 2 வயது குழந்தை மற்றும் அரை நிர்வாணமாக அழுகிய நிலையில் மூதாட்டி [லைசாராம் மாமியார்] உடல்கள் ஜிர்பாம் அருகில் உள்ள ஆற்றில் மிதந்தன என்று போலீஸ் இன்று தெரிவித்துள்ளது.

     

    லைஸாராம் 2 வயது குழந்தையின் தலை இல்லாத உடல் உடைந்த மரக்கிளைகளில் குத்தி வைக்கப்பட்ட நிலையில் ஆற்றில் மிதந்ததாக நேரில் கண்டவர்கள் கூறியதாக என்டிடிவி களத் தகவல்கள் கூறுகின்றன. குழந்தைகியின் கைகள் உடலில் இருந்து தொலைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

     

    இந்நிலையில் 6 பேரும் கொல்லப்பட்ட செய்தி நேற்று மணிப்பூர் பள்ளத்தாக்கு முழுவதும் பரவியதால் போராட்டங்கள் வெடித்துள்ளன. முதலமைச்சர் வீடு முற்றுகை இடப்பட்டது. 2 அமைச்சர்கள், பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரின் வீடுகள் சூறையாடப்பட்டன. 5 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • மணிப்பூரில் பெண்கள் உள்பட 6 பேர் கடத்தி செல்லப்பட்டு படுகொலை.
    • மாநில மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் வீடுகளுக்கு தீ வைப்பு, வன்முறை பரவல்.

    மணிப்பூர் மாநிலத்தின் ஜிர்பாம் மாவட்டத்தின் போரோபெக்ரா பகுதியில் கடந்த வாரம் இரண்டு முதியவர்கள் கொலை செய்யப்பட்டதுடன் பெண்கள், குழந்தைகள் உள்பட ஆறு பேர் கடத்தி செல்லப்பட்டனர். அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

    இதனால் மணிப்பூரில் வன்முறை வெடித்துள்ளது. அம்மாநில மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வீடுகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இதனால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் நேற்று அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் படுகொலை மற்றும் பொது ஒழுங்கு சீர்குலைவு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளை என்.ஐ.ஏ. எடுத்துக் கொண்டது. உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி மணிப்பூர் போலீசாரிடம் இருந்து இந்த வழக்குகளை என்.ஐ.ஏ. எடுத்துக் கொண்டது.

    என்.ஐ.ஏ. இது தொடர்பாக விசாரணை நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெகன்னாத் ரத யாத்திரை அமைதியான முறையில் நடைபெற்றதால், நிர்வாகம் இன்று தளர்வு அளிக்க முடிவு.
    • இன்று மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்வு.

    ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தையல்காரர் ஒருவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஏழு காவல் நிலைய எல்லைகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மதியம் 12 மணி முதல் 4 மணி வரை தளர்த்தி அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு, இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபர் சர்மாவின் முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்கு சமூக ஊடகங்களில் ஆதரவளித்ததற்காக கன்ஹையா லால் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

    குற்றம்சாட்டப்பட்டுள்ள இருவரை சில மணி நேரங்களுக்குப் பிறகு ராஜ்சமந்தில் கைது செய்தனர். இதனால் ஏற்பட்ட வன்முறை காரணமாக, அங்கு ஊரடங்க உத்தரவு விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஜெகன்நாத் ரத யாத்திரை அமைதியான முறையில் நடைபெற்றதால், நிர்வாகம் இன்று தளர்வு அளிக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    ×